Advertisements

ஆசிட் (அமில) வீச்சால் பாதிக்க‍ப்பட்ட‍வர்க்கு உடனடி யாக செய்ய‍ வேண்டிய முதலுதவு சிகிச்சைகள்

ஆசிட் (அமில) வீச்சால் பாதிக்க‍ப்பட்ட‍வர்க்கு உடனடி யாக செய்ய‍ வேண்டிய முதலுதவு சிகிச்சைகள்
 
டெல்லியில் பதின் பருவ பெண் மீது நடந்த பாலியல் வன்முறைக்குப் பிறகு, இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்துவிட்டனர் என்று இந்தியாவின் சுற்றுலாத்துறையினர் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். இந்தியாவில் நொடிக்கு

ஆறு பெண்கள் வதைக்கப்படுகின்றனர் என்று ஆய்வு கள் கூறுவதாகத் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பா கின்றன. தமிழகத்தில் வினோதினி, வித்யா என்று ஆசிட் வீச்சால் பாதிக்கப் பட்டவர்களின் பட்டியல் நீண் டு கொண்டேயிருக்கிறது.
“நம் தெருவைச் சுத்தமாக வைத்துக்கொண்டால், இந்த நாடு தானாகச்சுத்தமாகும்என்பார்கள். அந்தவகையில் இனி, ஆசிட்வீச்சால் எந்தப் பெண்ணும் வாழ்க்கையை இழக்கக்கூடாது. இதற்கு அனைத்து இளைஞர்களும் ஒன்றுபட வேண்டும். இதுவே என் விருப்பம்”

Plastic Surgeon Dr. V.S. Radha Krishnan

எனச்சமுகத்தின் மீதான அக்கறையோ டு ஆரம்பிக்கிறார் ஒட்டுறுப்புச்சிகிச் சை நிபுணர் (Plastic Surgeon) வி.எஸ் .ராதா கிருஷ்ணன்.

“ஆசிட் வீசுபவருக்கு அந்த ஆசிட் தன் மையோ, அதன் பெயரோ கூடத் தெரி யாது. சுற்றமும், தவறான நட்புமே அவ ர்களை இந்தக் கொடூரமான செயல் தூண்டுக்கிறது. அதிலும், பெரும்பான வர்கள் பயன்படுத்துவது பாத்ரூமிலும், கம்பெனிகளி லும் பயன்படுத்தும் ஆசிட் வகைகளே. ஆசிட் மட்டும் அல்லாமல் அல்கலின் (alkaline) எனப்படும் கார வகைகளையும் பயன்படுத்து கின்றனர்.

சில ஆசிட், கார வகைகளின் வீரி யம், மிகவும் அதிகம். பொதுவாக வே, இந்த ஆசிட் வகைகள் தோ லில் பட்டால், தோலில் டெர்மிஸ் (termis) எனப்படும் சரும பகுதியைச் சேதப்படுத்தி, தோலில் இருக்கும் புர தம் முழுவதையும் உறிஞ்சி விடு ம். இதனால், தோலில் சுருக்கங் கள் ஏற்படும்.மேலும் தோலைத் தாண்டி நரம்புகளைப் பாதிப்பதா லும் தீராத வலி ஏற்படும்.

இதில், நரம்புகள் பழுதடைந்தால் வலி அதிகம் இருக் காது. நரம்புகள் வெளியில் தெரிவது போன்ற நிலை வந்தால் அதன் வலி பயங்க ரமாக இருக்கும். பொதுவாக எல்லாப் பிரச்னைகளுக்கும் முதலுதவி என்பது அந்நோ ய் பெரிதாகாமல் வலியைக் குறைக்கவே உதவும். ஆனா ல், ஆசிட் வீச்சைப் பொறுத்த வரை செய்யும் முதலுதவியே 90% வீரியத்தைக் குறை த்துவிடும். கிட்டத்தட்ட இதை முதலுதவி என்பதைவிட ‘டீரிட் மென்ட்’ என்றே கூறலாம்” என்ற டாக்டர் ராதா கிருஷ்ணன், ஆசிட் பட்டவுடன் செய்யவேண்டிய அவ சர முதலுதவி குறித்து விளக்கி னார்.

*ஆசிட்வீசியவுடன் வீசியபகுதியி ல் தண்ணீரை பாய்ச்ச வேண்டும். அது குளிர்ந்த நீராக இருந்தால் மிகவும் நல்லது. ஏனெனில் தண் ணீர் ஊற்றும்போது வலி தீவிரமாகஇருக்கும். குளிர்ந் த நீர் இல்லாத பட்சத்தில், அதைத் தேடி அலையாமல் சாதாரண நீரையே ஊற்ற லாம்.

*எந்தஅளவுக்கு வேகமாகச்செயல்படுகிறோமோ அந்த அளவுக்கு அதன் வீரியத்தைத் தவிர்க்கலாம். கிட்ட தட்ட 90%க்கு மேல் அதன் விளைவைக் குறைக்கலாம்.

* அமிலம் தவறி கண்களில் பட்டுவிட்டாலும், உடனடியா கக் கண்ணிலும் தண்ணீர் ஊ ற்றலாம். பிறகு, கண் மருத்து வரிடம் சென்று வைத்துப் பரி சோதித்துக்கொள்ளலாம்.

* அமிலம் வாயில் சென்றாலும், மூச்சுக் குழாய்ப் பாதி க்கப்பட்டாலும் அதற்கான மருத்துவரை அணுக வேண் டும்.

* அதேபோல், துணிகள் மீது ஆசிட் பட்டிருந்தால் உடனே அத்துணியை மாற்றிவிடுவ து அவசியம்.

* அமிலம் தாக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு வரு வதற்குள் அது அவர்களின் தோலை சேதமாக்கி விடுகி றது. எனவே, சுற்றியிருப்ப வர்கள் திறம்படச் செயல் பட்டால் ஆசிட் வீச்சால் ஏற் படும் பாதிப்பு குறையும்” என்றார்.

ஆசிட் வீச்சைத் தடுக்க வேண்டி போராடி வரும் சமூகச் சேவகி சுவர்ணலதா, “ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட் டவரையும், அதை விற்பவ ரையும் அடுத்த நாளே தண்டிக்க வேண்டும். அவ ர்களுக்குச் சட்டம் என்கிற பெயரில் மிகக் குறைந்த பட்ச தண்டனையே தருகி றார்கள். தண்டனைக் அதி கரித்தால்தான் தவறுகள் குறையும். ஆனால், இங்குப் பாதிக்கப்பட்ட குடும்பம்தான் பெரிதாகத் தண்டனை அ னுபவிக்கிறது. விநோதினியின் அம்மா கூடத்தற் கொ லைச் செய்துகொண்டார். இதை த் தடுக்க ஒரே வழிதான் இருக் கிறது.

பெண்களின் முக்கியத்துவத்தை யும், அவர்களை வதைக்கக் கூடாது என்ப தையும் பள்ளியில் இருந்தே கற்று தர வேண்டும். சிறு வயதிலிருந்தே இதை ச் சொல்லி வளர்த்தால் ஆசிட் வீச்சு போன்ற வன்முறை குறையும். ஒவ் வொரு பெண்ணும் நம் சகோதரி, தாய் போன்றவள் என்று நம் வீட்டுக்குழந் தைகளிடம் முதலில் புரிய வைத்தா லே போதும். பெண்களின் மீதான வன்மத்தை வேரோடு அறுத்து விட லாம்” என்கிறார்.

– கு.அஸ்வின்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: