Advertisements

ஆவிகள் இல்லையடி பாப்பா! ஆவிகள் இல்லையடி பாப்பா!

ஆவிகள் இல்லையடி பாப்பா
(விதை2விருட்சம் சத்தியமூர்த்தி)

2013 (மார்ச்) மாதம் வெளி வந்துள்ள‍ ஸ்ரீ முருக விஜயம் என்ற மாத இதழில் உங்கள் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி (நான்) எழுதிய ஆவிகள் இல்லையடி பாப்பா என்ற கட்டுரை (இதழில் பக்க‍ எண். 18-ல்) வெளிவந்துள்ளது. நான் எழுதிய அந்த கட்டுரையை விதை2 விருட்சம் வாசகர்களுக்காக, விதை2விருட்சம் இணையத்தில் வெளியிட்டுள்ளேன். படித்து பயமின்றி வாழ்ந்திட விதை2விருட்சம் கேட்டுக்கொள்கிறது.

மனிதன் இறந்த பின் அவனுடைய உடலிலிருந்து பிரிந்த உயிருக்கு, ஆவி, ஆன்மா, ஆத்மா, பேய், பிசாசு, பூதம், காத்து, கறுப்பு, காட்டேறி, சைத்தான், சாத்தான் என்று ஏகப்ட்ட‍ பெயர்களில் குறிப்பிடுவது உண்டு

மேலே ஆவிகளுக்கு இருக்கும் பெயர்களில் ஆவி என்ற ஒரு வார்த்தையை எடுத்துக்கொள்வோம். இந்த ஆவிகளுக்கு என்றே தனிப்பட்ட‍ உலகம் உண்டு என்றும் அதற்கு ஆவிகள் உலகம் என்றும்  ஆவிகளை நம்புபவ ர்கள் பெயரிட்டு அழைத்து வருகிறார்கள் இங்குதான் ஆவிகள் ஒன்றாக கூடி வாழ்ந்து  வருவதாகவும் உலக மக்கள் அனைவரையும் பயமுறுத்தி, ஒருவித மூட நம்பிக்கையையும் பரப்பி வருகின்றனர்.

ஒரு மனிதன் உயிருடன் இருக்கும்போது அவன் நன்மைகளையும் பிறரு க்கு உதவிகளையும் செய்து கருணை உள்ள‍த்தோ டும், நல்ல‍வனாக வாழ்ந்திருந்தால், அந்த மனிதனி ன் ஆவி சொர்க்க‍த்திற்கு போகும் என்றும் அந்த மனிதன், பிறரை துன்புறுத்தியும், உதவி கேட்டு வந் தவர்களுக்கு உதவாமல் அவர்களை உதாசீனப்படு த்தியும், தீமைகளையே செய்திருந்தால், அந்த மனிதனின் ஆவி, நரகத்திற்கு சென்று, அங்கே அவ ன் செய்த கொடுமைகளுக்கு ஏற்ப, தண்டனையும் கிடைக்க ப்பதாகவும் சொர்கத்தில் சுகத்தையும், நரகத்தில் தனக்கு கிடைக்கும் கொடூர தண்ட னைகளை ஆவிகள் எந்தவிதமான எதிர்ப்பு மின்றி  ஏற்றுக் கொள்வ தாகவும் மக்க‍ளிடம் ஒரு நம்பிக்கை உண்டு.

ஒரு மனிதன் தனக்குரிய ஆயுட்காலம் முடிவதற்குள் தற்கொலை, விபத் துக்கள், கொலை, நோய்கள் மூலம் மரண மடைந்தவர்கள் அதாவது அற்ப ஆயுளுடன் பாதியிலேயே இறந்து போனவர்களு டைய ஆவி,  பேய், பிசாசுகளாக உலவுகின்றன என் கிற நம்பிக்கை ஆவிகளை இருப்ப‍தாகச் சொல்லும் மக்க‍ளிடம் இருந்து வருகின்றன•

அதாவது ஆவி என்பது ஒரு மனிதன் தனது இறப்பிற் கு பின்பு அவனுக்கு எதோ ஒரு வகையான நிறை வேறாத ஆசைகளும், எண்ண‍ங்களும் இருந்து, அவன் வசித்த இடங்களிலேயே அலையும் ஒரு வகை நம்பிக்கை ஆவிகளை இருப்ப‍தாகச் சொல்லும் மக்க‍ளிடம் காண ப்படுகிறது.

இப்ப‍டி தனது ஆயுட்காலம் முடிவதற்குள் பாதியிலேயே இறக்க‍ நேரிட் டால் அவர்களின் இறப்புக் காலம் வரும் வரை (அந்த மனிதன் உயிரோடு இருக்கும்பட்சத்தில் அவனது ஆயுட்காலம் முடி ந்து இற்கையான மரணம் ஏற்படும் அல்லவா அக்காலம் வரை) பேயாக அலைந்து கொண்டி ருப்பார்கள் என்கிற நம்பிக்கை இந்தியாவில் பெரும்பான்மையானவர்களிடம் இருந்து வரு கிறது. இது ஒருமூடநம்பிக்கை என்றாலும் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களிடையே இது அதிக அளவில் இருக்கி றது.

ஆவிகளின் பொதுவான உடல் அமைப்பு (நம்பப்படுவது)

பொதுவாக ஆவிகளுக்கு கால்கள் கிடையாது, அதேபோன்று அதற்கு உடலும் கிடையாது. அசையும் வெள்ளை மனித வடிவத் துணி போன்றது என்று ஆவி (பேய்) உருவமாக காணப்படுவதாக பல ஆவிகள் பற்றிய ஆராய்ச்சி நூல் பலவற்றில் குறிப்பு காண ப்படுகிறது.

திரைப்படங்களில் சித்த‍ரிக்க‍ப்படும் ஆவிகள்

இறந்து போன ஒரு பெண், ஆவி உரு எடுக்கும்போது, வெள்ளை நிற புடவை கட்டிக்கொண்டு, விரித்து போட்ட‍ கூந்தலில் முழ முழமாய் மல்லிகை சரம் சூடி, அழகு பொருட்களை பயன் படுத்தி மெரூ கூட்ட‍ப் பட்ட‍ ஒப்ப‍னை அலங்காரத்துடன் மெதுவாக நடைநடந்து வரும்போது, அதுவரை தென்றலா க வீசிக்கொண்டிருந்த காற்று திடீரென்று புயலாக உரு மாறி சாலையோர மரங்கள் வேறோடு சாய்ந்து விழுவது போலவும், கட்டிடத்தில் பொருத்த‍ ப்பட்டி ருக்கும் வாசற்கதவு மற்றும் ஜன்ன‍ல் கதவுகள் படார் படார் என்று மூடித்திருப்பது போலவும், ஆங்கா ங்கே நாய்களும் நரிகளும் ஊளை இடுவதாகவும் திரைப்படத்தில் காட்சி ப் படுத்த‍ப்பட்டு ள்ள‍து. மேலும் சில திரைப்படங்களில் இது போன்ற ஆவி களுக்கு கடல் கன்னியின் உடல் அமைப்பு போன்றதொரு வடிவம் கொடுத்து அதற்கு கைகால்கள் வைத்து சித்த‍ரிக்க‍ப்பட்டுள்ள‍து.

தே இறந்து போனது ஒரு ஆணாக இருந்தால், அவ னது ஆவியை காட்டும் போது, மனித உருவத்தை அப்ப‍டியே காட்டி ஒட்டுமொத்த‍மாக‌ வித்தியாசப்ப டுத்தி, அதாவது பார்ப் போருக்கு அச்ச‍த்தை ஏற் படுத்தும் விதமாக மாற்றியிருப்ப‍ர்.

அதாவது அவனது முகத்தை கோரமாகவும் பார்ப்ப‍ தற்கு அருவருப்பாகவும், ஒப்ப‍னைசெய்து, அவனது வெண்ணிற பற்களை க்கூட அகோர பற்களாகவும், நாக்கை 1கிமீ. சென்று வரும் அளவிற்கும் காட்டுவர். மேலும் அவனது உடலில்உள்ள‍ தோள்கள் எல்லாம் சுரசுரப் பா கவும், அருவருப்பாகவும் தகுந்த ஒப்ப‍னையுடன் மாற்றி அவனது கை விரல் மற்றும் கால்விரல்களில் சுமார் 5 ஆங்குல உயரமுள்ள‍ செயற்கை நகங்களை பொருத்தி மிகவும் கொடூரமாக காட்டியிரு ப்பார்கள்.

இன்னும் சில திரைப்படங்களில் உடலே இல் லாத ஆவிகளுக்கு ஒரு படி மேலேயே போய் வெறும் எலும்புக்கூடுகளாக காட்டி நம்மை யெல்லாம் அச்சுறுத்தியிருப்பார்கள்.

ஆவிகள் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் பார்வை

ஆவி உலகம் பற்றி பல்வேறு விதமான பல்வேறு கோணங்களில் உலக நாடுகள் பலவற்றில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.. சில நேரங்களில் ஆவிகள் பற்றிய‌ ஆய்வாளர்களது கருத்துக்கள் சில ஒன்றுக்கொன்று முரண்பாடாகவும் இருக்கிறது..

உதாரணமாக ஆவி உலகம் பற்றி ஆராய்ந்த வெளிநாட்டவர் ஒருவ ருக்கு ஆவி கூறியதாகச் சொல்லப் படும் தகவல்கள்:”A, B, C, D என நான்கு பகுதிகளாக ஆவியுலம் உள்ள‍னவாம். ஏ, பி பகு தியில் இருப்பவர்கள் எல்லா உலகத்தையும் பார் க்க முடியும். என்றும் அவை நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு தங்கு தடையின்றி செல்லு மாம். இந்த ஆவிகளில் புண்ணியம் செய்த ஆவிகள். பி- பகுதியி லிருந்து ஏ- பகுதிக்குச் செல்ல முடியும். பி பகுதியில் வாழ்பவர்கள் தங்களது நல்ல எண்ணங்கள் மூலம் ஏ நிலைக்கு உயரமுடியும். இருள் பகுதியில் இருப் பவர்கள் பேய்கள், தீய ஆவிகள் என அழைக்கப் படுகின்றனர். எதிர் காலத்தைப் பற்றி சரியாக கணித்துச் சொல் கிற சக்தி ஏ, பி பகுதியில் உள்ளவர்களுக்கு உண்டு. மற்ற பகுதிகளில் உள்ளவர் கள் சொல்வது சரியாக இருக்காது. பல சமயங்களில் சில தீய ஆவிகள் வந்தும் உண்மையாக சொல்வது போல் பேசிக் குழப்பி விடு வதும் உண்டு. ஆவி உல கிலும் சட்ட திட்டங்கள் நிறைய உள்ளன. அங்கு பிறர், ஒருவருக்கு கெடுதல் செய்தால் தண்டனையும், நன்மை செய்தால் பாராட்டும் உண்டு

பரிசுத்த ஆன்மாக்கள் ஆவி உலகை கடவுளின் ஆணைப்படி, பொறுப் பேற்று வழி நடத்துகின்றன. ஆவி உலகில் வாழும் ஒவ்வொரு ஆவிக்கும் வளர்ச்சி என்பது உண்டு. குழந்தையாக இருக்கும் ஆவி, வெகு காலத்தி ற்குக் குழந்தையின் எண்ண‍ ஓட்ட‍ங்களுடனேயே இருப்ப‍தில்லை. அவற்றின் ஆர்வத்திற்கேற்ப அவைகளின் அனுபவம் வளர்ச்ச்சி பெருமாம்.  இந்த ஆவிகளுக்கு என்றே தனி யாக‌ சட்ட விதிமுறைகளும் இருக்கின்றதாக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பிராணிகள் இறந்த பின்னும் அவை ஆவிகளாக உலா வருவதாக வும், அவற்றிற்கென்றே ஒரு தனி உலகமும் உண்டு என்கிறார்கள்.

மேலும் இன்றைய சில ஆராய்ச்சியாளர்கள் ஆவிகளுக்கு உருவம் கிடையாது என்றும், அந்த ஆவி கருப்பு நிறத்தில் காணப் படுவதாகவும், .கூறுகிறார்கள்.

ஆவிகளை பற்றிய விஞ்ஞானிகளின் பார்வை

இதுபற்றி விக்கிபீடியா இணையத்தில், இங்கிலாந்து நாட்டு மனோ தத்துவம் மற்றும் நரம்பியல் வல்லுநர் பிரைட்லைட் இவர், காந்த வியல் மின்புலம்மூலம் ஆராய்ச்சி நடத்தி, பேய், பிசாசு இல்லை என்று உறுதி செய்து விட்டு, அதை மக்களுக்கு உணர வைப்பதற் காக பேய், பிசாசு இருப்ப தாகக் கூறப்படும் தற் போது புழக்கத்தில் இல்லாத 800 வருட பழங்காலக் கட்டடம் ஒன்றில் பாதிக்கப் பட்டவர்களைக் கொண்டு, ஆராய் ச்சியில் ஈடுபட்டார். அதில் பேய் மற்றும் பிசாசு பிடி த்தவர்கள், தங்களுக்குப் பேய் பிடித்த போது திடீர் சத்தம் கேட்டதாகவும், இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம் கேட்டதாகவும், வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டு விட்டு மறைந்துவிட்டது என்றும் கூறினார்கள்.

பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து வழக்க த்திற்கு மாறான காந்தபுலம் வெளிப்பட்டிருக்கலாம். மூளையில் சில நரம்புகள் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இடங்களுக் குச் செல்லும்போது அல்லது அதிகமாக உணர்ச்சி வசப் படுகிறவர்கள் அந்த இடத்திற்குச் செல்லும்போது வழக்க த்திற்கு மாறான காந்த புலம் மேற்கூறி ய பிரமைகளை ஏற்படுத்தி இருக்கலாம். எனவே, பேயோ, பிசாசோ அதைச் செய்ய வில்லை என்று கூறியதோடு நின்று விடாமல் விஞ்ஞானக் கருவிகளுடன் அவர்களுக்கு அதை நிரூபித்தும் காண்பி த்தார்.

கொள்ளிவாயுப் பேய்

சதுப்பு நிறைந்த வயல் நிலங்களில் நடக்கும் ஒருவரை இது நெருப் பாகப் பின்தொடரும் எனவும் ஓட முற்பட்டால் இதுவும் ஓடும் எனவும் கூறப் படுகிறது. அறிவியல் ரீதியில் அணுகுப வர்கள் இதைச் சதுப்பு நிலத்தின் கீழ் அழுகும் தாவரப் பாகங்களி லிருந்து உயிரிவாயு எனப்படும் மெதேன் வாயு கசிவதாகவும் சதுப்பில் புதையும் கால் வெளியில் எடுக்கப்படும் போது வாயு வெளியேறி காற்றில் தீப் பற்றிக் கொள்ளுவதாகவும் விளக்கு வர்.மெதேன் வாயுவுக்கு தமிழ் நாட்டில் கொள்ளிவாயு என்ற பெயரில் அழைக்க‍ப்பட்டு வருவதாக விக்கிபீடியா இணையத்தில் குறிப்பிடப் பட்டுள்ள‍து.

ஆவிகள் என்பது ஒரு கற்பனை கதாபாத்திரங்களே! –  விதை2 விருட்சம் (எனது) பார்வை  . . .

பல காலந்தொட்டே ஆவிகளுக்கு மனிதர்களால் உருவாக்க‍ப்ப‍ட்டு அவர வர் மனநிலைக்கு ஏற்ப வடிவம் கொடுக்க‍ப்பட்ட‍ ஒரு கற்பனை கதாபா த்திரங்களே! இந்த ஆவிகள், பேய்கள், பிசாசுகள் ஆகும்.  இதுவரை ஆவி உண்டு என்பதை எந்த ஆராய்ச்சியாள ரும் சரி, விஞ்ஞானிகளும் சரி தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க வில்லை. இது மனிதனின் கற்பனை யில் உதித்த‍ ஒரு கதாபாத்திரம் என்பதற்கான விதை2 விருட்சம் (நான்) கூறும் காரணங்கள்

மேற்காணும் பத்திகளில் ஒரு மனிதனின் எண் ண‍ங்களையும், ஆசை களையும் அவனது உயிருடன் சம்பந்தப் படுத் தியே மேற் காணும் ஆய்வுகளும் நம்பிக்கைகளும் உள்ள‍ன, அந்த நம்பிக்கை க்கு ஆன்மீக வாதிகள் ஆன்மா, ஆத்மா, சைத்தான் கள், சாத்தான்கள் என்றும்,  பாமரர்கள் பேய், பிசாசு, பூதம் என் றும் படித்த‍வர்கள் ஆவி,  என்றும் இன்னும் எத்தனையோ பெயர்கள்கொடுத்து, அழைக்கப்ப‍ட்டு, அவை மக்க‍ள் மத் தியில் உலாவி வருவதாகவும், மனித உயிர்களை குடிக் கும் அல்ல‍து அவர்களின் உடலில் புகுந்துகொள்ளும் என்ற அச்ச‍மும் மக்க‍ள் மத்தியில் நிலவி வருகிறது.

ஆனால், ஒரு மனிதன் முற்றிலுமாக இறந்து போகும்போது அவனுடைய எண்ணங்களும், ஆசைகளும் சேர்ந்து, உயிர் அதாவது ஆவி அல்ல‍து ஆத்மா என்கிறார்களே அது அவனுடைய உடலை விட்டு பிரிந்து விடு றது. இப்போது உயிருடன் அவனது எண்ண‍ங்களும், ஆசைக ளும் சேர்ந்து பிரிந்து விடுவதாகவே இதுவறை நம்பப்பட்டு வருவது கண் கூடாக தெரிகிறதல்ல‍வா?

சரி!

ஒரு மனிதனுக்கு, விபத்தினால் மூளைச்சாவு (பிரைய்ன் டெத்) ஏற்படும் போது அவனது உயிர் அவனது உடலோடு இணைந்தே இருக்கிறது அல் ல‍வா? உயிரும் உடலும் ஒன்று சேர்ந்து இருக்கும் போதும், அவனது உட லில் ஏற்படும் சாதாரண உணர்ச்சிகளும் உணர்வு களும் இயங்குவதில்லை அதேபோல் அவனது எண்ண‍ங்களும், ஆசைகளும் அந்த மனிதனால் உணர முடிவதில்லையே அது ஏன்?

ஆவியை அதாவது ஆத்மாவை உயிருடன் சம்பந்த ப்படுத்தியே! உலகில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்துள்ள‍ன• ஆனா ல் அவனது உடலோடு, அவனது ஆவி யை ஆத்மாவை சம்பந்தப்படுத்தி எந்த ஆய்வுகளும் நடத்த ப்பட்ட‍தாக தெரியவில்லை.

அவனது உடலோடு, அவனது ஆவியை ஆத்மாவை சம் பந்தப்படுத்தி பார்க்கும் போது, ஒரு மனிதனின் எண் ண‍ங்களையும், ஆசைகளை யும் அந்த மனிதன் இறந்த பின்னும் அவனது உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிற து என்பது தெள்ள‍த் தெளிவாக தெரிகிறதல் லவா?

எடுத்துக்காட்டு

ஒரு பலூனை எடுத்துக்கொண்டோமேயானால், பலூன் என்பது உடலாக வும், பலூனில் நிரப்ப‍ப்பட்ட‍ காற்றை உயிராகவும் எடுத்துக்கொள்வோ ம்.  ஒரு குண்டூசி கொண் டு பலூனை உடைக்கும்போது, பலூனில்  இருந்த காற்று வெளியேறி காற்றோடு காற்றாக மறைந்து விடுகிறது. அந்த பலூனில் இருந்த காற்றை, வெளிக்காற்றில் தனிமைப்படுத்தி காட்ட முடியுமா? என்றால் அது சாத்திய மில்லாத ஒன்றே!

அதுபோலத்தான் ஆவி, ஆன்மா, ஆத்மா, பேய், பிசாசு, பூதம், காத்து, கறுப்பு, காட் டேறி இதுமட்டுமல்ல‍ வேறு எந்த விதமான பெயர்களை சொல்லி அழைத்தாலும், ஆவிகள் இந்த உலகில் இல்லை. அரண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய் என்று தமிழில் ஒருபழமொழி உண்டு அதாவது இளகிய மனம் கொண்டவர்கள், எளிதில் உணர்ச்சி வயப்படுபவர்கள், குழந்தை கள், போன்றவர்கள்தான் இருளில் இருக்கும் போதும், அல்ல‍து இருட்டை பார்க்கும்போதும்  இல்லாத பேயை அல்ல‍து ஆவியை இருப்ப‍தாக எண்ணி, தங்களது மனதில் வேண்டாத கற்பனைகள் செய்துகொண்டு, அவர்களும் பயந்து, மற்ற‍வர்களையும் பயமு றுத்தி, வருகின்றனர்.

இன்னுமொரு எடுத்துக்காட்டு

காதுகேளாத‌, கண் பார்வையற்ற‍ ஒருவனை சுடுகாட்டில் இரவு 12 மணி க்கு அழைத்துச்சென்று, அங்கே தங்க வைத்தாலும், அவன் தைரியமாக தங்கி, எதற்கும் பயம்கொள்ளாமல் எத்த‍னை நாட்கள் வேண்டுமானால் தங்கி விடுவான்.

ஆனால் காதும்கண்ணும் நன்றாக இருக்கும் மனிதனை அந்த சுடுகாட்டில்  இரவு நேரத்தில் தங்கச் சொன்னால், அய்யோ! அங்கே ஏதோ ஒரு சத்த‍ம் கேட்கிறது, இங்கே ஒரு வித ஒளி மின்னியது, அங்கே ஒரு உருவம் சென்றது என்று தான் உரு வாக்கி வைத்திருக்கும் அல்ல‍து தானே உருவாக்கும்  கற்பனை கதாபாத் திரத்திற்கு ஆவி என்றும் பேய்என்று இன்னும் பல பெயர்களில் வடிவம் கொடுத்து பல விதங்களில் இல்லாத ஒன்றை இருப்ப‍தாக சொல்லி யதே ச்சை யாக உருவாகும் சூழ்நிலைகளை காரணம் காட்டி விடுவான்.

மனிதன் சிறுவயதில் இருந்தே! இந்த பேய் பிசாசு, ஆவி போன்ற மூட நம்பிக்கைகளை சொல்லி வளர்க்கப்படாமல், பேயும் இல்லை, பிசாசும், ஆவியும் இல்லை என்று வளருவானே யானால், கண்டிப்பாக அவனும் ஆவிகள் இல்லையடி பாப்பா என்றே அவனும் சொல்லுவான், பிறர் அறிய சொல்லிடுவான்.

இதைப் படிக்கும் தாங்கள் இனி இந்த ஆவிகள் பற்றிய பயத்தை விடுத்து, மன உறுதியுடன் வாழ்ந்திடுங்கள். அதேபோல் உங்களது குழந்தைகளுக் கும் ஆவிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லி, அவர்களை மனோ திடமிக்க‍வர்களாக வளருங்கள்.

– விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – Cell: 98841 93081

 

கீழே உள்ள‍ லிங்க்கை சொடுக்க‍வும்

Advertisements

25 Responses

 1. இந்த கடவுள் எங்க இருக்காரு ஜீ….pls சொல்லுங்க …வானத்திலயும் இல்ல … மலையிலயும் இல்ல…வேற கிரகத்துல இருப்பாரோ

  Like

 2. apo kadavulum oru karpanaithana??????????

  Like

 3. Mr. Sathya moorthy you are right NO AAVI NO PAIEE, NO BOOTHAM HAHAHAHAHAHAHHA

  Like

 4. manidha vuyirai sambandha padithye araichi seidhu vandhulanar
  manidha vudalai vaithu araichi seyevillai endru koorum neengal
  kan theriyadhor kadhu keladhorai iravu 12 maniku sudukatil thangavaithu araichi seidheergala,illai neengale oru varam kudil amaithu irundhu anubavithirikreergala.

  Like

 5. innum ivvulagil ariyappadaatha visayangal niraya undu!

  Like

 6. thanks you very much sir

  Like

 7. Very Nice article. People should come out from superstitions.
  Thanks.

  Like

 8. illa.. naan pei paathuruken.. irndu murai paadhuruken… aavigal ulagil undu, aanaal adhu padangalil paarpadhu pol pazivaangappadu vadhillai..
  rkarthi08@gmail.com

  Like

 9. இறந்தமனிதன் பேய் அல்ல.
  உயிருடன் வாழ்ந்துகொண்டிருப்பவந்தான் பேய்.

  Like

 10. nice artical.keep it up my best wishes

  Like

 11. wow, superb article,

  Like

 12. aavaigal pattriya indha katturai migavum arumaiyag ulladhu. ezhudhiya sathyamoorthykku enadhu paraattugal

  Like

 13. ஆவிகள் இல்லையடி பாப்பா arumai

  Like

 14. good thought

  Like

 15. suberb

  Like

 16. இதைப் படிக்கும் தாங்கள் இனி இந்த ஆவிகள் பற்றிய பயத்தை விடு த்து, மன உறுதியுடன் வாழ்ந்திடுங்கள். அதேபோல் உங்களது குழந்தைகளுக்கும் ஆவிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லி, அவர்களை மனோ திடமிக்க‍வர்களாக வளருங்கள்.

  Like

 17. very niz.and its truth

  Like

 18. தங்களுடைய இந்த அரிய கட்டுரையின் லிங்கை எனது நண்பன் எனக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி, என்னை படிட்ட‍ ச்சொன்னான். நானும் ஏதோ , அவனுக்காக படிக்க‍ ஆரம்பித்தேன். ஆனால் படிக்க‍ படிக்க‍ ஆவிகள் என்பது கற்பனையாக உருவாக்க‍ப்பட்ட‍ கதாபாத்திரங்கள் என்பதை அறிந்துகொண்டேன். மிகவும் அருமை!

  உண்மைதான்! ஆவிகளை, மனிதனின் உயிரோடு சம்பந்தப்படுத்தியே ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ள‍து. ஏன் மனிதனின் உடலோடு சம்பந்தப் படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ள‍ப்படவில்லை.

  Like

 19. நீங்கள் குறிப்பிட்ட‍ மூன்று எடுத்துக்காட்டுக்களும் என்னை சிந்திக்க‍ வைக்கிறது. மிகவும் அருமை!

  Like

 20. SUPERB

  Like

 21. very nice concept.keep it up

  Like

 22. AAVIGAL ILLAYADI PAPPA SUPER TITLE, VERY GOOD CONCEPT

  Like

 23. nice article, good thought

  Like

 24. superb

  Like

 25. ஆவிகள் என்பதே கற்பனை கதாபாத்திரங்களே என்று தாங்கள், ஆணி அடித்தாற்போல் சொல்லியுள்ளீர்கள். கண் தெரியாத காது கேளாத ஒரு மாற்றுத்திறனாளியை சுடுகாட்டில் நள்ளிரவு 12 மணிக்கு தங்கச்சொன்னாலும் அந்த மாற்றுத்திறனாளி யாதொரு வித்தியாசமுமின்றி, பயமும் இன்றி, எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தங்குவார். ஆனால் ஒரு கண் தெரிந்த காது கேட்கும் திறனுள்ள‍ மனிதனை அங்கே தங்கச்சொன்னால் அய்யோ அங்கே பேய் இருக்கிறது என்று பயத்திலேயே உயிரைவிட்டுவிடுவான்.

  ஆவிகளை பற்றிய மக்க‍ள் மத்தியில் நிலவிவரும் ஒருவித பயத்தை போக்கும் விதமாக சத்திய மூர்த்தி ஆகிய நீங்கள் எழுதிய இந்த கட்டுரை உண்மையில் விழிப்புணர்வு இடுகைதான். பாராட்டுகள்

  இதுபோன்றே சமூகத்தில் நிலவிவரும் பல மூட நம்பிக்கைகளைப் போக்கும் விதமாக தாங்கள் கட்டுரை பல எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்த‍ வாழ்த்துகிறேன்.

  நன்றி!
  இப்ப‍டிக்கு
  மு.கருணாநிதி

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: