Advertisements

டேப்ளட் பிசியை வாங்க‌, என்னென்ன அம்சங்களைக் கவனத்தில் கொள்ள‍வேண்டும்.

தற்போது மக்கள் கம்ப்யூட்டர் வாங்குவதை விட்டுவிட்டு, டேப்ளட் பிசிக்களை நாட இருக்கின்றனர். பல வசதிக ள், தனி நபர் விருப்பங்கள், இயக்க, எடுத்துச்செல்ல எ ளிது எனப் பல புதிய சிறப்பு களில் டேப்ளட் பிசி, தற்போ தைய டிஜிட்டல் உலகில் இடம்பிடித்துள்ளது. ஒருடே ப்ளட் பிசியை, என்ன என்ன அம்சங்களைப் பார்த்து

வாங்கலாம் என்று இங்குபார்க்கலாம்

1. டேப்ளட் பிசியின் அளவு:

டேப்ளட் பிசி வாங்கும் ஒவ்வொருவரும், அது தடிமன் குறை ந்ததாகவும், குறைந்த எடை கொண்டதாகவும், எடுத்துச் சென்று பயன் படுத்த எளிதாகவும் இரு க்க வேண்டும் என எண் ணுகின்றனர். அதே நேர த்தில், அதன் திரை என் ன அகலத்தில் இருக்க வேண்டும் என்பதில், பல வகையான அபிப்ராயங்கள் உள்ளன. ஐ–பேட் அதன் திரை 10 அங்குலம் (சரியாகச் சொன்னால் 9.56) என வரைய றை செய்தது. அதன் எடை 750 கிராம் முதல் 900 கிராம் வ ரை என்ற ரீதியில் இருந்த து. சிலர் 12 அங்குல திரை யை எதிர்பார்த்தனர். ஆனா ல், பொதுவாக ஐ–பேட் சற் று கூடுதல் தடிமனுடன் இரு ப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

தற்போது மார்க்கட்டில் வந் துள்ள டேப்ளட் பிசிக்கள், ஐ–பாட் பாணியைப் பின்பற்றாம ல், மக்கள் விருப்பம் எனத் தாங்கள் கணித்தபடி, அவற்றைத் தந்துள்ளனர். சாம்சங் கா லக்ஸி டேப் முதல் வெரி ஸான்வரை 7 அங்குல திரைகொண்டுள்ளன. எடை 600 கிராமிற்கு ம் குறைவாகவே உள்ளது. என வே நாள் முழுவதும் தூக்கிக் கொண்டு செயல்ப டுபவருக்கு, இது உகந்ததா கவே உள்ளது. அஸூஸ் நிறுவனம் 8 அல்லது 12 அங்குல அகலத்திரையுட ன் டேப் ளட் பிசி தர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள் ளன. எனவே, ஒருவருக்கு சிறியதாக இருப்பது, இன்னொருவருக் கு பெரியதாக இருக்கலாம். அளவு என்பது அவரவர் விருப் பத்தினைப் பொறுத்ததே.

2. ஸ்டோரேஜ் அளவு:

ஐ–பாட் 16, 32 மற்றும் 64 ஜிபி உள் நினைவகத்துடன் வந்தது. இதில் கூடுதல் நினைவகத்தை ஏற்படுத்த முடியாது. கூடுதலா க நினைவகம் வேண்டும் எனி ல், புதியதாகத்தான் வாங்க வேண்டும். விரிவுபடுத்த வேண் டும் எனில், இவற்றில் வெளி யிலிருந்து இணைத்துப் பயன் படுத்தக்கூடிய நினைவ கத்தை த்தான் நாட வே ண்டும். அப்படியானால், அதற்கான எஸ்.டி. அல் லது மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் கொண்ட டேப் ளட் பிசி வேண்டும்.

அதிர்ஷ்டவசமாக, ஆண் ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் 7 இய க்கம் கொண்ட டேப்ளட் பிசிக்களில் இந்த வசதி தரப்பட்டுள் ளது. சாம்சங் கேலக்ஸி 16 மற்றும் 32 ஜிபி நினை வகத்துடனும், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்டுடனும் கிடைக்கிறது. பி மோடோ (bModo) என்னும் விண் டோஸ் டேப்ளட் பிசி, சற்று எடை கூடுதலாக இருந்தா லும், இரண்டு யு.எஸ்.பி. போர்ட் கொண்டு இருப்ப தால், எக் ஸ்டர்னல் ஹார் ட் ட்ரைவ்களை இணைக்க வழி தருகிறது.

விண்டோஸ் 7 அடிப்படையி ல் இயங்கும் சி.டி.எல். (CTL) டேப்ளட் 250 ஜிபி ஹார்ட் ட் ரைவுடன் வடிவமைக்கப்பட் டுள்ளது இங்கு குறிப்பிடத்த க்கது.

3.பேட்டரி திறன்:

டேப்ளட் பிசிக்களில் அடுத்து கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் அதில் தரப்பட் டிருக்கும் பேட்டரிக ளாகும். ஐ–பேட் இந்த வகையில் 10 முதல் 12 மணி நேரம் வரை தொடர்ந்து மின் சக்தி தருவதாக அமைக்கப் பட்டு, பெயர் பெற்றுள் ளது. சாம்சங் கேலக் ஸியில், 7 மணி நேரம் ஹை டெபனிஷன் வீடியோ பார்க்க லாம் என விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது. சாதாரண பணிக ள் எனில், 10 மணிநேரம் பயன்படுத்தலாம் என்றும் சொல்ல ப்படுகிறது.

ஆனால், விண்டோஸ் 7 இயக்கம் கொண்டுள்ள டேப்ளட் பிசிக்கள், இந்த விஷயத்தில் ஏமாற்றம் த ருகின்றன. ஆப்பிள் மற்று ம் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் உள்ள டேப்ளட் பிசிக்கள் நிறைவைத் தருகின்றன.

4.3ஜி அல்லதுவை–பி மட்டு மா?

சில டேப்ளட் பிசிக்கள் 3ஜி அல்லது வை–பி நெட்வொ ர்க் இணைப்பு என ஏதேனு ம் ஒன்றையே தருகின்றன. இந்தியாவில் அறிமுகமா கும்போது, இதில் ஒருதெளிவு ஏற்பட்டு, இரண்டும் கிடைக் கும் என எதிர்பார்க்கலாம்.

5. சிஸ்டம்:

ஆண்ட்ராய்ட் போல ஓப்ப ன் சிஸ்டம் அல்லது விண் டோஸ் 7 போல குளோஸ் டு சிஸ்டம் எனத் தற்போது சாய்ஸ் உள்ளது. ஆண்ட் ராய்ட் சிஸ்டம் எனில், அது கொண்டுள்ள டேப்ள ட் பிசியில் சில வரைய றைகள் உள்ளன. விண்டோஸ் சிஸ்டம் கொண்டுள்ள டேப் ளட் பிசியில், இந்த வரையறைகள் இல்லை. எனவே, தே வைகளின் அடிப்படையில் தா ன் இவற்றைத் தேர்ந்தெடுக்க முடியும்.

6.உள்ளீடு வழிகள்:

ஐ–பேட் சாதனம் கொண்டுள்ள , ஆன்ஸ்கிரீன் கீ போர்ட், பெ ரிய அளவில் டாகுமெண்ட்க ளை உருவாக்க ஒரு தடையா கவே கருதப்படுகிறது. எனவே வயர்டு கீ போர்ட் அல்லது இணைப்பின்றி செயல்படும் புளு டூத் கீ போர்டு பயன்படுத்தி யாக வேண்டும். ஆனால் ஆண்ட் ராய்ட் மற்றும் விண் டோஸ் இயக்க டேப்ள ட் பிசிக்களில், யு .எஸ் . பி. போர்ட் கொடுக்க ப்பட்டிருப்பதால், அதன் இணைப்பில் கீ போர்டு களைக் கொண்டு, வி ரைவாகச்செயல்பட லா ம்.

7. விலை:

மிக முக்கியமான ஒரு விஷயம் விலையே. இந்திய வாடிக் கையாளர்களில் பெரும்பா லானோர் விலையின் அடி ப்படை யிலேயே எந்த சாத னத்தினையும் வாங்கிப் பய ன்படுத்த முன்வருவார்கள் என்பது ஏற்கனவே மொபை ல் போன் மற்றும் சில சாத னங்களில் நிரூபணம் ஆகி உள்ளது. எனவே, இந்தியாவில் டேப்ளட்பிசிக்கள் விற்பனை க்கு நேரடியாக அறிமுகம் ஆகும்போது இந்த அம்சமும் கணக்கில் எடுத்துக் கொள் ளப்படும் என எதிர்பார்க்க லாம்.

8.சிரிங்க, கேமரா முன்னால இருக்கு:

ஐ–பேட் சாதனம் குறித்துக் க ருத்து தெரிவிக்கையில், அதில் கேமரா இல்லாதது பலமாகப் பேசப்பட்டது. பொதுவான போட்டோ எடுக்கும் வகையிலான கேமரா அந்த சாதனத்திற்குள் இல்லை. என வே போட்டோ எடுக்க வேண்டும் அல்லது வீடியோ கான்பர ன்சிங் செயல்பாட்டினை மேற் கொள்ள வேண்டும் எனில், ஆப்பிள் ஐ–பேட் உகந்தது அல் ல என்ற கருத்தினை அனை வரும் மேற்கொண்டுள்ளனர். மற்ற பெரும்பாலான நிறுவன ங்களின் படைப்புகள் கேமரா வினைக் கொண் டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

9. கூடுதல் அப்ளிகேஷன் புரோகிராம்கள்:

ஸ்மார்ட் போன் ஒன்றைத் தேர்ந் தெடுக்கையில், அதில் எத் தனை அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பதிந்து இயக்கலா ம் எனவே அனைவரும் எதிர்பார்க் கின்றனர். ஆப்பிள் அப் ளிகேஷன் ஸ்டோர், ஐ–பேட் மற்றும் ஐ–போனுக்கென ஆயி ரக் கணக்கில் அப்ளிகேஷன் புரோகிராம்களைக் கொண்டுள்ள து. ஆனால் ஐ–பேட் சாதனத்திற் கான புரோகிராம்கள் என எடுத்து க் கொண்டால், அவை சற்றுக் குறைவான எண் ணிக்கையிலேயே உள்ளன. விண்டோஸ் அடிப்படையில் இயங்கும் டேப்ளட் பிசிக்களுக்கான அப்ளி கேஷன் புரோகி ராம்கள் பல வர இருப்பதாக தகவல்கள் இத னாலேயே வெளிவந்த வண்ண ம் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே, எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் டேப்ள ட் பிசிக்களை வாங்குவது என் றும் முடிவு செய் திடலாம்.

10.ஒத்திசைந்த செயல்பாடு:

ஒரு டேப்ளட் பிசி தனியே மட்டும் இயங்காது. உங்களுக்கு 3 ஜி டேப்ளட் பிசி வேண்டும் என்றால், அது உங்களுக்கு அந்த சேவையைத் தரும் நிறு வனத்தின் செயல்பாட்டு டன் இணை ந்து செல்ல வேண்டும். கேலக்ஸி டே ப் போன்ற டேப்ளட் பிசி க்கள், ஜி.எஸ்.எம். மற்று ம் சி.டி.எம்.ஏ வகை இணைப்புகளு டன் இ ணைந்து செயலாற்றும் தன்மை கொண்டவையாக உள்ளன. எனவே டேப்ளட் பிசி யைத் தேர்ந்தெடுக்கையில் இதனையும் கவனத்தில் கொள் ள வேண்டும்.

இன்றைய நிலையில், நமக்கு எந்த மாதிரி டேப் ளட் பிசி வேண்டும் என ஒரு பரவலான முடிவி னை எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்தியச் சந்தையில், அதிக எண் ணிக்கையில் நிறுவனங் கள், டேப்ளட் பிசிக்களை க் கொண்டு வருகை யில், முடிவினை எடுக்க இது உதவியா க இருக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின்பதிவு அல்ல‍!

Advertisements

One Response

  1. Reblogged this on Gr8fullsoul.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: