Advertisements

உங்க கையில் அதிக பணம் இருக்கும்போது நீங்கள் செய்யக்கூடாத தவறுகள்!- நிதி ஆலோசகரின் தீர்வும்

உங்க கையில் அதிக பணம் இருக்கும்போது நீங்கள் செய்யக்கூடாத தவறுகள்!- நிதி ஆலோசகரின் தீர்வும்

உங்க கையில் அதிக பணம் இருக்கும்போது நீங்கள் செய்யக்கூடாத தவறுகள்!- நிதி ஆலோசகரின் தீர்வும்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்;
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
– என்பது பழமொழி. 

கையில் நிறைய பணம் இருக்கும்போது, அதை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல், பல தவறுகளை

செய்கிறோம். LCD TV ஒன்று 30,000 ரூபாய் என்றாலும் அதிகம் யோசிக்காமல் வாங்குகி றோம். 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள காருக்கு ஆசைப்படுகிறோம். ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் என்று எதை எதையோ வாங்குகிறோம்.

ஆனால், கையில் உள்ள பணமெல்லாம் தீர்ந்த பிறகுதான், வாங்கியபொருட்களினால் நமக்கு என்ன பிரயோஜனம் என்று யோசிக்கத் தொடங்குகிறோம். அப்போது வாங்க நினைக்கும் அத்தியாவசியபொருளினை வாங்குவதற்கு பணமில் லாமல் தவிக்கிறோம். மீண்டும் கடன் வாங்கும் கட்டாயச்சூழலுக்குத் தள்ளப்படுகி றோம்.

சிலர் வேடிக்கையாக இப்படிச் சொல்வார்கள்… பணக்காரர்கள் ரிஸ்க் எடுக்கவேண்டிய நிலையி ல் இல்லை; இருந்தாலும் அவர்களிடம் பணம் அதி கம் இருப்பதால், அவர்களால் ரிஸ்க் எடுக்க முடி கிறது. அதனால் அவர்களிடம் மேலும் மேலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கிறது. ஏழைஎளியவர்களிடம் பணம் இல்லை; அதனால் அவர்களால் ரிஸ்க் எடு க்க முடிவதில்லை. எனவே, அவர்கள் மென் மேலும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறா ர்கள். சற்றே சிந்தித்தால், இது வேடிக்கை அல்ல; முற்றிலும் உண்மை என்று தெரியும்.

நம் வாழ்கைக்குப் பணம் மிக முக்கியம். ஆனால், பணத்தை எப்படி நிர்வாகம் செய்வது, எதற்காக செலவழிப்பது, எதற்காக செலவழிக்கக் கூடாது, பணத்தை எப்படி பல மடங்காகப் பெரு க்குவது என்பதைப் பற்றி நமக்கு பாடப்புத்தக த்திலோ அல்லது கல்லூரியிலோ யாரும் சொல்லித்தருவதில்லை. எனவேதான், அதிக மான பணம் நம் கையில் புரளும்போது அதை எப்படி செலவழிப்பது என்று தெரியாம ல் பல தவறுகளை செய்கிறோம். நம் கையில் அதிக மான பணம் புரளும்போது நாம் என்னென்ன தவறுகளை செய்கிறோம், அத்தவறுகளை செய்யாமல் இருப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

சரியாகத் திட்டமிடாமல் இருப்பது!

பணம் என்பது ஒரு மூலதனம். அது நம்முடைய கையில் இருக்கும்போது, நாம் அதை நன்றாகத் திட்டமிட்டுச் செல வழிக்க வேண்டும் அல்லது சேமிக்கவோ முதலீடு செய்ய வோ வேண்டும். ஆனால், இன்றைய நிலையில் எத்தனைபேர் அதைச் செய்கி றோம்? பணம் கைக்கு எப்போது வரும் என்று காத்திருந்து, அதை உடனே தேவையில்லாத விஷய ங்களுக்குச் செலவு செய்வதில் நாட்டத்தைச் செலுத் துகிறோம். இதனால் நம் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பணத்தினை இழந் து நிற்கிறோம்.

நம் வாழ்வில் இன்றியமையாத எதிர்கால இலக்குகள் எனில் நம்முடைய ஓய்வுக்காலத்துக்கான திட்டமிடல், நம்முடைய குழந்தை களின் கல்வி மற்றும் அவர்களது திருமணம்தான். இன்று கல்வி வியாபாரமாகி விட்ட நிலையில், நாம் விரும்பிய வற்றைப் படிக்க நமக்குப் பணம் தேவைப்படுகிறது.

மேலும், திருமணம் என்பது மிகப்பெரிய அளவில் செலவு பிடிக்கும் விஷயமாக மாறிவிட்டது. அது ஒருவ ருடைய நீண்ட காலச் சேமிப்பை ஓரிரு நாட்களி ல் கரைத்து விடும். ஆகையால், பணம் கையில் இருக்கும் போது மேலே குறிப்பிட்ட எதிர்காலத் தேவைகளுக்கு சரியாகத் திட்டமிடுவதே முதல் கடமையாகும். திட்டமிடாமல் இருக்கும் தவறினை மட்டும் நாம் செய்ய வே கூடாது.

தங்கத்தில் அதிக முதலீடு!

தங்கம் என்பது ஒரு உலோகம். அதை அணிந்து கொள்வது சமுதாயத்தில் அந்தஸ்து என்பது மட் டுமே. ஆனால், மக்கள் இதைக் கருத்தில் கொள் ளாமல், அதை முக்கியமான முதலீடாகக் கருது கிறார்கள். இதனால் பணம் கைக்கு வரும் சமய ங்களில் முதல் வேலையாக தங்கத்தை வாங்கி வைப்பதை வழக்க மாக வைத்திருக்கிறார்கள்.

நம்முடைய இந்திய ரூபாயின் தொடர் வீழ்ச்சியி னால்தான் தங்கத்தின் மதிப்பானது தொடர்ந்து உயர்ந்துவருகிறது. ஆனால், கடந்த நான்கு ஆண் டுகளில் எந்தவித லாபமும் தங்கத்தினால் கிடை க்கவில்லை. இருந்தாலும், தங்கத்தின்மேல் உள்ள மோகம் குறையவில்லை.

நகையாக வாங்கும் சமயத்தில் நாம் செய்கூலி மற்றும் சேதாரத்தில் ஏறக் குறைய 20% இழக்கிறோம். எப்படிக் காய்கனிகளுக்கு ஏசி போடப்பட்டு விலை அதிகம் விற்கப்படுகிறதோ, அதே போலத்தான் நகைக்கடைக்காரர்கள் விளம்பரம், கடைக் கான பராமரிப்பு என மற்ற அனைத்து செலவுகளுக்கும் நம்மிடம் இருந்தே வெவ்வேறு உருவத்தில் பணத்தைக் கறக்கிறார்கள். நம் வீட்டுக்குத்தேவையானஅளவு கொஞ் சம் தங்கத்தை வாங்குவதில் தவறில்லை. ஆனால் கையி ல் இருக்கும் பணம் அனைத்துக்கும் தங்கம் வாங்கும் தவறை செய்யக் கூடாது.

ஒன்றுக்கு மேல் வீடு!

ஒருவருக்கு ஒரு வீடு என்பது இன்றியமையாதது. ஆனால், இரண்டு, மூன்று, நான்கு என்று சேர்த்து க்கொண்டே போவது தவறான முதலீடாக முடிய வாய்ப்புண்டு. நம் பெற்றோரைவிட நாம் இன்று வே லை மற்றும் பணம் சேர்ப்பதில் நன்றாகவே இருக் கிறோம். எதிர்காலத்தில் நம்மைவிட நம் குழந்தை கள் கண்டிப்பாக நன்றாக இருப்பார்கள். இந்த உண் மை நமக்கு தெரிந்திருந்தாலும் பிள்ளைகளின் நல னுக்காக என கையில் பணம் புரளும் போதெல்லாம் சில நூறு சதுர அடி இடத்தை வாங்க வேண் டும் என்று நினைக்கிறோம்.

இப்படி செய்வது தவறு என்பதற்குக் காரணம், கடந்த 4 வருடங்களில் ரியல் எஸ்டேட் மூலம் சொல்லும் படியான லாபம் எதுவும் கிடைக்கவில்லை. சொல்லப் போனால், மும்பை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் ரியல் எஸ்டேட் மதிப்பு 15% முதல் 20%  குறைந்திருக்கிறது. சென்னையிலும் ஏறக்குறைய அதே நிலைதான். என்றா லும் நம்மில் பலர் பணத்தை மண்ணிலோ அல்லது பொன் னிலோ போடத்தான் நினைக்கிறார்கள். இருப்பதற்கு ஒரு வீடு கிடைத்துவிட்டால், அடுத்தடுத்து வீடுகளைச் சேர்க்க வேண்டிய தவறினை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

தேவையில்லாமல் இன்ஷூரன்ஸ் எடுப்பது!

இன்ஷூரன்சின் முக்கியத்துவத்தை இன்றைக் கு பெரும்பாலான மக்கள் நன்கு உணரவே செ ய்திருக்கிறார்கள. ஆனால், தவறாகப்புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதே வேதனை. இத னால் கையில் பணம் கிடைக்கும்போதெல்லா ம் தன் பெயரிலும், தன் வீட்டு உறுப்பினர்களின் பெயரிலும் பலவகையான இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறார்கள்.

குறிப்பாக, குறைந்த கவரேஜ் கொண்ட, ஆனால் பிரீமியம் அதிகமுள்ள பாலிசிகளை எடுத்துவிடுகிறார்கள்.

ஒருவர் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டியது அவசியம் தான். அதுவும் கையில் பணம் இருக்கும்போது முதலில் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வோம் என்று நினைப்பது சரியான முடிவுதான். ஆனால், ஆயுள் காப்பீட்டு வகைக ளில் உயிர் பாதுகாப்புக்கு மிகச் சரியான டேர்ம் இன்ஷூ ரன்ஸையும், உடல் பாதுகாப்புக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸையும் எடுத்து க்கொள்வதுதான் நல்லது. குறிப்பாக, குழந்தைக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி மற்றும் பென்ஷன்பாலிசி திட் டங்கள் வேண்டவே வேண்டாம். இன்ஷூரன்ஸ் திட் டங்கள் பாதுகாப்புக்கே தவிர, ஒருபோதும் முதலீடா கிவிட முடியாது. தயவுசெய்து குழப்பி கொள்ளாதீர் கள்.

செலவு எனும் மாய வலை!

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் சேமிப்பதற்காகச் சம் பாதிப்பதில்லை. செலவு செய்வதற்காகவே சம் பாதிக்கிறார்கள். ஆடம்பரமான இந்த உலகத்தி ல் அவர்கள் தங்களைப் பொருத்திக் கொண்டு, அதில் கிடைக்கும் மாயச் சுகத்தை அனுபவிப்ப தற்காகச் சம்பாதிக்கும் சம்பளம் அனைத்தையு ம் செலவுசெய்து சீரழிகிறார்கள்.

பணம் கையில்புரளும் இந்நேரத்தில் இவர்கள்மட்டுமல்ல, வயதில் மூத்த வர்கள்கூடச் சற்று தடம்மாறி செலவுசெய்யும் ஆசைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். ஆனால், அனாவசியமாக செலவு செய்வதைத் தவிர்த்து, சம்பாதிக்கத் தொடங்கிய காலத்திலேயே சேமிக்கவும் முதலீடு செய்யவும் தொடங்கினால், ஓய்வுக்காலத்தின்போது பெரிய தொகை நம்மிடம் சேர்ந்திருக்கும். தவிர இடையி டையே ஏற்படும் தேவை களுக்கும் இந்த முதலீட் டிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்தத் தவறையும் நாம் செய்யக் கூடாது.

பணவீக்கம் என்னும் எதிரி!

பணவீக்கத்தை நம் கண்ணுக்குத் தெரியாத எதிரி என சொல்லலாம். ஏனெனில் பணத்துக்கென்று எந்தவொ ரு நிலையான மதிப்பும் கிடையாது. அதற்கு பர்ச்சே ஸிங்பவர் மட்டுமே உண்டு. அதுநாள்ஆக ஆகக் குறை யும். இதைப் பலரும் புரிந்துகொள்வதில்லை. எனக்கு வங்கியில் உத்தரவாதமாக 8% வட்டி கிடைக்கிறது. அது எனக்குப்போதும் என்றே பலரும்சொல்கிறார்கள்.

ஆனால், உண்மையான பணவீக்கம், அதாவது விலைவாசி உயர்வு 8 சதவிகிதமாக இருக்கும்போது, வங்கி டெபாசிட் மூலம் கிடைக்கும் வரு மானம் விலைவாசி உயர்வுக்கே சரியாகப் போய் விடும் என்பதை பலரும் புரிந்து கொள்வதே இல்லை. எனவே, பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் நமக்குக் கிடை க்கும் முதலீட்டினை நாம் தேர்வு செய்தாக வேண்டும். உத்தர வாதம் தரும் முதலீடு என்று நினைத்து, பண வீக்கம் என்னும் எதிரியிடம் நாம் தோற்றுப் போகும் தவறினை செய்யவே கூடாது. அப்படிச்செய்தால், எதிர்காலத்தில் நம் தேவை களை நிறை வேற்றிக்கொள்ள முடியாது.

பேராசை கூடவே கூடாது!

பணம் கையில் இருக்கும் போது முதலீடு செய்ய ஒருவ ர் நினைத்தாலும், எதில் முதலீடு செய்கிறோம், தற்போது அந்த முதலீட் டுத் திட்டத்தின் வரு மானம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண் டும். ஆனால், இதைப்பார்க்காமல் பணம்தான் கையில் இருக்கிறதே, ரிஸ்க் அதிகமுள்ள திட்டத்தில் போட்டா ல்தான் என்ன என்று நினைக்கும் தவறினை செய்து பிரச்னையில் சிக்கிக்கொள்ளக் கூடாது.

இன்றைக்கும் தமிழகம் முழுக்க பல பொன்சி திட்டங் கள் கனஜோராக நடந்து வருகின்றன. இந்தத் திட்டங்க ளில் பணத்தைப் போட்டால், சில ஆண்டுகளில் இரு மடங்காகும், மூன்று மடங்காகும் என்று கவர்ச்சி காட்டுகிறார்கள். அட, இவ்வளவு லாபம் கிடைக்குமா என்று மயங்கும் மக்களும் சற்றும் யோ சிக்காமல் இந்தத் திட்டங்களில் பணத்தை போடுகி றார்கள். சில நகரங்களில் உள்ள அப்பாவி மக்கள் தங்கள் வீட்டை விற்றுக்கூட இது மாதிரியான திட்ட ங்களில் பணத்தைப் போட்டிருப்பதாகச் சொல்கிறா ர்கள்.

ஆனால், ரிசர்வ் வங்கியிடமோ அல்லது அரசிடமோ எந்த வகையிலும் முறையாக அனுமதி வாங்காமல் நடத்தப்படும் இந்த நிறுவனங்களில் பணத்தை போடுவது கஷ்டப்பட்டு சம்பாதித்த நம் பணத்தை சாலையில்வீசி எறிவதற்குசமம் .

எந்தவொரு தனியார் நிறுவனமாக இருந்தாலு ம் அதில் நாம் பணத்தைப் போடும்முன், அந்த நிறுவனம் என்ன தொழில் செய்கிறது, இருமடங்கு, 3 மடங்கு லாபம் தரும் என்கிறார்களே, எப்படி சாத்தியம், அரசிடம் முறைப்படி எல்லா அனுமதி களையும் வாங்கி இருக்கிறார்களா என்பதையெல் லாம் பார்க்கவேண்டும். இவற்றையெல்லாம் பார்க் காமல்விட்டுவிட்டு, பிற்பாடு பணத்தை இழந்து விட்டோமே என்று வருத்தப்படக் கூடாது.

குறைந்த அளவு முதலீடு!

பங்குச் சந்தை என்றால் பலரிடமும் தேவையற்ற பயம் இருக்கிறது. அதை சரியாக புரிந்துகொள்ளாமல் அதில் முதலீடு செய்து விட்டு, பிற்பாடு சூதாட்டம் என்று புலம்புகிறவர் கள் அதிகம்.

பங்குச் சந்தை முதலீடு என்பது நாம் ஒரு சொந்த தொழிலுடன் இணைந்தி ருப்பதற்குச் சமமானது. சொந்த தொழிலில் வருமானத்தைத் தொடர்ச்சியாகப்பெற கால அவகாச ம் எடுத்துக்கொள்வதுபோல, பங்குச்சந்தை முதலீட்டு க்கும் கால அவகாசம் தரவேண்டும். குறைந்தது 3 முதல் 5 ஆண்டு காலம் முதலீடு செய்து காத்திருக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் அதன் மதிப்பு குறைந்தால் நம் கையில் பணமிருக்கும் பட்சத்தில் அதில் முதலீடு செய்வது நல்லது.

எல்லா மக்களும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஏற்ற இறக்கம் உள்ள து என்ற ஒரே காரணத்துக்காக அதில் முதலீடு செய்வதில்லை. ஏற்ற இறக்கம் என்பது வாழ்க் கையில் தவிர்க்கமுடியாத அம்சம். ஆனால் நீண்டகாலம் இருப்பதன் மூலம் அந்த ஏற்ற இறக்கத்திலிருந்து நம்மால் தப்பிக்க முடியும்.

தவிர, ஒருமுதலீட்டில் நீண்டகாலத்துக்கு இருக்கும்போது, கூட்டுவட்டியி னால் ஏற்படும்பலன் நமக்குக்கிடைக்கிறது. எனவேதா ன், உலகின் மிகப்பெரிய விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன் ஸ்டீன், “கூட்டு வட்டியானது உலகின் 8வது அதிசயம்” என்றார். இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் பணத்தைப் பெருக்குகிறார்கள். புரியாத வர்கள் பணத்தை இழக்கிறார் கள்.

கையில் அதிகபணம் இருக்கும்போது செய்யக்கூடாத தவ றுகளை சொல்லி விட்டோம். இனியாவது இத் தவறுகளை நீங்கள் செய்யாமல் இருப்பீர்கள் அல்லவா?

பி.பத்மநாபன், நிதி ஆலோசகர், Fortuneplanners.com

Advertisements

One Response

  1. Reblogged this on cschidam.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: