Advertisements

எந்தந்த வலிகளுக்கு எந்தந்த முதலுதவிகள் . . . !

விபத்தினால் ஏற்படும் வலிகள் ஒருவகை. உடல் பாதிப்பால் உண்டா கிற வலிகள் அடுத்தவகை. நமக்கு அடிக்கடி வந்து தொல்லை தருகிற தலைவலி, பல்வலி, வயிற்று வலி, தொண்டைவலி, கால்வலி, கழுத்து வலி, காதுவலி, கண்வலி, முதுகு வலி, மூட்டுவலி போன்ற வை இரண்டாம் வகையைச் சேர்ந் தவை.

இவற்றுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க, நமக்குத்தெரிந்த ஏதாவது ஒரு மருந்து அல்லது மாத்திரை யை விழுங்குகிறோம். இந்த வலி களுக்குக் காரணம் தெரிந்து முத லுதவி செய்தால், சரியான நிவாரணம் கிடைக்கும். இல்லையென் றால், நாம் செய்யும் முதலுதவியே, சமயங்களில் ஆபத்தாகி விடும்.

தலைவலி:

சாதாரண காய்ச்சலில்தொடங்கி ஆபத்தான மூளைக்கட்டிகள் வரை தலைவலிக்குப் பல காரணங்கள் உண்டு. குறிப்பாக, வைரஸ் காய்ச்சல்கள் எல்லா மே தலைவலியை ஏற்படுத்தும். ‘சைனஸ்’ என்று அழைக்கப்படும் முகக் காற்றறை களில் அழற்சி ஏற்பட்டால், தலை வலி வரும். ரத்தசோகை, ஊட்டச்சத்துக் குறை பாடு, கண் பார்வைக் குறைபாடு, மூளைக் காய்ச்சல், மூளைக்கட்டி, பல்நோய், காது நோய், தொண்டை நோய், ஒற்றைத் தலை வலி போன்றவையும் தலைவலியை ஏற் படுத்தும்.

அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, கணினி விளையாட்டுக்களை விளையா டுவது போன்றவையும் தலைவலிக்குக் காரணமாக லாம். பசிகூட தலைவலியை உண்டாக்கும். குறிப்பாக, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் காலை உணவைச் சாப்பிடாமல் சென்றால், வகுப்பறையில் தலைவலிக்கும். தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் தலைவலி யை உண்டா க்கும்.

தலைவலிக்கு முதலுதவி:

தலைவலி மாத்திரைகளில் ஒன்றைப் பயன்படுத்தி னால், தலைவலிகுறையும். (தொடர்ச்சியாக இத்த லை வலி மாத்திரைகளை பயன்படுத்தும் பட்சத்தில் பக்க‍ விளைவுகளை உண்டாக்கி நமது உடல் நல னுக்குகேடு விளைவிக்கும் அபாயம் உண்டு, ஆதலா ல் தொடர்ச்சியாக வலி இருக்கும்பட்சத்தில் மருத்துவரை அணுகி அவரது ஆலோ சனையின்பேரில் சிகிச்சை மேற்கொள்வது நல்ல‍து)

வெளிச்சம் அதிகமில்லாத, சத்தமில் லாத, அமைதியான இடத்தில்போதிய ஓய்வெடுத்துக் கொண்டால், சாதார ண தலைவலி சரியாகி விடும்.

அப்படியும் தலைவலி குறையவில் லை என்றால், தலையைச்சிறிது நேர ம் அழுத்திக் கொடுக்கலாம்.

இளஞ்சூடான தண்ணீரில் துணியை நனைத்து ஒத்தடம் தரலாம்.

வலிநிவாரணி தைலங்களை நெற்றியில் தடவலாம்.

‘டிங்சர்பென்சாயின்’ சொட்டு மருந்தைப் பயன்படுத்தி நீராவி பிடிக்கலாம்.

வெந்நீரில் குளிக்கலாம்.

காபி அருந்தலாம்.

இனிய இசையைக் கேட்கலாம்.

தொண்டை வலி:

வைரஸ், பாக்டீரீயா தொற்றுகளால் தொண்டையில் புண் உண்டாகு ம். இதனால், தொண்டையில் அரிப்பு, கரகரப்பு, வலி ஏற்படும். முக்கியமாக, ஜலதோஷம் பிடிக்கும்போ து மூக்குடன் தொண்டையும் பாதிக்கப்படும். பெரும் பாலான நேரங்களில் தொண்டைவலி தானாகவே சரியாகிவிடும். காய்ச்சல், கழுத்தில் நெறிக்கட்டி, தொண்டை இறுக்குவது போன்ற உணர்வு, விழுங்கு வதில் சிரமம், குரலில் கரகரப்பு போன்ற அறிகுறிக ள் தோன்றும்போது சிகிச்சை தேவைப்படலாம்.

முதலுதவி என்ன?

ஒரு தம்ளர் இளஞ்சூடான வெந்நீரில் அரை தேக்கரண்டி சமையல் உப்பைக் கலந்து வாய் மற்றும் தொண்டையைக் கொப்பளித்தால், தொண்டைக்கு இதமளிப்பதுடன், தொண்டையிலி ருந்து சளி வெளி யேறவும் உதவும். இதனை ஒரு நாளில் நான்கு முறையாவது செய்ய வேண்டும்.

’ஹால்ஸ்’ போன்ற மருந்து கலந்த சூயிங்கத்தைச் சுவைத்தால், உமிழ்நீர் அதிகம் சுரந்து, தொண்டை யைச் சுத்தம் செய்யும். தொண்டை வறட்சி, அரிப்பு, கரகரப்பு குறையும்.

இளஞ்சூடான பால், காபி, எலுமிச்சைத் தேநீர் போன்றவற்றை அருந் தினால், சளி மென்மையாகி எளிதில் வெளியேறும்.

மாத்திரைகளில் ஒன்றைப் பய ன்படுத்தினால்,தொண்டை வலி குறையும். (தொடர்ச்சியாக இத் தலைவலி மாத்திரைகளை பய ன்படுத்தும்பட்சத்தில் பக்க‍ வி ளைவுகளை உண்டாக்கி நமது உடல்நலனுக்கு கேடு விளைவி க்கும் அபாயம் உண்டு, ஆதலா ல் தொடர்ச்சியாக வலி இருக்கு ம்பட்சத்தில் மருத்துவரை அணு கி அவரது ஆலோசனையின்பேரில் சிகிச்சை மேற்கொள்வது நல்ல‍ து)

பேசுவதைக் குறைத்து தொண்டைக்கு ஓய்வு கொடுத்தால், தொண் டை வலி விரைவில் குணமாகும்.

வயிற்று வலி:

வயிற்று வலிக்குப் பல காரணங்கள் உண்டு. செரிமானக்குறைபாடு, நச்சு ணவு, இரைப்பைப் புண், இரைப்பை அழற்சி, குடல் புழுத்தொல்லை, குடல் அழற்சி, குடல் வால் அழற்சி, குடல் அடைப்பு, மாதவிடாய், மலச்சிக்கல், சிறுநீரக அழற்சி, சிறுநீரகக் கற்கள், பித்தப்பை அழற்சி, பித்தப்பைக் கற்கள் என்று பல நோய்களில் வயிற்றுவலி வரும். வலி உள்ள இட த்தைப் பொறுத்து நோயின் தன்மையை ஓரளவுக்கு நாம் அறிந்து கொள்ள முடியும்.

முதலுதவி என்ன?

வயிற்றுவலி ஆரம்பித்த உடனேயே வயிற்றுவலி மாத்திரை ஒன்றை  சாப்பிடலாம். வயிற்றுப்புண், மாதவி டாய் உட்பட எல்லா வயிற்று வலிகளு க்கும் பொதுவான முதலுதவி இது.

இந்த மாத்திரை கிடைக்காவிட்டால், ஒருகண்ணாடி பாட்டிலில் கொதிநீ ரை நிரப்பிக்கொண்டு, அதை ஒரு துணியால் சுற்றிக் கொ ண்டு, வயிற்றில் ஒத்தடம் தரலாம்.

மேல் வயிற்றில் வலி உண்டானால், அது இரைப்பைப் புண் அல்லது இரைப்பை அழற்சி காரணமாக இருக்கலாம். இதற்கு அமில நீர்ப்பு ம ருந்து அல்லது அமில எதிர்ப்பு மாத் திரைகளில்  ஒன்றைப்பயன்படுத்த லாம்.

மலச்சிக்கல் காரணமாக வயிறு வலித்தால், வயிற்றுவலி மாத்திரை யுடன், மலமிளக்கி மாத்திரை  ஒன் றை இரவில் சாப்பிட்டுக்கொள்ள லாம்.

இரவு நேரத்தில் மட்டும் வயிற்று வ லி வருமானால், அதற்கு, குடல்புழு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. குடல் புழு மாத்திரை ஒன் றை விழுங்கினால், வயிற்று வலி வராது.

சிறுநீர்க்கடுப்புடன் அடிவயிறு அல்லது கீழ் முதுகு வலித்தால், சிறு நீரகக்கல் காரணமா க இருக்கும். இதற்கு வயிற்றுவலி மாத்திரை யுடன், 200 மி.லி. தண்ணீரில் 2 கரண்டி ‘சிட்ரா ல்கா சிரப்’ பைக் கலந்து அருந்தலாம். குளிர்ச் சியான பானங்கள் மற்றும் பழரசங்களைக் குடிக்கலாம்.

இரைப்பை அழற்சி அல்லது செரிமானக் குறைபாடு இருந்தால், வயிற்றுவலியுடன் புளித்த ஏப்பம், உமட்டல், வாந்தி, வயிறு உப்புசம் இருக்கும். இதற்கு இளநீர் அருந்தலாம். ‘எலெக்ட்ரால்’ பவுடர், புளிப்பி ல்லாத மோர், குளிர்ந்த குடிநீர் அல்ல து குளிர்ச்சியான பானங்களை அருந்தலாம். இதனை அடிக்கடி குறைந்த அளவில் எடுத்துக்கொள் வது நல்லது.

வாயு சேர்ந்து வயிறு வலித்தால், வலி மாத்திரைகளில் ஒன்றைச் சாப்பிடலாம்.

வயிற்றின் வலது பக்கம் தொப்புளைச் சுற்றியும் அடிவயிறும் வலி த்தால், குடல் வால் அழற்சி காரணமாக இருக்கலாம். இந்த வலிக்கு வெந்நீர் ஒத்தடம் தரக் கூடாது. பதிலாக, குளிர்ந்த நீரைக் கண் ணாடி பாட்டிலில் நிரப்பிக் கொண்டு ஒத்தடம் தர வேண்டும்.

வயிற்றுவலி நீடித்தால் அல்லது அதிகரித்தால், வாந்தி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மயக்கம் போன்ற துணை அறிகுறிகள் தோன்றி னால், மேற்சொன்ன முதலுதவிகளைச் செய்து விட்டு, மருத்துவரின் ஆலோசனையையும் உடனடியாகப் பெற வேண்டும்.

அதி முக்கியமாக குறிப்பு

(தொடர்ச்சியாக வலி மாத்திரைகளை பயன்படுத்தும் பட்ச த்தில் பக்க‍ விளைவுகளை உண்டாக்கி நமது உடல் நலனு க்கு கேடு விளைவிக்கும் அபாயம் உண்டு, ஆதலால் தொட ர்ச்சியாக வலி இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின்பேரில் சிகிச்சை மேற் கொள்வது நல்ல‍து).

* இது விதை2விருட்சம் பதிவு அல்ல‍ *
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: