Advertisements

தெருநாய் கடித்துவிட்டால் உடனே செய்ய‍வேண்டிய முதலுதவி – மருத்துவர் கு.கணேசன்

தெருநாய் கடித்தால், ‘ரேபீஸ்’ என்னு ம் ‘வெறிநோய்’ வரும் என்று பலருக் கும்தெரியும். இது உயிருக்கே உலை வைக்கும் ஆபத்து நிறைந்தது. உலகில் வெறிநாய்க்கடியால் இறப்ப வர்களில் 80 சதவீதம் பேர் இந்திய ர்கள் என்று கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. அதேநேரத்தில் நாம் சற்று க்கவனமாக இருந்தால் இந்நோயை த் தடுப்பதும் எளிது.

வெறிநோய் எப்படி வருகிறது?

‘ரேபீஸ்’ எனும் கொடிய வைரஸ் கிருமிகள் காரணமாக இந்த நோய் வருகிறது. இந்த வைரஸ்கள் தெருநாயின் உமிழ்நீரில் வசி க்கும். வெறி நோயுள்ள தெருநாய்கள் மனி தர்களைக் கடிக்கும்போது, கடிபட்ட நபரு க்கு வெறிநோய் வந்துவிடும்.

அறிகுறிகள் என்ன?

இந்த நோயாளிகள் தண்ணீரைக் கண்டாலே பயந்து அலறுவார்கள். இது தான் இந்த நோய்க்கு முக்கிய அறிகுறி. இவர்களுக்குத் தொண்டைச் சதைகள் சுருங்கிவிடுவதால் தண்ணீர் குடிக்கவோ, உணவு சாப்பிட வோ முடியாது. இன்னும் சொல்லப்போனால், இவர்கள் தண்ணீரை ப் பார்த்தாலே தொண்டைச் சதைகள் இறு கி, சுவாசத்தை நிறுத்தி விடும். இதனால் உயிர் போவது போன்ற உணர்வு உண்டா கும். இதற்குப் பயந் துகொண்டு தண்ணீர் குடிக்க மாட்டார்கள். இதற்குத் ‘தண்ணீர் பயம்’ என்று பெயர். சுவாசிக்க சிரமப்படு வார்கள். வலிப்பு வரும். அதைத் தொடர் ந்து உயிருக்கு ஆபத்து வரும்.

என்ன செய்ய வேண்டும்?

நாய் கடித்தவுடன் கடிபட்ட இடத்தை உட னே சோப்பு நீரால் பலமுறை நன்கு கழுவ வேண்டும்.

வேகமாக விழுகிற குழாய் த்தண்ணீரில் காயத்தைக் கழுவுவது இன்னும் நல்லது.

காயம் ஆழமாக இருந்தால் காயத்தை நன்கு விலக்கிச் சுத்தப்படுத்த வே ண்டும்.

காயத்தின் மீது டெட்டால் அல்லது ஸ்பிரிட் தடவ வேண்டும்.

தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று, முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

என்ன செய்யக்கூடாது?

காயத்துக்கு கட்டுப் போடக்கூடாது. சூரிய ஒளியில் இந்த வைரஸ் கிருமிகள் இறந்து விடும் என்பதால் காயத்தை மூடாம ல் வைத்திருப்பது நல்லது. திறந்த காயமென் றாலும், ஆழமா ன காயமென்றாலும் தையல் போட் டு மூடக்கூடாது.

நாய் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, சந்தனம், சாம்பல், பச்சிலைச்சாறு போன்றவற்றைத் தடவக் கூடாது. அப்படித் தடவினால் கிருமிக ள் உட லைவிட்டு வெளியேறுவது தடைபடு ம்.

தடுப்பூசி முக்கியம்!

நாய் கடித்துவிட்டால் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சாதாரண நாய் கடித்தால் ஒரு டெட்டனஸ் தடுப்பூசி போதும். கடித்தது வெறிநா யாக இருந்தால், ‘வீரோ ரோப்’ எனும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். கடித் த நாளில் முதல் ஊசியும், அதன் பிறகு 3, 7, 14, 28-ம் நாள்களில் என்று மொத்தம் 5 முறைத் தடுப்பூசி போட்டுக் கொ ள்ள வேண்டும். திறந்த காயமென்றால் காய த்தைச் சுற்றிலும் நாய் கடித்த இடத்தைச் சுற்றிலும் ‘இமுனோகுளாபுலின்’ தடுப்பூசி யைப் போட்டுக் கொள்ள வேண்டும். அப் போதுதான் நாய் கடித்த நபருக்கு வெறிநோ யிலிருந்து முழுவதுமாக விடுதலை கிடைக் கும். இந்தத் தடுப்பூசி இலவசமாக அரசு மருத்துவமனைகளில் கிடைக்கிறது.

நாய்க்குத் தடுப்பூசி

வீட்டில் நாய் வளர்ப்போர் நாய்க்குட் டிக்கு இரண்டு மாதம் முடிந்ததும் ஒரு தடுப்பூசி, மூன்று மாதம் முடிந் ததும் ஒரு தடுப்பூசி போட்டுவிட வேண்டும். அதன்பிறகு ஆண்டுக்கு ஒருமுறை இதே தடுப்பூசியைப் போ டவேண்டும். முக்கியமாக, வீட்டு நாயைத் தெருநாயோடு பழக விட க் கூடாது. அப்போதுதான் வீட்டு நாய்க்கு வெறிநோய் வராது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல‍
Advertisements

One Response

  1. very interesting

    On 10/18/13, “வி தை2வி ரு ட் ச ம் (அ-ஃ)- v i d h a i 2 v i r

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: