Advertisements

சொந்த தொழில் செய்வோர் மேற்கொள்ள‍ வேண்டிய முன்னெச்ச‍ரிக்கை நடவடிக்கைகள்! – உபயோக குறிப்புக்கள்

சொந்த தொழில் செய்வோர் மேற்கொள்ள‍ வேண்டிய முன்னெச்ச‍ரிக்கை நடவடிக்கைகள்! – உபயோக குறிப்புக்கள்

சொந்த தொழில் செய்வோர் செய்துகொள்ள‍வேண்டிய முன்னெச்ச‍ரிக்கை நடவடிக்கைகள்! – உபயோக குறிப்புக்கள்

ஒரு சாதாரண சேல்ஸ்மேனில் துவங்கி வங்கி மேலாளர், ஹோட்டல் நிறுவனர், தொழில் முனைவோர் என எவ்வித

நிலையில் இருந்தாலும் அவர்களுக்கான முக்கி யமான விஷயங்கள் இருக்கும். அத்தேவைகளை ப்பூர்த்தி செய்து கொள்ளும் போது வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்கும். மற்ற வேலைகளில் இருப் பவர்களைவிட சொந்தமாகத் தொழில் செய்பவர் கள் கட்டாயம் சில விஷயங்களைச் செய்தே ஆக வேண்டும். அவை என்ன என்பதை பார்ப்போம்.
.
1.திட்டமிடல்! (Planning):
.
சொந்தமாகத்தொழில் செய்பவர்கள், ஒவ்வொரு நாளும் என்ன வேலை உள்ளது, அந்த வேலைகளில் எதைக் கட் டாயம் முடிக்க வேண்டும், எந்த வேலைக்கு அதிக முக்கி யத்துவம்கொடுக்கவேண்டும் என அட்டவணைப்படுத்திக் கொள்வது அவசியம். அதாவது தன் வேலைகளை டைரி யில் அல்லது கேட்ஜட்களில் அதில் குறித்து வைத்துக்கொள்வது நல்லது.
.
2. கருவிகள் (Gadgets)
.
இன்றைய சூழ்நிலையில் அனைத்து வேலைகளையுமே வேகமாக முடிக் கவேண்டிய நிலையில் இருக்கிறோம். நீங்கள் செ ய்யும் வேலையில் தாமதம் ஏற்பட்டால், கூடி வந்த‌ வெற்றி உங்களின் கையை விட்டுப் போகக்கூடிய வாய்ப்புள்ளது. உங்கள் தொழிலுக்குத்தேவையான கருவிகளை எப்போதுமே வைத்தி ருப்பது நல்லது. அதாவது லேப்டாப், செல்போன், சேல்ஸ் கிட் என தேவையானவற்றை நிச்ச யம் வைத்துக்கொள்ள வேண் டும்.
.
3. உடை (Dress)!
.
சொந்தமாக தொழில் செய்யும்போது பலவிதமான மனிதர்களைச்சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் எப்போதுமே அலுவல க உடையில் இருப்பது நல்லது. ஏனெனில் இதை வைத்தும் உங்களை மதிப்பீடுவர்கள். அதாவது உங் களுடைய நிறுவனத்துக்கு, ஆர்டர் கொடுக்க திட்ட மிட்டு இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். உடைக்கு எந்தவிதமான முக்கியத்துவமும் தரமால் இருப்பதால் இவர் எப்படிக் கொடுக்கும் வேலையில் கவனம் செலுத்துவர் எனநினைக்கத்தோன்றும். அதீதமுதலீட்டுடன் தொழில் முனைவோராக நீங்கள் இருந்தால் கோட்சூட் வைத்துக் கொள்வது நல்லது. நடுத்தர தொழிலாக இருந்தா, நல்ல பிரேண்டட் உடைகளை அணிந்து செல்வது நல்ல‍து சில முக்கியமான நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது இதை அணிவதுசிறப்பு. மேலும்அதற்கேற்ப உங்களு டைய ஷூ, லெதர் பெல்ட் போன்றவை அணிவது கூடு தல் சிறப்பாக இருக்கும்.
.
4. பிசினஸ் கார்ட்ஸ் (Business Card)
.
நீங்கள்சந்திக்கும் ஒவ்வொரும் உங்களை நினைவு வைத்துக்கொள்ள முடியாது. எனவே நீங்கள் சந்திக்கும் நபர்களிடம் பிசின ஸ் கார்ட் வழங்குவது முக்கியம். நீங்கள் எவ்வளவு திற மையானவராக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் உங் களை எளிதாக தொடர்பு பிசினஸ் கார்ட் அவசியம் தேவை. பிசினஸ்கார்ட் என்பது வேறு ஒன்றும் இல்லை, விசிட்டிங் கார்ட்தான்.
.
5. கற்பனை திறன் (Imagination Power)!
.
ஒவ்வொரு தொழிலிலும் போட்டியார்கள் கட்டாயம் இருப்பார்கள். போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள் ளி உங்களின் பொருட்களை முன்நிறுத்துவதற்குத் தேவையான புதிய ஐடியாகள் அவசியம் தேவை. தொழிலில் ஏற்படும் சிக்கல்களையும், சவால்களை யும் சமாளிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சந்தையில் உங்களின் பொருட்கள் தனி அடையாளத்துடன் தெரிவதற்கான வேலைகளைச் செய்வது அவசியம்.
.
6. விடா நம்பிக்கை (Hope)
.
தொழிலில் நஷ்டம் என்பது தவிர்க்க முடியாத ஒன் று. நஷ்டம் ஏற்படும் போது நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. அந்தச் சூழ்நிலையை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டும் இல்லா மல் உங்களின் உற்பத்தி பொருளின்மீது வாடிக்கை யாளர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டு ம். எனவே எப்போதுமே தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளக்கூடாது.
.
7. எதிர் கால இலக்கு (Future Target)
.
தொழிலில்எப்போதுமே எதிர்காலஇலக்குகளை வைத்திருக்க வேண்டும் . அதாவது அடுத்த ஒருவருடத்தில் நிறுவனம் எப்படிச் செயல்பட வேண்டும். லாபம் எவ்வளவு இருக்க வேண் டும், உற்பத்தி அளவை எவ்வாறு அதிகரிக்க வேண்டும் என்றெல்லாம் முன்கூட்டியே இலக்குகளைத் தீர்மானி ப்பது அவசியம். இலக்குகளை அதை நோக்கிய பயண ச்செய்வது தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு உதவியாக இருக்கும்.
.
8. சுய அறிவு (Self Knowledge)!
.
தொழில்குறித்து எடுக்கும் முடிவுகள் என்பது உங்களின் முடிவாக இருப்ப து அவசியம். அதாவது நண்பர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உந்துதலின்பேரில் எந்தவித மான முடி வையும் எடுக்கக் கூடாது. ஒரு முடிவு எடுப்பதற்குமுன் அந்த முடிவு சரியாக இருக்கு மா, அதனால் எதாவது பாதிப்பு ஏற்பட வாய்ப்பு ள்ளதா? என்பதைக் கவனித்து முடிவு எடுப்பது நல்லது.
.
=> ப.செ. சதீஷ் குமார்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: