Advertisements

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரம்தான்

கால வெள்ளத்தில் எவ்வளவு பெரிய விஷயங்களும் காணாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான நிகழ்கால சாட்சி யமாக நின்று கொண்டிருக்கிற து ராயபுரம் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் கதை, மிக மிக சுவாரஸ்ய மானது. ஆனால் இந்த பகுதியைச் சேர் ந்த பலருக்கேகூட இன்று அது தெரியவில்லை என்பதுதான் உச்ச கட்ட சோகம்.

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரம்தான். இங்கி ருந்துதான் தென்னிந்தியாவின் முதல் ரயில் தனது பயணத்தைத் தொடங்கியது. ஸ்டீபன்சன் நீராவி என்ஜினை கண்டுபிடித்த 15 ஆண்டு களுக்குப் பிறகு, தென்னிந்தியாவில் ரயில்களை இயக்குவது குறித்து லண் டனில் விவாதிக்கப்பட்டது. இதனை யடுத்து 1845 ஆம் ஆண்டு ‘மெட்ராஸ் ரயில்வே கம்பெனி’ தொடங்கப்ப ட்டது.

ஆனால் அவர்கள் திட்டமிட்டு வேலையைத் தொடங்குவதற்கு முன்னர், 1849ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘தி கிரேட் இந்தியா பெனின்சுலா கம்பெனி’ இந்தியாவி ன் முதல் இருப்புப் பாதையை அமைத்துவிட்டது. 21 மைல் நீளத்தி ற்கு அமைக்கப்பட்ட இந்த இருப்புப் பாதையில் பம்பாயின் போரி பந்தரி ல் (Bori Bunder) இருந்துதானே வரை, இந்தியாவின் முதல் ரயில் 1853, ஏப்ரல் 16ந் தேதி இயக்கப்பட் டது.

இதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் இருப்புப் பாதை அமை க்கும் பணியை மெட்ராஸ் ரயில் வே கம்பெனி தொடங்கி யது. அத ற்காக அது தேர்ந்தெடுத்த இடம் தான் ராயபுரம். கிழக்கிந்திய கம் பெனிக்காரர்கள் வசித்து வந்த புனித ஜார்ஜ் கோட்டைக்கு மிக அருகில் இருந்ததால், இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. பணிகள் விறுவிறுப்பாக மேற் கொள்ளப்பட்டு, விசாலமான அறைகள், உயரமான தூண்கள், அழகான முகப்பு என பிரம்மாண்டமான ராயபுரம் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.

அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் ஹாரிஸ் பிரபு 1856, ஜூன் 28ந் தேதி இதனைத் திறந்து வைத் தார். இதனை அடுத்து, ஜூலை 1ந் தேதி தென்னிந்தியாவின் முதல் ரயில் இங்கிருந்து புறப் பட்டது. ஆற்காடு நவாப்பின் தலைமை இடமாக இருந்த ஆற் காடு வரை இந்த ரயில் இயக்க ப்பட்டது. இதற்கான ரயில் பெட்டி களை அக்காலத்தில் புகழ்பெற்ற சிம்சன் கம்பெனி தயாரித்திரு ந்தது. ஆளு நர் ஹாரிசும், சுமார் 300 ஐரோப்பியர்களும் இந்த முதல் ரயிலில் பயணப்பட்டனர். ஆம்பூர் சென்றடைந்த ரயிலுக்கு துப்பாக்கி குண் டுகளும், பேண்டு வாத்தியங்களும் முழங்க உற் சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. இந்த ரயில் புறப் பட்ட சிறிது நேர த்தில் மற்றொ ரு ரயில் ராய புரத்தில் இருந்து திரு வள்ளூர் வரை இயக்கப்பட் டது.

இந்த நிகழ்ச்சி பற்றி லண்டன் பத்திரிகையான The Illustrated London News விரிவாக செய்தி வெளியிட்டிருந்த து. வழிநெடுகி லும் இந்த ரயில்களை ஏராளமானோர் அச்சம் கல ந்த ஆச்சர்யத் தோடு பார்த்ததாக அந்த செய்தி தெரிவிக்கிறது. வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும், மாடு மேய்த் துக் கொண்டிருந்த வர்களும் ஒரு மிகப் பெரிய இரும்பு வாகனம் தங்களை நோக்கி விரைந்து வருவதைப் பார்த்து மிரண்டு ஓடி னார்களாம். சில இடங்களில் மக்கள் விழிகள் விரிய பலத்த ஆர வாரத்தோடு இந்த ரயிலை ரசித்துப் பார்த்திருக்கிறார்கள். இப்படி அன்றைய மெட்ரா ஸ்வாசிகளுக்கு மறக்க முடியாத ஒரு அனுப வத்தை கொடுத்தன ராயபுரத்தில் இருந்து புறப்பட்ட முதல் இரண் டு ரயில்கள்.

முதல் ரயில் ஆம்பூர் சென்றடைந்ததும், அங்கு ஒரு சிறிய விழா நடத்தப்பட்டிருக்கிறது. அதில் பேசிய ஆளுநர் ஹாரிஸ் பிரபு, மெட்ராஸ் ரயில்வே கம்பெனி யையும், அதன் மேலாளர் ஜென்கின் சையும் (Major Jenkins) வெகுவாகப் பாராட்டி இருக்கிறார். ஒரு மைல் இருப்புப் பாதை அமைக்க 5,500 பவுண்டு கள் செலவானதா கவும், அது ஒரு நல்ல முதலீடுதான் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டி ருக்கிறார்.

இப்படி கோலாகலமாக தொடங்கப் பட்ட ராயபுரம் ரயில் நிலைய ம், அடுத்த 17 ஆண்டுகளுக்கு மெட் ராஸ் மாநகரின் ஒரே ரயில் நிலைய மாக கோலோச்சியது. 1873இல் இதற்கு போட்டிக்கு வந்தது மெட் ராஸ் சென்ட்ரல் ரயில் நிலையம். பின்னர் வடக்கு நோக்கி செல்லும் ரயில்கள் சென்ட்ரலில் இரு ந்தும், தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் ராயபுரத்தில் இருந்தும் புறப்பட்டுச் செல்லும் என சொத்து பிரிக்கப்பட்டது. இதனிடையே சென்னை துறைமுகம் வேகமாக வளர்ச்சி அடைந்ததால், துறை முகத்தின் சரக்குப் போக்குவர த்தும் ராயபுரம் ரயில்நிலையம் மூலம் நடைபெறத் தொடங் கியது. இதன் விளைவு, புதிதாக முளைத்தது எழும்பூர் ரயில் நிலையம். பின்னர் தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் எழும்பூரு க்கு இடம்பெயர்ந்தன.

ராயபுரம் ரயில் நிலையம் மெல்ல தனது செல்வாக்கை இழக்கத் தொடங்கியது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ரயில் நிலையம், இன்று புதர்கள் மண்டி பொட்டல்வெளி போல காட்சிய ளிக்கிறது. சென்னை கடற்கரை மார்க்கத்தில் இயக்கப்படும் வெகு சில ரயில்கள் மட்டுமே இங்கு நின்று செல்கின்றன. அப்படி ஒரு ரயிலில் அமர்ந்துகொண்டு ஜன்னல் வழியாக, பொலிவிழ ந்து கிடக்கும் இந்த ரயில் நிலையத்தைப் பார்க்கும்போது, நம்மை யும் அறியாமல் கண்கள் பனிக்கின்றன.

Howrah Railway Station

* இந்தியாவில் ஹவுரா ரயில் நிலையத்திற்கு அடுத்த படியாக அதிக இடவசதி இருக்கும் ஒரே ரயில் நிலையம் ராயபுரம்தான்.

* இந்த ரயில் நிலையம் கடந்த 2005ஆம் ஆண்டு புனரமைக்கப் பட்டது.

* சென்ட்ரல், எழும்பூரைத் தொடர்ந்து ராயபுரத்தை மூன்றாவது ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் தற் போது வலுத்து வருகின்றன.

நன்றி – தினத்தந்தி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: