Advertisements

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍…

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍

இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திரு மணம். திருமணம் என்ற

சடங்கு நடந்து விட்ட காரணத்தாலேயே இரு முரண்பட்ட மனங்கள் உடன் வாழ்வது தேவையி ல்லாதது.

‘திருமணம் என்பது ஒரு சமூக ஒப் பந்தம் மட்டுமே’ என்பதை புரி

ந்து கொண்டால், திருமணம் என்ற சடங்கில் எந்த தெய்வீகத் தன்மையோ, புனிதத்த

ன்மையோ இல்லை என்பதை புரிந்து கொண்டால்‘ மணவில க்கு’என்ற சொல் எந்த விதத்திலும்அச்சுறுத்தாது.

2 மனங்கள் இணையும் திருமணத்தில் ஏதோ ஒருமனம் உடன்படமுடியா விட்டால் திருமணத்திற்கு முன்னரே பிரிவது அனைவருக்கும் நலம் பயக்கும். ஆனால் இந்திய திருமண சூழலில் திருமணத்தி ற்கு முன்மணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல.

உரியகாரணம் இன்றி பிரியும் துணையை மீண்டும் அழைக்க ‘மண வாழ்வுரிமை மீட்பு சட்டம் (Restitution of  Conjugal Rigths)’ பயன்படுகிறது.

பொருந்தாத திருமணத்திற்குப்பின், பிரிவதைத்தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுப்பவர்களுக்கும் சட்டம் வழிகாட்டுகிறது.

சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவு 27, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13, (கிறிஸ்தவர்களுக்கான) இந்திய திருமண முறிவுச் சட்டம் ஆகியவை மத சடங்குகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் (Agnostics), நாத்திகர்கள் (Atheists), இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியவர்களு க்கான மணமுறிவு உரிமைகளை விளக்குகின்றன.

சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி

1.வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறொருவருடன் விரும்பி உடலுறவு கொள்ளுதல்,

2.மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமை செய்தல்,

3.மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குகைவிட்டுச் செல்லுதல்,

4.தம்பதிகளில் ஒருவர் தீர்க்க முடியாத அளவில் மனநோய்க்கு ஆளாதல்,

5.தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால் பாதிக்கப்ப டுதல்,

6.தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதை தெரியாதிருத்தல்,

7.திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி (Sodomy), விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) கொண்ட குற்றம் செய்தல்,

8.தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்டனை சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றம் ஒன்றி ற்காக ஏழு ஆண்டுகளுக்கு குறையாத சி றைத்தண்டனை பெறுதல்

ஆகிய சூழ்நிலைகளின்போது பாதிக்கப்பட்டவர் உரிய நீதிமன்றத்தை அணுகி மண முறிவு கேட்டு மனுச் செய்யலாம்.

இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்தவர்கள், காரணம் 8 தவிர மேற்கண்ட காரணங்களுக்காகவோ, கணவரோ/மனைவியோ இல்லறத்திலிருந்து விலகி துற வறம் மேற்கொண்டாலோ, இந்து

மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறினா லோ அதைக்காரணமாக கூறி மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்த ஒரு ஆண், மனைவியை மண விலக்கு செய்ய வேண்டுமெனில், திருமணத்திற்கு பின்னர் மனைவி மாற் றானுடன் உடலுறவு செய்தால் மட்டும் அதை நிரூபித்து மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டப்படி திருமணம் செய்த கணவன்,

1.திருமணத்திற்கு பின் கிறிஸ்தவ மதத்தொழிலைவிட்டு விலகி வேறு மதம் சார்ந்த தொழிலை மேற்கொண்டாலோ,

2.உடலுறவு கொள்ளத்தடைசெய்யப்பட்ட உறவுமுறையில் உள்ள வேறு ஒரு பெண்ணோடு உடலுறவுக் குற்றம் (incestuous adultery) புரிந்தாலோ,

3.மற்றொரு பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டு அவளுடன் பிறன்மனைப் புணர்ந்தாலோ (bigamy with adultery),

4.வன்முறைப்புணர்ச்சி, இயற்கைக்கு மாறான புணர்வு, விலங்கு களுடன் புணர்தல்,

5. நெறிகெட்ட வாழ்க்கை காரண மாக பெண்ணை கொடுமை செய்தா லோ,

6.இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மனைவியை துறந்து சென்று விட்டா லோ,

ஆண்மையற்று இருந்தாலோ மனைவி மணவிலக்கு கோரி உரிய நீதிமன்றத்தில் மணவிலக்கு கோரலாம்.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக் கான சட்டமும் மணவிலக்கு குறித்த அம் சங்களை விவரிக்கிறது.

இஸ்லாமிய ஆண்களுக்கு மணமுறிவு குறித்து அளிக்கப்படும் உரிமைகள் எல் லை அற்றதாக உள்ளது

மனைவிக்கு காரணத்தை தெரிவிக்கா மலே “தலாக்” எனப்படும் மண முறிவை அறிவிக்க இஸ்லாமிய ஆண் உரிமை படைத்தவனாகிறான். மேலும் மனைவிக்கு தெரிவிக்காமலே கூட தலாக் கை செயல்படுத்தும் திறன் இஸ்லாமிய ஆண்களுக்கு இரு க்கிறது. இதில் நீதி மன்றம் தலை யிடு வதில்லை.

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண் களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்க த்தில் இஸ்லாமியர்கள் திரு மண இழப்பு சட்டம், 1939ம் ஆண்டில் நிறை வேற்றப்பட்டுள்ளது. இதன்படி

நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் காணாமல் போய்விட்டால்,

மனைவிக்கு தேவையான பராமரிப்பு செலவுத்தொகையை கணவன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கத்த வறினால்,

கணவனுக்கு ஏழு ஆண்டுகளோ, அதற்கு அதிகமாகவோ சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால்,

கணவனுக்கு விதிக்கப்பட்ட திருமணக்கடமைகளான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், குழந்தைகளை பராமரித்தல் ஆகியவற்றை கணவன் மூன்று ஆண்டுகளு க்கு புறக்கணித்தால்,

கணவன் ஆண்மையற்று இருந்தால், தொழுநோய் பீடிக்கப்பட்டிரு ந்தால், தொற்றக்கூடிய பால்வினை நோய் இருந்தால், திருமணத்தி ற்கு தேவை யான மனவளர்ச்சி இல்லாமலிருந் தால்

…பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் உரிய நீதிமன்றத்தை அணுகி மண முறிவு பெறலாம்.

இத்தகைய வழக்கு விசாரணைகளை பொதுவில் நடத்தாமல், மூடிய அறைக்குள் நடத்தவும் (In Camera Proceedings ),வழக்கு விவரங்க ளை செய்தியாளர் கள் வெளியிடாமல் தடுக்கவும் முடியும். வழக்கு தரப்பினர்கள் உடன்படும் நிலையில் வழக்கு விசாரணையை துரித ப்படுத்தி இசைவின் பேரில் மண முறிவு (Divorce by Mutual Consent) பெறவும் இயலும்.

இத்தகைய மணமுறிவு கேட்கும் தரப்பினர் உரிய வருவாய் இன்றி அவதியுறும் நிலையில், எதிர் தரப்பினர் வருவாய் படைத்தவர் என்று நிரூபிக்க இயலும் நிலையில் மனுதாரருக்கு தற்காலிக அல்லது நிரந்தர பரா மரிப்பு  கோரவும் இயலும்.

எனவே, பொருந்தா மண உறவில் யாரும் விருப்பமின்றி நீடிக்க வேண்டி யதே வையில்லை. எனவே துணிந்து முடிவெ டுங்கள்.

அதற்கு முன் உங்கள் எதிர்காலம் குறித்தும், குழந்தைகள் (இருந்தால்) எதிர்காலம் குறித்தும் ஆழச் சிந்தித்துவிட்டு…!

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

Advertisements

8 Responses

  1. bhavaneesh sir, thangal sonnadu migavum sari, kanavan vs manaivi pirivuku pen veetarum pillai veetarum miga mukkia karanam. avargal mattum kudumbamaga valanum. adutavan kudumbam nasama poganum. bathipadu kanavan vs manaivi iruvarum. panam, gowravam, tanikuditanam sambalam avargal kail kuduttu vittu nam kadan karan kitta asingapadanum. enna naayam idu.vairu eriudu sir. neethi mandram vs vakkil panata vangakittu 2 periai pirichiduvargal kalam pora aluvanum. inda pavam avargalai 7 jenmatuku dandikum.

    Like

  2. 1.தற்போது உள்ள நீதிமன்றங்கள் குடும்பங்களை பிரிக்கிறது .
    2. பெண்கள் தவறான பாதையில் செல்ல நீதிமன்றமே முக்கிய வழிகாட்டுதலாக இருக்கிறது.
    3. காலத்திற்கேற்ப சட்டங்கள் மாறுதல்களுக்கு உட்பட வேண்டும்.
    4. ஒரு சில பெற்றோரும் தங்கள் மகளுடன் சேர்ந்து கொண்டு ஒருவரை திருமணம் செய்து அவருடன் வாழாமல் அவர் மீது பொய் வழக்குத் தொடுத்து பணம்சம்பாதிப்பதை தொழிலாக செய்வதை வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் தொழிலாக தற்போதைய சமுதாயத்தை உருவாக்கி கொண்டு வருகின்றனர்.
    5. திருமணம் செய்து கொண்ட பெண்குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற பின் சேர்ந்து வாழாமலும் விவாகரத்து செய்யாமலும் குடும்பத்தையும் சமுதாயத்தையும் ஏமாற்ற நீதிமன்றம் முக்கிய வழிகாட்டியாக செயல்படுவது சமூக சீர்கேட்டுக்கு காரணமாக அமைந்து உள்ளது.

    Like

  3. தாங்கள் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் வாழ்ந்திட விதை2விருட்சம் இணையத்தின் வாழ்த்துக்க‌ள்

    Like

  4. தங்களின் கனிவான அறிவுரைக்கு ஆயிரம் நன்றிகள்.என்னுள் நம்பிக்கை விதைகளை விதைத்த உம் அன்புக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன் .

    Like

  5. உங்களது பிரச்சனையை சுமூகமான முறையில் நீதிமன்றம் மூலமாகவே தீர்த்துக்கொள்ள‍ முடியும்.அது எப்ப‍டி சாத்தியம் என்று தாங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் மனைவி உங்களோடு சேர்ந்து வாழ விரும்புவதாக தாங்கள் சொன்ன‍தை வைத்துத்தான் அப்ப‍டி சொன்னேன்.

    குடும்ப நல நீதிமன்றத்தில், ரெஸ்ட்டிடியூட் ஆஃப் கான்ஜிகல் ரைட்ஸ் என்ற சட்ட‍ப்பிரிவு உள்ள‍து. உங்கள் மனைவியை உங்களோடு சேர்த்து வைக்க‍ நீதிமன்றத்தில் முறையிட்டு, அதற்கான காரணத்தை அதாவது உங்கள் மனைவியின் தாயாரால் தான் உங்கள் மனைவி உங்களுடன் சேர்ந்து வாழ மறுப்ப‍தை தகுந்த ஆதாரத்தோடு எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த வழக்கறிஞரை வைத்து வழக்காடுங்கள். (குடும்ப நீதிமன்றத்தை பொறுத்த‍ வரை வழக்க‍றிஞர்களை விட உங்களுக்குத்தான் அதிகமாக பேசவோ, அல்ல‍து வாதிடவோ வாய்ப்புகள் அதிகம்.

    குடும்ப நல நீதிமன்ற நீதிபதி அவர்கள் குடும்ப கலந்தாய்வாளர் (ஃபேமிலி கவுன்சிலர்)-ரிடம் செல்ல‍ உத்த‍ரவிடுவார். அதன்படி நீங்களும் உங்கள் மனைவியும் அந்த கலந்தாய்வுக்கு செல்லுங்கள். அங்கே கலந்தாய்வாளர் தகுந்த விசாரணையுடன், தகுந்த ஆலோசனைகளை உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் வழங்குவார்.

    மேலும் உங்கள் மனைவியிடம், அவரது தாயார், தற்கொலை செய்துகொள்வதாக எமோஷனல் பிளாக் மெயில் செய்வதையும், அது ஏன் செய்கிறார் என்பதையும், விளக்கி அதாவது உங்கள் மனைவியின் தாயாருக்கு தனது மகளின் வாழ்க்கையைவிட தனது வரட்டு கௌரவம்தான் முக்கியம் என்ற உள்நோக்க‍த்தை, உங்கள் மனைவிக்கு புரிய வைப்பார். இந்த கவுன்சிலிங் 1 முறை இருமுறை மட்டுமல்ல‍ பேமிலி கவுன்சிலர் எத்த‍னை முறை உங்களை வரச்சொல்கிறாரோ அத்த‍னை முறையும் தாங்களும் தங்களது மனைவியும் அவர் முன் ஆஜராகி தகுந்த ஆலோசனை பெற்று வரும்பட்சத்தில், உங்களது மனைவிக்கு மனமாற்ற‍ம் ஏற்பட்டு, தெளிந்த சிந்தனையோடு உங்களுடன் வாழ வருவார் என்பதில் எள்ள‍வும் சந்தேகமில்லை.

    மேலும் உங்கள் மனைவியை அவ்வ‍ப்போது தனியாக சந்தித்து, அவரிடம் உள்ள‍ நல்ல‍ குணங்களையும், நல்ல‍செயல்களை அடிக்க‍டி சொல்லி மனதார பாராட்டுங்கள். உங்கள் மனைவியிடம் காதல்மொழி பேசுங்கள். இசமயத்தில் உங்கள் மனைவி உங்கள் மீது கோபம் கொண்டாலும், அதை நீங்கள் பொறுட்படுத்தாமல், சற்று பொறுமையுடன், தெளிவுடனும் சிந்தித்து, செயல்படுங்கள். இது உங்கள் மனைவி உங்களுடன் வாழ அவரது விருப்ப‍த்தை தூண்டுவதாக அமையும்

    இல்ல‍ற வாழ்வை நல்ல‍றமாக வாழ்ந்திட‌ விதை2விருட்சம் வாழ்த்துகிறது.

    என்றென்றும் தங்களது நட்பினை விரும்பும்
    விதை2விருட்சம் குழுவினர்.

    Like

  6. தங்களின் விரைவான மற்றும் கனிவான பரிசீலனைக்கு மிக்க நன்றி.பரஸ்பரம் எங்களுக்குள் அன்பும் ,பாசமும் இருந்தாலும் ,தன் தாயின் தூண்டுதலின்பேரில் ஒரு முறை காவல் நிலையத்தில் பொய் புகர் கொடுக்கப் பட்டது.பின் மீண்டும் சில நாட்கள் இனைந்து வாழ்ந்தோம்.மீண்டும் பிரிவு.
    நான் குடும்ப நல நீதி மன்றத்தில் முறையிட நினைக்கிறேன்..என் மாமியாரை விட்டு விலகி,தனி குடும்பம் செல்ல, என் மனைவியை வற்புறுத்துகிறேன்.ஆனால்,என் மனைவி என்னுடன் வந்தால்,தான் தற்கொலை செய்துக் கொள்வதாக மிரட்டுகிறார் என் மாமியார் .வளர்த்த தாயை மதிப்பதா,வந்த கணவனை மதிப்பதா என தவிக்கிறாள் என் மனைவி . இந்த குழப்பத்தில் ,நானும் அவளும் உடலாலும் ,மனதாலும் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறோம்.

    Like

  7. உங்கள் மனைவி, உங்கள் மீது ஏதேனும் வழக்கு நீதிமன்றத்தில் தொடுத்துள்ளாரா? அல்ல‍து நீங்கள் அவர்மீது
    ரெஸ்டிடியூட் ஆஃப் கான்ஜுகல் ரைட்ஸ் தொடுத்துள்ளீரா? என்ற விவரம் எதுவும் தெரிவிக்காத நிலையில் இதுபற்றி ஆலோசனைகள் ஏதும் கூற இயலாது.

    வ‌ழக்கு ஏதேனும் நிலுவையில் இருந்தால், அந்த வழக்கு எந்த மாதிரியான வழக்கு, என்பதை தாங்கள் தெளிவுபடுத்தினால்தான் அதுபற்றிய தகுந்த ஆலோசனைகளை தங்களுக்கு வழங்க முடியும்.

    என்றென்றும் தங்களது நட்பினை விரும்பும்
    விதை2விருட்சம்

    Like

  8. வணக்கம் அன்பு தோழரே,என் பெயர் பவநீஷ் ..இந்த தலைப்பை நான் மறுக்கிறேன்,பாவப்பட்ட பெண்கள் கிமு வில் தான் ,படுபாவி பெண்கள்தான் இன்று அதிகம்.காதல் திருமணமோ ,பெற்றோர் பார்த்து வாய்த்த திருமணமோ ,பெரும்பாலான மணமுறிவுக்கு காரணம் மாமனாரோ ,அல்லது மாமியாரோதான் என்பது என் அனுபவ கருத்து.
    என்னுடைய திருமணம் மேற்கூறிய திருமணத்துக்கு அப்பாற்பட்டது.சுமார் மூன்றரை வருட திருமண வாழ்வில் நானும்,என் மனைவியும் தொடர்ந்து வாழ்ந்ததோ ஆறு மாத காலம் கூட இருக்காது.தம்பதிகளுக்குள் ஏற்படும் சின்ன சின்ன ஊடல்கள் கூட,என் மாமியாரின் அழைப்பில்லா தலையீட்டால் ,எங்களுக்குள் சில்லென்ற கூடல்களை தவிர்த்து,தனிமையையும் தவிப்பையுமே மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறது.என் மாமியாரின் தலையீட்டை நானும் என் மனைவியும் தவிர்க்க முயன்றும்,என் மனைவியை மூளை சலவை செய்து ,எங்களுக்குள் நடக்கும் அன்றாட விஷயங்களை கேட்டு அறிந்துக் கொண்டு,பிரிவுக்கு பிள்ளையார் சுழி போட முயல்கிறார்.இது குறித்து சட்ட ஆலோசனை கிடைத்தால் ,என் போன்ற எத்தனையோ கணவர்களுக்கு உதவியாய் இருக்கும்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: