Advertisements

இந்த மாதிரியான பெண்களுக்கு எந்த மாதிரியான மேக் அப் செய்யலாம்?- ஓர் அழகின் அலசல்

இந்த மாதிரியான பெண்களுக்கு எந்த மாதிரியான மேக் அப் செய்யலாம்? – ஓர் அழகின் அலசல்

இந்த மாதிரியான பெண்களுக்கு எந்த மாதிரியான மேக் அப் செய்யலாம்? – ஓர் அழகின் அலசல்

ஆணும் சரி பெண்ணும் சரி, இயற்கையாகவே அழகானவர்கள்தான். ஆனால், பெண்கள், தமது அழகினை தக்க‍

வைத்துக்கொள்வதற்காகவும், கூடுதல் அழகிற்காகவும் மேக் அப் செய்து கொள்கின்றனர். ஆனால் இந்த மேக் அப்பில் ஆண்களுக்கு இதில் துளியும் நாட்ட‍மி ல்லை.

கறுத்த சருமம்கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். கறு ப்பாக இருக்கிறோமே எனசோர்ந்து போயிருக்கும் பெண் களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றா ல் அது கறுத்த சருமம்தான். அதில் முதுமையும், சருமப் பிரச்சனை களும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை.

அழகைப் பொறுத்தவரை அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கறுப்பான பெண்கள் நிறமாக மாற, சிலஅழகு சிகிச்கைகள். பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்துகொள்ளக்கூடிய சிகிச்சைக ள் பற்றி விளக்குகிறார் …இந்தியன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் பியூட்டி தெரபியின் இயக்குனர் ஹசீனா சையத்.

பழ பேஷியல்

முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரி ச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங் கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத் தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்து க்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கி றபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள் ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், 2 துளிகள் தேன், கொ ஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.

காய்கறி பேஷியல்

முதலில் சொன்னமாதிரி பச்சை பாலால் முகத்தை துடைக்கவும். முட் டைக் கோஸை பச்சையாக மசித்து வைத்துக் கொள் ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வை த்துக் கொள்ளவும். முட்டைக்கோஸ் மசித்ததைக்கொ ண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இடையிடை யே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தை துடைத்துவிட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும்.

மேற்சொன்ன இரண்டு பேஷியல்களையும் 15 நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல் லாதவர்கள் என்றால் 10 நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.

சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச் சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன் றாகக் குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப் படியே விட்டு பிறகு கழுவலாம்.

நன்கு அடித்த பூவன் வாழைப்பழத்துடன் தேன், ஆரஞ் சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, ஊற விட்டுக் கழுவி வர, நிறம் கூடுவதைக் காணலாம்.

குங்குமப் பூ சாப்பிட்டால் நிறம் கூடுமா என்பது பலரது சந்தேகம். அதை அப்படியே பாலில் கலந்து குடிப்பது பலன் தராது. சூடான பாலில் குங்கும ப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்து க்கு வரும்போது குடிப்பதுதான் பலன் தரும்.

ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் கூடும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்த னத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம்.

வெயிலில் செல்கிறபோது எஸ்.பி.எஃப் 20 முதல் 30 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, டூவீலரில் செல்கிற போது கைகளுக்கு கிளவுஸ் அணிவது, நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள், இள நீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

அதிமதுரம் கலந்து தயாரிக்கப்படும் ஸ்கின் லைட்டனிங் ஜெல் இப்போது கிடைக்கிறது. அதை முகத்தில் தடவி , அதற்குமேல் கால்வானிக் சிகிச்சை தருகிறோம். நான் கைந்து முறைகள் செய்தாலே வியப்பான மாற்றத்தைக் காண முடிகிறது.

கறுப்பான பெண்களுக்கான வரப்பிரசாதமென ஒயிட்ட னிங் பேஷியல்க ளைச் சொல்லலாம். பட்டுக்காகப் பயன் படும் மல்பரி, கோஜிக் அமிலம் என சருமத்தை நிறமாக் கக் கூடிய இயற்கைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்ப டுகிறவற்றால் இந்த பேஷியல் செய்யப்படுகிறது. கிளென் சிங்கில் தொடங்கி, மசாஜ், ஸ்கரப், பேக் என ஒவ்வொரு கட்டத்திலும் நிறத்தை அதிகரிக்கச் செய்கிற பொருட்கள் இதில் உண்டு.

கிவி பழம், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆரஞ்சுப் பழங்களைக் கொண்டு தயாரி க்கப்படுகிற பொருட்களால் செய்யப்படுகிற …ஸ்கின் மிரா க்கிள் சிகிச்சை கறுப்பான பெண்களுக்கு ரொம்பவே லேட்டஸ்ட்.

இவர்கள் எப்படி மேக்கப் போடலாம்?

கறுப்பான பெண்கள் பளிச்செனக் காட்சியளித்தால் போதும் என நினைக் க வேண்டுமே தவிர, வெள்ளையாகத் தெரிய வேண்டும் என நினைக்கக் கூடாது.

அவர்களது சருமம் மஞ்சள், பிரவுன் அல்லது பிங்க் என எந்த மாதிரியான ஸ்கின்டோன் கொண்டது என பார்த்து அதற்கேற்ற பவுண் டேஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பவுண்டேஷனை மணிக்கட்டில் தடவிப் பார்த்து அது சரியாகப் பொருந்து கிறதா எனத் தெரிந்து உபயோகிக்கலாம்.

ஐ ஷேடோ, லிப்ஸ்டிக் போன்றவை ரொம்பவும் வெளிர் நிறமாகவும் இல்லாமல், ரொம்பவும் டார்க் நிறமாகவும் இல்லாமல் மீடியம் ஷேடில் இருக்கட்டும். லிப்ஸ்டிக் போடுகிற நிறத்திலேயே ஐ ஷேடோவும் இருக்கட்டும்.

கறுப்பான பெண்கள் வெள்ளை நிறப்பவுடர் உபயோகிப்பதைத் தவிர்த்து, லூஸ் பவுடர் உபயோகிக்கலாம்.

உடை அணிகிற விஷயத்தில் இவர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். பளீர் நிற உடைகள் அப்படியே முகத்தில் பிரதிபலிக்கும். அதே சமயம் டார்க் நிற உடைகளும் அப்படியே உடலின் நிறத்தோடு ஒன்றிப் போய் இன்னும் கருப்பாக காட்டும். வெள்ளை மற்றும் ரொம்பவும் வெளிர் நிறங்களைத் தவிர்த்து கிரீம், டார்க் பிங்க், ஆரஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தாபிங்க் போன்ற நிறங்களில் உடை அணிய லாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: