Advertisements

நீச்சல் பயிற்ச்சியின் அவசியமும், அதன் நன்மைகளும்

நீச்ச‍ல் ஓர் அறிமுகம்

நீச்சல் என்பது நீரினுள் எந்தவித கருவிகளும் இல்லாமல் பக்க உறுப்புகளின் அசைவின்மூலம் மிதந்து , நகரும் செயலாகும். நீச்சல் பழக்கம் புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தருகிறது. குளிப்பதற்கும், மீன்பிடிப்பத ற்கும், புத்துணர்ச்சிக்கும், உடற்பயிற்சி க்கும் மற்றும் விளையாட்டாகவும் நீச்சல் பழக்கம் பொதுவாகப் பயன்படு த்தப்படுகிறது.

நீச்ச‍ல் நீந்தி வந்த வரலாறு

வரலாற்றிற்கு முந்திய காலமான கற்காலம் தொட்டே நீச்சல் கலை மனிதர்களிடம் இருந் ததற்கான ஆதாரங்கள் 7000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் மூலம் காணக் கிடைக்கின்றன. கில் கமெஷ் காப்பியம், இலியட், ஒடிசி மற்றும் விவிலியம் போன்ற எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் 2000 கி.மு.விலிருந்து கிடைக் கின்றன. 1538ல் நிக் கோலஸ் வேமன் என்ற ஜெர்மனிய ரார் முதல் நீச்சல் புத்தகம் வெளியிடப்பட்டது. 1800களில் ஐரோப் பாவில் நீச்சல்கலையை விளையாட்டாக பயன்படுத்த தொடங்கி னார்கள். 1896ல் ஏதெ ன்ஸ் நகரில் நடந்த முதலாம் கோடைகால ஒலிம்பிக் போட்டியி ல் நீச்சற் போட்டிகளும் சேர்க்கப்பட் டது. 1908ல் பன்னாட்டு நீச்சல் கூட்ட மைப்பு தொடங்கப்பட்டது. பிற்காலத் தில் பல வடிவங்களில் நீச்சல் கலை மேம்படுத்தப்பட்டது.

நீச்சலின் அவசியம்

நீச்சல் தெரியாதவர்கள் ஆற்றிலோ, குளத்திலோ, கடலிலோ குளிக்கச் சென்று, தண்ணீரின் வேகத்தை த் தாக்குப்பிடிக்க முடியாமல், தத்தளித்துத் தடுமாறி, தண்ணீரில் மூழ்கி விடுவதைச் செய்தி களில் படித்திரு ப்பீர்கள்.

நீர் நிலைகளில் ஏற்படும் ஆபத்தின் போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீச்சல் தேவைப்படுகிறது. பொதுவாக, குழந்தைகளுக்கு 5 வயதில் நீச்சல் கற்றுத்தர ஆரம்பி க்கலாம். பதினெட்டு வயதுக்குள் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்குப்பிறகு உடலின் எடைகூடி விடும். மூட்டுகளில் அசையும் தன் மையும் நெகிழ்வுத் தன்மையும் குறைந்து விடும். இந்தக்காரணங் களால், நீச்சல் கற்றுக்கொள்வது கடினம். பத்து வயதுக்குள் ஒரு வர் நீச்சல் கற்றுக்கொண்டால், அவர் தனக்கு ஒரு சொத்து சேர் த்து வைத்தத ற்குச் சமம்.

நீச்சல் பயிற்சியின் நன்மைகள்:

நீச்சல் பயிற்சி என்பது ஒரு காற்ற லைப் பயிற்சி. நுரையீரல் வலுப் பெறுவதற்கும் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இயங்குவதற்கும் நீச்சல் பயிற்சி நன்கு உதவுகிறது. தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய் து வருபவர் களுக்கு எலும்பு மூட்டு தொடர்பான நோய்கள் வருவது குறை கிறது. முக்கியமாக முதுகு வலி, கழுத்துவலி, முழங் கால் மூட்டு வலி போன்றவை பாதிக்கா து. மன அழுத்தம் உள்ளவ ர்கள் தினமும் நீந்துவதைப் பழக்கப் படுத்திக் கொண்டால், மன அழுத்தம் குறைந்து, நாள் முழுவதும் உற்சாகமாகப் பணி செய்வார்கள். ’டௌவுன் சின்ட் ரோம்’ போன்ற மனநலக் குறை பாடு உள்ள குழந் தைகளுக்கும் நீச்சல் ஒரு நல்ல பயிற்சியே. சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியி ல் ஈடுபடு பவர்க ளுக்கு உடல் தசைகள் நல்ல வலு வுடன் இருக்கும். ஆரோக்கியம் கைகூடும்.

யாருக்கு நீச்சல் பயிற்சி ஆகாது?

வலிப்பு நோய் உள்ளவர்கள் நீச்சல் பயிற்சி செய்யாமல் இருப்பது நல்லது. காரணம், தண்ணீரில் வலிப்பு வந்தால் உயிருக்கு ஆபத் து வந்துசேரும். அவர்களைத் தண்ணீரி லிருந்து சமாளித்துக் கரை சேர்ப்பதும் கடினம். அதுபோல் மாற்றுத் திறனாளி கள், ரத்த அழு த்த நோய் உள்ளவர்கள், இதய நோயாளிகள் பிறவி இதயக்குறை பாடு உள்ள குழந்தைகள், ஆஸ்து மா போன்ற சுவாசம் தொடர்பான ஒவ்வா மை நோய் உள்ளவர்கள் நீச்சல் பயிற்சி செய்யக்கூடா து.

நீச்சல் பயிற்சியில் பெற்றோர் பங்கு என்ன?

குழந்தைக்கு நீச்சல் கற்றுத்தர வேண்டும் என்று தீர்மானித்து விட் டால், பயிற்சிக்குத் தேவையான உடல் தகுதி குழந்தைக்கு உள்ள தா என்பதை மருத்துவரிடம் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டுக்கு அருகில் உள்ள நீச்சல் குளம் பயிற்சிக்கு உகந்தது. அதி ல் நீச்சல் கற்றுக் கொள்வதற்கு வசதி யாக குறைந்தளவு ஆழம், நல்ல அகலம், தூமையான தண்ணீர், சுழற்சி முறையில் தண் ணீர் வெளி யேற்றப்படும் வசதி, மிதவை போன்ற கருவிக ள் முதலியவை அவசியம் இரு க்க வேண்டும். எட்டுக் குழந்தைகளுக்கு ஒரு பயிற்சியாள ரும், அனுபவமிக்க லைஃப் கார்டும் இருக்கிறார்களா என்பதைப் பெற் றோர் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். நீச்சல் பயிற்சியின் போது அப்பா, அம்மா,தாத்தா, பாட்டி, மாமா என்று உறவினர் யாராவது உடனிருக்க வேண்டும். டிரை வர், வேலையா ள் போன்றவர் களை அனுப்பக் கூடா து.

நீரில் ஏற்படும் ஆபத்து:

குளத்தில் அல்லது கடலில் குளிக் கும்போது, படகில் செல்லும்போது , நீச்சல் பயிற்சியின்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ் கிவிடலாம். நீந்தத்தெரியாதவர்கள் அப்போது வேகமாக சுவா சித்து, தண்ணீரைக் குடித்து, திக்கு முக்காடுவார்கள். இந்நிலையில் நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்து விடும். காற்று இருக்க வேண்டிய இடத்தில் இப்போது தண்ணீர் இருப் பதால், மூளைக்கு பிராண வாயு கிடைக்காது. இதன் விளைவால், அந்த நபரின் மூளைக் குப் பாதிப்பு ஏற்பட்டு, மயக்கம் உண்டாகி, தண்ணீரில் மூழ்கி விடுவார். உயி ரிழப்பார்.

எப்படிக் காப்பாற்றுவது?

நன்றாக நீந்தத் தெரிந்தவர்கள் மட்டுமே தண் ணீரில் மூழ்கியவர்களுக்கு முதலுதவி செய் ய முன்வர வேண்டும். நீச்சல் தெரியாதவர் கள் இதில் ஈடுபடக் கூடாது.

தண்ணீரில் மூழ்கியவரைக் காப்பாற்ற உதவு ம் முதலுதவி முறைகள் ஐந்து. அவை; அணு குதல், கையால் இழுத்தல், எறிதல் , கருவி கொண்டு இழுத்தல், அருகில் செல்லுதல். பாதிக்கப்பட்ட நபர் நினைவோடு இருக்கிறார், அதேநேரம் தண்ணீரில் தத்தளிக்கிறார் என் றால், அவருக்குக் கம்பு, கயிறு, களி, குச்சி, மரக்கிளை, வேஷ்டி, போர்வை, டவல் போன்றவற்றில் ஒன்றை நீட்டி, அதைப் பற்றி க்கொள்ளச் செய்து, அதை உங்கள் பக்க மாக இழுங்கள். இதை நீங்கள் செய்யு ம்போது, தண்ணீரில் தத்தளிக்கும் நபர், உங்களைத் தண்ணீருக்குள் இழு த்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ளுங் கள்.

பாதிக்கப்பட்ட நபர் எட்ட முடியாத தூர த்தில் இருக்கிறார் என்றால், தண்ணீரில் மிதக்கக்கூடிய பொரு ள்களில் ஒன்றை – எடுத்துக் காட் டாக, கார் டயர், காற்றடைத்த பெரிய பந்து, மர மிதவைகள், ஃபோம் மெத்தைகள் போன்றவற்றில் ஒன் றை அவரை நோக்கி வீசுங்கள். அதைப்பற்றிக்கொண்டு அவர்கரைக் கு மீண்டு வந்துவிடுவார். ஒருவே ளை அந்த நபர் வெகுதொலைவில் இருந்தால், நீங்கள் நன்கு நீச்சல் தெரிந்தவராக இருந்தால், அவருக்கு அருகில் சென்று அவரைக் காப்பா ற்ற கவனத்துடன் முயற்சி செய்யுங் கள்.

என்ன முதலுதவி செய்வது?

* தண்ணீரில் மூழ்கியவருக்குச் சுவாசம் உள்ளதா, நாடித்துடிப்பு உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

* தண்ணீரில் மூழ்கியவர்கள் பெரும்பாலும் அதிகமாகத் தண்ணீர் குடித்து விடுவார் கள். நுரையீரலிலும் இரைப் பையிலும் தண்ணீர் நிரம்பி விடுவதால் வயிறு வீங்கி, சுவாசிக்கச் சிரமப்படுவார்க ள். ஆகவே, இந்தத்தண்ணீரை வெளியேற்றுவதற்கு, முதலுதவி செய்யும் நபர் வேகமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண் டும்.

* தண்ணீரில் மூழ்கியவரை க்குப் புறப்படுக்க வைத்து, தலையைப் பக்கவாட்டில் திருப்பி வைத்துக் கொண்டு , முதுகையும் வயிற்றையு ம் அமுக்க வேண்டும். இவ் வாறு பத்து நிமிடங்களுக் குத் தொடர்ந்து செய்ய வே ண்டும்.

* அந்த நபருக்குச் சுவாசம் நின்றிருந்தால் அல்லது மூச்சுத் திண றல் இருந்தால், செயற்கை சுவாசம் தர வேண்டும்.

* இதயத்துடிப்பு நின்றிருந்தால் இதய மசாஜ் தர வேண்டும்.

* இதற்கு ‘இதய சுவாச மறு உயிர்ப்புச் சிகிச்சை’ (cardiopulmonary resusc -itation -சுருக்கமாக – CPR) என்று பெயர்.

* இதைப் பள்ளியில் படிக்கும்போதே தெரிந்து வைத்துக்கொண்டால் நல்ல து.

செயற்கை சுவாசம் தருவது எப்படி?

* அந்த நபரை மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும்.

*அவருடைய பற்களுக்கிடையில் மரக்கட்டை அல்லது துணியை ப் பல மடிப்புகளாக மடித்து வைத்து, வாயைத் திறந்தபடி வைத் துக் கொள்ள வேண்டும்.

* காற்று செல்லும் பாதை தடையி ல்லாமல் உள்ளதா என்று சரி பார்த் துக் கொள்ள வேண்டும்.

* முக்கியமாக, வாயில் அந்நியப் பொருள்கள் ஏதேனும் இருந்தால், அகற்றி விட வேண்டும்.

* பாதிக்கப்பட்டவரின் மூக்கை விரல்கள் கொண்டு மூடி, அவரது வாயில் முதலுதவி செய்பவரின் வாயை வைத்துக் காற்றை பல மாக ஊதி உள்ளே செலுத்த வே ண்டும். இதனால், அவரது மார்பு உயரும். அப்போது முதலுதவி செய்பவர் வாயை எடுத்துவிட வேண்டும். மீண்டும் ஊத வேண் டும். இவ்வாறு நிமிடத்துக் கு 12 முறை ஊத வேண்டும்.

* குழந்தையாக இருந்தால் நிமிட த்துக்கு 30முறை ஊத வேண்டும் .

இதய மசாஜ் தருவது எப்படி?

* சுவாசத்துக்கு வழி செய்யும் அதே நேரத்தில் இதயத் துடிப்புக்கும் வழி செய்ய வேண்டும். அந்நபரின் நடு நெஞ்சில் முதலுதவி செய்பவ ரின் உள்ளங்கைகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, மார்பை பலமாக அழுத்த வேண்டும். நிமி டத்துக்கு 80 அழுத்தம் என்று மொ த்தம் 15 முறை தொடர்ந்து அழுத் தம் தரவேண்டும். இதனால் இதயம் துடிக்க ஆரம்பிக்கும்.

* நான்கு சுழற்சிகள் இதய மசாஜ் செய்துவிட்டு, இரண்டு முறை செயற்கைச் சுவாசம் தர வேண்டும்.

* பாதிக்கப்பட்ட நபருக்கு சுவா சம் மற்றும் நாடித்துடிப்பு ஏறுப டும் வரை இதைத் தொடர வே ண்டும்.

*அதேநேரத்தில் தாமதிக்காமல் மருத்துவச் சிகிச்சைக்கும் ஏற் பாடு செய்யவேண்டும். அப்போ துதான் தண்ணீரில் மூழ்கியவ ரை முழுமையாகக் காப்பாற்ற முடியும்.

* இதற்கு, பாதிக்கப்பட்ட நபரை 108 ஆம்புலன்ஸ் உதவியால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: