Advertisements

பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ?

பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? உங்களை ஒரு சவா லான  பயிற்சிக்கு அழை க்கிறார் சென்னை டாக் டர். கேட்பதற்கு கொஞ்ச ம் டூபாக்கூர் போலத் தெரியும்.ஆனால் கண் ணால் காண் பதும் பொய் ! காதால் கேட்பதும் பொ ய் தீர விசாரிப்பதே மெய் என்ற சொல் எதற்கு பொ ருந்துமோ தெரியாது, இந்த டாக்டருக்கு நூறு சதவிதம் பொருந்தும்.

முற்பிறவிப் பற்றி பலகதைகள் கேட்டு இருக்கிறோம், காமிக்ஸ் புத்தகங்களில் படித்து இருக்கிறோம்,ஆனால் நிஜத்தில் அப்படி நட க்கிறது என்று சொன்னால் நம்புவோமா? அதுவும் இந்த கம்ப்யூ ட்டர் யுகத்தில் உங்களை பூர்வஜென்மத்திற்கு கொ ண்டு செல்கிறேன் என் று ஒருவர் சொன்னால் “என்ன வச்சு காமெடி கிமடி பண்ணலை இல் லைனு கேட்கத்தோணும் இல்லையா?. ஆனால் முடியும் என்று சவால் விடுகிறார் ஒரு உளவி யல் சிகிச்சை நிபுணர். இது என்ன டிவி-யில் பேசி கல்லு விக்கிற சமாச்சாரம்போல இருக் குமோ என்று பார்த்தால் கண்முன்னால் சாதி த்து காட்டுகிறார் இந்த உளவியல் நிபுணர் சி.ஜெ.ஜெயச்சந்தர்.

பெங்களுரில் உளவியல் சிகிச்சைமையம் நட த்திவரும் சென்னையை சேர்ந்த இவர் ,பூர்வ ஜென்மம் பற்றிய ஆராய்ச்சியாளரும் கூட. உலக புகழ்பெற்ற முற்பிறவி ஆராய்ச்சி மேதை டாக்டர் .ஹாண்ஸ் டேண்டம்-ன் மாணவரான இவர் யாரையும் ஒரு டீ குடிக்கும் அவகா சத்திற்குள் ஆழ்நிலைக்கு ஆழ்த்தி முற்பிறவிக்கு கொண்டு போகி றார்.

பெங்களுரில் ஒரு மழைகால மாலைப்பொழுது அவரின் பயிற்சி மையத்தில் காத்திருந்தோம்.ஒரு நடுத்தர வயது மனிதர் அவர், தோற்றத்தைப் பார் க்கும் பெரும் பணக்காரர் என்று தெரிகிறது, என்ன பிரச்சனை என்று கேட்கிறார் ஜெய ச்சந்தர். உடல்முழுவதும் இனம் காண முடி யாத வலி என்கிறார் அவர்.

”எப்போதில் இருந்து”
“எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து”
”முன்பு ஏதேனும் சிகிச்சை எடுதிருக்கிறீர்களா..?”
வந்தவர் ஒரு பெரிய பைலைக் காண்பிக்கிறார்.அவரின் சொத்தில் பாதி கரைந்து மருத்துவ அறிக்கைகளாக இருக்கிறது.
“இவ்வளவு சிகிச்சை பண்ணியும் குணமாகலையா ?” ஆச்சர்ய முடன் கேட்கிறார் டாக்டர்.
“ வலி இன்னும் இருக்கிறது…குறை யவில்லை…!” வந்தவர் கண்க ளில் வேதனை தெரிகிறது.
”சரி நாம முயற்சி பண்ணி பார்க்க லாம்..” என்ற டாக்டர் அவரை வசதி யாகப் படுக்கச் சொல்கிறார். கண்க ளை மூடிக்கொண்டே மூச்சை மட் டும் கவனிக்கச் சொல்கிறார்.சில நிமிடங்கள் பேச்சுக்கொ டுத்துக் கொ ண்டே அவரை ஆழ்நிலைக்கு கொண் டு செல்கிறார்.

இயல்பாக பேசிக்கொண்டிருந்த அந்த நபரின் குரலும் உடல் பாவ னைகளும் திடீரென மாறுகிறது. அவர் உச்சரிக்கும் வார்த்தைகளும் முகமாற்றங்களும் நம்மை ஒரு ஆச்சர்யமான நம்புவதற்கு கடின மான உலகிற்கு அழைத்துச் செல்கிறது.

அந்த நபர் ஒரு போர்களத்தில் நிற்கிறார்.
காலம் அவரால் சொல்லமுடியவில்லை.
இடையிடையே புரியாத மொழியில் கட்டளையிடுகிறார்.

அவரிடம் பேச்சிக்கொடுக்கும் டாக்டர் “ நீங்கள் எங்கு இருக்கி றீர்கள்” என்று கே ட்க அவர் “ நான் போரில் சண்டையிட்டு கொண்டி ருக்கிறேன்” என்கிறார்.

மனிதர் தூக்கத்தில் இருந்தாலும் உடல் மொழி ஒரு போர்வீரன் மும் முரமாக சண்டையிடும் அசைவுக ளைத் தருகிறது.அவரிடன் பேச்சு க்கொடுத்துக்கொண்டே மேலும் ஆழமாக பின்னொக்கி செல்ல அவரின் ஆழ்மனதுக்கு கட்டளை யிடுகிறார் டாக்டர்.

மேலும் மேலும் ஆழமாக செல்லும் நபர் மிகுந்த வலியை மனதில் காண்பித்தவராக “ஆ……….!” என்ற அலறுலுடன் கைகக ளை தூக்கி நெஞ்சிற்கு நேராக நீட்டி எதையோ பிடுங்குவது போ ல பாவனை செய்கிறார்.

அவரின் முகத்தில் மரண வே தனை தெரிகிறது. கொஞ்சம் மூச்சு திணறலுடன் மீண்டும் மீண்டும் எதையோ பிடுங்வது போல முயற்சி செய்கிறார். அவரின் பாவனையைப் பார்க்கும் டாக்டர் “என்ன நடக்கிறது..!” என்று கேட்கிறார்.

“ என் நெஞ்சில் ஈட்டி பாய்ந்துவிட்டது..” என்கிறார்.
“நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் ?”
“நான் இறந்துகொண்டு இருக்கிறேன்..” அந்த நபர்.
”எப்படி இறக்கிறீர்கள்…!”
“ஈட்டியால் குத்தப்பட்டு..”
” இப்போது எங்கு இருக்கிறீர் கள் ”
“கீழே என் உடல் இருக் கிறது….நான் உடலின் மேல் மிதந்துக் கொண்டிருக்கிறே ன்…”
“உடல் எப்படி இருக்கிறது”
“அது ஈட்டிக் குத்தப்பட்டு உயி ரற்று கிடக்கிறது”
இதைக்கேட்டவுடன் ஏதோ புரிந்து போல் முகமாற்றம் அடைகிறார். நம்மிடன் கிசுகிசுப்பாக, இவரின் ஒரு பிறவியில் ஏற்பட்ட இந்த நிக ழ்வுதான் இன்றைய இப்போதைய  உடல்வலியாக தொடர்கிறது. இந் த மனிதருக்கு உளவியல் ரீதியாக ஒரு சிகிச்சைத் தருவோம் என்கிறார்.

பின்னர் அவருக்கு நம்பிக்கையூட்டும் சில  ஆழ் மனக்கட்டளைக ளை பிறப்பிக்கிறார், பின்னர் அவர் மனதிற்கு வலிவூட்டி, அவரே அந்த ஈட்டியை பிடுங்கி எறியுமாறு உத்தரவு தருகிறார். அவர் ஈட்டி பிடுங்கும் பாவனை கள் நம்மை மிரட்டுகின்றன, டாக்டர் அலட்டிக் கொள்ளாமல் அவருக்கு கட்டளைத் தருகிறா ர். ஈட்டியை பிடுங்கி எறிந்த நிம்மதியுடன் அவரின் உடலும்,மனமும் சீரான நிலைக்கு வருகிறது.

சிறிது நேரத்தில் பழையபடியே கண்விழிக்கிறார் அந்த நபர். இப் போது அவர் முகத்தில் ஏதோ ஒரு தெளிவு தெரிகிறது.

சிகிச்சை முடிந்து நம்மை பார்த்து சிரிக்கிறார் ஜெயச்சந்தர்.நாம் நம்பிக்கையில்லாமல் நோயாளியைப் பார்க்க,அவர் நிம்மதியான மகிழ்ச்சியுடன் இருக்கிறார். தான் ஆழ்நிலைத்தூக்கத்தில் பார்த்த தை இன்னொருமுறை விளக்குகிறார். சிகிச்சையின் பலனை முழு வதும் நம்புகிறார் என்று அவரின் பேச்சு உணர்த்துகிறது.

நமக்கு கொஞ்சம் குழப்பமாகதான் இருக்கிறது.இது ஏதேனும் கண் கட்டி வித்தையாக இருக்குமோ என்ற எண்ணம் எழ, டாக்டரே மீண் டும் பேசுகிறார்.

” என்ன சார்..இன்னும் நம்பிக் கை இல்லையா..? நீங்கள் விரு ம்பினால் உங்களையும் முன் ஜென்மத்திற்கு கொண்டு செல் கிறேன்…!” எ ன்கிறார்.

கொஞ்சம் யோசனைக்குப் பிற கு “என்னதான் சமாச்சாரம் பார்த்துவிடுவோமே..!” என்று தோன்ற தயாரானேன்.

அதே போன்ற சாய்வு நாற்காலியில் படுத்துக்கொள்ள, கண்களை மூடிக் கொண்டே நூறு முதல் தலை கீழாக சொல்லுமாறு கூறுகிறார் உளவியல் சிகிச்சை நிபுணர் ஜெயச்சந்தர்.

உள்ளுணர்வு விழிப்படையச் சொல்லி ஓசையெழுப்ப கொஞ்சம் உஷாராகவே எண்களைச் சொல்லி  வந்தேன்.

கொஞ்சம் தூக்கம் வருவது போல் இருந்தது.

உள்மனம் உஷார்…..உஷார் என்று சொல்ல…. மீண்டும் பலமாக உச்சரி த்தேன்.

நிபுணர் என்ன நினைத்தாரோ தெரி யவில்லை. மீண்டும் முதலில் இரு ந்து எண்ணுமாறு கூறுகிறார்.

மீண்டும் எண்ணத் தொடங்கினேன்.

நூறு….

தொண்ணுற்றி ஒன்பது….
தொண்ணுற்றி எட்டு….
தொண்ணுற்றி ஏழு…..
“…………………………………………….”
“…………………………………………….”
“எண்பத்தி ஒன்று….”
“………………………………………………”
“ எ…ழு…ப….த்……”
“அ…று….”
எப்போது அறுந்து போனேன் என்று தெரியவில்லை…நிஜ உலகில் இருந்து அறுந்து போனேன்.
சுயநினைவு இருந்து போலவும்…இல்லாதது போலவும் இருந்தது…
ஒரு குரல் என்னை கட்டுப்பாட்டிம் வைத்திருந்தது.
உளவியல் சிகிச்சையாளரின் மெல்லியக் குரல்.
” என்னுடன் பேசுங்கள்…..நீங்கள் பயப்பட தேவையில்லை…”
“…………………………………………………………”
“என்னுடன் பேசுங்கள்…பயப்படவேண்டாம்……என்னுடன் பேசுங்கள்…நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்….”
“ நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்……”
கிணற்றுக்குள் ஒலிப்பதைப்போல அந்த குரல், என்னுள் ஆழமாக ஊ டுருவ என்னை சுற்றிலும் பார்த் தேன்.
நான் ஒரு விமானத்தில் அமர்ந்து இரு ந்தேன்.
விமானம் பறந்துகொண்டிருந்து.
பார்பி பொம்மை போன்ற அழகு பணி ப்பெண்கள்,முன்னும் பின் னும் நடந்துசென்று பயணிகளுக்கு சே வையாற்றிக் கொண்டிருந் தார்கள். அவர்களைப் பார்க்கும்போதே பயனி களின் கண்களிலும் பட்டாம் பூச்சி பறந்துகொண்டிருந்தது.
எனக்கும்தான்….!

”நேகா…” என்ற ஒரு தேவதையை அழைத்து தண்ணீர் கேட்டேன்.
“ஹும்….!…….எனக்கு ஏற்பட்டதோ வேறு தாகம்,ஆனால் ஓடும் விமானத்தில் அவளிடம் தண்ணீர் மட்டும்தானே கேட்கமுடியும் ?
”ஒன் மினிட்..” என்று ஒய்யார நடைப்போட்டு அவள் செல்ல,அவள் விட்டு சென்ற பர்பியூம் வாசத்தை மோப்பம் பிடித்து என் நினைவு நாய்போல் சென்றது.

கண்களை மூடிக்கொண்டு அந்த தேவதையின் வரவிற்காக காத் திருந்த அந்த வினாடி நேரம்…..

“ டமார்…….”
என்  உடல் அதிர்ந்தது. உடல் முழுவதும் உஷ்ணம் பரவ…. விமா னம் சிதறி…ஒரு பெரும் ஜுவா லையாக கீழே போய்க் கொண் டிருக்க….

நாங்கள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தோம்..
கடவுளே….! எங்கள் உடல் எங்கே….?
கீழே புகையும் நெருப்பும் ….கீழே….கீழே…..புவியீர்ப்பில் சென்று கொண்டிருந்தது.
கடவுளே என் உடல்…..எங்கே?
அந்த எரிந்துவிழும் புழுதிக்குவியலில்… எது என் உடல்.
எனக்கு புரிந்து.
நான் இறந்துவிட்டேன். என் விமா னம் வெடித்து சிதறிவிட்டது.
என்னைப்போல உடலைத் தொலை த்த நேகா தேவதையும், இன்னும் பிற தேவதைகளும் இதோ உட லைத்தொலைத்து என்னைப் போல.. என்னைப்போல…. மிதந்து கொ ண்டு…..
எந்த உடல் என்னுள் ஹார்மோன் சுரப்பிகளைத்தூண்டிவிட்டதொ…அந்த உடல்
அழிந்து…வெறும் என்னைப்போல்…..
என்னுள் ஒரு அதிர்வு ஏற்பட்டது.
மேற்கண்ட காட்சிகளை உளவியல்சிகிச்சை நிபுணரிடம் ஒரு வாக் மூலம் போல் ஒப்பித்துக்கொண்டிருந்தேன்.
“இது எந்த ஆண்டு கேட்கிறார்..” உளவியல் நிபுணர்.
”1978..”
“எந்த இடம் ? “
அனைவரும் ஹிந்தியில் பேசுகிறார்கள……பம்பாயாக இரு க்கவேண்டும்…”
சில நிமிடங்கள் டாக்டர் சில ஆழ்மனக்கட்டளைகளை சொல் கிறார்.பின்னர் சில நிமிடங்களில் நிஜ உலகிற்கு வந்தேன்.
நம்பமுடியவில்லை என் ஆழ் மனதில் ஒரு படம் போல் பார்த்த காட்சிகள் என் புனர்ஜென்ம நிகழ்வுகளா..? இல்லை வெறு ம்….கற்பனையா..?
“இங்கபாருங்க சார்….டாக்டர் தன் லேப்டாப்பில்,இணையத்தில் தேடி,ஒரு தகவலைக்காட்டுகிறார்,
எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
மும்பையில் இருந்து துபாய்க்கு சென்ற ஏர் இந்தியா விமானம் மும்பை கடற்பரப்பில் வெடித்து சிதறியது பற்றிய செய்தி. நடந்த ஆண்டு 1978,
”நான் பிறந்த ஆண்டு 1978”
”உங்களுக்கு விமானம் என்றால் ரொம்ப பிடிக்கும்தானே…?” டாக்டர் கேட்க
“அய்யோ பிளைட்னா எனக்கு பயம், பறப்பதற்கு பயந்தே…நான் பல வெளிநாட்டுப் பயண வாய்ப்புகளை தவிர்த்து இருக்கிறேன்….”
“அதற்கு காரணம் உங்களின் இந்த முன் ஜென்ம நிகழ் வுதான்…..இப்போது கண்களை மூடி….யோசித்து சொல்லுங்கள்….. உங்களுக்கு இப்போது பறப்பதற்கு பயமா..?
“கண்களை மூடி யோசித்துப் பார்த்தேன்…விமான என்று நினை த்தால் முன்பு வரும் ஒரு உதறல்.,இப்போது எழவில்லை…….பறந்து பார்க்கலாமே என்ற ஆவல் வந்தது.
டாக்டர் சிரித்தார்.
”என்ன சார் இன்னும் நம்பலையா ?….உங்களுக்கு உளவியலில் ஆர் வம் இருந்தால் இரண்டு நாள் என்னுடன் இருங்கள்…..இதை உங்க ளுக்கும் சொல்லித்தருகிறேன்…..”
இரண்டு நாள் பயிற்சியில்.எல்லாம் பிடிபட்டது.
நம்பிக்கை வந்தது..
புனர்ஜென்மம்…முற்பிறவி என்பது உண்மையே.
இப்போதெல்லாம் என் பொழுதுபோக்கு நண்பர்களை பூர்வ ஜென் மத்திற்கு அழைத்துசெல்வது தான். அவர்களின் பூர்வஜென்ம கதை களை கேட்பதில் எனக்கு சுவரஸ்யம் என்றால்….உண்மையில் அவர்களின் பல உளவியல் பிரச்சனைகள் தீருவதாக கூறு கிறார்கள்.

உண்மையில் இதனை காவி உடை போட்டுக்கொண்டு செய்தால், நானும் கடவுளின் அவதாரம் என்று எல்லோரும் கொண்டாடு வார்கள்.

ஆனால் இது அறிவியல் சார்ந்த கலை,அனைவரும் ஒளிவு மறை வு இன்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புவர்களுக்கு கற்று த்தருகிறேன் என்கிறார் உளவியல் சிகிச்சை நிபுணர் திரு. ஜெயச்சந்தர்.

திரு.சி.ஜெ.ஜெயச்சந்தர். ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவு செய்ய லாம்

கைப்பேசி : 09886420936  /  9176952838 /  9551546565
மின்னஞ்சல் : info@basixinc.or
இணையம் : www.basixinc.org  

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Advertisements

9 Responses

 1. Intention to contact

  Like

 2. arumaiyana thagaval nandri nandri

  Like

 3. தினமும் இரவு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி முன் ஜென்மம்

  இந்நிகழ்ச்சியை பிரபல சின்ன‍த்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் திரு. அஜய் ரத்னம் அவர்கள்தொகுத்து வழங்கி வருகிறார்.

  தினமும் பிரபலங்களில் ஒருவரை அழைத்து, மருத்துவர் உதவியுடன் அவர்களை முன் ஜென்மத்திற்கு அழைத்துச்சென்று பழைய நினைவலைகளை அவரே கூறுகிறார்.

  நீங்களும் கண்டு பயனுறுங்கள்

  தங்களது பேராதரவுக்கு எனது நன்றிகள்

  தங்களது நல்லாதரவு தொடர விரும்பும்
  விதை2விருட்சம்

  Like

 4. நல்ல செய்தி.. இதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். நானும் என் பூர்வஜென்மத்தை அறிய ஆவலுடன் உள்ளேன்..
  விபரம் தாருங்கள்..

  Like

 5. Mr. kasi viswanathan

  நண்பரே! நான் மருத்துவர் கிடையாது.

  பல்வேறு இணையதளங்கள், பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரை -செய்திகளிலிருந்தும், தொலைக் காட்சிகளில் ஒளிபரபாகும் நிகழ்ச்சிகளில் இருந்தும் மிகச்சிறந்தவை எவை எனத் தேர்ந்தெடுத்து, அவற்றை முறையே தொகுத்து எனது வலைப்பூவில் வெளியிட்டு வருகிறேன். தங்களது பிரச்சனை என்ன‍வென்று கூறினால், அதற்கு தகுந்த பதிலை தேடி பிடித்து உங்களுக்கு அனுப்ப‍ ஏதுவாக இருக்கும்.

  தங்களது பேராதரவுக்கு எனது நன்றிகள்

  தங்களது நல்லாதரவு தொடர விரும்பும்
  விதை2விருட்சம்

  Like

 6. dr நானும் என் பூர்வ ஜென்மத்தை தெரிந்து கொள்ளலாமா. எனக்கு சில விசயங்களில் பயம் மற்றும் எதிர்பார்ப்பு உள்ளது. மற்றும் நிறைய அனுபவமும் உள்ளது. காசி

  Like

 7. கோமதி அவர்களுக்கு,

  எப்போதும் நமது மனம் நமது கட்டுப்பாட்டிலேயே தான் வைத்துக்கொள்ள‍வேண்டும். உங்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் அந்த பிரச்சனை உங்களது நெருங்கிய தோழியின் பிரச்சனையாக கருதி சிந்தித்துப்பாருங்கள் அந்த பிரச்சனைக்கு விரைவிலே யே நீங்களே ஒரு நல்ல‍ வழியினை கண்டுபிடிப்பீர்கள்.

  உங்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் அதை உங்களின் நலம் விரும்பிகளாக இருக்கும் நெருங்கிய உறவினர் அல்ல‍து நல்ல‍ தோழி(ழர்)களிடம் கலந்தாலோசியுங்கள்.

  பலர் உங்களுக்கு பலவிதமான ஆலோசனைகளை வழங்குவார்கள். ஆலோசனை கேட்பது தவறேதுமில்லை. ஆனால் அந்த ஆலோசனைகளை நன்கு ஆராய்ந்து உங்களது மனதுக்கு எது சரியென்று படுகிறதோ அதையே தங்க‌ளது இறுதியான உறுதியான‌ முடிவாக கொள்ளுங்கள்.

  கண்ணாடியில் தங்களது உருவத்தை பார்த்து, பொன்னான நேரத்தை செலவழிக்கும் பெண்களே அதிகம் ஆகையால் தங்களது சிகை அலங்காரம் மற்றும் உடையலங்காரங்க பாணிகளை சற்று மாற்றியபின் தங்களது உருவத்தை கண்ணாடியில் பாருங்கள். உங்களுக்கே ஒரு புதிய உற்சாகம் பிறக்கும்

  உங்களது மனம் சோர்வாக இருக்கும்போது உங்களுக்கென்று கட்டாயமாக ஒரு பழக்க‍த்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அது பொழுதுபோக்காக இல்லாமல் அது பிறருக்கு பயனுள்ள‍தாகவும் இருக்க‍ வேண்டும். உதாரணமாக இணைய தளமோ அல்ல‍து வலைப்பூவோ ஒன்றை உருவாக்கி அதில் உங்கள் எண்ணங்களை கட்டுரைகளாக வெளியிடலாம்.

  அல்ல‍து தாங்கள் விரும்பும் உருவங்களை ஓவியமாக வரைந்தோ அல்ல‍து ஏதேனும் கலைகளிலோ உங்க்களது பொன்னான நேரத்தை செலவிடலாம்.

  எப்போதும் மனதினை திடமாக வைத்துக்கொள்ள‍வேண்டும். நமது மனம் எப்போது பலவீனமாகிறதோ அப்போதே நாம் பிறரது கட்டுப்பாட்டிற்குள் சிக்கிட நேரிடும். இந்நேரத்தில் உங்களுக்கு தேவைப்படுவது தன்னம்பிக்கையும், தைரியமும்தான்.

  மரணத்தை நாம் அழைத்த‍தாக இருக்க‍ கூடாது. இந்த பூவுலகில் எந்ததொரு பிறவிக்கோளாறும் இன்றி பிறப்பதே அரிது! அப்படி எந்த விதமான பிற‌விக்கோளாறும் இல்லாமல் பிறந்த நீங்கள் எதற்காக இந்த மரணத்தை பற்றி நினைககிறீர்கள் இனி மரணத்தை பற்றி சிந்திக்க‍வேண்டாம்.

  எல்லாவற்றுக்கும் மேலாக தங்களது பகுதியை சார்ந்த நல்ல‍தொரு குடும்ப நல ஆலோசகரை சந்தித்து, தங்களது மனக்குமுறல்களையும், பிரச்சனைகளையும் அவரிடம் முறையிட்டு தங்களது பிரச்சனைக்கு தீர்வு காண முயலுங்கள்

  தங்களது பிரச்சனை என்ன‍வென்று நான் தெரிந்துகொள்ள‍லாமா?

  இப்ப‍டிக்கு
  – விதை2விருட்சம்

  Like

 8. Dear sir can i meet this dr online,because from my birth I feel very lonely,never attachment anyone,and now I am over and over loan promblems and now i am in sucide position,I take many move ments to clear this but i cant totally I am failure in my life,can i know any ways to releave my stage?

  Like

 9. 07-08-10?

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: