Advertisements

காலை எழுந்தவுடன் குதிக்கால் வலிக்கிறதா? அந்த வலியை எப்ப‍டித் தணிப்பது?

குதிக்கால் வலி – காலை எழுந்தவுடன் வலிக்கும் பின்பு நடை பயிலச் சற்றுத் தணியும்

“கட்டிலாலை எழும்பிக் காலைக் கீழே வைக்க முடியுதில்லை. அவ்வளவு வலி காலையிலை” என்றவரை நோக்கி “மற் ற வேளைகளிலை வலி வாறதில்லை யோ” எனக் கேட்டேன்.

“கனநேரம் கதிரையிலை இருந்திட்டு எழும்பி நடக்கவும் கஸ்டம்தான்” என்றா ர் அப் பெண்மணி.

ஆம் நீண்ட நேரம் அசைக்காது இருந்து விட்டு எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போ து குதிக்காலில் வலியை ஏற்படுத்துகிறது இந் நோய். சில அடிகள் நடக்க வலிதானே குறைந்துவிடும். ஆனால் கவனியாது விட்டால்

காலம் செல்லச் செல்ல வலியானது நாள் முழுவதும் உங்களுக் குத் துன்பம் தரக் கூடும்.

இதனை பிளான்டர் பஷியடிஸ் (Planter fascitiis) என்று ஆங் கிலத்தில் சொல்லு வார்கள். தமிழில் குதி வாதம் என்றே பலரும் குறிப்படுவார்கள்.

வாதம் என எம்மவர்கள் குறிபிட்ட போதும் பக்கவாதம் பாரிச வாதம் போன்ற ஆபத்தான நோய ல்ல. சிலவேளைகளில் அப்பகுதி சிவந்து வீங்கி சூடாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் இவை எது வுமே வெளிப்படையாகத் தெரிவதி ல்லை. வலி மட்டுமே ஒரே ஒரு அறிகுறியாக இருக்கும். பாதத்தின் அடிப்பகுதில் உள்ள சவ்வுகளில ஏற்படும்; அழற்சியாலேயே இந் நோய் ஏற்படுகிறது. இது மூட்டு களில் ஏற்படும் நோய் அல்ல.

ஏன் வருகிறது

ஆனால் இத்தகைய சவ்வு அழற்சி தவிர்ந்த வேறு காரணங்களா லும் குதிக்காலில் வலி ஏற்பட வாய்ப்புண்டு.

பொதுவான நாம் நடக்கும்போது எமது பாதங்களை முழுமையா க ஊன்றி நடப்போம், ஆனால் பாதத்தில் ஆணிக் கூடு, தோற்த டிப்பு

(Callocity), புண்கள், மூட்டு வலிகள், போன்றவை இருந்தால் பாதங்களை சரி யாக தரையில் பதியாமல் உட்பக்க மாகவோ வெளிப்புறமாகவோ சற்று சரி ந்து நடப்பதாலும் அவ்வாறான வலி ஏற் படலாம்.

பாதத்தின் பிரதான எலும்பான கல்கே னியத்தில்; வழமைக்கு மாறான எலும் புத் துருதல் இருந்தாலும் அவ்வாறான வலி ஏற்பட வாய்ப்புண்டு.

கெண்டைக் காலின் பின்புறமாக இருக்கும் பிரதான சவ்வான அக்கிலிஸ் ரென்டனில் ஏற்படும் அழற்சியு ம் இவ்வாறான வலி யை ஏற்படுத்தலாம்.

இவற்றைத் தவிர பாதத்தின் மூட்டுகளில் ஏற்படக் கூடிய காயங்கள், உருக் குலை வுகள், ரூமற்ரொயிட் வாதம் அல்லது வேறு ஏதாவது நாட்பட்ட நோய்கள் காரணமாக வும் அத்தகைய வலி ஏற்பட வாயப்புண்டு.

சவ்வுகளின் இறுக்கம் மட்டுமின்றி பாதப்ப குதியின் தளர்ச்சி,

உடற்பயிற்சிகளைத் தவறான முறைகளில் செய்வதும் காரண மாகலாம். பாதத்தின் இயற்கை யான வளைவுப் பகுதிக்கு நீங் கள் கொடுக்கும் அதிகரித்த வே லைப் பளுவும் மற்றொரு கார ணமாகும். மிக நீண்ட தூரம் ஓடுதல், அதி வேகமாக ஓடுதல், அடிக்கடி ஓடுதல் போன்ற பயி ற்சிகள் சிலருக்கு வலியை ஏற் படுத்துவதுண்டு.

அளவுப் பொருத்தமற்ற காலணிகளும், அடிப் பகுதி தேய்நத கால ணிகளும் குதியில் வலி ஏற்படு த்த வாய்ப்புண்டு.

சிகிச்சை

சிகிச்சைகள்பல வகைப்படலாம். வலி ஏற்படாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளுடன், தசை சவ் வுகளுக்கான பயிற்சி முறைகள், உட்கொள்ளும் மாத் திரைகள், ஊசி ஏற்றுதல் போன்றவற்றை உங்கள் மருத்துவர் சிபார்சு செய் யக் கூடும்.

காலையில் படுக்கையை விட்டு எழுந்து நடமாட ஆரம்பிக்க முன்னரே பயிற்சிகளை ஆரம்பியுங்க ள். எழுந்தவுடன் உங்கள் பாதத்தை குறுக்குவாட்டாக அழுத்தித் தேய்த்து சில நிமிடங்களுக்கு மஸாஜ் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

அதேபோல நீண்ட நேரம் ஓரிடத்தில் உட்கார்ந்து இருந்த பின் எழுந்து நட க்க நேர்ந்தால், நடக்க ஆரம்பிக்க முன் னர் மசாஸ் செய்யுங்கள்.

பகலில் பதமான சூட்டு வெந்நீரில் பா தங்களை சிறிது நேரம் வைத்திருப்ப தும் வலியைத் தணிக்க உதவும். இது சுடுநீர் ஒத்தடம் கொடுப்பதை ஒத்தது. மாறாக ஐஸ் கலந்த தண்ணீரில் கால்களை வைப்பதும் உதவலா ம்.

பாதங்களின் கீழ் ஒரு பந்தை வைத்து அதை முன் பின்னாக உருட்டுவதும் மற்றொரு பயிற்சி யாகும்.

அடுத்தது தசைகளைப் பலப்படுத் தும் பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும். இவை உங்கள் நோ யை த் தணிப்பதில் நல்ல பல னைக் கொடுக்கும்.

**

கெண்டைத் தசைகளுக்கான பயிற்சிகள்.

முழங்காலுக்குக் கீழ் இருக்கும் கெண் டைக்கால் தசைகளுக்கான இழுவல் பயிற்சிகளும் குதிக்கால் வலியைத் தணிக்க உதவும். மேலே காட்டிய படங்க ளில் உள்ளபடி இரண்டு விதமாக செய்ய வேண்டும். சுவரை உங்கள் கைகளால் தள்ளுவது போன்றவையே இப் பயிற்சி கள்.

1) முதலாவது படத்தில் காட்டியபடி உங்கள் இரு கைகளையும் முழங் கைப் பகுதியில் மடிக்காது நேராக வைத்துக் கொண்டு சுவரை இறுகத்தள்ளுங்கள். தள்ளும் போது முன்னிருக்கும் கால் சற்று மடிந்திருக்க பின் னே மடியாதி ருக்கும் காலின் குதிப் பகுதியில் பாரம் பொறுக்குமாறு செய்யுங் கள். அடுத்த தடவை கால்களை மாற்றி மறுகாலில் பாரம் பொறு க்குமாறு பயிற்சியைச்; செய்யுங்கள்.

2) இரண்டாவது படத்தில் காட்டிய அடுத்த பயிற்சியின்போது உங்கள் கைகள் முழங்கைப் பகுதியி ல் சற்று மடிந்திருக்க சுவரைத் தள்ளு ங்கள். இது பாதத்தின் முற்பகுதியில் பாரம் தங்குமா று செய் யும்.

உண்மையில் இவை உங்கள் தசைக ளைப் பலமுறச் செய்து அதனால் எதி ர்காலத்தில் வலிகள் தொடராது வேத  னையைக் குறைக்க உதவும்.

பாதத்து தசைகளுக்கான பயிற்சிகள்

பாதத்தின் தசைநார்களுக்குக் கொடு க்கும் பயிற்சிகள் பல வகைப்படலாம். துவாயைச் சுருட்டல், மார்பிள் அல் லது நாணய ங்களை கால் விரல்களால் பொறுக்கல், மற்றும் காற் பெரு விரல் தட்டல் பயிற்சிகள் போ ன்றவை சுலபமானவை. பயிற் சிகளின் பெயர்களைக் கேட்ட வுடன் பயந்துவிடாதீர்கள். மிக வும் சுலபமானவை. தொடர்ந்து செய்ய நல்ல பலனையும் கொடு க்கும்.

துவாயைச் சுருட்டல் பயிற்சி – ஒரு துவாயை தரையில் விரி யுங்கள். படத்தில் காட்டியபடி உங்கள் பாதத்தை அதன் ஒரு ஓரத் தில் வைத்தபடி அருகே ஒரு நாற்காலியில் உட்காருங்கள். துணி யை உங்கள் கால்விரல் நுனிகளால் பற்றி உங்கள் பக்கமாக சுருட்டிச் சுருட்டி இழுங்கள். பல முறை இவ்வாறு செய்யுங்கள்.

மார்பிள் பொறுக்கல் பயிற்சி

இன்னுமொரு பயிற்சி கால் விரல் களால் மார்பிள்களை பொறுக்கு வதாகும். சில மார்பிள்களை, நாணயங்களை அல்லது சோடா மூடிகளை நிலத்தில் போட்டு வை யுங்கள். அருகில் உயரம் குறைந்த ஒரு கோப்பையை வையுங்கள்.

உங்கள் குதிக்கால் நிலத்தில் படு ம்படி உட்கார்ந்து கொண்டு மார் பிள்களை உங்கள் கால் விரல்க ளால் பொறுக்கி எடுத்து அருகில் ஏற்கனவே வைத்த கோப்பைக்கள் போடுங்கள். நாணயங்களை இவ் வாறு பொறுக்கிப் போடுவது இன் னும் நல்ல பயிற்சியாகும்.

கால்விரல் தட்டல்

கால்விரல் தட்டல் (Toe tab) இன்னுமொரு நல்ல பயிற்சி யாகும். இது ஒரு நுணுக்க மான ஆனால் சிறந்த பயிற் சியாகும். உங்கள் பாதத்தின் குதிப் பகுதியை தரையில் திட மாக இருக்கும்படி வையுங்க ள். காலின் முற்பகுதியை ம ட்டும் மேலே உயர்த்துங்கள். இப்பொழுது நான்கு விரல்கள் உயர்ந்தபடி நிற்க பெருவிரலா ல் மாத்திரம் தரையைத் தட்டுங்கள். இனி மறுபுறமாகச் செய்யு ங்கள். அதாவது பெருவிரல் உயர்ந்து நிற்க மற்ற நான்கு விரல் களால் தரையைத் தட்டுங்கள்.

இவ்வாறு பலமுறை செய்ய வேண்டும். ஒரு தவணையில் பத்து முறையாவது செய்யுங்கள். படிப்படியாக ஒவ்வொரு தவணையிலும் ஐம்பது முறையாவது செய்யும்படி பயிற்சியை அதிகரியுங்கள்.

மருந்துகள் ஊசி

வலியையும் அழற்சியையும் தணிக்கும் வலிநிவாரண மாத்தி ரைகளும் உங்களுக்கு நிச்சயம் உதவும். வைத்தியரின் ஆலோசனையுடன் குறிப் பிட்ட காலத்திற்கு அத்தகைய மாத்திரை கள நீங்கள் உட்கொள்ள சுகம் தெரியும்.

சில வேளை ஹைட்ரோகோட்டிசோன் ஊசி மருந்தை வலி அதிகமுள்ள இடத்தி ல் உங்கள் வைத்தியர் போடவும் கூடும்.

-Dr. M.K.முருகானந்தன், M.B.B.S(Cey), D.F.M(SL), F.C.G.P(SL)
குடும்ப வைத்திய நிபுணர்

Advertisements

One Response

  1. நன்றி. பயிற்ச்சிகிறேன்.
    உடல் எடை அதிகரித்ததால் பாதம் வலி எற்படலாம்.
    அப்படி இருந்தால் என்ன செய்வது.?

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: