Advertisements

நடிகை பாவனா பற்றிய செய்திக்கேட்டு, அதிர்ச்சியில், கதறி அழுத இளைஞர்! – ப‌ரபரப்பு

நடிகை பாவனா பற்றிய செய்திக்கேட்டு, அதிர்ச்சியில், கதறி அழுத இளைஞர்! – ப‌ரபரப்பு

நானும் எனது நண்பரும் இன்று மதியம் சுமார் 3 மணியளவில் கைப்பேசி துணையுடன் இணை யத்தில் செய்திகளைப் படித்துக் கொண்டிருந் தோம்.  இடையில் விலாசம் கேட்டு, எங்களிடம் வந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க‍ இளைஞர் ஒருவர் வந்தார். அவருக்கு அவர் கேட்ட விலாச த்திற்குண்டான சரியான வழியைச் சொல்லி விட்டு, மேற்கொண்டு செய்தி படிப்பதைத் தொட ர்ந்தான் எனது நண்பன். அப்போது இடைச்செரு கலாக நடிகை பாவனாவைப் பற்றிய செய்தி ஒன்று அவனது கண்களுக்கு பட்ட‍து. இதைக் கேட்டது எங்களிடம் விலாசம் கேட்ட

இளைஞர் மீண்டும் எங்கள் அருகில் வந்து அதிர்ச்சியில் குலுங்கி குலுங்கி அழுதார்.


தினகரனில் வெளிவந்த நடிகை பாவனாவை பற்றிய செய்தி இது தான்.

கன்னட திரைப்பட தயாரிப்பாளரை நடிகை பாவனா மணக்கிறார். தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், வெயில், தீபாவளி, ராமேஸ்வரம் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை பாவனா. இப்போது கன்னட படங்களில் நடித்து வருகிறார். 2012ம் ஆண்டு இவர் நடித்த ரோமியோ என்ற கன்னடப் படத்தைத் தயாரித்தவர் களில் ஒருவர் நவீன். இவரும் பாவனா வும் காதலித்து வருவதாக முதலில் செய்தி வெளியானது. இதுபற்றி அப்போ து கேட்டபோது, நான் காதலிப்பது உண் மைதான். யார் என்பதை திருமணம் நடக்கும்போது சொல்கிறேன் என்று கூறியிருந்தார் பாவனா.

நவீனும், பாவனா, என் தோழி என்று மட்டும் சொல்லி இருந்தார். இப்போது இந்தக் காதல் உண்மை என தெரிய வந்துள்ளது. அடுத்த வருட தொடக்கத்தில் இவர்கள் திருமணம் பாவனா வின் சொந்த ஊரான திருச்சூரில் நடக்கும் என்று கூறப்படுகிறது.இதுபற்றி பாவனாவின் வீட்டில் விசாரித்தபோது, ‘ஜனவரி மாதம் 18&ம் தேதி பாவனாவின் சகோதரருக்கு திருமணம் நடக்கிற து. அதற்குப் பிறகு பாவனாவின் திருமணம் நடக் கும். அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது’ என்றனர். மாப்பிள்ளை யார் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.


இந்த செய்தியைக் கேட்டுவிட்டு அந்த இளைஞர், அதிர்ச்சியில் கதறி அழுதார். நானும் எனது நண்ப னும் விவரம் அறியாமல் சற்று திகைப்புடன் அவ ரை நெருங்கி ஏன் என்னாச்சு ஏன் இப்ப‍டி அழுறீங்க என்று கேட்டோம். அதற்கு அந்த இளைஞர், “எ பாவனாவுக்கு கல்யாணம்னு செய்தி படிச்சீங்களே அதுக்குத்தான் அழுகிறேன்” என்றார்.  மேலும் ” அய்யோ எல்லாம் போச்சே, எல்லாம் போச்சே ” என்று கூறியவாறு கதறி கதறி அழுதார். “சரிப்பா அதுக்கு ஏன் அழுற”, என்றுகேட்டதற்கு, இத பாருங் க சார், அந்த பாவனா, என்னை லவ் பண்ணிட்டு இன்னொருத்த‍ர கல்யாணம் கட்டிக்க போறாளே! இது நியாயமா என்று கேள்வி கேட்டார். நானும் எனது நண்பனும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து, “என்ன‍ப் பா சொல்றே, புரியும்படியா சொல்லு,” என்றோம். அப்போது அந்த இளைஞர், நடிகை பாவனாவின் புகைப்படத்தை காட்டினார். அதில் பாவனாவின் வித் லவ் பாவனா என்ற வாசகத்துடன் கூடிய பாவ னாவின் கையெழுத்து இருந்தது. அதைக் காட்டி விட்டு, அழுதவாறே சென்றார்.

இது ஏதோ ஒரு திரைப்படத்தில் இந்த காட்சியைப் பார்த்திருக்கிறோம். ஆனால் நிஜவாழ்வில் இப்போது தான் அந்த காட்சியை நேரிலேயே கண்டோம்.

நானும் எனது நண்பனும் விழுந்து விழுந்து சிரித்தோம்.

சிறிது நேர சிரிப்பிக்குப்பின் சிந்தனையில் ஆழ்ந்தோம்

இந்தியாவின் இளைஞர்கள் இப்ப‍டியும் இருக்கிறார்களே!

= விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: