Advertisements

கருவில் இருக்கும் குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை – மருத்துவர்கள் சாதனை

அமெரிக்காவில் உள்ள‍ லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் வளர்ந்த 25 வார சிசுவுக்கு இருதயத்தில் இரத்தக்குழாயில் அடைப்பு இருந்தது தெரிந்தது. இதனால் அக் குழந் தைக்கு பிறந்த பிறகு மூச்சுதிணறல் உள்ளிட்ட இருதய நோயினால் அவதிப்படக் கூடிய சூழ்நிலை உருவாவதோடு, குழந்தை யின் உயிருக் கே ஆபத்தாக முடியும் நிலை ஏற்பட்டும் என்பதால், தாயின் வயிற்றுக் குள் கருப்பையில் வளரும் போதே குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

கருவில் இருக்கும் குழந்தைக்கு, மயிரிழை அடர்த்தி உள்ள சிறிய வயர் (wire ), 7 செ.மீ அளவிலான மெல்லிய ஊசி போன்றவற்றி ன் மூலம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ள ப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த அரும்பெரும் சாதனை மருத்துவ உலகில் ஓர் மைல் கல் எனலாம். இந்த அறுவை சிகிச்சை செய்யப் பட்ட‍தினால், குழந்தை பிறந்த பின்பு அதற்கு எந்தவிதமான மூச்சுத் திணறலோ அல்ல‍து இத யம் சம்பந்தமான நோய்களோ ஏற்படாது என்று மருத்துவர்கள் நம்பிக் கையுடன் தெரிவித்துள்ள‍னர். இந்த அறுவை சிகிச்சை அந்த கர்ப்பிணி பெண் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கையில், தனது வயிற்றுக்குள் வளரும் தனது குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு ஆனந்த கண்ணீரு டன் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: