Advertisements

கோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களும்! – கிடைக்கும் புண்ணியங்களும்!

கோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களும்! – கிடைக்கும் புண்ணியங்களும்!

கோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்களும்! – கிடைக்கும் புண்ணியங்களும்!

ந‌மது முன்னோர்கள் காலத்தில் இருந்தே இந்த கோமாதா பூஜை நடைபெ ற்று வருகிறது. இந்த

கோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் பலன்க ளையும் அதனால் கிடைக்கவிருக்கும் புண்ணியங் களையும் இங்கு பார்ப்போம்.

குழந்தை பாக்கியம் பெற…

கோமாதா பூஜையினால் தரித்திரம், துக்கம் விலகுகின்றன. கோபூஜை செய்துவந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலை யான லாபம் கிட்டும். குழந்தை பாக்கியம்பெற விரும் புபவர்கள் கோபூஜை, கோதானம்செய்தால் சிறந்த அறி வுள்ள நல்ல குழந்தைகள் பிறப்பர் என்பதற்கு நமது புராணங்களும் வரலாறுகளும் எடுத்துக்காட்டாகும்.

திருமணம் நடைபெற…

நவக்கிரக பீடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையைச் செய் வது சிறந்த பலனைத்தரும். விவாகம் நடைபெறாதிருந்தாலும், காலதாமதமா கிக் கொண்டே சென்றாலும், நல்ல வரன் அமைய வில்லை என் றாலும் இந்தக் கோமாதா பூஜை அவற்றிற்கு ஒரு நல்ல தீர்வினைத்தரும்.

ஆணுக்குச்சிறந்த நற்குணமுள்ளபெண் மனைவியாகவு ம், பெண்ணுக்கு நல்ல ஆண் கணவனாகவும் கிடைக்கச் செய்யும் பூஜை இந்தக் கோமாதா பூஜை. பிரிந்த கணவன் மனைவி ஒன்றுசேரவும்,கணவன்- மனைவிக்குள் ஒற்று மை ஓங்கவும் இந்தக் கோபூஜை செய்வது அவசியம்.

வியாதி நீங்க:-

ரோகம், வியாதி ஆகியவை கோமாதா பூஜையினால் நீங்கி ஆரோக்கிய வாழ்க்கை உருவாகிறது. செல்வச் செழிப்பு எற்படு கிறது. தரித்திரம் நீங்குகிறது. சிறந்த பசுவை, உயர் ந்த பசுவை ஸ்ரீசுக்தம் சொல்லி பூஜை செய்து, தானம் செய்ய வேண்டும். இக்கோபூஜையினால், கோதான த்தினால் கோர்ட் விவகாரங்கள், வழக்குகளில் வெற்றி ஏற்படும்.விரோதம் நீங்கும்.

பிதுர் சாபம் தீர:-.

பிதுர் சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை நீங்குகிறது. பித்து, பைத்தியம் போன்றவை கோதானத்தினா ல் குணமாகி நல்ல கதி கிடைக்கிறது.

பசு மடம்…

கோமாதா என்று அழைக்கப்படும் பசு பூவுலகில் லௌகீக ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் பலப்பல நன்மைகளைத் தருகிறது. கேட்ட வரத்தை நல்கும் பசு வை எவ்வாறு பராமரித்து போற்ற வேண்டும் என்பது பற்றி சிவதருமோத்தரம் கீழ்கண்டவாறு கூறுகிறது:-

பழங்காலத்தில் பசுக்களைக்கட்டும் தொழுவத்தினை கோயிலாகவேகருதினர். இதனை “ஆக்கோட்டம்” என இலக்கியங்கள் குறிப்பிடுகிறது. பசுமடம் என்றும் வழங்குவர். அப்பசு மட த்தினை விதிப் படி செய்விக்க வேண்டும். அதாவது, ஆற்றுமண், ஓடை மண், புற்றுமண், வில்வத்தடி மண், அரசடி மண் என்பவைகளால் கொட்டிலின் தரைப் பகுதியை அமை க்க வேண்டும்.

முதிர்கன்று, இளங்கன்று, நோயுற்ற கன்று ஆகியவற் றிக்கு வெவ்வேறு இடங்களை அமைக்கவேண்டும். நாள்தோறும் கோசல , கோமலங்களைப் புறத்தே நீக்கி சுத்தம் செய்ய வே ண்டும். துர்நாற்றம் வராமல் தூபம் இட வேண்டும். தீபங்கள் ஏற்றவேண்டும். சாலையினுள் சுவத்தி என்னும் சொல்லைச்சொல்லி, மெல்ல மெல்ல பசுக் களை புகுவித்து, சிரத்தையோடு புல்லைக்கொடுக் க வேண்டும்.

நோயுற்ற பசுக்களுக்கு தனியிடம் அமைத்து, மருந்தளித்து பேண வேண் டும். அஷ்டமிதோறும் பசுக்களை நீராட்டி, பூச்சூட்டி, அன்ன மும் ஜலமும்ஊட்டி, தீப தூபம் காட்டி வணங்க வேண்டும். வேனிற்காலத்தில் பசுக்களை சோலைகளிலும், மழைக்கா லத்தில் மலைச்சாரல் வனங்களிலும், பனிக் காலத்தில் வெயில் மிகுந்த வெளிகளிலும் மேய்க்க வேண்டும்.

பால் கறத்தல்…

கன்றுபால் உண்டு காம்பை விடுத்தபின், தண்ணீ ரால் காம்பை கழுவி பாலைக்கறக்க வேண்டும். ஆசை மிகுதியினால் கன்றுக்கு பால்விடாமல் கற ந்தவன் நரகத்தில் விழுந்து நெடுங்காலம் வருந்தி, பூமியிலே பிறந்து கடும் பசியினாலே வீடுகள்தோ றும் இறப்பான். கபிலை இனப்பசுவின் பாலைச் சிவ பூஜைக்கு கொடுக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது.

அதனை மனிதர்கள் தங்கள்தேவைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. மலட்டுப்பசுவின்மீதோ, இடபத்தி ன்மீதோ பாரம்ஏற்றினோர் நரகத்தில் வீழ்வர். பசுக் களைப் பகைவர் கவர்ந்து சென்றால் தங்கள் உயி ரைக் கொடுத்தேனும் அவற்றைக் காக்க வேண்டும் என்று சான்றோர்கள் கூறியுள்ளனர்.

பசுக்களுக்குத்தீமை செய்தல் கூடாது…

பசுக்களை ஓட்டிச்செல்லும்போது சிறிதும் வருத்தம் செய்யா மல், இரக்கத்தோடு பலாசங்கோலினை மெல்ல ஓங்கி போ போ என்று ஓட்டிச்செல்லவேண்டும். இரக்கமின்றி கோபித் து அதட்டி அடிப்போர் நரகத்தில் வீழ்வர். பசுக்களை இடர் நீங்கக் காக்காதவர்களும், பூஜை செய்யாதவர்களும், காக் காத பாவிகளைத் தண்டியாத அரசனும் நரகத்தில் வீழ்வார்கள்.

பசுவின்குருதியானது ஒருதுளி இப்புவியில் விழுந்தாலும் அதிலிருந்து பல கோடி அசுரர்கள் வந்துதித்து உலகை நாசம்செய்வர் என் று வேதம் கூறுகிறது. எனவே பசுக்களுக்கு எவ்விதத் தீங்கும் செய்தல்கூடாது. ஆவுரிஞ்சுக்கல் நாட்டு தலும், சிவனுக்கும், ஆச்சாரியருக்கும் பசுவைத்தானம் செய்தலும் வேண்டும்.

குற்றமற்ற பசுக்களை இடபத்தை சிவசந்நிதிக்கும் தானம் செய்தலும், சிவ னது திருப்பணியின் பொருட்டுச் சகடத்திற்கு எருது கொடுத்தலும் வேண்டும். இளைத்த பசுவை வாங்கி வளர்த்தலும் பெரும்புண்ணியம் தரும். பசுவைக்கொ ன்றவனும், கொலைக்காகக் கொடுத்தவனும், அதன் இறைச்சியைத் தின்றவனும் துயரில் அழுந்துவார்க ள். எனவே பசுக்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படு வதை நாம் தடுக்க வேண்டும்.

கோயிலுக்குச் செல்பவர்கள் கோயிலிëன் பசு மடத்திலு ள்ள பசுக்களுக்கு அகத்திக் கீரை, பசும்புல், பழங்கள் உள்ளிட்ட தீவனங்களை அளிக்க வேண்டும். நோயுற்ற பசுக்களுக்கு சிகிச்சைக்கான செலவினையும் ஏற்றுக் கொண்டால் நாமும் ஆரோக்கியமான வாழ்வைக் பெற லாம்.

பசுவும் புண்ணியங்களும்…

*பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோ கம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடை க்கும்.

*பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.

*பசு உண்பதற்கு புல்கொடுத்தாலும்(கோக்ராஸம்), பசுவி ன் கழுத்துப்பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண் டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்த னர்.

*பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்க ப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.

*பசு நடக்கும்போது எழும்புழுதியானது நம் உடலி ல் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக் கொண்டார் கள்.

*`மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிëக்கு மங்களத் தைத் தருகிறது.

*பசு வசிக்கும்இடத்தில் பசுவினருகில் அமர்ந்துசெய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறுபங்கு பலனைத்தருகின்றன.

*மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புல ப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.

*ஒருவர் இறந்தபின் பரலோகத்திற்கு அழைத்துச் செ ல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக் கிறது. பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில் லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற, அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரண்ய நதியைக் கடந்து விடலா ம் என்று கருட புராணம் கூறுகிறது.

*உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தா லும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக் கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்ப து ஆன்மிக ஆராய்ச்சியாளர்க ளின் கருத்தாகும்.

*கறவை நின்ற வயதான பசுக்களைக்கூட நாம் பேணிக் காக்க வேண்டும். *பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்திதோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன.

=> கிருஷ்  சுனில்குமார்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: