Advertisements

விந்து: சுயஇன்பத்தில் வெளிவந்தாலோ, தூக்கத்தில் வெளியேறினாலோ ஆரோக்கியம் பாதிக்குமா? -மருத்துவரின் மகத்தான பதில்

விந்து சுயஇன்பத்தில்  வெளி வந்தாலோ, தூக்கத்தில் வெளி யேறினாலோ ஆரோக்கியம் பா திக்குமா? -மருத்துவரின் மகத் தான பதில் 

ஒரு ஆரோக்கியமான ஆணின் விதை ஒரு நிமிஷத்துக்கு 50,000 உயிரணுக்கள் அல்லது ஒரு நாளில் 7,20,00,000 (ஏழு கோடியே இருபது லட்சம்) உயி ரணுக்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.

விந்தின் முக்கியத்துவம் என்ன ?

ஆதிகாலத்திலிருந்தே, ஆணின் ஜனன உறுப்பில்

உருவாகும் விந்துக்கு அதிகப் படியான முக்கியத்துவம் கொ டுக்கப்பட்டு வந்தது. எல்லா நா ட்டு மக்களிடமும் இந்த மனோ நிலை இருந்தது. ஒரு குழந்தை யை உருவாக்க மட்டுமே விந்து தேவைப்படும், மற்றபடி செக்ஸ்  இன்பத்துக்கோ, செக்ஸ் செய ல்பாட்டுக்கோ விந்து துளிகூட தேவையில்லை என்பதை மருத்துவ விஞ்ஞானம் நிரூ பித்த பிற குதான் விந்துக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் குறைய ஆரம்பி த் தது.

ஒரு மனிதன், விந்து வெளியே றாமல்அல்லது அதை வெளியே ற்றாமலே கூட செக்ஸ் இன்பத் தை அடையலாம். இதுபோல எந்த வித செக்ஸ் சுகத்தையும் அனுபவிக்காமல்கூட விந்து வெளியே றவும் செய்யலாம்.

அதனால்தான் 1989ம் ஆண்டு வரைக்கும், துரிதஸ்கலிதம் எனு ம் செக்ஸ் பிரச்னைக்கு ஆங்கில த்தில் Premature ejaculation என் று பெயர் இருந்தது. இப்பிரச்னை யில் விந்து முன்கூட்டியே துரித கதியில் வெளியேறிவிடும். இருந் தாலும், ஆணுக்கு இதனால் செக் ஸ் இன்பத்தில் (Orgasm) எந்த கு றையும் இருக்காது. ஆனால், பெ ண்ணுக்கு உடல் உறவில் அதிருப் தி உண்டாகும்.

1989ல் முதன்முதலில் ஸ்கலிதத்துக்கும், செக்ஸ் இன்பத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உலகத் துக்கு எடுத்து சொன்ன பெரு மை, நம் நாட்டின் (மும்பை) பிரபல தலைமை செக்ஸாலஜி ஸ்டான டாக்டர் பிரகாஷ் கோ த்தாரிக்கே சாரும். இவர் எழுதி ய “Orgasm: New Dimensions” என்ற புத்தகத்தில், துரிதஸ்கலி தத்தை “Early Orgasmic Response” என்று குறிப்பிட்டார்.

செக்ஸ் இன்பத்துக்கும், விந்துக்கும் தொடர்பில்லை என்பது நிரூ பணமாகிவிட்ட நிலையில், மருத்துவ விஞ்ஞானம் அடுத்த கட்ட பாய்ச்சலுக்குப் போய்வி ட்டது. விந்தின் உதவியில்லாம ல்… பெ ண்ணின் கருமுட்டை இல்லாமல், “க்ளோனிங்” மூல ம் ஒரு புது உயிரை உருவாக்கு ம் அதிசயத்தை மருத்துவ உல கம் சாதித்திரு க்கிறது.

ஒரு ஆணின் உடலில் உள்ள விதை, செமினல் வெஸிக்கில்ஸ், பிராஸ்டேட் என்ற மூன்று சுரப்பிகள் சுரக்கும் நீர்களின் கலவை தான் விந்து. இந்த விந்துவை உற்பத்தி செய்வ தில் விதையின் பங்கு 1 சத விகிதம், செமினல் வெஸிக் கில்ஸின் பங்கு 60 சதவிகி தம், பிராஸ்டேட்டின் பங்கு 39 சதவிகிதம்.

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி ஏழலாம்… அதா வது, உயிரணுவை உண்டா க்கும் தகுதிபெற்ற விதை யைப் படைத்த இயற்கை, ஏன் எக்ஸ்ட்ராவாக செமினல் வெஸிக்கில்ஸையும், பிராஸ்டேட் சுரப்பியையும் படைத்துள்ளது? இந்த உலகில், இயற் கை காரணமில்லாமல் எதையும் உருவாக்கவில்லை. கரு மு ட்டையுடன் சேர்ந்து கருவை உருவாக்கும் திறனை உயி ரணு பெற்றிருந்தாலும், அந் த உயிரணுவுக்கு சக்தி கொ டுத்து, ஆரோக்கியம் அளிப்ப து செமினல் வெஸிக்கில்ஸ் திரவம்தான். அதுபோல வி தையில் உருவாகும் உயிர ணு, விதைக்குள் வளைந்து நெளிந்து செல்லும் குழாய்களுக்குள் நீண்ட தூரம் நகர்ந்து, பின்பு பெண்ணின் பிறப்புறுப்பிலும் பயணம் செய்து கருப்பையை அடைய வேண்டும். அப்படி ஜம்மென்று உயிரணு பயணி க்க அதற்கு சக்தியையும், ஆ ரோக்கியத்தையும் தருவது செமினல் வெஸிக்கில்ஸ் திர வத்தின் பணி. இதில் பிரக் டோஸ் என்கிற சர்க்கரை பொருள் இரு ப்பதால், கிட்ட த்தட்ட 6 கலோரி அளவு சக்தி யை இது உயிரணுவு க்குத் தருகிறது.

அதுபோல், பெண்குறியின் பாதையில் அமிலங்கள் நிறைந்திருக் கும். வெளியிலிருந்து கிருமிக ள் அப்பாதைக்குள் நுழைய முயற்சிக்கும்போது வாயிற் காவலாளி போல இந்த அமில ங்கள் அக்கிருமிகளை அரித் துவிடும். பெண்ணின் கருப் பையையும், கரு முட்டையை யும் பாதுகாக்க இயற்கை ஏற் படுத்திய எல்லைப் பாதுகாப்பு இது. ஆனால், இந்த அமிலம் கிருமிகளை மட்டுமல்ல, ஆணின் உயிரணு வையும் சிதைக்கும் சக்தி பெற்றது. ஆகவே உயிரணு இந்த அமிலங்களால் சிதைக்க ப்படாமல், பெண்ணின் உறுப்பு க்குள் போவதற்காக இயற்கை, பிராஸ்டேட் சுரப்பியைப் படை த்துள்ளது. அதாவது, அமிலத் தன்மைக்கு எதிரான காரத்தன் மை கொண்டதாக இந்தத் திரவ ம் இருக்கும். இதனால் அமிலத் தன்மை உள்ள பாதையில் உயி ரணு எந்த சேதமுமின்றி பயணி க்கும்.

இயற்கை, நமது உடம்புக்குள் எப்பேர்பட்ட ஏற்பாடுகளை எல் லாம் செய்து வைத்திருக்கிறது பாரு ங்கள்! ஆனால், நாம்தான் இதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோ ம்.

விதை, செமினல் வெஸிக்கில்ஸ், பிராஸ்டேட் மூன்றின் பணிகளையும் எவராலும் கட்டுப்படுத்த முடியாது. ஒரு ஆண் பருவ வய துக்கு வந்த நாள் தொடங்கி ஆயு ளின் அந்தி வரைக்கும்… ஒரு நொடிகூட ஓய்வின்றி இவை மூன்றும் தங்கள் வேலையைச் செய்து கொண்டே இருக்கும். இவை இப்படி பணிபுரிவதால், ஒரு ஆரோக்கியமான ஆணின் விதை ஒரு நிமிஷத்துக்கு 50,000 உயிரணுக்கள் அல்லது ஒரு நாளில் ஏழு கோடியே இருபது லட்சம் உயிரணுக்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.

இந்த மூன்று சுரப்பிகளும் தொ டர்ந்து 24 மணி நேரமும் இயங் கினால், அதன் வேலைத்திறன் பாதிக்காதா என்ற நியாயமான கேள்வி உங்களுக்குத் தோன்ற லாம். ஆனால், மூன்று நிலை மையில்தான் உயிரணு விந்து தயாரிப்பு பணி பாதிக்கப்படும். பிறக்கும்போதே ஜனன உறுப்பில் கோளாறு, பிறப்புறுப்பில் தொ ற்று நோய்கள், பிறப்புறுப்பில் அடி பட்டு காயம் ஏற்படுவது இந்த மூன்று நிலையில் மட்டு ம்தான் பணி பாதிக்கப்படலாம்.

இது புரியாமல் இருப்பதால் தான், சுயஇன்பத்தில் விந்து வெளிவந்தாலும், தூக்கத்தில் விந்து வெளியேறினாலும், “அதிக”முறை செக்ஸில் ஈடுபட்டாலு ம் விந்து எல்லாம் செலவாகி, கடைசியில் விந்து பையே காலி யாகி விடும் என்று மக்கள் தவறா க நினைக்கிறார்கள். இந்தத் தவ றான நம்பிக்கையால்தான், பிரம் மச்சர்யம் உயர்ந்தது, அது ஆரோ க்கியம் கொடுக்கும் என்று நம்பு கிறார்கள். இதுபோல பல்வேறு தவறான எண்ணங்கள் மக்களிட ம் இருக்கின்றன.

விந்து உற்பத்தி என்பது ஒரு ஊற்று போல ஊறிக் கொண்டே இருக்கும். இப்படி நிமிடம்தோறு ம் சளைக்காமல் ஊற்றெடுக்கும் விந்து, விதைக்குள்ளேயே தொட ர்ந்து சேகரித்து வைக்கப்பட்டிரு க்காது. இதனை, நாமாக செக்ஸி ல் ஈடுபட்டு வெளியேற்றுகிறோ மா… அல்லது தூக்கத்தில் நம்மை அறியாமல் அது வெளியேறுகிற தா… என்பதெல்லாம் அவரவரு டைய வசதி மற்றும் அசதியைப் பொறுத்தது.

பிரம்மச்சர்யம் உயர்வானது என்று சொல்கி றவர்களால் கூட தங்களின் விந்துவை கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள முடியாது . ஒரு தண்ணீர் குழாயில் இருந்து விழுகிற நீரை பக் கெட்டில் பிடிக்கிறோம். குழாயை மூடாமல் விட்டால், அல்லது மூட முடியா விட்டால் பக்கெட் நிரம்பி விழுவதை தவிர வேறு வழியில்லை. விந்து உற்பத்தி என்பது மூடமுடியாத குழாய்தான்!

பிரம்மச்சாரி என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அதில் ஒன்று, செக்ஸில் ஈடுபடாத வன் என்பது. உலகில் பிரம்மச்சாரிகள் இருக்கலாம். ஆனால், ஸ்கலிதம் ஆகாத பிரம்மச்சாரிகள் இருக் கவே முடியாது!

விந்து அதிகமாக வெளியே றினால் உடம்பு பாதிக்கும் என்றும், “விந்து விட்டவன் நொந்து கெட்டவன்” என் றெல்லாம்கூட தவறான நம்பிக்கைகள் மக்களிடம் உள்ளன. எச்சில் மாதிரிதா ன் விந்துவும். தேவையில் லாமல் எச்சிலைத் துப்பிக் கொண்டிருப்பவர்களின் உடம்பு பாதிக்கவா செய்கிறது? எச்சிலைப் போலவே விந்து வெளியேறுவதாலும் எந்த பாதிப்பும் இல்லை என்பதே உண்மை.

எச்சிலைப் போல விந்துவும் உடம்பில் ஊறும் ஒரு திரவம் தான். விந்து வெளியேறினால் உடம்பு பாதிக்கும் என்று மக்கள் நினைப்பது உண்மை என்றால், திருமணமான ஒவ்வொரு ஆணும் இரண்டே வருடத்தில் டி.பி .நோயாளி மாதிரியல்லவா ஆகியிருக்க வேண்டும்? எப்படி மொழுமொழு என்று ஆரோக்கி யமாக இருக்கிறார்கள்?

விந்துவைப் பற்றி இவ்வளவு தவ றான நம்பிக்கைகள் இருக்கக் காரணம் இ யற்கையின் படைப்பு ரகசியங்களையும், படைப்பின் நோக்கத்தையும் மக்கள் புரிந்து கொள்ளாததுதான்.

மக்களின் இந்த அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு, பல போலி டாக்டர்கள் பணம் பறித்துக் கொண்டி ருக்கிறார்கள். “தாது நஷ்டமா? ஓடி வாருங்கள் உடனடி குணம் தருகிறோம்” என்று கூப்பி டும் இந் தப் போலி டாக்டர்களும், இவர்களின் சிட்டுக்குருவி லேகிய ங்களும் விஞ்ஞானத்துக்குப் புறம் பானைவை மட்டுமல்ல, தடை செய்யப்பட வேண்டியவையும்கூட.

– பாலியல் சிறப்பு மருத்துவர் நாராயண ரெட்டி

Advertisements

One Response

 1.     Sir I have pain in my eyes and I have wearing spectacles
  

  Please say some medicine to cure this problems

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: