Advertisements

இராமாயணத்தில் வாலிக்கும் சுக்கீரவன‌னுக்கும் இடையே பகைமை ஏற்பட காரணம் என்ன‍?

இராமாயணத்தில் வாலி சுக்ரீவன் என்ற வாணர சகோதரர்களிடையே ஏற்பட்ட‍ பகைக்கு என்ன‍ காரணம் என்பதை விதை2விருட்சம் வாச கர்களுக்காக இந்த விதை2 விருட்சம் இணையத்தில் பகிர்கிறேன்

சூரியனின் அருளால், அருணி என்னும் குரங்கின அரசிக்கு பிறந் தவன் தான் சுக்ரீவன். இவனது அண்ண‍ன் வாலியோ இந்திரனின் அருளால் தோன்றி யவனாவான். இந்த சகோதரர்கள் இருவரில் வாலி, வானர குல அரசனாகவும், சுக்ரீவன் இளவரசனாகவும் இருந்து, கிஷ்கிந்தை என்னும் நாட் டை ஒற்றுமையுடன் ஆண்டு வந்தன ர். விதி இந்த வானர சகோதரர் களின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித் த‍து. ஆம். ஒரு நாள் வானர குலத்தின் ஜென்ம பகைவனான ஒரு அரக்கனு டன் வாலி யுத்தம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்ட‍து.

அந்தப்போரில் அந்த அரக்கனை வாலி போரில் வென்றான் இருந்தும், அரக்கன் தனது உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்தான். அவனை விடாமல் துரத்திக்கொண்டு வாலியும் பின் தொடர்ந்து ஓடினான். அவனுக்குத் துணை யாக சுக்ரீவனும் பின் ஓடினான். அரக்கன் ஒரு பயங்கரமான பாதாள குகையி னுள் புகுந்து கொண்டான். இச் சமயத்தில் வாலி தனது இளைய சகோதரனான சுக்ரீவனிடம் “நான் குகைக்குள்ளே சென்று அரக்கனை கொன்று விட்டு வருகிறேன். அது வரை நீயும் பிற வானர சேனைகளும் இந்தக் குகையின் வாயிலிலேயே காத்துக் கொண்டி ருங்கள்” என்று கூறி குகைக்கு ள்ளே சென்று மறைந்தான்.

ஒருநாள் இரண்டு நாட்கள் அல்ல‍ பல மாதங் களாக சுக்ரீவனும் அவனது வானர சேனைக ளும், குகைக்குள் சென்ற வாலி திரும்பி வரு வான் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனர். திடீரென ஒருநாள் அக் குகை வாயிலில் இருந்து ரத்தப்பெருக்கு ஆறாக ஓடியது. அத்துடன் அந்த‌ அரக்கர்களின் கூக்குரலும் பயங்கர சத்தமும் கேட்டுக் கொண் டே இருந்த்து. இதனால் . சுக்ரீவன், தனது அண்ண‍ன் வாலியைத் தேடி குகைக்குள் செல்ல முயற்சித்த‍ போது, அங்கிருந்த அனுமனும் வானர சேனை களும் அவனைத் தடுத்து நிறுத்தினர்.

வாலி இத்தனை காலம் உயிரோடு இருப் பானா என்பது சந்தேகமே!” “அரசனில்லாத நாடு அழிந்து போகும். என்று கூறி சுக்ரீவ னை முடி சூடு ம்படி சம்மதிக்கச் செய்தனர். பின்பு குகையின் வாயிலை ஒரு பெரும் பாறையால் மூடிவிட்டு அனைவரும் கிஷ் கிந்தையை திரும்பினர். .

காலங்கள் ஓடியது. குகைக்குள் சென்ற‌ வாலி, அந்த அரக்க‍னை கொன்று விட்டு, அக் குகையின் வாயிலருகே வந்து ‘சுக்ரீவா!’ என்று பல முறை அழைத்து ப்பார்த்தான். ஆனால் எந்தவிதமான பதிலு ம் வரவில்லை அதற்கு பதில் அமைதி நிலவியதால் மிகுந்த சினத்துடன் அக்குகையின் வாயி லை மூடிக்கொண்டிருந்த பாறையை உதைத்து த் தள்ளி விட்டு வெளி யே வந்த வாலி, அதே கோபத்துடன் கிஷ்கிந்தைக்குச் சென்ற போது சுக்ரீவன் அரசாளும் செய்தி அறிந் தான். சுக்ரீவன் நடந்த வற்றை, தனது அண்ண‍ ன் வாலியிடம் நயமாக எடுத்துரைத்தும் வாலி யின் கோவ ம் அடங்க வில்லை. நான் உயிருடன் இருக்கும்போது நீ எப்ப‍டி முடிசூடுவாய் என்று கர்ஜித்த‍படியே சுக்ரீவனை அடித் து. உதைத்தான். அவனி டமிருந்து தப்பிய சுக்ரீவனும், அனுமன் உட்பட சில வானரங்களும், வாலி வரவே முடியாத ரிஷ்யமுக மலையை அடைந்து அங்கேயே பதுங்கி வாழலாயினர். ஆனால் வாலியோ தனது தம்பி சுக்ரீவனின் மனைவி ருமையை க் கவர்ந்து சென்று தனது அந்தப் புறத்தில் கட்டி வைத் தான்.

பின்புதான் இராம லஷ்மனனை, சுக்ரீவன் சந்திக்க‍ நேர்கிறது. அதனைத் தொடர்ந்து வாலியை மறைந்திருந்து இராமர் அம்பெய்தி வாலியை கொன்று சூக்ரீவனுக்கு முடிசூட்டு கிறார். இதற்கு கைமாறாக சுக்ரீவன், ராமரின் மனைவி சீதையை, இராவணனிடம் இருந்து மீட்க, தானும் தனது வானர சேனைகளுடன் ராமருடன் புறப்பட்டனர்.

– விதை2விருட்சம்

Advertisements

One Response

  1. Valli was defeated by Sri Raman indirectly. Its a great black remark against Raman.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: