இந்த ஒரே ஒரு கேள்வி கேட்டு மத்திய அரசையே திணற அடித்த 10 வயது சிறுமி
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த 5 ம் வகுப்பு பயிலும் ஒரு பத்து வயது பள்ளி மாணவியான ஐஸ்வர்யா பராஷர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் திணறியுள் ளது மத்திய அரசு.
ஆம், அவர்கேட்ட கேள்வி ஒன்றும் சாதாரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால், எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட் டின் தந்தை ஆனார்? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .
பள்ளியில் பாட புத்தகம் படிக்கும்போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது. இதை படித்தபின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என் று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார். அவர்களுக்கும் பதில் தெரியவில் லை. கூகிள் இணையத்தில் கூட பார்த்து உள்ளார். யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட்டுள்ளார் .
இந்த கேள்விக்கு பிரதமர் அலுவ லகத்தால் தகுந்த பதில் தர முடியா ததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுக ளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த பதிவுகளைக் கொ ண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்.
ஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு செ ன்று, அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் அங்கி ருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில் அளிக்கவில்லை என்பதுதான் வேடிக் கையிலும் வேடிக்கை. இச் சம்பவம் நடந்தது கடந்த மார்ச் மாதம் .
இப்படி கேள்விகேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். இப்படி பல கேள்விகளை இளைய தலை முறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப் பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதனால் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் காலமும் வரும் எனத் தெரிகிறது.
இந்திய வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது 1944 ம் ஆண்டு ஜூலை மாதம் 6 ம் தேதி சிங்கப்பூர் வானொலி நிலையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய உரையில் காந்தியடிகளை முதன்முதலில் தேசத் தந்தை எனக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.
Filed under: கல்வெட்டு, செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: ஆனார் ?, இந்திய, எப்போது, எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ?, தந்தை, நாட்டின், மகாத்மா காந்தி, Dharmapuram Adheenam, Gandhi, Hinduism, Madurai, National Father of India, Pythagoras, Tamil Nadu, Tamil people, Unicode |
this news u post 2nd time all ready i read this artical
LikeLike