Advertisements

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகளும்

இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடை ப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள்  கிடைக்கா மல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகி றது.

மாரடைப்பு என்பது என்ன?

இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில்  அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை  இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்புக் காரணங்கள்

1. இரத்த அழுத்த நோய்
2. அதிகமான கொழுப்புச்சத்து
3. புகைபிடித்தல்
4. நீரிழிவு நோய்
5. அதிக எடை
6. பரம்பரை
7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை
8. அதிக கோபம் கொள்ளுதல்
9.குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிகளவு
10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது

மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :

 1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்
3. தலைச்சுற்றல் 4. படபடப்பு 5. வாந்தி
6. நினைவு தடுமாற்றம் 7. நீலம்பூரி த்தல்

மாரடைப்பு நோயின் வகைகள் :

1. மிதமான மாரடைப்பு (Unstable Angina)
2. தீவிரமான மாரடைப்பு (Myocardial Infarction)
3. அறிகுறியற்ற மாரடைப்பு (Silent Myocardial Infarction)

மாரடைப்புநோயை நிர்ணயிக்க உதவும் ஆய்வுக்கூடச் சோதகைள்:

1. மின் இருதய வரைபடம் (ECG)
2. நொதிச் சோதனைகள் (Enzyme Study)
3. உயிர்வேதியியல் சோதனைகள் (Biochemical Test)
4. மார்பு எக்ஸ்ரே (XrayChest)
5. இருதய இரத்தக் குழாய்க்குள் இரசாயனப் பொருளைச் செலுத்தி இரத்தக் குழாய்களின் அமைப்பைக் கண்டறிதல் (Angiogram)
6. மிக நவீன சோதனையான கலர் இரு தய ஸ்கேன் (Echocardiogram)
7. இருதய வேலைப்பளு சோதனை (Cardiac Stress Analysis)
8. ஐசோடோப் ஸ்கேன் இருதய பைபா ஸ் ஆப்ரேஷன் (Bypass Operation
) என்றால் என்ன?

ஒன்றுக்கும் மேற்பட்ட இரத்தக் குழாய்கள் அடைபட்டு மாரடைப்பு நோய் ஏற்படும் போது நோயாளியின் உயிரைக் காப்பாற்ற வும் தொடர்ந்து ஏற்படும் வலியைக் கட்டுப்படுத் தவும், மறுபடியும் மார டைப்பு ஏற்படாமல் தடு க்கவும் உதவி செய் கிறது. இந்த  சிகிச்சை க்கு முன்னால் இருதய இரத்தக் குழாயினுள் ஒ ரு மருந்தை செலுத்தி என்ற பரிசோதனை  செய்கிறா ர்கள். இந்த பரிசோதனையில் இர த்தக் குழாய் அடைப்பட்ட இடங் களைத் தெளிவாகப் பார்க்க மு டியும். அதன் பின்பு  காலிலிருந்து சிறிய  சிரைகளை எடுத்து இந்த அடைப்புகளை இணைக்கிறார்கள். இதன்மூலம் அடைபட்ட இடத் தைத் தாண்டி இரத்த ஓட்டம் இரு தயத்திற்குக் கிடைக்கிறது. இருதயம் பலன் பெற்று அதிக ஆயுளை ப் பெறுகிறது.

இருதய நோயாளிகள் உணவு வகைகள் :

உணவில் சிறிது காரம், புளி, உப்பு போன்றவற்றைச் சேர்த் துக் கொள்ளலாம். மிதமான அளவு உணவு உட்கொள்ள வே ண்டும்.  தேங்காய், தேங்காய் எண்ணை, நெய் போன்றவற் றைத் தவிர்த்தல் நலம்.

சாப்பிடக்கூடியவை :

வெண்ணெய் எடுத்த மோர், தக் காளி பழரசம், கிழங்கு வகை தவிர்த்த காய்கறிகள் கூட்டு, சாம்பார், ரசம், மோர், ஆடை எ டுத்த பால், இட்லி, தோசை (எண்ணை குறை வாக விட்டு) வெண் பொங்கல், இடியாப்பம், புட்டு, ஆப்பம், ஆரஞ்சுச் சாறு,  பயறுவகை (பாசிப்பயறு) சிறிதளவு மாமிசம் அல் லது கோழி, சிறிய மீன் வகைகள்.

சாப்பிடக்கூடாத உணவுகள் :

காபி, டீ, முட்டை மஞ்சள் கரு, வெண்ணெய், நெய், டால்டா, தேங் காய்ப் பொருட்கள், மசாலா வ கைகள், ஈரல், மூளை, கிட்னி,  முந் திரிப் பருப்பு, பேக்கரி உணவுகள்.

இரத்தத்தில் அதிக அளவு கொ ழுப்பு சத்து இருப்பது        மாரடைப் பிற்கு முக்கிய காரணம். ஆதலால் கொழுப்புச் சத்து  உள்ள உணவுக ளை இருதய நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

அசைவம் :

ஈரல், மூளை, சிறுநீரகம், முட் டை மஞ்சள் கரு, கோழி தொ டைப் பகுதி, கொழுப்புள்ள கறி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி,  நண்டு வகைகள்.

சைவம் :

பாலாடை, நெய், வெண்ணெய், தேங்காய், தேங்காய் எண்ணெய், இனிப்புப் பண்டங்கள் சாக்லெட், பாதாம் பருப்பு வகைகள்  ஐஸ்கிரீம்கள், பேக்கர் உணவுகள், குல்பி எனும் இனிப்பு.

கொலஸ்டிரால் குறைக்க உதவும் உணவு வகைகள் :

சிறிய வெங்காயம், வெள்ளைப் பூண்டு பாசிப் பயறு, ஆடை எடுத்த பாலின் தயிர்.

உப்பு அதிகம் உள்ள உணவுகள் :

இரத்தக் கொதிப்பு உடையவர்களும் இருதய நோ யாளிகளும் கண்டிப்பாக உப்பைக் குறைக்கவோ தவிர்க்கவோ, வேண்டியதி ருக்கும். கீழ்கண்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

அசைவம் :

கருவாடு, மீன், ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டு இறை ச்சி

சைவம் :

இட்லிப்பொடி, ஊறுகாய், அப்பளம், வடகம், சீஸ், வெண்ணெய், ரொட்டி, உப்பு பிஸ்கட், உலர்ந்த பழங்கள், சோடா உப்பு,  தக்காளி, பட்டாணி, பீட்ரூட், வறு த்த முந்திரிப் பருப்பு, பதப்படுத்தப்பட்ட உண வுகள்.

எந்த எண்ணெய் உபயோகிப்பது :

தாவர எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் சோயா பீன்ஸ் எண் ணெய் நல்லது மாமிசம் சாப்பிடலாமா?

மாமிச வகைகளைத் தவிர்த்து நல்ல சைவ உணவு சாப்பிடுவது மிகவும் நல்லது. கண்டிப்பாக மாமிச வகைகள் வேண்டு மெ ன்றால்  சிக்கன் அல்லது மீன் வாரம் இரண்டு முறை சேர்த்துக் கொள்ள லாம். பொதுவாக காய்கறிகள், கீரை வகைகள், பழ  வகைகள், அதிக நார்ச்சத்து அடங்கிய உணவு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகள் கவனிக்க வேண்டியவை :

1. இரத்த அழுத்தத்தில் கட்டுப்பாடு

2.நீரிழிவு நோய் கட்டுப்பாடு

3. உடல் எடை குறைத்தல்

4. குடி, புகை பிடித்தல் பழக்கங்களை விட்டொழித்தல்

5. குறிப்பிட்ட உடற் பயிற்சி

6. குனிந்து நிமிரும் வேலைகள் செய்யாமை

7. கனமான பொருட்களைத் தூக்கிக் கொண்டு நடக்கக்கூடாது

8. பலமாக முயற்சி செய்து மலங்கழிக்கக் கூடாது

9. ஒழுங்காக நேரம் தவறாமல் மருந்துகள் உட்கொள்ளுதல்

10. மருத்துவப் பரிசோதனை ஒரே சீரான இடைவெளியில்.

உடல் பருமன்

இருதய நோயுள்ளவர்கள் உடல் எடையை குறைப்பது அவசியம். உடல்பருமன் ஒருவ ருடைய பாரம்பரியத்தைப் பொருத்து  உண் டாகலாம், ஆனால் அதிகளவு உணவினா லும், உடற்பயிற்சி இல்லாததாலும், மதுபா னங்களை அதிகமாக அருந்து  வதாலுமே உட ல் பருமன் அடைகிறது.

வரவும்  செலவும்    கணக்கிடப்பட வேண்டும். இந்த கணக்கில் செல வு அதிகமானால் உடல் மெலியும், வரவு அதிகமானால்  உடல் பரும னடையும், நாம் செய்யும் வேலைக்கும் உடற் பயிற்சிக்கும் தகுந்த அளவு அதிகமாக உண்ணும்பொழுது உடலில்  கொழுப்பு சேர் ந்து உடல் பருமன் அடைகிறது.

சில  நாளமில்லாச் சுரப்பிகளின் வியாதியால் அதிக எடை ஒருவ ருக்கு உண்டாகலாம். ஆனால் அது ஆயிரத்தில் ஒன்றாக  இருக்கும். உதாரணம்  தைராய்டு சுரப்பி.

ஒரு பவுண்டு கொழுப்புப் பொரு ள் உணவு  3500 அதாவது ஒரு வாரத்தில் ஒரு பவுண்டு இழக்க தினமும்  உணவில் 500 கலோரி களைக் குறைக்க வேண்டும்.

ஒரு தேக்கரண்டி சர்க்கரை  25 (Calorie)
ஒரு அவுன்ஸ் முந்திரிக் கொ ட்டை  162 (Calorie)
ஒரு அவுன்ஸ் அரிசி  420 (Calorie)
31/2 அவுன்ஸ் கேக்  420 (Calorie)
கலோரி இல்லாது உணவுகள் :

உணவைக் கட்டுப்படுத்தும் போது இடையிடையே பசிக்கும். அத ற்கு நாம் முட்டைக்கோஸ், தக்காளிச்சாறு, வெண்ணெய் இல் லாத மோர், காய்கறி சூப், எலுமி ச்சை சாறு, காரட், வெள் ளரிக்காய், காலி ஃபிளவர், கீரை வகைகள் போன்றவை களை உண்பது  நல்லது.

எடையை   அதிகரிப்பதில் உ ப்பு பெரும்பங்கு வகிக்கிறது. ஏனெனில் உப்பு தான் உடலில் நீரைத் தேக்கி வைக்கிறது. எனவே  உணவில் உப்பைக் குறைத்து விட்டால் உடலில் நீர்த் தேக்கம் குறைகிறது. உடல் எடையைக் குறைக்க நம் பிரியம் போல் மருத்து வரின் ஆலோசனைப்படி தேவையான மருந்துகளை உட்கொள்ள லாம்.

அனுமதிக்கப்பட்ட பொருட்கள் :

சிறிய மீன், கிழங்குகள் அற்ற காய் கறி கள், சாலட்டுகள், பருப்பு, தேயிலை, காபி, சோடாபானம் பால், மோர், பழ ங்கள் (மா, பலா,  தவிர)

குறைந்த அளவில் அனுமதிக்கப்படுபவை :

முட்டை வெள்ளைக்கரு, உருளைக் கிழங்கு, ரொட்டி, சப்பாத்தி, துண்டு மீன் கள், கோழிக்கறி.

தவிர்க்க வேண்டியவை :

வெண்ணெய், க்ரீம், ஐஸ்கிரீம், நெய், சர்க்கரை, ஜாம், தேன், எண் ணெய்கள், சாக்லெட்டுகள், இனிப்புப் பொருட்கள், உலர்ந்த  புட்டி யில் அடைக்கப்பட்ட பழங்கள், கொட்டைகள், பிஸ்கோத்துகள், கேக்கு கள், மதுபானங்கள், ஈரல், சிறுநீரகம், மூளை, பன்றி,  மாடு இறை ச்சிகள், கிழங்கு வகைகள்.

இருதய, நலத்திற்கு இதமான ஆலோசனைகள் :

மன நிறைவு, மன அமைதி மிகவும் தேவை. எதிலும் திருப்தியான வாழ்க்கை அவ சியம். அதிவிரைவில்  வாழ் க்கையில் முன்னேறி விட வேண்டும் என்ற கொள்கை இதயம், இரத்த அழுத் தம், சர்க்கரை நோயை விரை வில் கொண்டு  வரும்.

 மன அழுத்தத்தை, உளைச்சலை குறைக்க,  இளைப்பாறக்   கற்றுக் கொள்ள வேண்டும்.  ஆழ்ந்து இளைப்பாறுதல், ஆழ்ந்து சுவாசித் தல், இசையில் இன்புறுதல், மனம் விட்டுப் பேசுதல், இறைவனோ டு ஆன்மீக  வழிபாடு, ஐக்கியம் மிக முக்கியம்.

 ஒரு ஆசானின் உதவியுடன் தியான ம் மூலம் ஷிtக்ஷீமீssஐக் குறைக்க லாம்.

 தேகப் பயிற்சி டாக்டர் ஆலோசனை ப்படி செய்யவும். மிதவேகமான நடை அல்லது  சைக் கிளிங். ஒரு நாளைக்கு 20 நிமிடம் 2 வேளை பண்ணலாம். எடை தூக்குதல், தள் ளுவது, இழுப்பது தவிர் க்கவும்.

ஒரு நாளைக்கு ஒரு ஆஸ்பிரின் மாத்திரை இதய தாக்குதலைத் தவிர்க்கிறது.

குளிர்காலத்தில் வெளியில் நடை (walking) போவது நல்லதல்ல. குளிர்ந்த நீரை குடிக்கவும், குளிக்கவும்  உபயோ கிப்பது நல்லதல்ல.

 முழு வயிற்றிற்கு திருப்தியாக சாப்பிடு வதை தவிர்க்கவும். அரை  அல்லது முக் கால் வயிறு நிறைந்தவுடன்  திருப்தி அடையக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகாரம் சாப்பிட்டவுடன் நடப்பது, தேகப் பயிற்சி செய்வது கூடாது. அப்படி சூழ் நி லை ஏற்பட்டால் நாக்கின்  அடியில் Sorbitrate (or) Isordil  மாத்திரை வைக்க வேண்டும்.

ஸீ உணவில் உப்பு, கொழுப்பு, இனிப்பு குறைத்தோ, இல்லாமலோ உண்பது நலம்.

ஸீ தினம் அமைதியான எட்டு மணிநேரம் தூக்கம் அவசியம்.

ஸீ மாரடைப்பு, இரத்த அழுத் தம், சர்க்கரை நோய்களுக்கு வைத்தியம் சிறிது நாட்களுடன் முடிவதில்லை. வைத்தியம் நீண்டதொரு முறையாகும். வாழ்க்கை முழுவதும் தேவை ப்படும் ஒன்று, மருந் துகள் ஒழுங்காக சாப்பிட வேண்டும்.

ஸீ இதய தாக்குதல், இரத்த அழுத்த நோய்கள் வராதபடி தடுத்து வாழ்வது மேலானது. வந்து விட்டாலும் நல்  ஆலோசனைகளாலும் கட்டுப்பாடான வாழ்க்கை முறையின் படியும் மீண்டும் இதய தாக்கு தலுக்கு வழிவகுத்து விடாதபடி  வாழ்ந்து, நீண்ட ஆயுளுடன், குடும் பத்திற்கும், சமுதாயத்திற்கும் பிரயோஜனமான வாழ்க்கை நடத் துவது சாத்தியம்.  அது  உங் கள் கையில் இருக்கிறது.

Health Diet இதய நோய்க ளைத் தடுக்கும் உணவுத் தயாரிப்பு

கோதுமை ரவா பொங்கல்

தேவையான பொருள்கள்:
கோதுமை (உடைத்தது) 2 கோப்பை
பயத்தம்  பருப்பு  லு கோப்பை
சீரகம்   லு தேக்கரண்டி
மிளகுத்தூள்   1 சிட்டிகை
கடுகு   ரு தேக்கரண்டி
கறிவேப்பிலை   சிறிதளவு
உப்பு   வேண்டிய அளவு

செய்முறை:

2 கோப்பை உடைத்த கோதுமை யை வேகவிடவும். (4லு கப் தண் ணீர் மற்றும் லு கோப்பை பயத்தம் பருப்புடன்) வறுத்த கடுகு,  கறி வேப்பிலை, சீரகம் கொண்டு தாளிக்கவும். சூடாகப் பரி மாறவும்.

சத்து மதிப்பீடு

(கால் தட்டிற்கு (Quarter plate) )
சக்தி (energy)   139 கலோரி
மாவுப் பொருள்
(Carbohydrate)   27.26 கிராம்
புரதம் (Protein)  5.6 கிராம்
கொழுப்பு (Fat)  0.57 கிராம்

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: