Advertisements

தலையாய உறுப்பாக விளங்கும் நமது “தலை”யை பாதுகாப்ப‍து எப்படி?

மனித உடலின் சிகரமாகத் திகழ்கிறது தலை. மனிதனை அடையாளப்படுத்தும் முகம் தலையில் தான் உள்ளது. மனித னை இயக்கும் மூளையும் அதில்தான் உள்ளது. உடல் உறுப்புகளிலேயே தலையாய உறுப்பு மூளை. நம் உடலின் ஒவ்வோர் அசை வையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்து வது மூளை. மூளைதான் நமது உயிர். மூளையின் செயல்பாடு நின்ற பிறகு மற்ற உறுப்புகள் செயல்பட்டாலும் பலனில்லை. இத்த னை முக்கியத்துவம் வாய்ந்த மூளையைப் பாதுகாக்கும் தலையாயப் பணியைச் செய்வது தலை யில் இருக்கும் மண்டை ஓடுதான். 

தலையின் முன்பகுதியில் முக எலும்புகளும் அதன் மேற்புற மும் பின்புறமும் ‘கிரேனியம்’ என்று சொல்லப் படும் கபால மும் உள்ளன. தலை எலும்புகள் மொத்தம் 22. இவற்றில் முக எலும்புகள் 14. இந்தத் தலை எலும்புகளைத் தாங்குபவை கழு த்து எலும்புகள். உடலின் மற்ற பாகங்களின் தோலோடு ஒப்பிடும் போது, தலையில் இருக்கும் தோல் சிறிது வித்தியா சமானது. ‘ஸ்கால்ப்’ என்று சொல்லப்படும் தலைத் தோலின் கீழ்தசை எதுவும் இல் லை. இதனால் தலையில் லேசாக அடிபட்டால்கூட காயம் பலமாக ஏற்பட்டுவிடலாம். தலையி ல் ஆறு ரத்தக்குழாய்கள் உள்ளன. இதனால் தலையில் அடிபடும்போது அதிக அளவில் ரத்தம் இழப்பதற்கு வாய்ப்புண்டு.

தலைக்கு ஆபத்து வருவது பெரும்பா லும் சாலை வாகன விபத்துகளால் தான். அடுத்து, நாம் விளையாடும் போது, நடை தவறி கீழே தரையில் விழும்போது, அடிதடி சண்டை போடு ம் போது, துப்பாக்கிச்சூடு என்று பல வழிகளில் தலையில் காயங்கள் உண்டாகின்றன. தலையில் காயம் ஏற்படும்போது தோல் கிழி யும். கபால எலும்பு உடையும். கபால எலும்புக்கும் மூளைக் கும் நடுவில் இருக்கும் மூளை உறையி ல் ரத்தம் உறைந்து போகும். மூளை அதிர்ந்து போகும். மூளைத் திசுக்களும் கிழி படலாம். மூளைக்கு ரத்தம் கொண் டு செல்லும் ரத்தக்குழாய் கள் வெடித்து மூளையின் உள்ளேயே ரத்தம் உறைய லாம். கண்பார்வை பறிபோகலாம். காதுச் சவ்வு கிழிந்து காது கேட்காமல் போகலாம். இப்படிப் பல ஆபத்துகள் நெருங்கலாம். ஆகவே, தலைக்காயத் தை உடனடியாகக் கவனிக்க வேண்டும்.தலைக்காயங்கள் இர ண்டு வகைப்படும். 1. மூடிய காயங்கள். 2. திறந்த காயங்கள். மூடிய காயங்க ளில் ரத்த ஒழுக்கு இருக்காது. தோலுக்கு அடியில் ரத்தம் உறைந்து வீங்கியிருக்கும். இதனை ‘ரத்தக் கட்டு’ என்று சொல் வார்கள். திறந்த காயங்களில் ரத்தம் வெளியேறும். தோல் மட்டும் சிதை ந்திருந்தால் ‘சிராய்ப்பு’ என்கிறோம். இதில் ரத்தம் லேசாகவே கசியும். தோல் கிழிந்திருந்தால் அது ‘வெட்டு க்காயம்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் ரத்தம் குபுகுபுவென்று நிறை ய வெளியேறும்.

பல நேரங்களில் பார்ப்பதற்குத் தலைக்காயம் லேசாக இருக் கும். ஆனால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். கடு மையான தலைக்காயத்தின் அறிகுறிகள் இவை: காயம் பட்ட தலையில் குழி இருக்கும் அல்லது வீக்கம் இருக்கும். காதுக்கு ப் பின்புறம் வீக்கம் காணப்படும். காது மற்றும் மூக்கிலிருந்து ரத்தம் வெளி யேறலாம். அல்லது நிறமற்ற திரவம் கசியலாம். கண்ணில் ரத்தக்கசிவு காணப்படலாம். முகம் வீங்கலாம். கிறுகிறுப்பு வரும். வாந்தி வரக்கூடும். சுய நினைவில் மாற்றம் இருக்க லாம். சிலர் பிரமை பிடித்ததுபோல இருப்பார்கள். சுவாசிக்கச் சிரமப்படுவார்கள். கபால எலும்பு முறிந்திருந்தால் அல் லது மூளைத் திசுக்கள் பாதிக் கப்பட்டிரு ந்தால், காது மற் றும் மூக்கு வழியாக ரத்தம் வடியும். கண்கள் முன்பக்கமா கத் தள்ளப்படலாம். காதுக்குப் பின்புறம் கடுமை யான வீக்கம் உண்டாகும். அடிபட்டவருக்கு மயக்கம் உண்டாகும். வலிப்பு வரலாம். சமயங்களில் தலை யில் அடிபடும்போது மூளை மட் டும் கபாலத்துக்குள் அதிர்ந்து அசைந்திருக்கும். இதனாலும் மயக்கம் வரலாம். தலைக் காயம் எதுவாக இருந்தாலும் உடனடி யாக முதலுதவி செய்யப்பட வேண்டும். பஞ்சை ஈரப்படுத்திக் கொண்டு அல்லது சுத்தமான பரு த்தித் துணி கொண்டு காயத்தைச் சுத்தப்படுத்த வேண்டும் .டெட்டா ல் இருந்தால் அதைக் கொண்டும் சுத்தப்படுத்தலாம். ‘ஆன்டி பயாடி க்’ களிம்பு கைவசமிருந் தால், அதைக் காயத்தில் தடவி , சுத்த மான துணியால் தலையைச்சுற்றி அழுத்தமாகக்கட்டுப்போட வேண்டும். தலைக்காயத்திலிரு ந்து வெளியேறும் ரத்த க்கசிவை நிறுத்து வதுதான் முதலுதவியி ன் முக்கிய நோக்கம் என்பதால் பஞ்சு, துணி, பாண்டேஜ் எதுவும் கிடைக்காத போது, முதலுதவி செய்பவர் தன் உள்ளங் கையால் தலைக் காயத்தின்மீது சுமார் 10 நிமிடங்களுக்கு அழுத்தமா கப் பிடித்துக் கொண்டாலே ரத்தம் கசிவது நின்று விடும். அதற்குள் துணி, கைக்குட்டை என்று ஏதாவது வைத்துக் கட்டுப் போட் டு விடலாம். காயத்திலிருந்து ரத்தம் கடுமையாக வெளியேறி னால் கழுத்தைச் சுற்றி தாடை யோடு ஒரு கட்டுப் போடலாம்.

கபால எலும்பில் முறிவு உள்ளது என் பது தெரிந்தால் தலை யையும் கழுத் தையும் அசைக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தலையில் காயம் பட்டவருக்குக் கழுத்து எலும்பிலும் முறிவு உண்டாகியிருக்கலாம். அப் போது கழுத்தை அசைத்தால் கழுத்தி ல் எலும்பு முறிவு அதிகப்பட்டுவிடும். அல்லது கபாலத்தின் உள்ளே ஏற் கெனவே ஏற்பட்டுள்ள ரத்த க்கசிவு அதிகப்பட்டுவிடும். இதை த் தவிர்க்க தலையில் அடி பட்டவரை சமதளத்தில் மல்லாந்து படுக்க வைக்க வேண்டும். அந்த நபர் சுவாசிக்கச் சிரமப்பட்டாலோ ,சுயநினைவை இழந்திருந்தாலோ செயற்கை சுவாசம் மற்றும் இதய மசாஜ் தரப்பட வேண்டும். மருத் துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். எந்த ஒரு விபத்து நடந் தாலும் முதல் ஒரு மணி நேரம் என்பதை ‘பொன்னான நேரம்’ என்கிறோம். அதற்குள் அவருக் கு மருத்துவ சிகிச்சை கிடைத்துவிட்டால் உயிருக்கு ஆபத்து வருவது குறையும். ஆகவே, அடிபட்டவ ரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அல்லது ஒரு வாகனம் மூலம் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். பாதுகாப் பான பயணம்தான் தலைக்குப் பாதுகாப்பு தரும். குறிப்பாக, இரு சக்கரவாகனத் தில் செல்லும்போது தலைக்கவசம் அணிய வேண்டியது அவ சியம். வாகனத்தின் பின்புறம் அமர்ந்து செல்பவரும் தலைக் கவசம் அணிய வேண்டும்.

சாலை விதிகளை மீறக்கூடாது. மித வேகம் நல்லது. அதி வேகம் ஆபத்தானது. செல்போனில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டக்கூடா து. கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும்போது பாதுகாப்பு ‘சீட் பெல்ட்’ அணிந்து கொள்ள வேண்டும். பயணம் செய்யும் வாகனங்களில் குழந்தைகளை அமரச் செய்ய வே ண்டும்; நிற்க வைக்கக்கூடாது. பெண்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது துப்பட்டாவை முடிச்சுப் போட்டுக் கொள்ள வே ண்டும். சைக்கிள் பயணம் என்றா ல், அதன் சுழலும் செயின் முழுவதும் மூடும்படியான உலோ கக் கவசமுள்ள சைக்கி ளில் பயணிப்பது நல்லது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: