Advertisements

காலண்டர்கள் உருவானது எப்படி?

நண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை வரவேற்க ஆவலுட னும் உற்சாகத்தோடும் காத்திருக்கிறோம், புதுவருடத்திற்கு விதவி தமான வடிவமைப்புகளில் காலண் டர்கள் வாங்கி மகிழுவோம் காலண் டர்கள் நமது பயன்பாட்டுகளில் மிக முக்கியமான ஒன்று

அத்தகைய காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந் த கதையைத் தெரிந்துகொள்வோம்! கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உரு வானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கி லச் சொல். புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்க கால காலண்ட ர்களுக்கு அடிப்படையாக அமைந்தன.

நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை அடிப் படையாகக் கொண்டு புராதன எகிப்தியர் உருவாக்கிய கால ண்டர் இதற்குச் சான்று. இன்று நம் முன்னே இருக்கும் காலண் டரின் அடிப்படை கி.மு. 45 இல் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப் பட்ட ஜூலியன் காலண்டரே. இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் கா லண்டரே முறையே கிரிகோரியன் கால ண்டர். பதிமூன்றாம் போப் ஆண் டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆனைப்படி, அலோயி ஷியஸ் ல்லியஸ் என்னும் மருத்துவரே 1582 பிப்ரவரி 24 இல் ஜீலியன் கால ண்டரில் காணப்பட்ட குறைபா டுகளைத் திருத்தியமைத்து கிரி கோரியன் காலண்டரை உருவா க்கினார். ஏசு கிருஸ்துவின் பிற ந்த தினத்தை அடிப்படையாக கொண்ட இக்காலண்டரின் வரு டங்கள் ஒழுங் கமைப்பட்டது.

ஸ்பெயின், போர்ச்சுக்கல், போ லிஷ்லிதுவேனியன் காமன்வெ ல்த், இத்தாலியின் பெரும்பாலா ன பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் காலண்டரை முதன் முத லில் ஏற்றுக்கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரிய ன் காலண்டரைப் பயன்படுத்தத் துவங்கின. இங்கிலாந்தும் அமெரிக் காவும் 1752 ஆண்டிற்கு பின்பே கிரிகோரியன் காலண்டரை அங்கீக ரித்தன. 1923 பிப்ரவரி 15 ல் கிரிகோரிய ன் காலண்டரை அங்கீகரித்த கிரீஸே இப்பட்டியலின் கடைசி நாடு.

மாதங்களின் பெயர் வரலாறு:

ஜனவரி:

ரோமன் இதிகாசத்தில் “ துவக்கங் களின் கடவுளாக” காண ப்பட்ட ஜானஸ்லானுயாரியஸ் கடவுளின் பெயரே கிரிகோரியன் காலண்டரி ன் முதல் மாதமான ஜனவரிக்கு வழங்கப்பட்டது.

பிப்ரவரி:

ஜூலியன் மற்றும் கிரிகோரியன் காலண்டரின் இரண்டாவது மாதம் பிப்ரவரியே “சுத்தப்படுத்தல்” எனும் பொருள் தரும் ஃபெப்ரம் எனும் இல த்தீன் சொல்லிலிருந்து பிறந்ததே பிப் ரவரி. புராதன ரோ மர்கள் பிப்ரவரி மாதம் 15 ம் தேதி ஃபெப்ரா எனும் சுத்தப்படுத்தும் செயலைச் செய்வதற் காக சூட்டப்பட்டதே இந்த பிப்ரவரி.

மார்ச்:

ரோமர்களின் போர்க்கடவுளான “மார்ஸி: என்பதிலிருந்து உருவானதே மார்ச் கி.மு 700களில் ரோமாபுரியை ஆண்டநுமபோம் விலஸ் மன்னர் ஜனவரியையும், பிரபரிவ ரியையும் ஒன்றினைப் பதற்குமுன்பு வரை மார்ச் மாதமே ரோமக்காலண்டரின் முதல் மாத ம்.

ஏப்ரல்:

ப்ரல் மாதப்பெயர் பிறந்தது பற்றி பல்வே று கருத்துக்கள் உள்ளன. ‘திறக்குக’ எனும் பொருள் தரும் ‘அபேரிரே’ எனும் இலத்தீன் சொல்லி லிருந்துதான் ஏப்ரல் மாதத்திற்கு அப்பெயர் கிடைத்தது என்பது ஒரு கருத்து . ரோம ஐதீகப்படி எல்லா மாதங்களின் பெயர்களும் கடவுள் பெயரிலிருந்தே துவ ங்குகிறது. அதன்படி ஏப்ரல் மாத ம் வீனஸ் தேவ தையின் மாதமாகக் கருத ப்படுகிற து கிரேக்கர்கள் வீனஸை அஃப் ரோடைட் என்றே அழைக்கினறனர் அதன்படி வீனஸ் தேவதையின் மாதம் எனும் பொருள் தரும் ‘அப்லோரிஸ்’ என்னும் சொல்லே ஏப்ரல் மாதத்திற்கு வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகி றது.

மே:

கிரேக்கக் கடவுளான ‘மாயியா’ வின் பெயரே மே மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

ஜூன்:

ஜூபிடர் கடவுளின் மனைவியாக புராதன ரோமர்கள் கருதிய ’ஜூனோ’ என்பதிலிருந் தே ஜூன் மாதம் பிறந்தது

ஜூலை:

ரோமக் காலண்டரின் மாதமாக கருதப்பட்ட, இலத்தீன் மொழியின் ‘கவிண்டிலஸ்’ என அழைக்கப்பட்ட இம் மாதத்தில்தான் ஜூலியஸ் சீசர் பிறந்தார். அதையடுத் தே இம்மாதத்திற்கு ஜூலை எனப் புதுப் பெயர் சூட்டப் பட்டது

ஆகஸ்ட்:

ஆகஸ்ட்மாதம் புராதன ரோமக்காலண்டரில் ஆறா வது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது எனப் பொ ருள்படும் ‘ஸெக்டில ஸ்’ எனும் இலத்தீன் சொல் லே துவக்ககால ரோமக் காலண்டரில் இம் மாதத் தின் பெயராகப் ப்யன்படுத்தப்பட்டிருந்தது. பிற்பாடு கி.மு எட்டாம் நூற்றாண்டில் அலெக்ஸா ண்ட்ரியா நகரை வென்ற அகஸ்டஸ் சக்ரவர்த்தியின் சிறப் பை வெளிப்படுத்தும் விதத்தில் இம்மாதத்திற்கு அவரது பெயர் சூட்ட ப்பட்டது.

செப்டம்பர்:

இலத்தீன் மொழியில் ‘ஏழு ‘ எனப்பொருள் வரும் “செப்டம்” என்ற சொல்லே புராதன ரோமர்களின் காலண்டரில் ஏழாவது மாதத் திற்கு வழங்கப்பட்டது. அதையொட்டி கிரி கோரியக் காலண்டரும் அப்பெயரைப் பின் பற்றியது.

அக்டோபர்:

இலத்தீன் மொழியில் ‘எட்டு’ எனப் பொருள் தரும் “அக்டோ” என்ற சொல்லிலிருந்து வந்த தே அப்பெயர்.

நவம்பர்:

ஒன்பது எனும் பொருள் தரும் ‘நோவம்’ எனும் இலத்தீன் சொல் லிலிருந் து உருவானதே நவம்பர்.

டிசம்பர்:

இலத்தீன் மொழியில் பத்து’ எனு ம் பொருள் தரும் “டிசம்பர்” ரோம  க் காலண்டரில் பத்தாவது மாத மாக இருந்தது. இந்திய தேசியக் காலண்டர் கி.பி. 78 இல் துவங் கும் சக காலண்டரே இந்தியாவி ன் தேசியக் காலண்டராக கருதப் படுகிறது. சாதவா ஹன மன்னரா ன சாலிவா ஹன் உஜ் ஜைனி மன் னர் விக்ரமாதித்தனை போரில் வென்றதையடுத்து சக வருடம் துவங்கியது.

இந்தியாவில் கிரிகோரியன் காலண்டரும் சக வருடக் காலண்டரும் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டி ருக்கிறது. 1957 இன் காலண்டர் மறு சீர மைப்பு கமிட்டியே சக காலண்டரை அதி காரப்பூர்வ காலண்டராக அங்கீகரி க்கப் பரிந்துரை வழங்கியது.

கிரிகோரியன் காலண்டரின் 1957 மார்ச் 22 ஆம் தேதியில்தான் சக வருடத்தின் முதல் மாதமான சைத்ரம் 1 , 1879 இல் அதிகாரப்பூர்வமாகத் துவங்கி யது.

தமிழ்க் காலண்டர்:

சூரியனை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது. கிரிகோரி யனைப் போன்றே சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங் கள் இதிலும் உண்டு.

இஸ்லாமியக் காலண்டர்:

முகமது நபி மெக்காவிலிருந்து மதினாவுக்குச் சென்ற நாளிலி ருந்துதான் இஸ்லாமிக் காலண் டரின் வருடம் துவங் குகிறது. கி.பி. 622 இல் நிகழ்ந்தது நபியி ன் பயணம்.

சந்திரனை அடிப்படையாக கொ ண்ட இது 12 மாதங்கள் கொண் டது ஜூலியன் காலண்டர் கி.மு.45 இல் பிரபல வானியல் நிபுணராக இருந் த கோஸிஜின்ஸி என்பவரின் அறிவு ரைப்படி இக்காலண்டரை நடைமு றைப்படுத்தியவர் ஜூலியஸ் சீசரே. தற்போது பரவலாகப் பயன்படுத்தப் பட்டுவரும் கிரிகோரியன் காலண்ட ரின் முன்னோடி இது. ஜூலியன் காலண்டரின்படி ஒரு வருடத்திற்கு 365 நாட்கள். “லீப் வருடம்” என்பது ஜூலியன் தந்த கொடையே.

– puthiyaulagam

 

Advertisements

2 Responses

  1. நன்றி & எனது இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    Like

  2. எனது இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: