Advertisements

உலகமே வியந்த‌ ஒரு மாவீரனின் கடைசி நிமிடங்கள்! – உள்ள‍த்தை உருக்கும் இதயத்தை இறுக்கும்

உலகமே வியந்த‌ ஒரு மாவீரனின் கடைசி நிமிடங்கள்! – உள்ள‍த்தை உருக்கும் இதயத்தை இறுக்கும்

உலகமே வியந்த‌ ஒரு மாவீரனின் கடைசி நிமிடங்கள்! – உள்ள‍த்தை உருக்கும் இதயத்தை இறுக்கும்

இந்த உலகில் எத்தனையோ போராளிகள், தங்களது சமூகத்திற்காக, நாட் டிக்காக அல்லும்பகலும் அயராது பாடுபட்டு,

உறக்கம் காணா விழிகளை ஆயுதங்களாக்கி, பலயுத்தங்கள் போராட்டங் கள் மூலமாக‌ளை, எதிரிகளை திணறடித்து, அவர்களை தோல்வி விளிம் பில்  நிறுத்தி வேடிக்கை பார்த்துள்ள‍னர். ஆனால் கடைசியில் துரோகிக ளின் சூழ்ச்சியால் இன்னுயிரை தியாகம் செய்துள்ள‍னர். அந்த வரிசையி ல் இங்கே நாம் ஒரு போராளியின் கடைசி நிமிடங்களைத்தான பார்க்க‍ விருக்கி றோம்.
1967 அக்டோபர் 8  தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம். காலை 10.30 யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ‘சே’ கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் குண்டுப் பெண் ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.
நண்பகல் 1.30 அந்தக் குண்டுப் பெண் பொலிவிய ராணுவத்துக்கு ‘சே’ வின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்து வந்த பொலிவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங் குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கியால் சுடுகின்றனர்.
பிற்பகல்3.30 காலில் குண்டடிபட்டநிலையில், தன்னைச் சுற்றித்துப்பாக் கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம், ”நான்தான் ‘சே’. நான் இறப்ப தைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக் கும்” என்கிறார்.
மாலை5.30 அருகிலிருந்த லாஹிகுவேராவுக்கு வீரர்கள் கைத்தாங்கலா க ‘சே’வை அழைத்து வருகின்றனர். அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் ‘சே’ கைகால்கள் கட்டப்பட்டநிலையில் சிறை வைக்கப்படுகிறா ர்.
இரவு 7.00 ‘சே பிடிபட்டார்’ என சி.ஐ.ஏ&வுக்குத் தகவல் பறக்கிறது. அதே சமயம், ‘சே’ உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவல் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்படுகிறது. தனக்கு உணவு வழங்க வந்த பள்ளி ஆசிரியையிடம், ”இது என்ன இடம்?” என்று ‘சே’ கேட் கிறார். பள்ளிக்கூடம் என அந்தப் பெண் கூற, ”பள்ளிக் கூடமா… ஏன் இத்த னை அழுக்காக இருக்கிறது?” என வருத்தப்படுகிறார். சாவின் விளிம்பி லும் ‘சே’வின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.
அக்டோபர் 9 அதிகாலை 6.00 ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒருஹெலிகாப்டர் வட்டமடித்தபடி வந்திறங்குகிறது. அதிலிருந்து சக்தி வாய்ந்த ரேடியோ மற்றும் கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.
கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த ஆடைகளுடன் ‘சே’வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது ‘சே’தான் என அமெரிக்காவுக்குத் தகவல் பறக்கிறது.

‘சே’வின் டைரிகள் மற்றும் உடைமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் ‘சே’வை பல கோணங்களில் புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக் காட்சி தரும் ‘சே’வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.
காலை 10.00  ‘சே’வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தி னால், அது உலகம் முழுக்க அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத் தன் மையையும் உருவாக்கிவிடும் என்பதால், அவரை உடனடியாகத் தீர்த்துக் கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏ&விடம் இருந்து தகவல் வருகிறது.

வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500, 600 எனக் குறிச் சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் ‘சே’… 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.
காலை 11.00  ‘சே’வைச் சுட்டுக் கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. ‘மரியோ ஜேமி’ என்னும் பொலிவிய ராணுவசர்ஜன் அக்காரியத்துக்காகப்பணியமர்த்தப்படுகிறார்
நண்பகல் 1.00  கைகள் கட்டப்பட்ட நிலையில், ‘சே’வை பள்ளிக்கூடத்தின் மற்றொரு தனியிடத்துக்கு மரியோ அழைத்துச் செல்கிறார். ”முட்டி போ ட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!” என்பார் ‘சே’. ஆனால், மரியோ அவரை ஒருகோழையைப்போலக் கொ ல்லத் தயாராகிறார். தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு ‘சே’ கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார்.
”கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத் தான்!” இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வாசகம் இதுதான்!
மணி1.10  மனிதகுல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன் று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல் லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான். ‘சே’ இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது. இதுதான் உலகம்.
=> திருமதி சுகந்தி ஆனந்தன் (விதை2விருட்சம் இணையத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பியது)

Advertisements

One Response

  1. Reblogged this on cschidam.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: