Advertisements

“இவர்களது” இல்லம்தான் “காதல் ஜோடி”களின் சரணாலயம்!

“நீ ஒண்ணும் பயப்படாதே… சதீஷ் அண்ணாவும், பிரியா அண்ணியு ம் இருக்காங்க!” நாகர்கோவில் வட்டார க் காதலர்களுக்கு திருமணத்துக்கான நம்பிக்கை மந்திரம் இதுதான்.
ஆம்..உண்மைக் காதலர்களுக்கு நல்ல அரணாகி, ‘டும் டும் டும்’ கொட்ட வைக்கி றார்கள், நாகர்கோவில் அருகிலுள்ள தாழக்குடி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் – பிரியா தம்பதி. ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இவர்களது இல்லம் தான், இப் போது காதல் ஜோடிகளின் சரணாலயம்!

எங்கிருந்து விழுந்தது இதற்கு விதை?

”ப்ளஸ் டூ படிச்சப்போ, ரொம்ப அறிவாளியான ஒருத்தன் எனக்கு ஃப்ரெண்ட். ஒரு பொண்ணை உயிருக்கு உயிரா நேசிச்சான். இந்த விஷயம் எப்படியோ பொண்ணு வீட்டுக்குத் தெரிய, சின்ன வயசு லயே அவசர அவசரமா வேற ஒருத் தருக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க. அதில் இருந்து படிப்பு, ஃப்ரெண்ட்ஸுனு எல்லாத் தையும் விட்டு விலகி நடை பிணமா வாழ்ந்துட்டு இருக்கான் என் ஃப்ரெண்ட். அந்தப் பொண்ணு க்கும் சந்தோஷமான வாழ்க்கை அமையல. அப்போதான் முடிவு பண்ணினேன்… உண்மையான காதலர்களை உயிரைக் கொடுத் தாவது சேர்த்து வைக்கணும்னு. நாளாக ஆக, அதுவே எனக்கான அடையாளமா மாறிப்போச்சு!” என்ற சதீஷிடம் அவரின் காதல் கதை கேட்டோம். பகிர்ந்தவர்… பிரியா.

”நான் ப்ளஸ் டூ படிச்சு ட்டு இருந்தேன். இவர் வீட்டுக்குப் பக்கத்தில் தான் டியூஷன். இவ ரைப் பத்தி தெரிஞ்சப் போ, ஆச்சர்யமா இரு ந்தது. ஆனா, அவரே எங்கிட்ட வந்து ‘ஐ லவ் யூ’ சொல்வார்னு எதிர் பார்க்கல. நண்ப ர்களோட காதலுக் காக இவ்வளவு ரிஸ்க் எடுக்கறவர், கண்டிப்பா காதல் மனைவியை நல்லா வெச்சுப்பார்னு தோணுச்சு. ரெண்டு வீட்டு சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட் டோம். இப்போ அவர் ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்க் கறார். எங்க பொண்ணு நிஷா, எல்.கே.ஜி படிக்கறா. இதுவரை கிட்ட த்தட்ட 40-க்கும் மேல் காதல் திரு மணங்களை நடத்தி வெச்சுருக் கார். உள்ளூர்ல மட்டும் 15 ஜோடி கள் இவரால் சேர்ந்திருக்காங்க. கல்யாணத்துக்கு அப்புறம் நானும் இவரோட சேவையில் இணைஞ் சுட்டேன்!” என்கிறார் புன்னகையு டன்.

”ஏதோ ஆர்வக் கோளாறில், அவச ரத்தில் எந்த திருமணத்தையும் நாங்க முடிக்கிறதில்லை. ஆணா இருந்தாலும், பெண்ணா இருந்தா லும்… லைஃப்ல நிச்சயமா யாரை யாவது பார்த்து இம்ப்ரஸ் ஆகத் தான் செய்வாங்க. அதை ‘இன்ஃபே ச்சுவேஷன்’னு இங்கிலீஷ்ல சொல்வாங்க. அதை, காதல்னு சொல் லி எங்ககிட்ட வந்து நிக்கற வங்கள, கவுன்சலிங் கொடுத்து அனுப் பி டுவோம். உண்மையான காதலோட வந்தா… பையனோட வேலை, சம்ப ளம், பழக்க வழக்கங்கள், பொண் ணோட வயசு, மனசு, திருமண பந் தத்தில் இணைஞ்சு வாழ்க்கையைச் செலுத்துற பொருளாதார பலமும், மனப் பக்குவ மும் அவங்களுக்கு இருக்கா – இப்படி, பல விஷயங்களையும் பரிசீலனை செய்துதான் முடிவெடுப்போம்… கிட்டத்தட்ட பெற்றோ ர்களின் பொறுப்போட.

இந்த அம்சங்களையும் தாண்டி சாதி, மதம், குடும்ப கௌரவம்னு வீண் பொருத்தங்களையும் எதிர் பார்த்து வீம்பு பண்ணுவாங்க பெற் றோர். அப்படி பிரச்னை பண்ணும் போது, சமரச முயற்சியைத்தான் முதல்ல எடுப்போம். அது முடியா ம போனா, நாங்களே முன்ன நின் னு திருமணத்தை முடிச்சுடு வோம்!” என்று பெருமையோடு சொன்னார் சதீஷ்.

இவர்கள் சேர்த்து வைத்த ஜோடிகளில் ஒன்று நாதன் – தீபா. அதைப் பற்றி பேசிய நாதன், ”நா னும் தீபாவும் அடுத்தடுத்த வீடு. காதலிச்சோம். உள்ளாட்சித் தேர் தல்ல எங்க ரெண்டு குடும்பத்து ஆட்களும் ஒருத்தரை ஒருத்தர் எதிர்த்து எலெக்ஷன்ல நிக்க, எங்க ரெண்டு குடும்பத்துக்கு இடையே சுமுகம் செத்து பகைமை வளர்ந் துச்சு. காதல் பத்தியும் அவங்களு க்குத் தெரிஞ்சு, தீபாவை சொந்த க்காரங்க வீட்டுல விட்டுட்டாங்க. நான், சதீஷ் அண்ணன்கிட்ட வந்து நின்னேன். பிரியா அண்ணி காலேஜுக்கே போய் தீபாவை கூட்டிட்டு வர, கேரளா, பாற சா லை யில ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வெச்சாங்க. இப்போ எங் களுக்கு நரேஷ்னு ஒரு குட்டிப் பை யன் இருக்கான்” என்றார்.

நாம் சென்றிருந்த நேரம் தங்கள் குழந்தையின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் இருந்த சங்கர் – சுபா தம்பதி, ”எங்களைச் சேர்த்து வெச்சதும் இவங்கதான்!” என் றார்கள் இனிப்பு தந்து.  

”பிள்ளைகளோட உண்மை யான சந்தோஷத்துக்காக வறட்டு கௌரவம், பிடிவா தம் எல்லாத்தையும் பெற் றோர்கள் விட்டுக் கொடுத் தா, நாங்க சந்தோஷமா வி. ஆர்.எஸ். வாங்கிக்கிடுவோம் !” என்று சிரிக்கும் சதீஷ§ம், பிரியாவும் குமரி மாவட்டத்தில் காதல் ஜோடிகள் பலரின் உள்ளத்திலும் நன்றி யோடு நினைவில் இருக்கி றார்கள்!

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர்    என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: