Advertisements

“அவருக்கும் சந்தேகம் புத்தி இருந்து விட்டால் என்ன செய்வது????”

“அவருக்கும் சந்தேகம் புத்தி இருந்து விட்டால் என்ன செய்வது????”

“அவருக்கும் சந்தேகம் புத்தி இருந்து விட்டால் என்ன செய்வது????”

அன்புள்ள சகோதரிக்கு,

நான், எம்.இ., முடித்து, தனியார் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் பெண்; எனக்கு ஒரு

அக்காவும், தம்பியும் உள்ளனர். அக்காவிற்கு திருமணம் ஆகிவிட்டது. என் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

நான், பி.இ. படிக்கும்போது ஒருவரை காதலித்தே ன். மூன்று ஆண்டுகள் தொடர்ந்த எங்கள் காதல், அவரின் சந்தேக புத்தியால், பிரச்னை ஏற்பட்டு, பிரிந்துவிட்டோம். இதனால், நான் சாகும்வரை சென்று பிழைத்துவந்தேன். இவ்விஷயம், என் அம்மாவிற்கும் தெரியும்.

அவருக்கு இன்று திருமணம் ஆகிவிட்டது. அதன்பின், என் அம்மா எனக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார். ஆ னால், எனக்கோ, என்னை திருமணம் செய்து கொள்பவருக்கு, என் காதல் விபரம் தெரிந்து விடுமோ, அவருக்கும் சந்தேகம் புத்தி இருந்து விட்டால் என்ன செய்வது என்று ஏதேதோ எண்ணி, ‘இன்னும் சில ஆண்டுகள் போகட்டு ம்…’ என்று பிடிவாதம் பிடித்து, திருமணத்தை தள்ளி வைத்தேன்.

அதன்பின், எம்.இ., முடித்து, தனியார் பொறியியல் கல்லூரியில் பணிபுரி ந்த போது, உடன் வேலை பார்த்த ஒருவர், நண்ப னாக அறிமுகமானார். அவரிடம், என் காதல் பிரச்னையை கூறி வருத்தப்பட்டேன். இதனால் தானோ என்னவோ, அவருக்கு என் மேல் காதல் ஏற்பட்டு, ‘அவனை போல் நடந்து கொள்ள மாட்டேன்; உன்னை நன்றாக பார்த்துக் கொள்வேன். உன் பழைய வாழ்க்கையைமறந்து, புது வாழ்க் கையை ஆரம்பிக்கலாம்.’ என்று கூறினார்.

அவரது வார்த்தையை நம்பி, ‘என் அம்மாவிடம் வந் து பேசுங்கள்; என் அம் மா ஏற்றுக் கொண்டால், என க்கு சம்மதம்…’ என்றேன். அதன்பின், அவரது வீட்டி லிருந்து வந்துபேசினர்; அம்மாவும் இதற்கு சம்மதித் ததால், வார்த்தை அளவில், திருமணம் உறுதி செய் யப்பட்டது.

ஆனால், சில நாட்களில் இவரின் நண்பர் ஒருவர், என் அம்மாவிடம், ‘ அவ னுக்கு, உடலில் சரி செய்ய முடியாத நோய் உள்ளது…’ என்றார். அதை விசாரித்தபோது, அந்த நபர் கூறியது உண்மை என்று தெரிய வந்து, திருமண ஏற்பாட்டை நிறுத்தி விட்டார் அம்மா. நானும், அந்த வேலையை விட்டு, வேறொரு கல்லூரிக்கு சென்று விட்டேன்.

அதன்பின், திருமணமே வேண்டாம் என்ற எண் ணத்துடன் நானும், எனக்கு திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்ற வேதனையுடன் அம்மாவும் என, சில ஆண்டுகள் கடந்து விட்டன.

நான் எம்.இ. படித்தபோது என்னிடம் படித்த ஒருவர், தற்போது, ஐ.டி., கம்பெனியில் பணிபுரிகிறார். பல ஆண்டுகளுக்கு பின், என்னை போனில் தொடர்பு கொண்டவர், ‘அப்போதிருந்தே உன்னை காதலிக்கி றேன்; உன் னிடம் என் காதலை சொல்லும் நிலையி ல், அன்று உன் வாழ்க்கை இல்லை. உன்னை திரு மணம் செய்து கொள்ள விரும்பி, உனக்காகவே காத்தி ருக்கிறேன்; உன் வாழ்க்கையில் நடந்த அத்தனை பிரச்னைகளும் எனக்குத் தெரியும். அத னாலேயே என் காதலை உன்னிடம் சொல்ல முடிய வில்லை…’ என்று வருத்தத்துடன் கூறினார்.

ஆனால், என்னால், அவருடைய காதலை ஏற்க முடி யவில்லை. ஏற்கனவே, என் வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், என்னை மட்டும் இல்லாமல், என் அம்மாவையும் மிகவும் வேதனைப்படுத்தி விட்டது. அதனால், ‘நீயாக தேர்ந்தெடுக்க நினைத்த வாழ்க்கை தவறாக போய் விட் டது; இனிமேலாவது, நான் பார்க்கும் மாப்பிள்ளையை மணந்து கொள்…’ என்று கூறி விட்டார் அம்மா.

அதை மனதில் வைத்து, அவரிடம், ‘நண்பனாக பேசி னால் மட்டும்பேசு; இல்லையென்றால் என்னிடம் பேச வேண்டாம்…’ என்றேன். அதன்பின், கடந்த ஒரு ஆண் டாக நண்பர்களாக மட்டுமே பேசுகிறோம். அவர் மன தில் என்ன உள்ளது என்பது தெரியாது; ஆனால், நான் தோழியாகத்தான் பேசினேன்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன், அவருக்கு விபத்து ஏற்ப ட்டது. ஆண்டவரின் கருணையால், உயிர் தப்பினார். உடல் நலம் விசாரிக்க, அவரது வீட்டிற்குசென்றேன்; அவரின்வீட்டார்கள் என்னிடம் நன்றாகபேசினர். பின், நானும், அவரும் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தோம்.

கட்டுப்படுத்தி வைத்திருந்த என் மனதில், இப்போது மாற்றங்கள் வந்துள்ளன. நானும், அவரை விரும்புகி றேன். இதுவரை அவர்என்னிடம் நடந்துகொண்ட வித ம், ‘இவரை திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருப்பேன்…’ என்ற முழு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், மிகவும் குழப் பத்தில் உள்ளேன். என் வயது, 29; அவருக்கு, 30.

அன்புசகோதரியே..அவருடன் சேர்ந்துவாழ விரும் புகிறேன்; அதேநேரம் பயமும், குழப்பமாகவும் உள் ளது. இனியும் என் அம்மாவை, என்னால் கஷ்டப்ப டுத்தமுடியாது. அம்மாவின் அன்பைஇழந்து விடா மல், அவரின் அன்பை பெறுவதற்கு, ஒரு தீர்வு கூறுங்கள்.

— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.

அன்புள்ள மகளுக்கு,

படித்து, வேலைபார்க்கும் பெண்கள் மற்றும் ஆண் களில் பெரும்பாலோருக்கு 2, 3 காதல்கள் இடறி, அடுத்த காதலிலோ அல்லது பெற்றோர் பார்த்து வைக்கும் வரனிலோ செட்டிலாகின்றனர். திரும ணத்திற்குபின், பழைய காதல் பிரச்னைகள் கிளப் பும் என பயப்படுவது அபத்தம். காதல் அனுபவமே தனக்கு இல்லை என் கிற பாவனையில் நடந்து கொள்வதே உசிதம்.

உனக்கு இரு வழிகள் உள்ளன; 1, காதல் கத்திரிக் காயில் சிக்கிக் கொள்ளாமல் அம்மா பார்த்து வைக்கும் வரனை மணந்துகொள்வது. 2,அம்மாவி ன் சம்மதம்பெற்று, காதலிப்பவனை மணந்து கொ ள்வது!

இந்தஇரண்டிலும் சிறப்பானது, நீ காதலிக்கும்வரனை மணந்துகொள்வதே! வருபவனுக்கு உன் முன்கதை தெரி யும். மனித மனம் ஒருமுறை ஏமாறும், இருமுறை ஏமாறும்; மூன்றாவது முறை ஏமாறாது.

உன்அம்மாவிற்கு, தான்பார்க்கும் வர னையே மகள் மணமுடிக்க வேண்டும் என்கிற வறட்டு பிடிவாதம் இல்லை. மகள் திருமண வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்கிற ஆற்றாமையே அதிக ம். நீ காதலிக்கும் வரன் சிறப்பானவன் என்றால், உன் தாயைவிட, இவ் வுலகில் அதிகம் மகிழ்ச்சி யடையப் போவது யார்?

எதற்கும்6மாதம், நீ காதலிப்பவனைநடுநிலையான மனதுடன் ஆராய்ந்து, அவன், உன் வாழ்க்கை துணையாக வர பொருத்தமானவனா என்பதை உறு திசெய். உன் அவ்வப்போதைய நடவடிக்கைகளை, அம்மாவிடம் ஒளிவுமறைவில்லாமல்தெரிவி. காத லனின் உண்மை தன்மையில், சிறிதளவு சந்தேகம் வந்தாலும், அவனை உதறி, அம்மா சுட்டிக் காட்டும் வரனை மணந்துகொள். திருமணத்திற்குமுன்  ஆணோ, பெண்ணோ எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். திரு மணத்திற்கு பின், வாழ்க்கை துணைக்கு உண்மையாக இருப்பதுதான் முக்கியம்.

அம்மாவின் நம்பிக்கையை இழக்க விரும்பாத உன் நல்ல மனதை சிலாகி க்கிறேன். உன் காதல் கை கூட நெஞ்சார வாழ்த்துகிறேன்.

— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத், அன்புடன் அந்தரங்கம், வாரமலர், தினமலர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: