Advertisements

கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவதும் ஏன்? எதற்கு?

கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவ தும் ஏன்? ஓர் அரியதொரு விளக்க‍ம்

க‌டந்த கால வரலாற்றில் சங்கு ஊதுவதும் மணியடிப்ப‍தும் சுப‌ சகுனமே தவிர அபசகுனம் அல்ல‍! சங்கு ஊதுவது என்பது தற் காலப் பேச்சு வழக்கில் அபசகுனம் போன்ற ஒரு பிர மையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் கோ வில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது சங்கை ஊதுவது பலகாலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது. பூஜையின் போது மட்டுமல்லாமல் மங்கல நிகழ்ச்சிகளின் போதும், போர் துவங்குவதைக் குறிக்கவோ, போரில் ஒரு படை வெற்றி அடைந்ததை அறிவிக்கவோ

சங்கு ஊதப்படுகிறது. மகாகவி பார தியாரும் “சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே” என்று பாடி, வெற்றி யைப் பறைச்சாற்றும் பொரு ளாகச் சங்கைக் கொண்டிருக்கிறார்

மஹாபாரதப் போரின்போது காலை யில் போர் ஆரம்பிக்கும் போதும் மாலை சூரியாஸ்தமனம் ஆனவுட ன் போரை முடிக்கும் போதும் சங்கு ஊதியதாக நாம் படிக்கிறோம். பஞ் சபண்டவர்களும், கிருஷ்ண பரமாத் மாவும் வைத்திருந்த சங்குகளுக் குத் தனித்தனி பெயர்கள் இருந்தன. தருமரிடம் இருந்த சங்கின் பெயர் அனந்த விஜயம். பீமனது சங்கின் பெயர் பவுண்டிரம். அர்ச் சுனனிடம் இருந்த சங்கு தேவதத்தம். நகுலனது சங்கின் பெயர் சுகோஷம். சகாதேவனது சங்கு

மணிப்புஷ்பகம். ஸ்ரீ கிருஷ் ணரிடமிருந்தது பாஞ்ச ஜன்ய ம் என்ற பிரபல சங்கு.

சங்கு தோன்றியதைப் பற்றி புராணங்களில் ஒரு கதை சொல்ல ப்படுகிறது. சங்காசு ரன் என்னும் அசுரன் தேவர்க ளைப் போரில் மூழ்கடித்து அவர்களிடம் இருந்து வேத ங்களைத் திருடிக் கொ ண்டு கடலுக்கு அடியில் பதுங்கிக் கொண்டான். தேவர்கள் மகா விஷ்ணுவிடம் போய் முறையிட அவர் மத்ஸ்ய (மீன்) அவதாரம் எடுத்து சங்காசுரனைக் கொன்றா ர். அப்போது சங்காசுரனின் தலை மற்றும் காதில் இருந்து சங் கைப் போன்ற தோற்றம் உள்ள எலும்பி னை எடுத்து ஊத அதில் இருந்து ’ஓம்’ என்ற ஓசை எழுந்தது என்றும் அந்த ஓசையில் இருந்து வேதங்கள் வெளிப் பட்டன என்றும் சொல்லப்படுகிறது.

சங்காசுரனிடமிருந்து தோன்றியதால் தான் அதற்கு சங்கு என்ற பெயர் ஏற்பட் டது. மகாவிஷ்ணு தன் நான்கு கைகளி ல் ஒன்றில் பாஞ்சஜன்யம் என்ற அந்த சங்கை எப்போதும் ஏந்திக் கொண்டி ருப்பார். தர்மம் என்கிற உயர் அம்சத்தை

சங்கு குறிப்பதாகவும் எனவே தர் மத்தை நிலை நாட்டும் இறைவ ன் சங்கைத் தன் கையில் எப்போ தும் ஏந்திக் கொண்டிருக்கிறார் எ ன்றும் பெரியோர் கூறுகிறார்கள். சங்கையும், சக்கரத்தையும் ஏந்தி க் கொண்டிருப்பதால் அவருக்கு ‘சங்கு சக்ரதாரி’ என்ற பெயர் உண் டு.

இவ்வாறு சங்கு உருவானதால் சங்கொலி அதர்மத்தின் அழிவை யும், தர்மத்தின் வெற்றியையும் காட்டுகிறது. சங்கு பிறந்த கதைக் கேற்ப சங்கை நம் காதருகில் வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் ஓசையை நம்மால் கேட் க முடியும்.

வேதங்களின் பொருளான ஓ ம்கார மந்திரத்தைத் தருவதா லும், தர்மத்தை நிலைநாட் டும் பொருளைத் தருவதாலு ம் பூஜையறையில் இறைவ ன் முன்பு வைத்து வணங்கப் படும் அளவு சங்கிற்கு சிறப்பு உண்டு. மங்கலகரமான பூ ஜை நேரங்களில் அமங்கல மான வார்த்தைகளோ, பேச்சுக்களோ பக்தர்களின் காதில் விழு ந்து பக்தி மனோபாவத்தைக் குறைத்து விடாதிருக்கவும் சங்கு ஊதுவது உதவுகிறது.

மேலும் சங்கு ஊதுவது ஆன்மி க ரீதியாக அல்லாமல், ஆரோக் கிய ரீதியாகவும் உதவுகிறது. சங்கு ஊதும் போது நாதமானது மூலாதாரத்தில் இருந்து எழுகி றது. அதனால் சங்கு ஊதுவதன் மூலம் மூலாதார சக்ரா நன்றா க செயலாக்கம் பெறுகிறது.

மேலும் சங்கு ஊதுவதினால் மூச்சு ஆழப்பட்டு, நுரையீரல் செய ல்படுவதும் சீராகிறது. சங்கி ற்கு உடலைப் பாதிக்கும் நுண்கிருமி களை அழிக்கும் தன்மை உள்ளது என்று நம் முன்னோர் நம்பி னார்கள். அதனால் தான் தீர்த்தம் சங் கில் தரப்படுவது விசேஷமா கக் கருதப்பட்டது. குழந்தை களுக்கும் அக்காலத்தில் மருந்தையும், பாலையும் சங்கில் ஊற்றித் தரும் வழ க்கம் நம் வீடுகளில் இருந்தது.

கோயில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது மணி அடிப் பதும் கூட சங்கு ஊதுவதைப் போன்றே மங்கல ஒலியா கக் கருத ப்படுகிறது. மணி அடிக்கும் போதும் ஓம்கார ஒலி ஒலிக்கிறது. பூஜை நே ரங்களில் தெய்வீகசூழ் நி லைக்குப் பொருந்தாத ஓசை களை மூழ்கடித்து இறைவ னிடம் மனம் லயிக்க மணி அடிப்பதும் உதவுகிறது.

கோயில்களில் பெரிய பெரிய மணிகள் தொங்க விடப்பட்டிருப் பதை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றை அடிப்பதில் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆர்வம் காட்டு வதுண்டு. அந்த மணிகளை அடிப்பதன் காரணம் குறித்து சிலர் தான்தோன்றி த்தனமாக ஏதே தோ சொல்வது உண்டு. இறைவனை உறக்கத்தில் இருந்து எழுப்பு வதற்காக மணி அடிப்பதாகவும், தங்கள் வருகையை இறைவனு க்குத் தெரியப்படுத்துவதற்காக மணி அடிப்ப தாகவும் சிலர் அறி யாமையால் சொல் வதுண்டு. எழுப்பி தெரியப்படுத்த வே ண்டிய அவசியம் இறைவனுக்கு இல் லை. மணி அடிப்பது அறியாமை உறக்க த்தில் ஆழ்ந்து கிடக்கிற நம்மை அதில் இருந்து தட்டி எழுப்பத்தான். அந்த ஓங் கார ஒலியைக் கேட்டவுடன் இறையுண ர்வு எழும்பி நம் மனதினை ஒருநிலைப்படுத்த நாம் செய்யும் ஆய த்தம் தான் மணியை  அடிப்பதன் உண்மைப் பொருள்.

பண்டைய காலங்களில் ஒவ் வொரு கிராமத்திலும் ஒரு பிரதான கோயில் இருக்கும். இறைவனுக்குச் செய்யப்ப டும் பூஜைகளின் போது கோ யில்களில் இருக்கும் பெரிய மணிகள் அடிக்கப்படும், சங்கு ஊதப்படும். அந்த ஒலி அந்தக் கிராமம் முழுவதும் கேட்கும். பூஜையில் கலந்து கொள்ள ஆலயத்திற்கு நேரி ல் செல்லும் சூழ் நிலை எல்லோருக்கும் இருக்கும் என்று சொல் ல முடியாது. வே லை உள்ளவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் போன்றவர்கள் பூஜையில் பங்கேற்க முடியாது.

கோயில் மணியின் பலத்த ஒலியும், சங்கொலியும் கேட் கும் போது வேலை செய்பவர் கள் தங்கள் வேலையை அப் படியே நிறுத்தி விட்டு தாங்க ள் இருக்கும் இடத்திலேயே இறைவனை கண நேரம் தொ ழுவார்கள். அதே போல் உடல் நலம் குன்றியவர்களும் அந்த நேர த்தில் வீட்டில் இருந்தபடியே கண நேரம் இறைவனை வணங் குவார்கள். இப்படி மானசீகமாக இருக்கும் இடத்திலேயே இறைவ னைத் தொழும் மங்கலமான சூழ் நிலையை மணிஒலியும், சங் கொலியும் ஏற்படுத்தித் தந்திருக் கிறது. ஊருக்கே கேட்கும் வண் ணம் பெரிய பெரிய ஆலய மணிக ளை அடிப்பதன் உள்ளார் ந்த இந்த அர்த்தம் மிக உன்னதமானது.

கிராமமானாலும் நகரமானாலும் நீங்கள் இப்படிக்கோயில் மணி யோசையும், சங்கொலியும் கேட் க நேர்ந்தால் மேலே சொன்ன காரணத்தை நினைவு கொள்ளு ங்கள். இறைவனை நினைக்க ஒரு நல்ல சந்தர்ப்பமாக அதை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடமே கோயில். அந்த மணியோசையும், சங்கொ லியும் உங்களுக்காகவே ஒலிக் கின்றன. எல்லாவற்றையும் ஒரு கணம் ஒதுக்கி வைத்து விட்டு எல்லாம் வல்ல இறைவனை ஒரு கணம் மானசீகமாக வணங்குங் கள். எத்தனையோ விதங்களில் நேரத்தை நாம் வீணாக்குகிறோ ம். அப்படி இருக்கையில் அந்த ஒரு கணத்தில் மனதை இறைவ னிடம் திருப்புவதால் நம் நேரம் பெரிதாக வீணாகி விடப் போவ தில்லை. மாறாக கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கிப் பெறும் பெரும்பயனை நாம் அந்தக் கணத்தில் பெற்று விடுகிறோ ம் என்பதை நினைவில் வையுங்கள்.

தி ன த் த ந் தி   நா ளி த ழி ல் . . .

Advertisements

One Response

  1. Reblogged this on Gr8fullsoul.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: