Advertisements

அதிர்ச்சியில் ஜெயலலிதா- திமுக.வின் நூதன பிரச்சாரத்தால் விழிபிதுங்கி நிற்கும் அதிமுக

அதிர்ச்சியில் ஜெயலலிதா . . . திமுக.வின் நூதன பிரச்சாரத்தால் விழிபிதுங்கி நிற்கும் அதிமுக•

அதிர்ச்சியில் ஜெயலலிதா . . . திமுக.வின் நூதன பிரச்சாரத்தால் விழிபிதுங்கி நிற்கும் அதிமுக•

இந்த மாதம் 16 ஆம் தேதி அன்று நடைபெற விருக்கும் தமிழக சட்ட‍மன்ற பொதுத்தேர்ல் 2016-இல் தமிழகத்தில் உள்ள‍ அனைத்து கட்சிகளை தத்தமது தேர்ல் வாக்குறுதிகளை அறிவித்து, தேர்தல் பிரச்சாரங்களில் சூறாவளி பயணம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்து வருகின்றன• இந்நிலையில்

கடைசியாக அதாவது வியாழன் அன்று ஜெ.ஜெய லலிதா அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கை, வெற்று இலவச அறிவிப்புகளாலும் ஏற்கனவே 2011 சட்ட‍ மன்றத் தேர்தலில் அறிவித்த‍ சில வாக்குறுதிக ளையே மீண்டும் இடம்பெற்றிருப்பதாலும் பிசுபி சுத்துப் போய்விட, திமுகவினர் உற்சாகமாக தங்கள் தேர்தல் அறிக்கையி ல் கொடுக்கப்பட்டி ருக்கும் வாக்குறுதி கள் மூலமாக மக்களுக்கு என்னெ ன்ன நன்மைகள் என்று பட்டியலிட்டு பிரசாரம் செய்யத் தொடங்கியிரு க்கிறார்கள்.

குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந் த பட்சம் ரூ.2,50,000 மிச்சமாகும் என்று அக்கட்சியினர் பட்டியல் போட்ட பேசுவது வாக்காளர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.

 ‘மக்களுக்கு மீன் பிடித்து இலவசமாக தர வேண் டாம், மீன் பிடிக்க கற்றுத் தாருங்கள்’ என்கிற சீன ப்பழமொழியை மேற்கோள்காட்டி கீழ்க்கண்ட தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் அதனால் மிச்ச மாகும் பணம் குறித்து மக் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என்று அக்கட்சியின் தலைமை நிலையத்திலிருந்து பிரசாரத்தில் ஈடுபடுபவர் களுக்கு அறிவுறுத்தல் சென்றிருக்கிறது.

பால்விலை குறைக்கப்படும்
மாத சேமிப்பு : ரூ.210/-
வருட சேமிப்பு:  ரூ.2,520/-

மாதத்துக்கு ஒருமுறை மின்சார ரீடிங்
மாத சேமிப்பு: ரூ.310/-
வருட சேமிப்பு: ரூ.4,200

மதுவிலக்கு மாத சேமிப்பு : ரூ.1500/-
வருட சேமிப்பு : ரூ.18,200

முதியோர் உதவித்தொகை மற்றும் கட்டணமில்லா பயணம்
மாத சேமிப்பு : ரூ.1,010/-
வருட சேமிப்பு : ரூ.12,620

பேருந்துக் கட்டணம் குறைப்பு (குறைந்தபட்சம் ஒரு ரூபாய் குறைக்கப்ப ட்டாலும் கூட)
வருட சேமிப்பு : ரூ.900

மாணவர்கள் மற்றும் விவசாயிகளு க்கு அரசு மானியம்
மாத சேமிப்பு : ரூ.1000/-
வருட சேமிப்பு : ரூ.12,000/-

இவை தவிர்த்து கல்விக்கடன் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளி ட்டவைகளால் மேலும் பல்லாயிரம் ரூபாய் மக்களு க்கு மிச்சமாகும்.

திமுக ஆட்சிக்கு வருவதால் வருடத்துக்கு குறைந்த பட்சம் ரூ.50,000 தலா ஓர் குடும்பம் சேமிக்க முடியும் என்பதால் ஐந்து ஆண்டு முழுமையான ஆட்சியின் அந்தத் தொகை ரூ.2,50,000 ஆக இருக்கும்.

அதிமுக அறிவித்திருக்கும் கைப்பேசி போன்ற இலவசங்க ளால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், திமுக ஆட்சி அமைந்து மிச்சமாகும் இந்த ரூ.2,50,000 வைத்து என்னென்ன வசதிகளை மக்கள் தங்கள் குடும்பத்தினருக்கு அரசிடம் கையேந்தாமல் தாங்களே கௌரவமாக செ ய்துகொள்ளமுடியும் என்றும் திமுகவினர் இன்னொரு பட்டியலை முன் வைக்கிறார்கள்.

* ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட இல்லத்துக்கு அத்தியாவசியமான பொருட்கள் அத்தனையையும் வாங்கிக் கொள்ள முடியும்.

* குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுக்கலாம்.

* ஒவ்வொரு குடும்பமும் ஒரு இருசக்கர வாகனம் வாங்கிக் கொள்ளலாம்.

* அடகுவைத்த நகைகளை மீட்டெடுத்துக் கொள்ளலாம்.

* வருடத்துக்கு ஒருமுறை குடும்பச் சுற்றுலா செய்யலாம்.

* வருங்காலத்துக்காக குறிப்பிட்ட தொகையை இன்சூரன் ஸ் உள்ளிட்ட உருப்படியான திட்டங்களில் சேமிக்கவும் முடியும்.

* இன்னும் விருப்பப்பட்டவற்றை தாமே தம் காசில் வாங்கிக் கொள்ள முடியும்.

திமுகவினரின் இந்த நூதனப் பிரச்சாரத்துக்கு மக்களிடையே நல்ல வர வேற்பு கிடைக்கிறது. அதிமுக அறிவித்திருக்கும் இலவசத் திட்டங்களை ஒப்பிடுகையில், திமுக ஆட்சி அமைந்தால் இயல்பாக கிடைக்கக்கூடிய இந்தபலன்களின் தன்மை அதிகம் என்ப தால் களத்தில் பிரச்சாரம் செய்யும் அதிமுகவினர் கலக்கம் அடைந்திருக்கிறார்கள்.

அதுவுமில்லாமல் அதிமுக கடந்த ஐந்தாண்டுகளில் அறி வித்த இலவசப் பொருட்களின் தரம் படுமோசம் என்பதோ டுமட்டுமில்லாமல், அவை அனைவருக்கும் கிடைக்க வில்லை என்கிற குற்றச்சாட்டும் பரவலாக மக்களிடை யே இருப்பதால் அதை எதிர்கொள்ள முடியாமல் அதிமுக-வினர் தடுமாறி வருகின்றனர்

=>தினகரன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: