Advertisements

2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் (வரவு செலவு திட்ட‍ம்) முழுவிவரம்

2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் (வரவு செலவு திட்ட‍ம்) முழுவிவரம்

2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் (வரவு செலவு திட்ட‍ம்) முழுவிவரம்

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நேற்று 2016-17-ம் ஆண்டுக்கான மத்திய அரசின்

பட்ஜெட்டை (வரவு-செலவு திட்டம்)   பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, பேசியதாவது “இந்தியப் பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. இந்தியப் பொருளாதாரம் 2015-16-ல் 7.6% உயர்ந்துள்ளது. உலகளவில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையிலும்கூட இந்தியப் பொருளாதா ரம் வளர்ச்சியடைந்துள்ளது. சிரமங்களையும், சவால்களையும் வாய்ப்பு களாக மாற்றியுள்ளோம்.

கட்டமைப்பை சீரமைப்பதன்மூலம் சவால்களை எதிர்கொள்ள வேண்டி யுள்ளது. பொருளாதார வளர்ச்சி சரியாத அளவுக்கு உள்நாட்டுச் சந்தை யை சார்ந்து பணியாற்ற வேண்டும். சமூக, புறநகர், விவசாயம் சார்ந்த செலவினங்களை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. ஏழாவது சம்பள க் கமிஷன் மற்றும் ராணுவ வீரர்களின் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தால் அடுத்த நிதியாண்டில் பொருளாதாரச் சுமை அதிகமாகும். சமையல் எரி வாயு மானியத்தை 75லட்சம் பேர் விட்டுக்கொடுத்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.

2016-17 பொது பட்ஜெட் – அறிவிப்புகள்

-விவசாயத்துக்கு ரூ. 35,984 கோடி ஒதுக்கீடு

-வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரி கட்டுவோருக்கு ரூ 60,000 வரை வரிச்சலுகை

-28.5 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பிரதமரின் க்ரிஷி சிச்சாய் யோஜனா திட்டத்தின்கீழ் கொண்டு வரப்படும்

-கரிம வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.412 கோடி நிதி ஒதுக்கீடு

-விவசாயம் சார்ந்த கடன்களுக்காக ரூ.9 லட்சம் கோடி ஒதுக்கீடு

-ரூ.20,000 கோடி முதலீட்டில் நீப்பாசன நிதியம் உருவாக்கப்படும்

-பயிர் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு

-100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.38,500 கோடி நிதி ஒதுக்கீடு

-தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு ரூ.9,000 கோடி நிதி ஒதுக்கீடு.

-கிராம பஞ்சாயத்துகள், நகராட்சிகளுக்கு ரூ.2.87 லட்சம் கோடி

-கிராமப்புறங்களில் பெண்களின் பெயரில் புதிய எரிவாயு இணைப்புக்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு

-பிரதமரின் ஜன் அவுஷோதி திட்டத்தின்கீழ் 3,500 மருந்து கடைகள்

-குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் சுகாதார காப்பீடு – 60 வயதானவர்களுக்கு ரூ.35 ஆயிரத்தில் காப்பீடு புதுப்பிப்பு

-ஸ்டான்ட் அப் இந்தியா திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

-இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களின் சில பாகங்களுக்கு சுங்கவரி ரத்து

-அனைத்து மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும் தேசிய இலவச இரத்த சுத்திகரிப்பு சேவை

-ரூ.1700 கோடி செலவில் 1500 பன்முகத்திறன் பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும்

-பணியாளர் ஓய்வூதிய நிதிக்கு 8.33 சதவீதம் தொகையை மத்திய அரசு வழங்கும்

-வாரத்தின் ஏழு நாட்களிலும் ஷாப்பிங் மால்கள் திறந்திருக்கும் வகை யில் மாநிலங்களுக்கு சுற்றறிக்கை

-கிராமப்புறங்கள் உள்பட சாலைப் பணிகளுக்கு ரூ.97 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

-நடப்பு நிதியாண்டில் கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.2.21 லட்சம் கோடி ஒதுக்கீடு

-பொதுப் போக்குவரத்தில் பர்மிட் முறையை ஒழிப்பது அரசின் குறுகியக் கால இலக்காக இருக்கும்

-2,000 கிலோமீட்டர் நீளம் கொண்ட மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றம்

-சாலை மற்றும் இருப்புப்பாதைகளுக்கான நிதி ஒதுக்கீடு 2.18 லட்சம் கோடி

-துறைமுகங்களை மேம்படுத்தும் சாகர்மாலா திட்டத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி

-அணு மின்சார திட்டங்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

-இந்தியாவில் தயாராகும் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்த 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி

-பொதுத்துறை வங்கிகளின் முதலீட்டை ஸ்திரப்படுத்த ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

-வருமான வரி கட்டுவோரின் வீட்டு வாடகை கழிவுத்தொகை ரூ. 60 ஆயிரமாக உயர்வு  

நன்றி மாலைமலர்

Advertisements

One Response

  1. Please stopped 100days works because workers not going to normal works and laziness improve in India. Amma unavakam also given gift to lazy

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: