Advertisements

எனது இந்தியா! (பிண்டாரிகளின் கொள்ளை!)

கூலிப் படைகளைவைத்துக் கொள்ளை அடிப்பதும் கொலை செய் வதும் வரலாறு நெடுக உண்டு. 18-ம் நூற்றாண்டில் வலிமை மிக்க கூலிப் படையாக ஒரு இனமே செயல்பட்டுவந்தது. அவர்களை பிண்டாரிகள் என்று அழைத்தனர். 20 ஆயி ரம் பேருக்கும் அதிகமான பிண்டாரியர், அப்போது மத்தி ய இந்தியாவைத் தங்கள் வசமா க்கி வைத்து இருந்தனர். இவர்களை, கட்டுப் பாட்டுக்கு ள் அடங்காத கொள்ளைக் கூட்டம் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்க ள் குறிப்பிடுகின்றனர்.  முகலாயப் பேரரசின் ஆட்சி நிலை குலைய ஆரம்பித்தவுடன், வட இந்தியாவில் நிறையக் குட்டி ராஜ்ஜியங்கள் தலை தூக்க ஆரம்பித்தன. மராட்டிய ஆட்சியாளர்களான சிந்தியா மற்றும் ஹோல்கர் ஆகியோரின் பாதுகாப்பு, பிண்டாரியருக்குக் கிடைத்த காரணத்தால் அவர்கள் வெல் ல முடியாத பெரும் சக்தி யாக வளர்ந்து நின்றனர். நர்மதைப் பள்ளத்தாக்கில் இருந்து கொ ண்டு, கிழக்கே ஒரிசாவின் கட்டாக், மேற்கே சூரத், தெற்கே ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மற்றும் கஞ்சம் ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதிகளி ல் கொள்ளை அடித்து வந்தனர். பிண்டா ரிகள் தமக்கென தனியே அரசு எதுவும் அமைக்கவில்லை. ஆனால், கூட்டமாக ச் சேர்ந்து தாக்கிக் கொள்ளையிட்டு, அதைவைத்து வாழ்வதுதான் அவர்களி ன்  தொழில். பிண்டாரியர் என்ற பெயர் வந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூற ப்படுகின்றன. சோளத்தில் இருந்து வடித்து எடுக்கப்படும் மதுவின் பெயர் பிந்தா. ஆகவே, அதைக் குடித்தவர்கள் பிந்தாரியர் என்று இர்வின் கூறுகிறார். பந்தார் என்ற இடம், பர்ஹான்பூருக்கு அருகில்

ஒளரங்கசீப்

உள்ளது. அங்கே இருந்து வந்தவர்கள் என்பதால், அவர்கள் பிண்டா ரிகள் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சரித்திர ஆசிரியர் சிவனடி, பிண்டாரியர் கள் பற்றிய தனது கட்டுரை ஒன்றில், ‘பல முக்கியத் தகவல்களைக் குறிப்பிட்டு இரு க்கிறார். அவரது கட்டுரையில், ஒளரங்க சீப்பின் ஆட்சிக்குப் பிறகே, பிண்டாரிகள் ஒன்று திரண்டு பெரும் கொள்ளைக் கூட் டமாக மாறினர். இவர்களின் மூதாதையர் கள் தக்காணத்தில் உள்ள பிஜப்பூரைச் சேர்ந்தவர்கள். அவர்கள், பட்டாணிய வம்சா வழியில் வந்தவர் களாக இருக்கக் கூடும். இவர்கள் முகமது கான், அகமது கான் என்ற இரண்டு ஆப்கானியர்களின் வழித்தோன்றல்கள் என்று கருதுவோரும் உண்டு. மராட்டிய ஆட் சியின் எழுச் சிக்கும், பிண்டாரிகளின் செயல்களுக்கும் இடையில் நெருக்க மான தொடர்பு இருந்து இருக்கிறது. அதாவது, போர்க் காலங்களில் சம்பளம் தரப்படாத துணைப் படை ஒன்று எப்போது மே இருக்கும். இந்தப் படையி ன் வேலை, தோல்வி அடைந்த நா ட்டுக்குள் புகுந்து அங்குள்ள மக்களைக் கொன்று, அவர்க ளின் வீடு களுக்குத் தீ வைத்து, கையில் கிடைத்த பொருட்க ளைக் கவர்ந்து, பெண்களை வன்புணர்ச்சி செய்து எதிரி மீண்டும் தலை எடுத்துவிடாம ல் அழித்து ஒழிப்பதாகும். அப்ப டி, அரசின் அனுமதியோடு கொ ள்ளையடிக்க அனுப்பப்படும் ஒரு பிரிவாகவே பிண்டாரிகள் இரு ந்தனர். அவர்களுக்கு அரசு மானியமாக நிலமும் தானியங்களும் தரப்பட் டதற்கும் சான்றுகள் இருக்கின்றன’ என்கிறார்.

இந்தப் பிண்டாரிகள், தனித் தனிக் குழுவாக இயங்கினர். இந்தக் குழுவில் கடன்காரர் கள் பிடியில் இருந்து தப்பி யவர்கள், குற்றங்களைச் செய்துவிட்டு அரசிடம் இரு ந்து தப்பி வந்தவர்கள், சமூ கத்தில் விலக்கிவைக்கப்பட் டவர் கள் எனப் பலரும் தாமாக வந்து சேர்ந்த னர். அதனால், பிண்டாரிகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது. பிண்டாரி இனப் பெண்களும் கொள்ளைக்கு உடன் செல்வது உண்டு. அப் படிச் செல்லும்போது, அவர் கள் ஒட்டகத்தையும் மட்ட க்குதிரையும் பயன்படுத்து வார்கள். இவர்களும், இரக்க மற்று வன் கொலை செய்யக் கூடியவர்கள் என்று, வரலா ற்று ஆசிரியர் ஜென் கின்ஸ் கூறுகிறார்.பிண்டாரிகள் ஓர் இடத்தில் கொள்ளையடிக்கப் போகும் முன், சாமியார்கள், ஜோதிடர்கள் மற்றும் வேலையாட் களை ஒற் றர்களாக அனுப்பித் தகவல்களைச் சேகரிப்பது வழக்கம். இவர்கள் ஆண்டு முழுவதும் கொள்ளை அடிக்கச் செல்வது இல்லை. வறட் சியான காலங்களில் மட்டுமே கொள்ளைக்குக் கிளம் புவார்கள். மழைக் காலம் வரும் வரை இந்தக் கொள்ளை நீடிக்கும். மழை தொ டங்கிவிட்டால், கிடைத்த பொரு ட்களோடு இருப்பிடம் திரும்பி வி டுவார்கள். அறுவடை முடிந்த பிறகு, எதிர்பாராமல் கிரா மங்க ளைத் தாக்கி கொள்ளை அடிப்பதும் உண்டு. கொள்ளை அடித்த பொருட் களை, தங்களுக்குள் முறையாகப் பிரித்துக் கொள்வார்கள். சில வேளைகளில், கொள்ளை அடித்த பொருட்களை சிறு நகரச் சந்தை களுக்குக் கழுதைகளில் ஏற் றிச் சென்று வணிகம் செய்வ தும் உண்டு .பிண்டாரிகளைக் கூலிப் படையாக வைத்திருந் தவர்கள் மராட்டிய ஆட்சியா ளர்களே. மராட்டியப் படை ஒரு பகுதிக்குள் நுழை யும் முன், பிண்டாரிகளை அவிழ் த்துவிடுவார்கள். இவர்களின் மூர்க்கமான தாக்குதலால் பயந்து மக்கள் ஒடுங்கி விடுவார்கள். அதன் பிறகு, தங்களுக்கு வேண்டிய பொருட்களைக் கொள்ளைய டித்து க்கொள்ள அனுமதி தரப்படும். சில நேரங்களில், பிண்டாரி கள் கொள்ளை அடித்த பொருட்களில் முக்கியமான நகைகள், வைரங்களை படைத் தலைவர்கள் பறித் துக்கொள்வதும் உண்டு. யுத்தம் இல்லாத காலத்தில், பிண்டாரிகளுக்குத் தானியமு ம் அடிப்படை வசதி களும் செய்துதர வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. முரட்டுத் துணியால் ஆன உடை அணிந்து, தலையில் கை க்குட்டைகளைக் கட்டி இரு ப்பது பிண்டாரிகளின் தனித்துவம். அவர்க ளின் விருப் பமான ஆயுதம், ஈட்டி. அதைப் பயன்படுத்துவதில், பிண்டாரிகளை யாரா லும் மிஞ்ச முடியாது. 12 முதல் 18 அடி நீளம் கொண்ட ஈட்டிகள் வைத்து இருந்த னர். பிண்டாரிகளின் தலைவன் சர்தார் என்று அழைக்கப்படுவார். அவரிடம் மட்டு மே துப்பாக்கி இருக்கும். 1,000 பேர் கொ ண்ட ஒரு பிண்டாரியர் குழுவில், 400 பேர் குதிரைகளிலும் மற்ற 400 பேர் ஒட்டகம், எருமை, கழுதை உள்ளி ட்ட வாகனங்களையும், மற்றவர்கள் கொள்ளையிட்ட பொருட்க ளைத் தூக்கி வருவதற்கும், ஏவல் பணி செய்வதற்கும் இருப்பார் கள். இவர்களைப் படைப் பொறுக்கிகள் என்று பிண்டாரிகள் குறி ப்பிடுகின்றனர். கொள்ளை அடிக்கச் செ ன்ற இடத்தில் இருந்து, அழகான பெண்க ளைத் தூக்கி வந்து திருமணம் செய்து கொள்வதும், வலிமையான ஆண்களை அடிமைகளாக வைத்து க்கொள்வதும் பிண்டாரிகளின் வழக்கம். அவர்கள் கொ ள்ளைக்குக் கிளம்பும் போது, சிவப்பு வண்ணத்தில் பாம்பு உருவம் பதித்த கொடியுடன் கிளம்புவார்கள். சில குழுக்கள் பச்சை அல்லது மஞ் சள் கொடியைப் பயன்படுத்துவதும் உண்டு.பிண்டாரி ஆண்கள் சவரம் செய்ய மாட்டார்கள். ஆகவே, அடர்ந்த தாடியோடு உள்ள அவர் களது தோற்றம் அச்சம் தருவதாக இருக்கும். நாய்கள்தான் அவர்க ளுக்குத் துணை. எங்கே சென்றாலும் பிண்டாரி, ஒரு நாயை து ணைக்கு அழைத்துச் செல்வான். பிண்டாரிக ளில் யாரா வது இறந்து விட்டால், அவரை உட்கார்ந்த நிலையில் வைத்துத் தான் புதைப் பார்கள்.பிண்டாரிகள், குதிரைகளைப் பழக்குவதில் தேர்ச்சி பெற்ற வர்கள். பொதுவாக, குதிரையில் ஒருநாளில்30 கிலோ மீட்டர் தூர மே பயணம் செய்வார்கள். ஆனால், பிண்டாரிகள் அவசரக் கால ங்களில் ஒரு நாளில் 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு க்கூட குதிரையி ல் செல்வது உண்டு. அப்படி வேகமாகச் செல்வதற்காக குதிரைகளு க்குப் போதை தரும் செடி களைத் தின்னக் கொடுப்பார் கள். அது போல, பிண்டாரி கள், படைப் பிரிவுகளை எதி ர்கொண்டால் அவர்களோடு சண்டை இடுவதற்குப் பதிலாக, தப்பிச் செல்லத்தான் முயற்சி ப்பார்கள். காரணம், அவர்கள் சண்டை போடுவதைவிட கொள்ளை அடிப்பதே தங்கள் வேலை என்று நினைக்கக்கூடியவர்கள். மீறி, படை வீரர்கள் அவர்களைத் தாக்கினால் சிறு குழுக்க ளாகப் பிரிந்து சட்டென ஒளிந்துவிடுவார்கள். பிண்டா ரிகள், எந்த ஒரு தலைவனுக்கும் விசுவா சமாக நடந்துகொள்ள மாட்டார்கள். அவ ர்கள் தன்னிச்சையாக செயல்படக் கூடிய வர்கள். ஆகவே, அவர்கள் தங்க ளையும் கொன்றுவிடக்கூடும் என்று பயந்த மராட் டிய ஆளுனர்கள், பிண்டாரிகளை சந்தேக த்துடனேயே எப்போதும் நடத்தினர். தச ரா விழாதான் பிண்டாரிகளின் முக்கிய விழா. அந்த நாட்களில் அவர்கள் கொடி ஏற்றி தங்களின் வீரப்பிரதாபங்களைக் காட்டுவார் கள். விழா நேரங்களில், அவர்களுக்குள் குழுச் சண்டை ஏற்படுவது ம் உண்டு. தசரா முடிந்தவுடன் கொள்ளைக்குத் திட்ட மிடுவார்கள். காரணம், கடவுளின் ஆசி தங்களுக்குப் பூரணமாக கிடைத்து இரு க்கிறது என்ற நம்பிக்கையே!பிண்டாரிகளில் பலர் முஸ்லிம்களாக இருந்தபோதும், அவர் கள் உள்ளூர்க் குல தெய்வங்களை வழி படுவ தில் ஈடுபாடு காட்டினர். அதிலும், கொள்ளை அடிக்கப் போகும் போது, குலதெய்வங்களுக்குப் படையல் போட் டு வணங்கிச் செல்வது வழக்கம். ‘ராம் ஷா’ என்ற ஞானியின் உருவம் பதித்த சிறிய டாலரை அவர்கள் கழுத்தில் அணிந்துகொண்டு கொள்ளை அடிக்கச் செல்வது வழக்க ம். கொள்ளை அடிக்கப் போன இடங்களில், மக்களை சித்ரவதை செய்வதில் பிண்டாரி கள் மிகக் குரூரமான வர்கள். பழுக்கக் கா ய்ச் சிய இரும்பைக் கொண்டு குதிகாலில் சூடு போடுவது, குதி ரைக்கு வைக்கும் கொள்ளுப் பைக்குள் சுடுசாம்பலைக்  கொட்டி அதைத் தலையில் கட்டிவிடுவது, துணிக ளின்மீது எண்ணெய் ஊற்றி உயிரோடு நெருப்பு வைப்பது, கை கால் களைத் துண்டிப்பது, இடு ப்பில் மரப் பலகையைப் போட்டு அதன் மீது ஏறி நின்று இடுப்பை முறிப்பது என்று, அவர்களின் கொடூர மான சித்ரவதைகளுக்குப் பயந்து, அவர்கள் கேட்ட பொருட் களை மக்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். பிண்டாரிகளின் பெய ரைக் கேட்டாலே மக்கள் அஞ்சி நடுங்கினர். சில ஊர்களில், கண்காணி ப்புக் கோபுரங்கள் அமைத்து, பிண்டாரிகள் வருவதைப் பற்றி எச்ச ரிக்கை செய்வதும் நடந்து இருக்கிறது.
1815-ம் ஆண்டு சென்னை ராஜதானியில் இருந்த மசூலிப்பட்டினம் பகுதிக்குள், 10 ஆயிர த்துக்கும் மேற்பட்ட பிண் டாரிகள் தாக்குதல் நடத்தி, 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொள்ளை அடித்தனர். இந்தப் பகுதி யில், கர்னல் டவ்டன் தலை மையில் ஒரு படை பாது காப்புப் பணியை மேற் கொண்டு இருந்தது. அந்தப் படையின் கண்ணில் மண் ணைத் தூவிவிட்டு பிண்டாரிகள் கொள்ளை அடித்தனர். இந்தக் கொள்ளையின்போது, பிரிட்டிஷ் பாதுகாப்பில் இருந்த அலுவல கங்கள், வீடுகள், அத்தனைக்கும் தீ வைத்துவிட்டனர். பயந்து போன மக்கள் ஊரைக் காலி செய்து வெளியேறினர். பிரிட்டிஷ் படையால் மக்களைப் பாதுகா க்க முடியாது என்ற நிலை உருவாகி விட்டதைக் கண்டு, ஆத்திரம் அடைந்த ஹேஸ் டிங் பிரபு, பிண் டாரிகளை ஒடுக்க தனிப் படைப் பிரிவு ஒன்றை உருவாக்கினார். அந்தப் படையினர், பிண்டாரி களின் கொள்ளையைத் தடுக் கும் முயற்சியில் இறங்கினர். பிடார் மற்றும் கஞ்சம் பகுதிகளில் கொள்ளை அடிக்க வந்த கும்ப லை, மேஜர் மெக்டோவல் சுற்றி வளைத்துத் தாக்கினார். எதிர்பா

எஸ். ராமகிருஷ்ணன்

ராத இந்தத் தாக்குதலில், பிண்டாரிகளில் பலர் படு காயம் அடைந்தனர். பேஷ் வா ஆட்சிப்பகுதியில் கொள்ளை யிட வந்தவர்களை, மேஜர் லூசிங்டன் மறைந் திருந்து தாக் கினார். இதில், 300-க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர். 500 பேர் தப்பி ஓடினர். இந்தத் தாக்கு தலுக்குப் பதிலடி கொ டுக்க, பிண்டாரிகள் திடீர்த் தா க்குதல் நடத் தினர். பூரி ஜெக னாதர் ஆல யத்தைத் தாக்கிக் கொள்ளை அடிக்கப் போ கிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், பிரிட்டிஷ் படை அதன் பாதுகாப் புக்குப் போனது. ஆனால், அவர்கள் அங்கே கொள் ளை அடிக்காமல், கஞ்சம் பகுதி யைத் தாக்கிப் பெரு ம் கொள்ளை அடித்தனர்.

 – எஸ். ராமகிருஷ்ணன், விகடன்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: