Advertisements

பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவானது எப்ப‍டி? சுவாரஸ்யத் தகவல்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின் றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொ ல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங் கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார் த்திருப்போமா! இதோ இப்போது பார்ப்போமா!

1.அடோப் (ADOBE):

இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக் காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின் புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.

2. ஆப்பிள் (APPLE):


ஆப்பிள் நிறுவனத்தின் முத ல் இலச்சினை வாசகம் என் ன தெரியுமா! – “Bite into an Apple”என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ் லோகன் ஆக இருந்தது.

ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோ கன் “Think Different” என்பதே. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற் காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவன த்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும்.

ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய் திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார்.

ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெய ரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.

3. கூகுள் (GOOGLE):

சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவன த்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண் ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண் ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் “Googol” என்ற சொல்லை முதலில் வைத்த னர்.

இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ் டேக் ஏற்பட நமக்கு “Google” என்ற பெயர் கிடைத்தது.

அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்படவி ல்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது.

இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டி னைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர்.

அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் “Google”” எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல் லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.

4.ஹாட் மெயில் (HOTMAIL):

இந்த நிறுவனத்தைத் தொடங்கிய வர் ஜாக் ஸ்மித். இணையம் வழியா க இமெயில்களைப் பெறும் வழி குறி த்து முதலில் யோசித்துள்ளார்.

அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் து ணையின்றி, அவர்கள் சர்வரில் இட ம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹா ட்மெயிலை வடிவமைத்தார்.

ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட் டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார்.

இறுதியாக HOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில் பயன்படுத் தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம்.

HOTMAIL என்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது.

முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.

5. இன்டெல் (INTEL):

இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களி ன் புதிய நிறுவனத்தை “Moore Noyce” என அழைக்க முதலில் முடிவு செய்தனர்.

ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரிய வந்தது. அந்த பெயர் அந்த நிறுவன த்தால் பதியப்பட்டது தெரிய வந்த தால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள்.

அப்போது to ‘more noise’ என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவ றான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர்.

பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன் படுத்தினர். அதன் பின் INTegrated Electronics என்ற பெயரைச் சுருக்கி INTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.

6. மைக்ரோசாப்ட் (MICROSOFT):

பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற் ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற் றும் Software என்ற இரண்டை யும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது.

முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம்.

அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது.

அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவன த்தின் பெயராக அமைந்தது.

7. யாஹூ (YAHOO):

தொடக்கத்தில் இந்த நிறுவன த்தின் பெயர் “Jerry and David’s Guide to the World Wide Web” என்பதாக இருந் தது. 1994ல் யாஹூ என்ற பெய ருக்கு மாறியது.

ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங் கள் என்ற நாவலில் “Yet Another Hierarchical Officious Oracle” என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO என்பதைப் பயன்படு த்தினார்.

இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரி யாத இளைஞனைக் குறிக்கும்.

யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும் டேவிட் பை லோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: