Advertisements

கர்ப்பிணிகள் தினமும் முட்டை சாப்பிட்டு வந்தால்

கர்ப்பிணிகள் தினமும் முட்டை சாப்பிட்டு வந்தால் . . .!

கர்ப்பிணிகள் தினமும் முட்டை சாப்பிட்டு வந்தால் . . .!

கர்ப்பிணிகள் முட்டை சாப்பிடுவது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது என்று சமீபத்திய

ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது சிசுவை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக் கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கர்ப்பிணிகளின் டயட் தொடர்பாக அமெரிக்காவி ன் இதாகா நகரில்உள்ள கார்னெல் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் மேரிகாடில் தலைமையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிறைமாத கர்ப்பிணிகள் மற்றும் 7 மாத, 8 மாத கர்ப்பிணிகள் 24 பேர் ஆய்வுக்கு தேர்வுசெய்யப்பட்டனர். முட்டையில் உள்ள கோலைன் சத்து 480மிகி அல்லது 930மிகி அள வுக்கு கிடைக்கும் வகையில் தினமும் முட்டை சாப்பிடுமாறுகூறப்பட்டது. பிரசவம்வரை அவ ர்கள் முட்டை சாப்பிட்டு வந்தனர். ஆய்வின் முடிவில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன. நிறையசத்து இருக்கு ஒருமுட்டையின் மஞ்சள் கருவில் 125மிகி அளவுக்கு கோலைன் பொருள் உள்ளது. இதுதவிர புரதம், இரும்புசத்து, ஃபோலேட் உள் ளிட்ட பலசத்துகள் முட்டையில் உள்ளதால், கர்ப்பிணிகள் நிறைய சாப்பிட லாம்.

மூளை வளர்ச்சிக்கு உதவும்

கருவிலுள்ளசிசுவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு முட்டையில் உள்ள கோலைன் முக்கிய பங்காற்றுகிறது. சிசுவின் நியூரோ எண் டோகிரைன் சுரப்பு சீராகிறது. ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் வாழ்நாள் முழுவதும் மூளையின் நினைவாற்றல் மற்றும் கற்கும் திறன் சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தில் ரத்தஓட்டம், டென்ஷன், சர்க்க ரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் வராமலும் தடுக்கிறது.

டென்சனை குறைக்கும்

கர்ப்பகால டென்சனைகுறைக்க முட்டை உதவுகிறது. முட்டை அதிகம் சா ப் பிடுவதால், கார்டிசால் சுரப்பு சீராகிறது. இதனால், பல பாதிப்புகள் தவிர்க்கப்படுகிறது. மேலும் கர்ப்ப காலத்திலும் பிரசவத்தின்போதும் தாய்க்கு நோய்த் தொற்று ஏற்படாமல், வருங்காலத்தில் மார்பக புற்று நோய் வராமலும் கோலைன் காப்பாற்றுகிறது.

உயர் ரத்த அழுத்தம்

கர்ப்பிணிகள் தினசரி 480 மில்லிகிராம் கோலைன் எடுத்துக்கொள்வதன்மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்ப டுவது தடுக்கப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியு ள்ளனர். எனவே கர்ப்பிணிகள் தினசரி ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் அறிவான ஆரோக்கியமான குழந் தையை பெற்றெடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

ஒரு சில கர்ப்பிணிகளுக்கு இது பொருந்தாது. மருத்துவரின் ஆலோசனை அவசியம் பெற்று உண்ண‍வும்.

=> மரு. தினகரன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: