Advertisements

அன்புடன் அந்தரங்கம் 11-1-15- தாம்பத்தியத்தின் மூலம் பெற்றக் குழந்தை மீதும், கட்டுங்கடங்காத கோபமா

அன்புடன் அந்தரங்கம் 11/01/15- தாம்பத்தியத்தின் மூலம் பெற்றக் குழந்தை மீதும், கட்டுங்கடங்காத கோபமா?

அன்புள்ள அம்மா,

என் வயது 30; என் மனைவி வயது 25. எங்களுக்கு திருமணமாகி, நான்கு ஆண்டுகளாகிறது. இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறக்கும் வரை, எங்களுக்குள் எந்த

பிரச்ச‌னையும்இல்லை. இப்போதெல்லாம் எங்களுக்கு ள் அடிக்கடி சண்டை வருகிறது. விளையாட்டாகபேசும் விஷயங்களைக் கூட, பெரிதாக எடுத்து, சண்டை போ டுகிறாள். இதனால், நான் பேசுவதையே குறைத்துக் கொண்டேன். ஆனால், ‘என்னிடம் பேசுவதே இல்லை. ..’ என்று, அதற்கு ம் சண்டை போடுகிறாள்.

சில நேரங்களில், தற்கொலை ச் செய்ய முயற்சிக்கிறாள். சண்டை போடும் சில நேரங் களில், தானாக ஏதோ பேசுகி றாள், நான் சென்று பேசினா ல், ‘நீ யார்? என் வீட் டுக்காரர் வந்தால் அடி வாங்குவ, இங்கிருந்து போ…’ என்கிறாள், குழந்தைகூட அடையா ளம் தெரியவில்லை. பின், தூங்கி விடுகிறாள்; எழுந்த பின் அவள் பேசியது எதுவுமே, அவளுக்கு நினைவில் இருப்பது இல்லை. நானும், இப்படி பேசின, இப்படி செ ய்தாய் என்று, அவளிடம் கூறியது இல்லை. இது போ ன்ற நேரங்களில், தலைவலி உண்டாகிறது அவளுக் கு. மருத்துவ மனையில், தலைவலிக்கென எல்லா டெஸ்ட்டும் எடுத்தாகிவிட்டது, உடலில் எந்த பிரச்ச னையும் இல்லை என்கின்றனர். நான், காலை, 8:00 மணிக்கு வேலைக்கு சென்றால், இரவு 8:00 மணிக்கு த்தான் வீட்டுக்கு வருவேன். இதனால், வேலையில் கவனம் செலுத்த முடிய வில்லை. எனக்கு, கடன் பிரச் ச‌னை உள்ளது. அது, அவள் மனதை பாதித்திருக்குமோ என்று சந்தேகம் கொள்கி றேன்.

இரண்டு வாரம் அம்மா வீட் டிற்கு சென்று இருக்க போ கிறேன் என்று கூறுவாள். ஆனால், இரண்டே நாளில் திரும்பி வந்து விடுகிறாள். ஏன் என்று கேட்டால், ‘உன்னை விட்டு இருக்க முடிய வில்லை.’ என்கிறாள். சில நேரங்களில், அவள் செய் யும், பேசும் விஷயங்கள் என்னை மிகவும் வருத்தப்பட வைக்கிறது. இந்நிலையில், வேலைக்குச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறாள். வேண்டாம் என்று சொன்னால், அதற்கும் சண்டை போடுகிறாள். உடல் நிலை சரியில்லாத சமயத்தில், வேலைக்கு அனுப்ப பயமாக உள்ளது.

எத்தனை சண்டை போட்டாலும், அவள் என் மீது அதிக பாசம் வைத்திருக்கிறாள் என்று எனக்கு நன்றாக தெரி கிறது. அவளை எப்படி சரி செய்யவேண்டும்; அவளுட ன் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அவளுக்கு வேறு ஏதும் மருத்துவ உதவி தே வை ப்படுகிறதா என்று, என க்கு அறிவுரை கூறுங்கள். அவள் தற்கொலைக்கு முயற் சிப்பது மிகுந்த பயத்தை ஏற்படுத்துகிறது.

— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகன்

அன்புள்ள மகனுக்கு,

குழந்தைபெற்றுக்கொள்வது, பெரும்பாலான திருமண மான பெண்களுக்கு பிடித்தமான விஷ யம். 90%  பெண்கள், தங்கள் முதல் குழ ந்தையாக ஆண் குழந்தையை பெறவே விரும்புகின்றனர். உன் மனைவிக்கு, பெண் குழந்தை பெற்றது பிடிக்காமல் இருக்கலாம். குழந்தை வளர்ப்பு என்ப து சாதாரண விஷயமல்ல; அதற்கு பொறுமையும், கனி வும் அர்ப்பணிப்பு உணர்வும், தாய்மை உணர்வும் தே வை. உன் மனைவிக்கு, குழந்தையை வளர்க்க பொறு மை இல்லாமல் இருக்கலாம். குழந்தை பெற்றபின், அடிவயிற்றில் பிரசவக்கோடுகள்தோன்றும். கச்சிதமா ன உடல்கட்டுபோய், பலூன்போல் உடல்வீங்கி விடும். அதனால், உன் மனைவிக்கு திருமணத்தின் மீதும், தா ம்பத்தியத்தின்மீதும், தாம்பத்தியத்தின் மூலம் பெற்றுக்கொண்ட குழந்தைமீதும், கட்டுங்கடங்காத கோபம் இருக்கலாம்.

குழந்தை பிறந்த பின், உன் நடத்தையில் ஏதாவது மாறுதல்களை கண்டிருப்பாள் உன் மனைவி. குழந்தை பிறந்த பின், தாம்பத்தியத்தில் நீ ஈடுபாடு காட்டாமல் இருக்கக்கூடும். மனைவியைவிட, குழந் தை மீது அதிகமாக பாசத்தை கொட்டுகிறாயோ என்ன வோ. அலுவலக பணிகளை முடித்துவிட்டு, தினம் இரவு, காலதாமதமாக வீடு திரும்புகிறாயோ என்ன வோ. புதிதாய் உனக்கு குடிப்பழக்கம் தொற்றியிருக்கி றதோ என்னவோ. பொறுப்பாகவும், விவேகமாகவும் இல்லாமல் கடனாளி ஆகிவிட்டான் கணவன், என்கிற கவலைகூட உன் மனைவிக்கு இருக்கலாம்.

உன் மனைவியின் மன அழுத் தமே, அவளது தலை வலிக்கு காரணம்.

பூட்டிய அறைக்குள் புகைமண்டும். ஜன்னல்களை திற ந்து விடு. உன் மனைவியை, வேலைக்கு செல்ல அனு மதி. இயல்பு நிலைக்கு மீண்டாலும் மீள்வாள். இனி, நீயும், உன் மனைவியும் என்ன செய்ய வேண்டும் தெரியுமா மகனே…

இருபது நிமிடம் செலவழித்து, உன் மனைவிக்கு உண ர்வுகளைகொட்டி, ஒருகடிதம் எழுது. அந்த கடிதத்தில், ஐந்து படிகள் இருக்கட்டும். முதல் படியில், உனக்கிருக் கும் கோபத்தை கொட்டு. இரண்டாவது படியில், உன் சோகத்தைகாட்டு. மூன்றாவது படியில், பயத்தை இறக்கு. நான்காவது படியில், மன்னிப் பு கேள். ஐந்தாவது படியில், உன் மனைவிமீதான காதலை, புரிதலை, நன்றியை மன்னிப் பை வெளிப்படுத்து. கடிதத்தை உன் மனைவியிடம், உடனே கொடுக்க வேண்டிய அவ சியமில்லை. உன் கடிதத்தை படித்து, உன் மனைவி என்ன பதில் எழுதுவாள் என யூகித்து, ஒரு ஆறுதல் கடிதத்தையும் நீயே எழுது. ஆறுதல் கடிதத்தில் மன்னி ப்பு, புரிதல், பாராட்டு மற்றும் நீ மனைவியிடமிருந்து, என் னென்ன ஆறுதல்களை எதிர்பார்க்கிறாயோ, அத்த னையும் எழுது. உணர்வுகளை கொட்டிய கடிதமும், ஆறுதல் கடிதமும், உன் காயங்களை குணப்படுத்தும்.

இதே போல், உன் மனைவி யையும் உணர்வுகளை கொ ட்டி ஒரு கடிதமும், அதற்கு ஒரு ஆறுதல் கடிதமும் எழு தச் சொல். கட்டாயப்படுத் தாமல், அன்பாகக் கூறி, எழு தச் சொல். பின் இருவரும், அவரவர் எழுதிய இரு கடித ங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். கடிதங்களை படித்த பின், உங்களுக்குள் ஒரு புதிய புரிந்துணர்வு பூக்கும். இருவருக்குள்ளும், மெய்யாலும் நிலவும் பிரச்ச‌னை களை கண்டு கொள்வீர். பிரச்ச‌னைகளுக்கு தீர்வை காண்பீர்கள். குழந்தையை, ஒரு சில ஆண்டுகள் கவ னித்துக் கொள்ள, உன் மாமியாரை வீட்டோடு வரவ ழைத்து தங்க வை. முடியாவிட்டால், குழந்தையை மாமியார் வீட்டில் அல்லது உன் பெற்றோர் வீட்டில் வளரவிடு. சிக்க னமாகஇருந்து கடனை அடை. குழ ந்தை வளர்ப்பில் சரிபாதி கடமை யை செய். இவ்வளவுக்கு பின்னும், உன் மனைவியின் வினோதமான நடவடிக்கைகள் தொடர்ந்தால், மன நல மருத்துவரிடம், அவளை, காட்டி, தகுந்த மருத்துவ ஆலோசனை பெறு.

— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத், தினமலர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: