Advertisements

கர்ப்பிணிகளுக்கான சில தந்திரங்களும் மந்திரங்களும்! – அவசியமான தொரு அலசல்

கர்ப்பிணிகளுக்கான சில தந்திரங்களும் மந்திரங்களும்! – அவசியமான தொரு அலசல்

கர்ப்பிணிகளுக்கான சில தந்திரங்களும் மந்திரங்களும்! – அவசியமான தொரு அலசல்

திருமணம் ஆகி ஆறுமாதங்கள் கடந்த பிறகு, உற்றார் உறவினர் தோழ மைகள் என

அனைவரும் கேட்பது, ஏதாவது விசேஷமா? என்றுதான்.

தாய்மை, பெண்களுக்கே கிடைக்கும் ஒரு மிகப் பெரிய பாக்கியம். ஒரு பெண் தாய்மை அடையும்பொழுது, அவளதுமனதிலும், உடலி லும் எண்ணற்ற மாறுதல்கள் ஏற்படுகின்றன. அத்தனையையும் தாங்கி இவ்வுலகிற்கு ஒரு உயிரை கொண்டு வருகின்றாள். கர்ப்ப காலத்தில், ஒரு பெண்ணிற்கு பல்வேறு சங்கடங்கள் உண்டாகி ன்றன. அவற்றில் தூக்கமின்மை யும் ஒன்று.

கர்ப்பகாலத்தில் காணப்படும் நித்திரையின்மை, ஒரு சங்கடமான பிரச்சனை என்றாலும், பொதுவாக இது எல்லா பெண்களிடமும் காணப்படுகின்றது. ஒரு மக வை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு அம்மா இந்த பிர ச்சனையை எவ்வாறு சமாளிக்கின்றார் என உங்களு க்குத் தெரியுமா?

இந்த தூக்க குறைபாடு ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன.

ஒவ்வொரு காரணமும் மிகவும் தனித்தன்மை வாய் ந்தது. எனவே அந்த காரணங்கள் ஒவ்வொன்றையு ம் தனிப்பட்ட முறைகளைக் கையாண்டு தூக்கமின் மை நோயை குணப்படுத்த வேண்டும்.

தூக்கமின்மை, ஜெட்லேக் அல்லது பணிநேரம் மாற் றம் போன்றவற்றால் சில சமயம் ஏற்படலாம். இது உடல் வலி அல்லது வயிற்றுக் கோளாறு (GERD) போன்றாவற்றால் கூட தூண்டப்படலாம். அவ்வாறு தூண்டப்பட்டால் ஒரு சிலருக்கு தன்னிச் சையான வாந்தி ஏற்படலாம், அல்லது அவர் வேக மாக ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிடலாம்.

கெட்டகனவுகள் மற்றும் தூக்கத்தில் நடக்கும்வியா தி போன்றவையும் கூட தூக்கமின்மை வர காரணமா கலாம். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களுக் கு, பித்து அல்லது போபியா போன்ற மன நோய்கள் உருவாகலாம். மருந்து எடுத்துக் கொள்ளுதல், உடல் வறட்சி மற்றும் போ திய உடற்பயிற்சி இல்லாமை போன்ற வெளிப்புற காரணிகள் கூட தூக்க மின்மையை தூண்டலாம்.

கர்ப்பகாலத்தில் தூக்கமின்மை வருவதற்கு ஏகப்ப ட்ட காரணங்கள் உள்ளன. அவ்வாறு வருவதற்கு குழந்தையும்கூட ஒருகாரணமாக இருக்கலாம் அல் லது இல்லாமல் போகலாம். ஒரு கர்ப்பிணி தாய் கருவுற்ற பிந்தைய கால கட்டங்களில், கரு நன்கு வளர்ந்து விடுவதால் அவரது வயிற்றின் அளவு அதிகரிக்கும். அவ்வாறு ஏற்படும் சங்கடங்கள் கூட தூக்கமின்மை வர காரணமாக இருக்கலா ம்.

ஒரு சில தாய்மார்களுக்கு குழந்தையின் அதிக எடை காரணமாக முதுகு வலிவரும். அவ்வாறு உண்டாகும் முதுகுவலியானது அந்ததாய்க்கு தூக்க மில்லாத இரவுகளை நிச்சயம் பரிசளிக்கும். குழந்தையின் அதிக எடையானது தாயின் சிறுநீர்ப் பை மீது ஒரு அழுத்தத்தை உருவாக்கும். அதன் கார ணமாக அந்த தாய்க்கு இரவு முழுவதும் அடிக்கடி சிறுநீர் வரும். இதன் காரணமாக அந்தத் தாயால் கண்டிப்பாக இரவு முழுவதும் நிம்மதியாக தூங்க இயலாது.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கவலைகள் கண்டிப்பாக தூக்கமின்மையை ஏற்படுத்துவதுடன், ஒரு தீய சுழற்சியையும் ஏற்படுத்து கின்றது. மேலும் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்கள் தூக்கமின்மையை ஏற்படுத்துவதா ல், ஒரு தாய் இயற்கையாகவே அடிக்கடி இரவில் விழித்து இருப்பாள்.

ஒரு தாய் தன் தூக்கமின்மைப் பற்றி கவலைப்பட் டால் அது அவளது குழ ந்தையையும் கண்டிப்பாக பாதிக்கக்கூடும். இப்பதற்றம் தூக்கமின்மையை மேலும் அதிகரிக்கும். எனவே கர்ப்பிணிபெண்கள் கர்ப்ப காலத்தில் தூக்கமின்மை எவ்வாறு சமாளிக்க முடியும்?. கருவின் எடை காரணமாக உங்களுடைய வயிற்றின் அளவு, வடிவம் மற்றும் எடை, உங்களை கட்டா யம் கஷ்டப்படுத்தும். எனவே நீங்கள் புதிய நிலைகளில் தூங்க முயற்சி செய்வீர்கள். அது உங்களுக்கு கட்டாய முதுகு வலியைத் தரும்.

கர்ப்பிணிகள் இடது பக்கமாக தூங்குவதோடு, ஒரு குஷன் அல்லது மென்மையான பொருள் எதையாவது உங்களுடைய வயிற்றுக்கு கீழ் வைத்துக் கொண்டு தூங்க முயற்சி செய்யலாம்.

தூங்க முயற்சிக்கும் முன் சூடான வெந்நீரில் குளிய ல் போடுவது உங்களுடைய அழுத்தத்தை குறைத் து, தூக்கத்தைப் பரிசளிக்கும்.

நல்ல மனதுக்கு பிடித்த இசை இங்கே சில நன்மை களைத் தருகின்றது. இய ற்கையான ஒலிகளான பறவைகளின் ரீங்கார ங்கள் அல்லது கரையில் மோதும் கடலின் ஒலி போன்றவை உங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.

இரவுநேரங்களில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை குறை ந்த அளவு எடுத்துக் கொள்வது, உங்கள் மூளை அதிக அளவில் செரோட்டி னை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும். செரோட்டின் ஆனது நீங்கள் நன்றாக தூங்க உங்களுக்கு துணை புரியும்.

எனவே, கர்ப்ப காலத்தில் தூக்கமின்மை யை குணப்படுத்த மேற்கூறிய இந்த தந்திர ங்களை முயற்சி செய்து நன்கு தூங்குங்கள். .

=> வித்யா வரதன் (மின்ன‍ஞ்சலில் அனுப்பியது)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: