Advertisements

ஆன்மீகம் சம்பந்தமான சில அபூர்வ தகவல்கள் – கட்டாயம் படிங்க

ஆன்மீகம் சம்பந்தமான சில அபூர்வ தகவல்கள் – கட்டாயம் படிங்க

ஈசனடி போற்றி – நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

பல்லாயிரம் ஆண்டுகளாக இப்புண்ணிய பூமியில் வாழ்ந்து அனு பவம் பெற்று, வாழ்வின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் தீர ஆராய்ந்து,

இறைவனை உணர்ந்து, அவனின் திருவருளைப்பெற்று சீரூம் சிறப்புமாக வாழ்ந்த பூமி நம் பாரதபூமி. கடந்த சில நூற்றாண்டுகளில் இப்பூ வுலகில் வேறு பகுதியில் வாழ்ந்து வந்தவர்களின் பேராசை, பொறாமை, அபகரிக்கும் தன்மை போன்ற குணங்களினாலும் நம்மிடையே ஒற்றுமையின்றி தவித்ததாலும், நம் செல்வங்களையும், ஞான த்தையும், பல அரிய பொக்கிஷங் களையும் இழந்து நிற்கிறோம். அது மட்டு மின்றி, இவ்வுலகில் வேறுபகுதியில் இருப்பவர்கள் நம் அறியாமையை பயன்படுத்தியும் நம்மிடம் மிஞ்சியிருக்கும் செல்வங்களை குறிவைத்தும் இன்றும் நம்மை தொடர்ந்து தாக்கி வருகிறார்கள்.

இச்சமயத்தில் நாம் இறைவனை வணங்கி, அவன் அருள் பெற்று, நம் ஞானத்தை மீண்டும் பெறவும், நம் செல்வங்க ளை பெறவும், நம் மக்களை காக்கவும், நாம் மக்களுக்காக தொண்டாற்றவும் வேண்டு ம். இதைப்போன்ற ஒரு தெய்வீக வேலை இவ்வுலகில் வேறு எதுவு மில்லை. ஓம் நமசிவாய.

சிவன் கழுத்தில் பாம்பு ஏன் வந்தது ? சிவன் திருவுருவம்
சிவன் கழுத்தில் பாம்பு ஏன் வந்தது ?

பாம்பு என்றால் படையும்நடுங்கும் என்பது பழமொழி. பாலூட்டி வளர்த்தாலும் பாம்பு தீண்டத்தான் செய்யும் என்பார்கள். பாம்புக ளை செல்ல பிராணியாக யாரும் வளர்ப்பதில்லை. பாம்புகள் வலையில்உள்ள எலிகளை பிடித்து உண்பதால் விவசாயிகளி ன் நண்பன் என்பார்கள். இத்தகைய குணங்களை கொண்ட பாம்பு ஏன் சிவனின் கழுத்தில் வந்தது. இந்த கேள்விக்கான வி டை தேடினேன். இந்த கேள்வியோடு சிவன் தன் உருவம் முழுவதிற்கு மான விளக்கத்தை எனக்கு அளித்து என் மனதினுள் புகுந்து விட்டான். ஓம் நமசிவாய. சிவன் திருவடி வாழ்க.

சிவன் திருஉருவ தத்துவங்கள்

இறைவனுக்கு உருவம் இருக்கிறதா ? இல் லையா ? இதை பற்றிய சிந்தனைகளும் ஆய் வுகளும் பல்லாயிரம் செய்துவிட்டனர். அந்த இறைவனே அதை நமக்கும் உணர்த்திவிட்டான்.

சிவபெருமானுடைய வடிவம் மூன்று. அருவம், அருவுருவம், உரு வம் என்னும் மூன்றுமாம். அருவத் திருமேனியையுடைய பொழுது சிவன் எனவும், அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சதா சிவன் எனவும், உருவத்திருமேனி யையுடைய பொழுது மகேசுவரன் எனவும் பெயர் பெறுவ ர்.

மகேசுவரன் 25 வடிவங்களில் அருள்புரிகிறான். மேலும், சரபேஸ்வரர், பைரவர், திரிபாதமூர்த்தி என்று பல்வேறு மூர்த்திகளாகவும் ஆகிறான்.

சுந்தரர் திருமழபாடியி ல் பாடியருளிய தேவார ப் பாடல் வரி ஒன்றைக் காண்போம்.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

னி சிவனின் உருவமாக நாம் பொதுவாக காணும் உருவ த்தை காண்போம். பத்மாசனம். அந்த சிவனே பத்மாசன நிலை யில் அமர்ந்திருப்பாத காண்கிறோம். அவ னின் ஒளி மிகுந்த கண்கள் முக்கால் பாகம் மூடிய நிலையில். இரு புருவங்களு க்கும் நடுவில் நெற்றிக்கண். நெற்றியில் திருநீற்றினால் 3 கோடுகள். செம்மை நிற சடைமுடியான். அவன் தலையில் கங்கை ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறாள். பிறையை தலை யில் சூடிய பெருமானாய் இருக்கிறான். சிவனு க்கு பிடித்த கொன்றை மலரை தலையில் அணிந்திரு க்கிறான். உடல் முழுவதும் திருநீற்று கோடுகள். கை களி லும் கழுத்திலும் உருத்திராட்ச மாலை. கழுத்தில் பாம்பு. உடுக்கையும் சூலாயுதத்தை யும் வைத்திருக்கிறான். விடை யாகிய காளை மாட்டை வாகனமாக வைத்துள்ளான். புலி த்தோலை இடையில் அணிந்துள்ளான். கைலாய மலையை வீடாக வைத்து ள்ளான். நடனத்தை உருவாக்கி யவனாய் நடராசனாய் இருக்கிறான். இப்பிரபஞ்ச அதிர்வுகள் யாவையும் கடந்த சலனமில்லாத முக பாவனையோடு நமக்கு காட்சி தருகிறான். இன்னும் இன்னும் நமக்கு புலப்படாத எவ்வளவோ தத்துவங்களை அடக்கியவனாய் நமக்கு வேண்டும் வரங்களை அள்ளித்தந்து அருள் புரிகி றான்.

நெற்றிக்கண்

நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல் சுழி முனைக்கும், புருவங்களின் இடைநடுவே, சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக அளவில் மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு “நெற்றிக் கண்” என்று பெயர். இதை மிக இலேசாக சவ்வு மூடிக்கொண்டிரு க்கிறது.

குண்டலினி சக்தியை மேலே எழுப்பி தலையின் நடு உச்சி பகுதிக்கு கொண்டு வரும்போது அளப்பரிய ஞானம் தோன்றும். அப்போது நெற்றிக் கண்ணும் திறக்கும். நெற்றிக் கண்ணினால் பல விடயங்க ளை உணர முடியும். நெற்றி க் கண் மிகவும் சக்தி வாய் ந்ததாகும். நெற்றிக்கண் ஞானத்தின் உச்சத்தை குறிக்கும்.

உடுக்கை

உடுக்கை பிரபஞ்ச படைப்பின் ஒலியை ஒலிக்கிறது. உடுக்கை யை அடிக்கும்போது ஓம் என்ற பிரணவ மந்திர ஒலி பிறக்கி றது. இந்த நாத ஒலி பிரபஞ்ச ஆக்கத்தின் பிறப்பி டம். பிரபஞ்ச படைப்பை ஆக்கும் ஆனந்த தாண்டவத்தை தொடங்கும் முன்னர் சிவன், உடுக்கையை 14 முறை அடிக்கிறார். இது பிர பஞ்ச இயக்கத்துக்கு தேவையான சாத்திரத்தை உருவாக்குகிற து. இவ்வாறு பிரபஞ்ச இயக்கத்துக்கு தேவையானவற்றை உருவாக்கிய பின்னர் சிவன், ஆனந்த தாண்டவத்தை தொடங்குகிறார். ஆகவே, உடுக்கை பிரபஞ்ச படை ப்பின் ஒலிக்குறிப்பாகும்.

பிறை சந்திரன்

பிறை சந்திரன் வளரும், தேயும் குணமுடையது. காலச் சக் கரத்தில் இந்த வளர்தலும் தேய்தலும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கும். காலத்தை நாம் இரவு பகல் என்று உண ர்ந்தாலும், தினமும் நிகழும் கால மாற்றம் சந்திரன் மூலம் நம் கண் முன்னே காலம் நகர்ந்து செல்வதை எளிதாக உண ர்த்துகிறது. இந்த பிர ஞ்சத்தையே படைத்த இறைவன், கால த்தை வென்றவனாவான். இந்த தத்துவத்தையே பிறை சந் திரன் உணர்த்துகிறது.

நெற்றியில் மூன்று திருநீற்று கோடுகள்

இவ்வுலகில் பிறந்து உயிரினங்கள் யாவும் இறுதியில் தீயில் வெந் து சாம்பலாகும் தத்துவத்தை தாங்கியுள்ளது திருநீறு.

காராம் பசுவின் சாணம் மருத்துவ குணம் மிக்கதாகத் திகழ்கிற து. இந்த சாணத்தை நிலத்தில் படாமல், அருகம்புல்லின் மேல் விழ வைத்து, அந்த அருகம்புல்லுடன் அதனை தீயிலிட்டு திருநீறு போல் ஆக்கி, அதனை பூசி வந்தால் தீராத நோயும் தீரும் என மருத் துவ நூல்கள் கூறுகின்றன.

திருநீறு உடலில் உள்ள நீர்த்தன் மையை உறிஞ்சவல்லது. நம்மை சுற்றியுள்ள அதிர்வலைகளில் நமக்கு நன்மை பயக்ககூடிய நல்ல அதிர்வ லைகளை மட்டுமே உள்வாங்கும் தன்மையுடையது.

திருநீற்றை முக்குறியாக அணிகிறோம். ஏனென்றால் ஆணவ ம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களை வேரோடு நீக்கி னால் தான் நாம் முக்திக்கு தகுதி உடையவர் ஆகிறோம் என்பதை அக்குறி உணர்த்துகிறது.

திருநீறு இன்னும் பற்பல நன் மைகளை நமக்கு அருள்கிறது.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கள் திருஆலவாயான் திருநீறே
என்பது திருஞானசம்பந்தர் திரு நீற்றுப்பதிக வாக்கு.

சூலாயுதம்

மூன்று முனைகளை கொண்ட சூ லாயுதம், சிவனின் இச்சா, கிரியா மற்றும் ஞான சக்தியை குறிக்கிற து. இச்சையினால் படைத்தலும், கிரியையால் காத்தலும் ஞானத் தினால் நன்மை பெறுதலும் ஆகு ம். இந்த ஆயுதம் வல்வினைக ளை அழித்து நன்மை பயப்பவை.

கொன்றை மலர்

ஆண்டுக்கு 1 முறை மட்டுமே, கோடையின் துவக்கத்தில் மலரக்கூடியது கொன்றை மலர்கள். இதற்கு சொர்ணபுஷ்பம் என்ற மற்றொரு பெயரு முண்டு. சரக்கொன்றை, சிறுகொன்றை, செங்கொன்றை, மஞ்ச ள்கொன்றை, மைக்கொன்றை , மயில்கொன்றை, புலிநககொ ன்றை, பெருங்கொன்றை என பல வகையாக இருக்கும் கொன்றை, தமிழகத்தை ப் பொறுத்தவரை காடும் காடு சார்ந்த பகுதியான முல்லை பகுதிக்கு உரிய மரம்.

மருத்துவ குணத்திலும் கொன்றை மரம் ஈடு இணையற்றது. சரக்கொன்றை சிறந்த நோய்க்கொல்லியாகிறது. கண் நோய்க ள், மலச் சிக்கல், தோல் நோய்கள், சர்க்கரை நோய், சளி என்று பல்வேறு நோய்களை கட்டுபடுத்த பயன்படுகிறது. சிவன் கொன்றை மலர் தரித்தவனாக காட்சி தருகிறான்.

புலித்தோல்

புலி மிகுந்த ஊக்கமுடைய விலங்காகும். புலித்தோல் இயற்கை யின் சக்தியைக் குறிக்கிறது. இது உலகின் ஆக்க சக்திகளுக்கு மூலமாக வும் இருக்கிறது. சிவன் புலித்தோலின் மேல் அமர்ந்திருப்பது, அவன் எல்லா சக்திக ளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை உணர்த்துகிறது.

உருத்திராக்க மாலை

உருத்திராக்கம் என்பது இமய மலையில் உண்டாகும் ஓர் மரத்தின் விதையாகும். இந்த உருத்திராக்கத்திற்கு மனித உடலி ல் ஏற்படும் பலவித நோய்களை நீக்கும் தன்மை இருக்கிறது. உருத்தி ராக்கம் மனித உடலின் அதிக வெப்பத்தை உறிஞ்சக்கூடியது. மனித உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது வயிற்றிலும் வாயிலும் புண்உருவாகிறது. பஞ்ச பூதங்களின் வெவ்வேறுவிகித சேர்க்கையே நவ கிரகங்களாகும். இந்த நவகிரகங்களினால் உண்டாகும் பாதிப்பு களை குறைக்க உருத்திராக்கம் பெரிதும் உதவுகிறது.

பாயும் கங்கை

கங்கை நதி வளமையும் செல்வ செழிப்பையும் அளிக்க வல்லது. மானுட நல் வாழ்வுக்கு நல்ல ஞானம் மிக அவசியம். கிடைத்த ற்கரிய இந்த ஞானம் காலத்தின் மாற்றத்தில் நலிந்துவிடாமல் தலைமுறை தலைமுறையாக ஊடுருவிச் செல்வது அவசியம். இந்த ஞானம் தலைமுறை கடந்து செல்வதையே கங்கை நதி உருவகி க்கிறது. இந்த ஞானம் எல்லா உயிரினங்களுக்கும் நல்வாழ்வையு ம் அமைதியையும் கொடுத்து கொண்டே இருக்கும்.

தோடு

சிவனின் இரண்டு காதுகளி லும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். சிவன் உமையொரு பாகனாவான். உமையம் மையை தன்னுள் ஒரு பாகமாக கொண்டவன். பெண்கள் அணி யும் தோடை அணிந்த இவனது இடது காது, இந்த தத்துவத்தை உணர்த்திக்கொண்டேயிருக்கும்.

காளை (விடை) வாகனம்

ந்தி தேவர். நந்தி என்ற சொல் லுக்கு எப்பொதும் ஆனந்த நிலை யில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்த வராக நந்தி தேவர் கருதப்படுகின் றார்.

செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து
நம் பவமறுத்த நந்திவானவர்

எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளி ந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்திதேவரே என்பது தெளிவாகி ன்றது. நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிட மிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.

நந்தி வெண்மையாகிய தூய்மையும் ஆண்மையும் நிறைந்தது. இது தர்மத்தை குறி க்கிறது. தர்மமே இறைவனை தாங்கி நிற்கிறது. சிவபெருமானின் ஆணை க்கேற்ப கலியுகத்தில் ஒரு காலை மட்டும் தூக்கி நிற்கும். நந்தி சிவனிடம் பெற்ற வரத்தி ற்கேற்ப எல்லா கோவில்களிலும் சிவன் முன்னே அவரை நோக்கியபடியே இருக்கும். ஆன்மாக்களா கிய நாம் நம் கவனத்தை நந்தியைப்போல எப்போதுமே இறைவ ன் மீதே நோக்கியிருக்க வேண்டும்.
.
கழுத்தில் பாம்பு

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். பாம்மை செல்ல பிரா ணியாக வளர்க்க முடியாது. என்ன தான் பால் ஊற்றி வளர்த்தா லும், சமயங்களில் வளர்த்தவனையே கடித்து விடும். விளை நிலங்களில் பயிர்களை நாசமாக்கும் எலிகளை பிடித்து உண்ப தால் விவசாயிகளின் தோழனாகும். இவ்வாறு பல்வேறு குணமுடைய பாம்பு போன்ற விலங்களின் மீது இறைவனு க்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதை உணர்த்துகிறது.

இன்னுமொரு முக்கியமான தத்துவம்:

மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியாகிய சிவம் ஒரு அசைவற்ற பாம்பை ப்போல உறங்கிக் கொண்டிருக்கிறது. இதை எழுப்பி முதுகு த்தண்டின் வழியே தலையில் இருக்கும் சக்தியோடு சிவம் சேரும் போது அளப்பரிய ஞானம் உண்டாகும். ஒருவனுக்கு 8 சித்திகளும் கிடைக்கும். இந்த தத்துவத்தை விளக்கவே குண்டலினி சக்தியாகிய பாம்பை தன் கழுத்தில் அணிந்தி ருப்பது தெளிவு படுத்துகிறது.

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே!

Hindu Prasad

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

 

Advertisements

One Response

  1. உத்திராட்சம் அனிந்த பிறகு
    கடை பிடிக்கவேண்டிய வழிமுறைகள்
    கூறவும்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: