Advertisements

அடிக்கடி ஏப்ப‍ம் வருவதை சரிசெய்யும் எளிய குறிப்புக்கள்

அடிக்கடி ஏப்ப‍ம் வருவதை சரிசெய்யும் எளிய குறிப்பு க்கள்

வாயு என்னும் காற்றை உணவுக் குழாய் மூலம் வாய் வழியாக வயிறு வெளியே ற்றுகிறது. அப்போது வாயி லிருந்து ‘ஏவ்’ என்று ஒருவித

சப்தத்துடன் வெளிப்படும் வாயுக்குப் பெயர்தான் ஏப்பம். சாப்பிட்டபிறகோ அல்லது பானங்களைக்குடித்த பிறகோ ஏப்பம் ஏற்படும். சிலருக்கு சாப்பி டுவதற்கு முன்பே ‘ பசி ஏப்பம்’ ஏற்படும். மேலும், அஜீரணக் கோளாறு காரணமாக நிறைய பேர் ஏப்பம் விட்டு அவதிப்படுவார்கள்.
ஏப்பம் என்பது உடலில் ஏற்படும் ஒரு சாதாரண விஷயம் தான் என்றா லும், பல கலாச் சாரங்களில் அது மிகவும் அநாகரிகமாகக் கருதப்படு கிறது. இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் மேலை நாடுகளில்கூட இது கொஞ்சம் அறுவறுப்பாகத்தான் பார்க்கப்படுகிறது. தொடர் ஏப்பம் அருகில் இரு ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும்.

இப்போது இந்த ஏப்பத்தை நம் வீட்டு சமையலறையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே சரி செய்ய 15 அருமையான வழிக ளைப் பற்றி பார்க்கலாம்.
 
இஞ்சி

ஏப்பத்திற்கு உடனடி நிவாரணம் தரும் ஒரு பொருள்தான் இஞ்சி ஆகும். செரி மானப் பிரச்சனையையும் இது உடன டியாகத் தீர்க்கும். மாத்திரை மற்றும் சாறு வடிவில் எடுத்துக்கொள்வதோ டு மட்டுமல்லாமல், இஞ்சியைக் கடி த்தும் சாப்பிடலாம். தேனுடன் இஞ்சி கலந்து டீ குடித்தும் ஏப்பத்தைச் சரி செய்யலாம்.
 
எலுமிச்சை

நீர் மற்றும் பேக்கிங் சோடாவுடன் எலுமிச் சைச் சாற் றைக் கலந்து குடித்தாலும் ஏப்பம் உ டனடியாக அடங்கும். செரிமானமும் சரியாகு ம்.

ப்பாளி

சத்துள்ள பப்பாளிப் பழத் தை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலமும் ஏப்பத்தைத் துரத்தலாம். பப்பாளியில் உள்ள பாப் பெய்ன் என்னும் என்சை ம், நம் உடலில் தோன்று ம் வாயுப்பிரச்சனைகளைத்தீர்த்துவைக்கிறது.
 தயிர்

தயிர் சாப்பிடுவதன் மூலமும் ஏப்பத்தைத் தவிர்க்கலாம். தயிரில் உள்ள பாக்டீரியா அனைத்து வயிற்றுப்பிரச்சனைகளையும் சரி செய்ய வல்லது. தயிரின் பிற வடிவங்களான இனிப்பு கலந்த லஸ்ஸி மற்றும் உப்பு கலந்த மோர் ஆகியவற்றையும் குடிக்கலாம்.

சீமைச் சோம்பு

ஏப்பத்தைக் குறைப்பதில் சீமைச் சோம்பு பெரிதும் உதவுகிறது. ஒவ்வொருமுறை சாப்பிட்டுமுடித்த பின்னும் இதை வாயில் போட்டு மென்றால் ஏப்பத்தைத் தவிர்க் கலாம்.
 
ஏலக்காய் டீ

செரிமானத்தைத் துரிதப்படுத்துவதில் ஏலக்காய்க்கு நிகர் ஏலக்கா ய்தான். வாயு அதிகமுள்ள உணவுகளை ஏலக்கா ய்டீயை க்குடிப்பதன் மூலம் செரிக்க வைக்கலாம். அதன் விளைவாக ஏப்பம் குறைகிறது. சாப்பாட்டுக்கு முன் இதைக் குடிப்பது நல்லது.
 
சீரகம்

ஒவ்வொருமுறை சாப்பிட்டபிறகும், வறுக்கப்பட்ட சீரகத்தை மென்று தின்று வந்தால், ஏப்பம்உள்ளிட்ட அனைத்து வாயுப் பிரச்சனைகளும்  சரியாகும்.
 
சீமைச் சாமந்தி டீ

பலவிதமான வயிற்றுக் கோளாறுகளுக்கு இந்த டீ நல்லது. தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் இந்த டீயைக் குடித்தால் ஏப்பம் விடு வது நிற்கும்.
 
புதினா

கொதிக்கும் நீரில் புதினா இலைகளைப் போட்டு ஐந்து நிமிடங்கள் வரை நன்றாகக் கலக்க வேண்டும். உறங்கச்செல்லும் முன் இந்த நீரைக் குடித்தால் ஏப்பம் ஓடிப் போகும்.
 
பூண்டு

வெறும் வயிற்றில் ஒரே ஒரு பல் பூண்டைக் கடித்து விழுங்கி, நீர் குடிக்க வேண்டும். இதனால் வயிறு சுத்தமாகிவிடும். ஏப்பம்உள்ளிட்ட செரிமான ப்பிரச்சனைகளுக்கு பூண்டுதா ன் பெஸ்ட்!
 
பெருங்காயம்

பெருங்காயம் கலந்த சுடு நீரை சாப்பாட்டிற்கு முன் குடித்தால், ஏப்பம் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சனைகள் சரியாகும்.
 
வெந்தயம்

சுமார் மூன்று மணிநேரம் வெந்தயத்தை ஊறவைத்து வெறும் வயிற்றில் குடித்தால் ஏப்பம் சரியாகும். வாயும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
 
சோயா எண்ணெய்

ஒருஸ்பூன் தேனுடன் ஒருதுளி சோயா எண்ணெயைக் கலந்து சாப்பி ட்டால், ஏப்பம்உடனடியாகச்சரியாகும்.
 
கிராம்பு

சாப்பிட்டபின் ஓரிரு கிராம்புகளைமென்று திண்பதன்மூலம், செரிமானப் பிரச்சனைகளும் ஏப்பமும் சரியாகும்.
 
ஐஸ் தண்ணீர்

ஏப்பம் அதிகம் வரும் போது ஒரு டம்ளர் ஐஸ் தண்ணீரைக் குடித்தால், ஏப்பம் உட னே நின்றுவிடும்.

 – கார்த்திக் மாணிக்க‍ம் 

Advertisements

One Response

  1. Good and effective information…. Thank you,,☺

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: