Advertisements

சென்னை ஸ்ட்ரீட் பைக் ரேஸ்

ஸ்ட்ரீட் ரேஸ்…. சென்னையின் மரண விளையாட்டுகளில் முதல் இடத்தில் உள்ள விபரீதம். எந்த அனுமதியும் பெறாமல், எந்த முன்னறிவிப்பும் இல்லா மல் பரபரப்பான நகர டிராஃபி க்குகளின் இடையே புயல் வேகத்தில் ஊடுருவி நடத்தப் படும் பைக் ரேஸ் பயங்கரங்க ளை அறிவீர்களா? ‘கட்டுப்படுத் தி விட்டோம்’ என்று போலீ ஸார் அடித்துச் சொன்னாலும், ‘வீர்ர்ர்ர்ரூம்’ சத்தத்தால் சாலையில் செல்வோரை மிரளவைக்கும் பைக் ரேஸர்களை இன் றும் காண முடிகிறது. முன்னரெல்லாம் இரவுகளில் ஆளரவம் அற்ற சாலைகளிலோ, கடற்கரைச் சாலைகளிலோ நடத்தப்பட்ட இந்த ரேஸ்கள், இப்போது நெரிசல்மிக்க அலுவலக நேரத்திலும் சாலைகளில் நடக்கின்றன. அதிலும் சில ரேஸ்களின் விதிகள்… பைக்கின் கிளட்ச், பிரேக் முதலியவை பயன்படுத்தக் கூடாது, சிக் னல் சிவப்புக்கு நிற்கக் கூடாது என்றெல்லாம் திகில் கூட்டுகின்றன.
 
இந்த பைக் ரேஸ்கள் எப்படித்தான் நடத்தப்படுகின்றன?
 
ஆதி முதல் அந்தம் வரை அறிந்துகொள்ள முயற்சித்தேன். நண்ப ரின் நண்பர் மூலம் பென்சில் ஸ்ட்ரெட்ச் மற்றும் ஜிக்ஜாக் பைக் ரேஸ்களில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.பென்சில் ஸ்ட்ரெச் என்றால், சுமார் 150 கி.மீ. வேகத்தில் ஒரே நேர்க் கோட்டில் பறந்து இலக்கை மிகக் குறைந்த நேரத்தில் கட ப்பது. லயோலா கல்லூரி சாலையில் வைத்து கறுப்பு கரிஷ்மாவை உறும வைத்து க்கொண்டு இருந்தான் அந்தச் சுள்ளான். பில்லியனில் ஏறி அமர்ந்தால், ஒட்டக த்தின் மீது அமர்ந்ததுபோல செம உயரம். செமத்தியாக உறுமி விட்டு எடுத்த எடுப்பில் எழுபதைத் தொட்டது கரிஷ்மாவின் ஸ்பீ டாமீட்டர். ஒரே நொடியில் உயிர் பயத்தைக் காட்டிவிட்டான் சுள்ளான். கண்களை மூடிக்கொண்டேன்.  கார்ட்டூ ன் படங்களில் வில்லனை ராக்கெட் நுனியில் கட்டி அனுப்புவார் களே… சத்திய மாக அப்படித்தான் இருந்தது. டிராஃபிக் இல்லாத அந்த அதிகாலை வேளையில் நம்பினால் நம்புங்கள்… முழுதாக ஒரே நிமிடம்தான்… மூன்று கிலோ மீட்டர்களைக் கடந்து ஸ்கை வாக் அருகே வந்து சேர்ந் தோம். பைக்கை நிறுத்திய நொடி விருட் டென்று தாவி இறங்கினால் கண்களில் பூச் சி பறக்க… காலுக்குக் கீழே சாலை நழுவிய து!’ஈவ்னிங் சிக்ஸ்… ஹாரிங்டன் ரோடு… ஜிக்ஜாக்!” என்று சங்கேத பாஷைபோலச் சொல்லி வி ட்டுப் பறந்துவிட்டான் சுள் ளான். மாலை 6 மணி… போக்குவரத்து நெரிசலில் பிதுங்கி வழிந்து கொ ண்டு இருந்தது ஹாரிங்டன் சாலை. குலதெய்வம், இஷ்ட தெய்வங் களை எல்லாம் வேண்டிக்கொண்டு அந்த பல்சரில் ஏறி அமர்ந்தே ன். கியர் தட்டிப் புறப்பட்டு நூறைத் தொட்ட பின் அதில் இருந்து இம்மியும் குறையவில்லை வேகம். அவ்வளவு நெரி சலிலும் பாம்பு போல வளைந்து நெளிந்து பறந்தது பைக். முன் பின் செல் பவர்கள் பைக்கின் உறுமல் சத்தத்துக்கே வழிவிட்டுத் தெறித்தார் கள். ‘ஜஸ்ட் மிஸ்’ஸில் சிக்னல் சிவப்பைக் கடந்தான் பையன். டிராஃபிக் கான்ஸ்டபிள் ஊதிய விசில் பகீர் கிளப்பியது. மாநகரப் பேருந்துக்கும் மெட் ரோ வாட்டர் லாரிக்கும் நடுவே லே சாக உரசி சைக்கிள் கேப்பி ல் பறந்தது பைக்.  ஸ்டெர்லிங் சாலை பெட்ரோல் பங்க்தான் எண்ட் பாயின்ட். பைக்கில் இருந்து இறங்கி நீண்ட நேரத் துக்குப் பிறகும் வயிற்றைக் கலக்கிக்கொண்டே இருந் தது.
 
‘பிரதர்… இதெல்லாம் தப்பு இல் லையா? பப்ளிக்கை இப்படித் தொந் தரவு பண்ணலாமா? போலீஸ் பிடிச்சா என்ன சொல்வீங்க?” என்று கேட்டேன். ”ஹ… எங்களை சேஸ் பண்ணிப் பிடிக்க சென்னை சிட்டி யில ஒரு போலீஸ்கூடக் கிடையாதுங்க. ஏன், சோழாவரம் பைக் ரேஸர்கள்கூட எங்களைப் பிடிக்க முடியாது. ஏன்னா, அவங்களுக்கு டிராக்குல மட்டும்தான் ஓட்டத் தெரியும். டிராஃபிக்ல ஓட்ட எங்க ளுக்குத்தான் தெரியும். சரி… வாங்க அடுத்து மவுன்ட் ரோட்ல ஒரு ஜெர்க் போடலாமா?” என்று அழைத்தான். தலைக்கு மேலே கும்பி டு போட்டு இடத் தைக் காலி செய்தேன்.பிறகு, பைக் ரேஸ் விவரங் களை விசாரித்தால், டாப் கியரில் கிறுகிறுப்பு தட்டு கிறது. டிராக் ரேஸ்களைப் போ லவே பக்கா பகீர் விதிமுறைக ளுடன் சென்னை யில் நடக்கி ன்றன ஸ்ட்ரீட் ரேஸ்கள். ஃபார் முலா 1 முதல் ஃபார் முலா 7 வரை பல பிரிவுகளாகப் பிரித் து விதவி தமாக ரேஸ் நடத் துகிறார்கள். பல்ஸர் 180, பல் ஸர் 220, யமஹா ஆர்-15, கரிஷ்மா, அப் பாச்சி, யமஹா ஆர்.எக்ஸ் 100 இவையே ரேஸுக்கான பைக்குகள்.
 
ஃபார்முலா 1: 
ரேஸுக்கு அறிமுகமாகும் பொடிப் பையன்களுக்கா ன வரவேற்புப் பிரிவு. அதிகாலை அல்லது இரவு 10 மணிக்கு மேல் வெறிச்சோடிய சாலைகளில் நடக்கும். பைக்கை டியூன் செய்யக் கூடாது. அடை யாறு பாலம் தொடங்கி கலங்க ரை விளக்கம் சிக்னலுக்கு முன் முடியும் இந்த ரேஸ். ஐந்து நிமி டங்களுக்குள் வந்து சேர வே ண்டும். 1,000 ரூபாய் அல்லது பீர் பார்ட்டி… இதுதான் பந்தய ம்.
 
ஃபார்முலா 2: 
தாம்பரம், மதுரவாயல், கானா த்தூர் புறநகர் பைபாஸ், கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் ஓ. எம்.ஆர். பக்கம் பகல் நேரங்களில் நடக்கும் ரேஸ். டபுள்ஸ் கட்டா யம். 10 கி.மீ. பயண தூரம். பைக் டியூனிங் கூடாது. சைலன்ஸரின் உள்ளே இருக்கும் மப்ளரை வெட்டக் கூடாது. ஹெல்மெட் கட்டா யம். பந்தயத் தொ கை 5,000 தொடங்கி 10 ஆயிரம் வரை!
 
ஃபார்முலா 3:
காந்தி சிலை டு ராயபுரம் அல்லது காந்தி சிலை டு திருவான்மியூர் ரூட். பைக் நன்றாக ஓட்டத் தெரிந்த ரேஸர்கள் மட்டுமே பங்கெடுக்க முடியும். மித மான போக்குவரத்து இருக் கும் நண்பகல் 12 மணி யில் இருந்து மதியம் 3 மணிக் குள் ரேஸுவார்கள். ஹெல் மெட் அணியக் கூடாது. பந்த யம் பணம் மட்டுமே. 10 ஆயிரம் தொடங்கி 20 ஆயி ரம் வரை.
 
ஃபார்முலா 4:
காந்தி சிலையில் இருந்து ராயபுரம் சென்று அங்கு குறிப்பிட்ட நபரி டம் இருக்கும் ரகசிய எண் எழுதப்பட்ட அட்டை யை வாங்கிக் கொ ண்டு, ஜெமினி வழியாக வடபழனி லட்சுமண் – ஸ்ருதி சிக்னல் வரை சென்று அங்கு இன் னோர் அட்டையைப் பெற்று க்கொண்டு காந்தி சிலை வர வேண்டும். டபுள்ஸ் கட்டாயம். பந்தயத்தை நடத் துபவர்களின் பிரதிநிதிகள் பயண தூரம் முழுக்கப் பயணித்துக் கண்காணிப்பார் கள். நேரக் கணக்கு இல்லை. முதலில் வருபவரே வெற்றி யாளர். பந்தயத் தொகை 20 ஆயிரம் தொடங்கி 40 ஆயிரம் வரை.
 
ஃபார்முலா 5:
சென்னையின் குறிப்பிட்ட இரு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்க ளே இதில் பங்கெடுக்கிறார்கள். பல்ஸர் மற்றும் அப்பாச்சி பைக்கு களில் பூந்தமல்லி நெடுசாலையில் தாசப்ரகாஷ் ஹோட்டல் அரு கே தொடங்கி, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள மாநகராட்சிப் பூங்கா வரை. காலை மற்றும் மாலையின் பீக் ஹவர் களில் மட்டுமே இந்த ரேஸ் நடக்கும். 5,000 தொட ங்கி 20 ஆயிரம் வரை பந்தயம். சைலன்சரில் சின்ன மாற்றம் மேற்கொள்வ தன் மூலம் செம விர்ர்ர்ரூம் சத்தத்தையும் அதிக புகையை யும் கிளப்பு வார்கள்.  
 
ஃபார்முலா 6:
மெக்கானிக்குகளுக்கு இடை யே  நடத்தும் ரேஸ் இது. கலங் கரை விளக்கு முதல் திருவொ ற்றியூர் வரை. ஆறு மாதங்களு க்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறைதான் நடக்கும். ஒரு டீமூக்கு இரண்டு பைக்குகள். டபுள்ஸ் கட்டாயம். இரண்டில் எந்த பைக் முந்தி னாலும் அணிக்கு வெற்றிதான். மொத்தம் ஐந்து அணிகள் களத்தில் இருக்கும். பந் தயத் தொகை 50 ஆயிரம் தொடங்கி ஒரு லட்சம் வரை. போட்டி தொடங்கும் முன்னே நடுவரின் சாட்சிக் கையெழுத் துடன் பந்தயத் தொகைக்குப் பத்திரம் எழுதி விடுவார்கள். பெரும்பாலும் பல்ஸர் 220-தான் இந்தப் பந்தயத்தில் பறக்கும். குறிப்பிட்ட ஐந்து இடங்க ளில் பைக்கை ஜிக்ஜாக் செய்து, மெயின் ஸ்டாண்டை சாலையில் உரசி தீப்பொறி பறக்கவைக்க வேண்டும். இதைக் கண்காணி க்க ஸ்பாட்டில் ஆட்கள் இரு ப்பார்கள். பீக் ஹவரில் நகர நெரிசலில் தொடங்கி வட சென்னையின் புழுதி பறக்கும் சாலை கன்டெய்னர் லாரி டிரை வர்கள் வரை கண்ணில் விரல் விட்டு ஆட்டி விடுவார் கள் இந் த ரேஸர்கள். சைலன்சர் மட் டும் அல்ல, இன்ஜின் மற்றும் பெட்ரோல் டேங்குகளிலும் சிற்சில மாற்றங்களை மேற்கொண்டு பைக்கின் வேகத் திறனை அதிகரிப்பார்கள்.
 
ஃபார்முலா 7:
செம டெரர் ரேஸ் இது தான். தேர்ந்த மெக்கானிக்கு கள், கல்லூரி மாணவர்கள், ஆட்டோ டிரை வர்கள்எனக் கலந்து கட்டிய ரேஸர்கள் பங்கெடுக்கும் ரேஸ். இரண்டு இரண்டு பைக் குகளாக 10 அணிக ள் களம் இறங்கும். ஒரே சாலையில் அத்தனை பைக்குக ளும் சென்றால் சிக்கிக் கொள்வா ர்கள் என்பதால், ஒவ்வோர் அணிக்கும் ஒவ்வொரு ரூட். அனைத்து ரூட்டுகளும் சரியாக ஐந்து கி.மீ. தூரம் இருக்கும். ஹெல் மெட் அணியக் கூடாது. சைடு ஸ்டா ண்டை மடக்கக் கூடாது. பைக் கை ஜிக் ஜாக் செய்து ஐந்து இடங் களில் தீப்பொறி பறக்கவைக்க வேண்டும். சமயங்களில் பந்தயத் தொகை யைப் பொறுத்து பைக் பிரேக்கின் க்ரிப் மிகவும் குறைவாக இருக்க வேண்டும். சிக்னலில் நிற்கக் கூடாது. இவை இந்த ரேஸின் கண்டிப் பான விதிமுறைகள்.
 
கடும் போக்குவரத்து நெரிச லில் மட்டுமே நடக்கும் இந் த ரேஸில் வேகத்தைக் குறைக்க பிரேக் பிடிக்க மாட்டார்கள். கியர்கள் மூல மே வேகத்தைக் கட்டுப்ப டுத்தி, முழு த்ராட்டிலிலேயே பறப்பார் கள். எவ்வளவு போக்கு வரத்து நெரிசலிலும், வளைந்து நெளிந்து கட் அடித்துச் செல்வது இவர்களின் முதுகெலும்பைச் சிலிர்க்கச் செய்யும் ஸ்பெஷாலிட்டி. ரேஸின்போது வேறு வழி இல்லாமல் சிக்னலில் வண்டி யை நிறுத்தியவர்கள், போலீ ஸிடம் மாட்டியவர் கள், தடு மாறிக் கீழே விழுந்தவர்கள், விபத்தை ஏற்படுத்தியவர்கள் வாழ்நாள் முழுக்க மீண்டும் ரேஸில் கலந்துகொள்ள அனு மதி இல்லை.இந்த ரேஸில் கலந்துகொள்ளும் பைக்குகளி ன் மதிப்பு ஏழெட்டு லட்சங்க ளை நெருங்கும். தவிர, ரீ-மாடிஃபிகேஷனுக்கு ஓரிரு லட்சங்களை இறைத்திருப்பார்கள். பந்தயத் தொகை ஒரு 

லட்சம் தொடங்கி 10 லட்சம் தாண்டியும் எகிறும். அதிக ரேஸ்களில் ஜெயி த்த பைக் கும் சமயங்களில் பந்தயமாக வரும். இதில் பெரும்பா லும் பைக்கை ஓட்டுபவர் பணம் கட்ட மாட்டார். குதிரை ப் பந்தய த்தில் குதிரையை ஓட்டும் வீரன்போலத்தான் இதி ல் பைக்கை ஓட்டு பவரும். உயிரைப் பணயம் வைத்து பைக் ஓட்டு பவருக்குச் சம்பளம் 10 ஆயிரம் மட்டுமே. ஜெயித்த ரேஸர்களுக்கு பந்தயத் தொகையைப் பொறுத்து ஆயிரங்களில் தொடங்கி லட்சம் வரை போனஸ் கிடைக்கும்.இந்த ரேஸ் கொடுக்கும் விறுவிறு போதை இளைஞர்களைச் சுண்டி இழுக்கி றது. ஆனால், இதன் மறுபக்கம்… தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை யின் முன்னாள் இயக்குநர் டாக்டர் இளங்கோ, வாகன விப த்துகளில் ஏற்படும் தலைக் காயம் உண்டாக்கும் பகீர் வி ளைவுகளைப் பட்டியலிடுகிறா ர். ”தலைக் காயம் ஏற்படும்போ து மண்டையின் சருமம் கிழி ந்து, மண்டையோட்டு எலும்பு கள் நொறுங்கும். மூளையைப் பாதுகாக்கும் மூளை உறையி ல் ரத்தம் உறைந் துவிடும். மூளையின் உள்ளே நிரம்பியிருக்கும் திரவம் ரத்தம் கலந்து கா தில் வழியும். கண்ணுக்குச் செல்லும் நரம்புகள் அறுந்து கண் பார்வை பாதிக்கும். மூளைக்கு ரத்தம் செல் லும் நாளம் வெடித்து, மூளையின் உள்ளேயும் ரத்தம் உறைந்து விட்டால்… அது கிட்ட த்தட்ட மரண நிலை தான். மூளையில் உள் ள ஆக்சிஜன் அளவு குறைந்து, ரத்த அழுத் தம் உயரும். மூளையின் செல்கள் இறந்த தாலும் ரத்த இழப்பாலும் உடனடியாக உடலின் தாதுப் பொருட்கள் தட்டு ப்பாடு ஏற்பட்டு, சிறு நீர கமும் பாதிக்கும்! விபத்து நடந்த இடத்திலேயே அடிப்படை முதலுதவிகள் அளித்து உடனடியாக மரு த்துவமனையில் சேர்ப்பி க்கவில்லைஎன்றால், வா ழ்க்கையே கேள்விக்குறி யில் முடியும்!” என்கிறார்!
 
ஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் பைக் ரேஸ்கள் மிக அதிக அளவில் நடக்கும். போலீஸ் கண்காணிப்பு என்பதே கிட்டத் தட்ட இல்லாமல் இருந்தது. ஆனால், சமீப வருடங்களில் கொஞ் சம் கெடுபிடி காட்டினார்கள். இப்போது சிறுமி ஷைலஜாவின் மர ணத்துக்குப் பிறகு கெடுபிடி இன்னும் இறுகி இருக்கிறது. இருந்தா லும் ஸ்ட்ரீட் ரேஸர்கள் அசருவதாக இல்லை. இப்போதும் தினமு ம் ஒரு ரேஸ் சென்னையின் ஏதோ ஒரு மூலையில் விறுவிறுத் துக்கொண்டேதான் இருக்கிறது.
 
– விகடன்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: