Advertisements

திக்குவாய் என்பது ஒருவகையான நோயா?

திக்குவாய் என்பது இன்று உலகம்தழுவிய ஒரு மருத்துவப் பிரச்னையா?

திக்குவாய் என்பது இன்றைய நாளில், செல்வந்த நாடுகள், ஏழை நாடுகள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் உலக நாடுகள் தழுவிய பொதுவான மருத்துவப் பிரச்னையாகும். டாக்டர் வில்லியம் என்ற ஆய்வு வல்லுநர் கணக்குப்படி, அமெரிக்கா வில்  மட்டும் சுமார் 2 மில்லியன் ஆடவர்கள் திக்கு வாய்க்கு ஆளாகின்றார்கள். திக்குவாய் பற்றி விரிவான ஆய்வு நிகழ் த்திய  ஆய்வு வல்லுநர்கள் உலகில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் தொகையில் குறைந்தது ஒரு விழுக்காட்டினர் திக்குவாய்க்கு ஆளாகின் றார்கள் என கணக்கிட்டுள்ளா ர்கள். எனவே திக்குவாய் என்பது இன்றைய நாளில் உலகம் தழு விய ஒரு  மருத்துவ பிரச்னை மட்டுமல்ல, சமுதாய பிரச்னையும் கூட.

திக்குவாய் என்பது நம் நாட்டைப் பொறுத்தவரை, கவலை கொள் ளத்தக்க ஒரு மருத்துவ பிரச்னையா?

அண்மையில் எடுத்த புள்ளி விவரம் ஒன்று நம் நாட்டில் மட்டும் சுமார் 8,50,00,000 திக்குவாயர்கள்  இருப்பதாகக்கூறுகின்றது . உலக நாடுகளில் மிகவும் அதிகமான திக்குவாயர்களைக் கொண்ட நாடு என்ற அவல நிலை கொண்டதாகும். திக்குவாய்  என்பது நம் நாட்டை பொறுத்தவரை, செல் வந்தர்கள், வறியவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் பற்றும் பொதுவானநோயாகும். நம்நாட்டை பொறுத்தவரை திக்குவாயை   மருத்துவ ரீதியாக நலப்படுத்தக் கூடிய, சிறப்பு பயிற்சிபெற்ற  மருத்துவர் களும், இத்தகைய துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லு நர்களும் மிகவும் குறைவான அளவில்  உள்ள னர். இத்தகைய எண்ணிக்கையானது நமது தேவையை ஈடுகட்டும் அளவிற்கு போதுமான அளவில் இல்லை. மேலும்  இவர்கள் நம் நாட் டிலுள்ள நகர்ப்புறங்களில் மட்டும் உள்ளனர். எனவே, நம் நாட்டிலுள்ள திக்குவாயிற்கு ஆளா னவர்கள்  அனைவருக்கும் தேவையான மருத்து வப் பயிற்சியை அளிப்பது என்பது கனவிலும், எண்ணிப்பா ர்க்க இயலாத ஒன்றாகும்.

திக்குவாய் என்றால் என்ன?

உச்சரிக்க வேண்டிய அல்லது சொல்ல வேண்டிய சொற்களை தெளிவாகவும், சீராகவும், கோர்வையாக வும் சொல் ல இயலாது,  ஒரு மனிதன் தன் எண்ணத்தை சொற்களின் மூலம் வெளிப் படுத்த இயலாது போராடும் அவல நிலை யை நாம் திக்குவாய் என்று கூறுவது ண்டு. திக்கு வாயை ஆங்கிலத்தில் STAMMERING அல்லது SHUTTERING  என்று கூறுவதுண் டு.

தன்னுடைய எண்ணத்தை சொற்களால்வடித்து, தங்குதடையின்றி, தெளி வாகவும், சொல்லஇயலாமல் ஒரு குழந்தையோ  அல்லது ஒரு ஆடவ ரோ போராடும் அவலநிலைதான் திக்குவாயாகும். தனி மனிதனின் தகவ ல் தொடர்பு முறையால்  அடிக்கடி ஏற்படும் தட்டுத் தடங்கல்கள் என்று பொதுவாகக் கூறுவதுண்டு (It is a Communication Disorder). உலக சுகா தார அமைப்பானது (WHO)  திக்குவாயை கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கின்றது. ‘‘பேசும்  சொற்களின் எண்ணிக்கையோ அல்லது சீர் நிலை யோ பாதிக்கப்படுவதால் சொற்களின் கோர்வை பாதிக்கப்படும் நிலையை  திக்குவாய் என்று கூற லாம்.’’

பொதுவாக திக்குவாய் எந்த வயதில் தோன்றும்?

குழந்தைகள் பேசக் கற்கும் காலத்தை பொதுவாக மருத்துவர்கள் 2 முதல் 5 வயது வரை என கணித் துள்ளார்கள். இந்த கால  கட்டத்தில் தான் பெரும்பான்மையான குழந்தைகளுக்கு திக்குவாய் முதன் முத லாக தோன்றுவது வழக்கமாகும். சில  சமயங்களில் மிகவும் அபூர்வமாக, இளமைப் பருவ காலத்தில் கூட திக்குவாய் ஏற்படக் கூடும்.

பெண்குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் அதிக அளவில் திக்குவாயிற்கு ஆளாவதற்கு அடிப்படைக் காரணங்கள் எ ன்ன?

5 ஆண் குழந்தைகளுக்கு ஒரு பெண் குழந்தை என் ற விகிதத்தில் திக்குவாயானது குழந்தைகளைப் பற்றுகின்றது. இதற்கு பல்வகையான காரணங்க ள் உள்ளன. திக்குவாய் என்பது ஆண்களை அதிக அளவில் தாக்கும் தன்மை கொண்ட மாறுபட்ட  நிலையாகும். பெண் குழந்தைகள் ஆண் குழந்தை களை விட முன்னதாகவும், விரைவாகவும் பேசும் திறன் இயற்கையாக  பெற்றுள்ளன. மேலும் பெண் குழந்தைகள் இயல்பாக அடிக்கடி, பேசும் ஆற்றலை இயற்கையாக பெற்றுள்ளன. இதன் வி¬ ளவாக, மிகவும் இளம் வயதிற்கு, பெண் குழந்தைகள் இயற்கையாக சரளமாக பேசும் ஆற்றலை பெறு கின்றார்கள். இதன்  விளைவாக, பெண் குழந்தைகள் ஆண் குழந் தைகளைப்போல் அதிக அளவு திக்குவாயிற்கு ஆளாகுவ தில்லை.

ஆண் குழந்தைகள் அதிகளவு திக்குவாயிற்கு  ஆளாகு வதற்கு அடிப்படைக் காரணங்கள், அவர்களின் பெற் றோர்களின்,  பேராசையும், அறியாமை யும்தான் அடிப்ப டைக் காரணங்களாகும். பல்வகையான போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில்  தங்களுடைய குழந்தைகள் குறிப்பாக, ஆண் குழந்தைகள், அவர்களின் இயற்கையான மூளைத்திறன், ஆர்வம் இவற்றை  கணக்கிடாமல் தங்களுடைய பேராசையின் காரணமாக, கல்வியில் முதலாவதாக வரவேண்டும் என பேராசையின்  காரணமாக, குழந்தைப் பருவத்தில், ஓடி விளையாட வேண்டிய பருவத்தில் கல்வி என்ற பெயரில் பல்வகையான சுமைகளை  குழந்தைகள் சுமக்க இயலாத அளவிற்கு ‘‘குருவி தலையில் பனங்காய்’’ என்ற கோட்பாட்டில், குழந் தைகளை பல்வகையான  மன இறுக்கத்திற்கு ஆளாக்கு கின்றார்கள். பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தை கள் அதிகளவு பல்வகையான மன  இறுக்கத்திற்கு ஆளா க்கப்படுவது முதன்மையான காரண மாகும்.

நாம் எவ்வாறு சரளமாகவும் தெளிவாகவும் பேசுகின் றோம்?

திக்குவாய் ஏன் ஏற்படுகின்றது என்ற கேள்விக்கு நாம் பதில் தெரிந்து கொள்ள வேண்டு மென்றால், நாம் எவ்வாறு  கோர்வையாகவும், சரளமா கவும் தெளிவாகவும், தங்கு தடை யின்றி பேச முடி யும் என்பது பற்றி சில உண்மைகளைத் தெரிந்து  கொள்வது மிக வும் அவசியமாகும்.

பேசும் கலையென்பது மனித குலத்திற்கு இயற்கை அளித்த இனிய சிறப்பு மிக்க பரிசாகும். நாம் பேச வேண்டுமென்றால்  அந்த எண்ண மானது முத லில் மூளையில் உதிக்கின்றது. நாம் என்ன பேசப் போகின்றோம் என்ற படி மூளை முடிவு செய்து  அதற்குத் தேவையான சொற்களை நாம் மூளையின் நினைவு வங்கியில் (MEMORY BANK)ல் இருந்து தேர்ந்தெடுத்துக்  கொள்கின்றோம். இதன் பின்னர் நமது உடலிலுள்ள பேசும் உறுப்புகள் (Organ of Voice) செயல்படத்  தொடங்குகின்றன.

நாம் உள்மூச்சு, வெளி மூச்சு விடும் பொ ழுது, வெளி வரும் காற்றானது, தொண்டைப் பகுதிகளிலுள்ள ‘‘குரல் நாண்களுக்குள்  (VOCAL CORDS)  சென்று குரல் அதிரச் செய்து ஒலி எழுப்புகின்றன. இந்த ஒலி அலைகளாவது மேற்புறமாக  வாய்ப்பகுதிக்கு செல்லும்பொழுது, உதடுகள், நாக்கு, அன்னம், வாய் இவற்றின் ஒட்டுமொத்த, ஒருங்கிணை ந்த இயக்கங்களின்  காரணமாக, ஒலி அலையானது சொற்களாக மாற்றப் பட்டு, சொற்றொடர்களாக தெளிவாகவும், சரளமாகவும் உதடுகளிலிருந் து  வெளிவருகின்றன. எனவே நாம் தெளிவாக வும், சரளமாகவும் பேச வேண்டுமென்றால் மூளையிலுள்ள பல்வகையான நரம்பு  அமைப் புக்கான செய ல்பாடுகள் மட்டுமல் லாமல் உட லிலுள்ள பேச்சு உறுப்புக்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு சேர  செயல்படுவது மிகவும் அவ சியமாகும்.

திக்குவாய் ஏன் ஏற்படுகின்றது?

திக்குவாய் ஏன் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு விடை காண ஆயிரக்கண க்கான மருத்துவ கட்டுரைகளும், நூற்றுக்கணக்கான  நூல்கள் வெளிவந் தாலும், இன்றும் இதுவரை யாராலும் திக்குவாய் ஏன் ஏற்படுகின்றது என்றகேள்விக்கு முழுமையாக  உடலியல், உளவிய ல், நோய் இயல் அடிப்படையில் முழு மையான விளக் கத்தை அளிக்க இயல வில்லை. இருந்தாலும்  இதற் கெல்லாம் பல் வகை யான பதில்கள் கூறப்படுகின்ற ன. இவற்றில் சில முக்கிய கருத்துகளை மட்டும் இங்கு காணுவோம்:

 திக்குவாய்க்கு காரணமான முதல் கருத்தானது தான் பேசும் ஒலியைக் கேட்பதில் ஏற்படும் காலதாமதத்தி ன் விளைவாக  திக்குவாய் ஏற்படுகின்றது என்கின்ற து. நலமான நிலையில் நாம் பேசும் ஒலியை காதானது, 17 மில்லி செக ண்ட் நேரத்தில்  கிரகித்துக் கொள்வது வழக்க மாகும். ஆனால் திக்குவா யினால் அவதி யுறுவோர்களுக்கு பேசும் ஒலியை காதானது ஈர்க்கும்  நே ரமானது, வழக்கத்திற்கு மாறாகவும், இயற்கைக்கு மாறாகவும் மிகவும் அதி கமாகின்றது. இந்த இடைவெளி அதிகமாதலால்  உச்சரிக்கும் சொல் லை கேட்க இயலாததால் இவர்கள் சொன்ன சொற்களை திரும்பத் திரும் ப சொல்லி அவதியுற வேண்டிய  அவலநிலை ஏற்ப டுகின்றது.

 மூளைத் தாக்கம் (STROKE),  சிறு மூளை பாதிப்பு, மூளையில் ஏற்படும் பல்வகையான காயங்கள் போன்ற நோய்  இயல் கார ணங்கள் சில சமயங்களில் இதற்கு வழிவகுக்கக் கூடும். இத்தகைய காரணிகள் யாவும் மிகவும் அபூர்வமான  கார ணி களாகும்.

துள்ளித் திரியும் குழந்தைப் பரு வத்தில் குழந்தைகளை உள்ளத்தாலும் உடலாலும் அளவிற்கு அதிகமாக துன்பு றுத்தும்  பெற் றோர்கள்.

 குழந்தைகளை மிகவும் கண்டிப்புடன் வளர்க்கின்றேன் என்ற போர்வை யில் குழந்தைகளுக்கு அதிக மன ச்சுமையை  அளிக்கும் பெற் றோர்கள்.

 குழந்தைகளின் இயற்கையான அறிவு ஆற்றலுக்கு அப்பால், குழந்தைப் பருவத்தில், கல்வியில் குழந்தையை முதல்  மாணவனாக வரவேண்டு மென பேராசை பிடித்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அதிகமா ன மனஉளைச்சலை ஏற்படுத்துதல். இவைபோன்ற சூழல்கள் குழந்தைக ளுக்கு திக்குவாய் ஏற்பட வழி வகுக்கின்றன.

 திக்குவாய் பற்றி விரிவான ஆய்வு நிகழ்த்திய அமெரி க்க நாட்டு ஆய்வு வல்லுநர், மார்ட்டின் ஹிவார்ட்ஸ் என் பவர், குழந்தைகளை இயற் கைக்கு மாறாக குழந்தைப் பருவத்தில் பல் வகையான மன உளைச்சலுக்கு ஆளாக்குவ தால் குழந்தைகளின் குரல் நாண்கள் இறுக்க நிலையை அடைந்து திக்கு வாயிற்கு வழி வகுக்கின்றது என்கி ன்றார்.

சாதாரண குழந்தைக்கும் திக்குவாய் குழந்தைக்கும் உடல் அளவில் ஏதாவது வேறுபாடுகள் உண்டா?

அமெரிக்காவிலும், மற்ற ஐரோப்பிய நாடுகளிலும், சாதாரணமாக பேசும் நலமான குழந்தைகளுக்கும், திக்குவாயிற்கு ஆளான  குழந்தைகளுக்கும் உடல் அளவிலும், உளவியல் அளவிலும், ஏதாவது வேறு பாடுகள் உள்ளனவா என்பது பற்றி நீண்டகால  ஆய்வு ஒன்று நிகழ்த்தப்பட்டது. இத்தகைய நீண்ட கால ஆய்வு முடிவானது, இந்த இரண்டு வகை குழ ந்தைகளின் உடலில்  ஏதாவது உளவியல், உடலியல் மாற்றங்கள் நிகழ்கின்றனவா என்பது பற்றி ஆய்வு செய்த பொழுது, இவ ர்களின் உடலில்  எவ்வகையான உடலியல், உளவியல் மாற்றங்கள் எது வும் இல்லையென்றும் இரண்டு வகையான குழந்தைகளும் ஒரே தன்மை கொண்டவர்களாக இருப்பதைக் கண்டனர். ஆனால் குழந்தைகள் திக்கிப் பேசும் போதும் மட்டும் தற்காலிகமாக  வேற்றுமைகள் உள்ளன என்கி ன்றார்கள்.

பிறக்கும் பொழுது எந்தக் குழந்தையும் திக்குவாயாக பிறப்ப தில்லை. குழந்தைகள் சூழ்நிலையின் காரண மாகத்தான் திக்குவாயர்களாக மாற்றப்படுகின்றார்க ள். இந்தக் கூற்றில் எந்த அளவு உண்மை உள்ளது?

திக்குவாய் என்பது மரபுவழி சீர் கேட் டின் பல பண்பக ங்களால்தான் ஏற்படு கின்றது என்பதை உறுதிப்படுத்த தற்பொழுதுள்ள  ஆய்வுமுடிவுகளால் உறுதியாக நிலைநாட்டமுடியவில்லை. எனவே இது வரை ஆய்வு முடிவுகள் மரபு வழி காரணத்தை  நிலை நாட்ட முடியவில் லை. எனவே மரபு வழி  பிரச் னையல்ல, பெரும்பாலும் இத்தகைய குறை பாடு ஏற்பட குழந்தை வளரும் குடும்ப சூழல்தான் மிகவும் முக்கிய காரண மாகும். ஏனெ ன்றால் குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில் குழந்தை பேச கற்றுக்கொள்ளும் பொழுது, குழந்தைகள், பெற்றோர்கள் அல்லது குடும்ப த்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் சொற் களை  உச்சரிக்கும் முறையை குழந்தைகள் அப்படியே பின்பற் றுகின்றார்கள். எனவே குடும்பத்தில், தந்தையோ, அல்லது தாயோ அல்லது அண் ணன், அக்கா, போன்ற வர்களில் யாராவது திக்குவாயிற்கு ஆளாகியிருந்தால், குழந்தை யானது பேசக் கற்றுக் கொள்ளும் பொழுது அவர்கள் சொற்களை உச்சரிக்கும் முறையை குழந்தை அப்படி யே பின்பற்றி, குழந் தையும் திக்குவாயாக  மாற வாய்ப்பு உள்ளது.

ஒரு குழந்தையானது திக்குவாய்க்கு ஆளாகும் பொழுது அந்தக் குழந்தையின் நிலை எவ்வாறு இருக்கும்?

திக்குவாயிற்கு ஆளாகும் பொழுது குழ ந்தையானது ஒரு சொற்றொடரில் ஒரு சொல்லை மட்டும் திரும் பத் திரும்ப உச்சரிக்கக்  கூடும் கிளிப் பிள்ளையை ப்போல். சான்றாக ‘அம்மா’’ என்ற சொல்லை அம்மா ! அம்மா! அம் மா! அம்மா என்ற ஒரே  சொல்லை பல முறை திரும்பத் திரும்ப உச்சரிக்கக் கூடும். அல்ல து அ,அ,அ,அ,அ என்று திரும்பத் திரும்ப உச்சரிக்கக் கூடும். ஒருகுழந்தையானது வேகமாக, சொற்க ளை உச்ச ரிக்கும் பொழுது அல்லது அதிகளவு உணர்ச்சி வசப்படும் பொழுது, திக்குதலின் தன்மையானது பன்மடங்கு அதி கமாகக்கூடும். குழந்தையானது திக்குதலுக்கு ஆளா கும் பொழுது, குழந்தையின்  முகத்தில் சிலவகையான மாற்றங்கள் ஏற்படுவ தோடு அல்லாமல், மூச்சுவிடும் தன்மையும் மாறுபடும்.

திக்குவாய் என்பது குழந்தைகளைப் பற்றும் ஒருவகையான நோயா?

நம்நாட்டில் பெரும்பான்மையான மக்கள், பாமரர்கள் மட்டுமல் லாமல், படித்தவர்களும் திக்குவாயை ஒரு வகையான நோ ய் என்றே தவறாக கருதுகின்றார்கள். உண்மையில் திக்குவாய் என்பது குழந்தையின் தனி ப்பட்ட தகவல் தொடர்பு முறையால்  ஏற்படும் ஒரு வகையான இயற்கைக்கு மாறுபட்ட தொடர்பு அறுந்து விட்டு விட்டு ஏற்படும் தகவல் தொடர்பு முறையாகும்  பெரும்பான்மை யான மக்கள் நினைப்பது போல் இது ஒரு வகையான குழந்தையைய் பற்றும் தொற்றுநோய் அல்ல.  

திக்குவாயை நலப்படுத்த பெற்றோர்கள் தொடக்க நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியதின் அவசியம் என்ன?

குழந்தையின் வளர்ச்சிக் கட்டத்தில் பேச்சுத் திறன் என்பது முக்கிய மைல் கல்லாகும். இத் தகைய காலகட்டத்தில் பெற்றோர்கள்  மிகவும் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். ஏனென்றால் திக்குவாயிற்கு ஆளாகும் குழந்தைகள், தான் பேசினால் அடிக்கடி  திக்கும் – இதனால் மற்ற வர்களின் கேலிக்கு ஆளாகக் கூடும் என்ற அச்ச த்தில் மற்றவர்களு டன் பேசு வதை தவிர்த்து சற்று  ஒதுங்கி வாழ நினைக் கும். இதன் விளைவாக பள்ளிச் சூழலிலும், குடும்பச் சூழ லிலும், மற்றவர்களுடன் ஒதுங்கி தனித்து  வாழ நினைக் கும்.

இதன் விளைவாக திக்குவாய் குழந்தைகளுக்கு  மனதில் தாழ்வு மனப்பான்மை தோன்றும். கொ ஞ்சம் கொஞ்சமாக குழந்தையின் ஆளுமை பல வழிகளில் பாதிக்கக் கூடும். மேலும் குழந் தை யானது தன்னம்பிக்கையை இழக்கத் தொடங்கும். இதன் விளைவாக, பள்ளியில் இவர்களுடைய கல்வித்திறனானது மற்ற குழந்தைகளை விட ஒப்பிடும் பொழுது மிகவும் பின் தங்கியே இருக்கும். குடும்பத்திலுள்ள மற்றவர்களுடன் அவர்கள் பழகும் விதமானது மிகவும் மாறுபட்டு இருக்கும், எதிர்காலத்தில் இ வர்களுடைய திருமணத்திற்குப் பின் உள்ள உற வுகள் யாவும் சற்று மாறுபட்டே இருக்கும். இவர் களுக்கு வா ழ்க்கை  என்பது இருள் நிறைந்த குகையாக காட்சியளிக்கும். எனவே, திக்குவா யான தொடக்கநிலையில் விழிப்புணர்வு கொண் டு, குழந்தைகள் எதிர் காலத்தை மனதில் கொண்டு, தொடக்க நிலையில் தக்க மருத்துவ உதவியை நாடுவது அவ சியமாகும்.

திக்குவாய் குழந்தைகள் பாடும் பொழுது மட்டும் தடங்கலின்றி மிக வும் தெளிவாகப் பாடுகின்றார்களே? இதற்கு காரணமென் ன?

திக்குவாயிற்கு ஆளான குழந்தைகள் பாடும்பொழுது, பாடும் பாடலின் வரிகளை முன் கூட்டியே பயிற்சியின் மூலமாக  உச்சரி க்கக் கற்றுக் கொள்கின்றன. மேலும் தொ டர்ந்து நிகழும் பயிற்சியின் மூலமாக, பாடலின் வரிகளை தெளிவாக  மனப்பாடம் செய்து கொள்கின்ற ன. இதனால் இந்த குழந்தைகள் பாடலின் வரிகளை முழுமை யாக புரிந்து கொண்டு உச்சரித் துப்பாடுவதால் எவ் வகையான மனக்குழப்பத்திற்கும், திக்குதலுக்கும் ஆளாகாமல் பாடும் பொழுது தெளிவாக பாடலின்  வரிகளை உச்சரிக்கின்றன. இதனால் திக்கு தலுக்கு வாய்ப்புக்கள் மிகவும் குறைவாக உள்ளன.

வாயில் கூழாங்கற்களை போட்டுக் கொண்டு தொடர்ந்து பேசினால் திக்குவாயை நலப்படுத்த முடியுமெனக் கூறுகின்றார்கள்.  இத்தகை ய முறையில் எந்த அளவு, மருத்துவ அறிவியல் உண்மை உள் ளது?

பல நூற்றாண்டு காலமாக, நம் நாட்டில் மட்டு மல்ல, பெரும்பான்மையான நாடுகளில் தொ ன்றுதொட்டு நிலவிவரும்  மூடநம்பிக்கை யாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், கிரேக்க நாட்டில் வாழ்ந்த அறிஞர் டொமாஸ் தனிஸ் தன்னுடைய திக்குவாயைப் போக்க, கூழாங்கற்களைப் பயன்படுத்தியதாக வரலா று கூறுகின்றது. இளம் வயதில் திக்குவாயால் அவதிப்பட்ட,  டொமாஸ்தனிஸ் வாயில்கூழா ங்கற்களை போட்டுக் கொண்டு நீண்ட நாட்க ளாக பேசிப் பேசி, தன்னுடைய திக்குவாயை  திறமையாக போக்கிய தோடு அல்லாமல் கிரேக்கம் புகழும் சிறந்த பேச்சாளராக விளங் கினார் என வரலாறு கூறுகின்றது.

சரளமாகவும் தெளிவாகவும் பேசும் ஆடவர்கள், குழந்தைகளின் நாவான து வாயின் அகப்புறத்தில் குறிப்பிட்ட இடத்தை  தொடுவது வழக்கமாகும். ஆனால் திக்குவாயிற்கு ஆளாகும் குழந்தையின் நாவானது இயற்கைக்கு முரணாக  வாயின்  அகப் பகுதியின் வேறு பகுதியில் தொடும். குழந்தையி ன் வாயில் கூழாங்கற்கள் அடைத்துக் கொண்டிரு ப்பதால், குழந்தையின்  சிந்தனையும், கவனமும் திசை திருப்பப்படுகின்றது. அதாவது குழந்தைக ளானது, கூழாங்கற்களை விழுங்கிவிடுவோமோ என்ற  பயத்தில்  சொற்களை உச்சரிக்கும் பொழுது பதட்டம் அடையாமல் தெளிவாக உச்சரிக்கின்றன. இத்தகைய முறையானது,  திக்குவாயைப் போக்க சிறந்த முறையல்ல. ஏனென்றால் குழந்தையின் வாயினின்று கூழாங் கற்களை எடுத்து விட்டால் குழந்தை  மறுபடியும் திக்க ஆரம் பிக்கும். மேலும் குழந்தையானது தவறுதலாக, கூழாங்கற்களை விழுங் கி விட்டால், அதன் விளைவுகள்  கடுமையானது. வாயில் கூழாங் கற்களைப் போட்டு திக்குவாயை ப் போக்குவது என்பது கிரேக்க அறிஞருக்கு வேண் டுமென்றால்  சிறந்த முறையாக பயன் பட்டிருக்கலா ம். தற்கால முறைக்கு ஏற்றதல்ல.

திக்குவாய் குழந்தைகள் ஆர்ப்பரிக்கும் அலை கடலு க்கு முன்னர் நின்று உரக்கக் கத்தி பயிற்சி செய்தால் திக்குவாயைப்  போக்க முடியும் என்கின்றார்களே. இதில் எந்த அளவு உண்மை உள்ளது?

திக்குவாய் தொடர்பாக உலகின் பல நாடு களில் நிலைத்து வரும் நம்பிக் கைகளில் இது ஒன்றாகும். ஆர்ப்பரிக்கும் அலைகட லுக்கு முன்னர் நின்று கொண்டு உரக்கக் கத்தி பயிற்சி செய்தால் காலப்போக்கில் திக்கு வாயைப் போக்கிவிட முடியும் என்ற  நம்பிக்கை உலகளவில் நிலவி வரு கின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் ஆர்ப்ப ரிக்கும் அலைகடல் எழுப் பும் பேர்  ஒலியானது, திக்குவாய் குழந்தை கள் பேச்சு ஒலியை முழுமையா க மறைத்து விடுகின்றது. இதனால் குழந்தையானது தான்  பேசும் ஒலியை திரும்பப் பேச இயலா மல் போய் விடுவதால், திக்கும் வாய்ப்பு ஏற்படுவதில்லை. ஆனால் இந்த முறையா னது  அமைதி யான, ஓசையற்ற மற்ற இடங் களில் பேசும் பொழுது, செயல்படுமா என்பது கேள்விக்குரிய ஒன்றாகும்.

திக்குவாயை நலப்படுத்தும் தன்மையுள்ளமருந்துகள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளனவா?

ஏற்கெனவே இந்தக் கட்டுரையின் முன் பகுதியில் கூறியபடி, திக்கு வாய் என்பது ஒரு நோயல்ல. திக்குவாய் என்பது சரளமாக  பேச இயலாது, பே ச்சில் ஏற்படும் ஒருவகையான தட்டுத்தடங் கல் நிகழ்வாகும். நோயைத் தான் மருந்துகள் மூலம் தற்காலமுறையில் நலப்படுத்த இயலு ம். எனவே, இதுவரை முழுமையாக நலப்படு த்தும் தன்மையுள்ளமருந்துகள் எதுவும் கண்டு பிடிக்கப்பட வில்லை. நம் நாட்டில் திக்குவா யை நலப்படுத்தக்கூடிய பல்வகையான மருந் துகள் இருப்பதாக விளம்பரங்கள் மூலம்  விளம்பரப் படுத்தப் படுகின்றன. இவற்றால் உங்கள் பணப்பைதான் திக்குமே ஒழிய, இதனால் எவ்வகை யான  பலனையும்  பெற இயலாது.

திக்குவாயை நலப்படுத்தும் வாய்ப்புக்கள் எந்த அளவில் உள்ளன?

திக்குவாய் என்பது இன்றைய நாளில் நலப்படுத்த இய லாத குறைபாடு அல்ல. தொடக்கக் காலத்தில் பயிற் சிபெற்ற மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுந ர்கள் உதவியை நாடி, பொறுமையுடன் தொடர்ந்து முறையா ன பயிற்சி பெற்றால் இந்த குறைபாட்டு நிலையை அக ற்ற முடியும். தொடர்ந்து முறையான பயிற்சி பெறும் ஐந்து குழந்தைகளில், நான் குகுழந்தைகள் முழுமை யாக நலம் பெ ற்று தங்கு தடங்கல் இன்றி தெளிவாக பேசமுடியும். எனவே பெற்றோர்கள் அறி வியலுக்குப் பொருந்தாத  தவ றான மருத்துவ முறைகளை மேற்கொண்டு காலத்தையும், பொருளையு ம் வீணாக் காமல் முறையான மருத்துவத்தை  மேற்கொள்வது சிறந்த முறை யாகும்.

வளர்ந்து வரும் நவீன மருத்துவ தொழில்நுட்ப முறைகள் திக்கு வாயை சரி செய்ய எவ்வாறு துணைபுரிகின்றது?

திக்குவாயினால் அவதியுறுவோருக்கு பயிற்சி அளிக்கவும், அவர்களின் குறை யை சரிசெய்யவும், பல்வகையான மரு த்துவ  தொழில்நுட்ப அறிவை அடிப்ப டையாகக் கொண்டு, பல்வகையான புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளன. இவை திக்கு வாயை சரி செய்ய பெரிதும் துணையாக உள்ளன. கம்ப்யூட்டர்கள், ஒலிப் பதிவு நாடாக்கள், ஒலியை காலம் தாழ்த்தி  அனு ப்பும் கருவிகள், (DELAYED AUTIORY FEED BACK) அதிர்வலைப் பொறிகள் (VIBRATING MACHINES), ஒலி மறைப்பான்கள்  (MASKER) போன்ற வை, திக் குவாயை சரிசெய்ய பயன்படுத்தும் சில முக்கிய  நவீன மருத்துவக் கருவிகளாகும்.

திக்குவாயிற்கு ஆளான குழந்தைகளின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?

தங்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்ட  திக்குவாயை மரு த்துவ அறிவி யலுக்கு ஒவ்வாத பல்வகையான மாந் திரீக முறைகளின்  மூலமாக நலப்படுத்தி விட்டால் என்ற சப லங்களுக்கு ஆளாகி, பொருளையும், கால த்தையும் வீணாக்காதீர்கள்.

 நீங்கள் வாழும் பகுதியிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் காது, மூக்கு, தொண்டைப் பிரிவிலுள்ள சிறப்பு மருத்து வரை அணுகி னால், அவர் உங்கள் குழந்தைக்கு மேற்கொள்ள வேண்டிய மருத்து வமு றைகளை சிறப்பாக மேற்கொள்வார்.

இத்தகைய சிறப்பு மருத்துவரின் வழிகாட்டுத லின் பேரில், திக்குவாயை சரிசெய்ய இதற் கென சிறப்புப் பயிற்சி பெற்ற திக்குவாயை சரி செய்யும் சிறப்புப் பயிற்சியாளர்கள் (SPEECH THRRAPIST) உங்களுக்கு அன்றாடம் தொடர் ந்து பயிற்சி  அளித்து உங்கள் குழந்தைகள் திக்குவாயைச் சரி செய்வார்.

திக்குவாய் பற்றிய நமது சமுதாயப் பார்வை ஏன் மாறவேண்டும்?

திக்குவாய் பற்றி நமது சமுதாயப் பார்வையானது முழுமையாக மாற வேண்டும். திக்குவாய் என்பது தனிமனிதரின் சொற்களை  வெளிப்படுத் துவதில் ஏற்படும் ஒருவகையான குறை பாடுதான். அதை நாம் முழுமையாக புரிந் துகொ ள்ள வேண்டும். இன்றைய  நாளில் குழந்தைகள் பள்ளிகளில் பலவகையான கிண்டலுக்கும் கேலி க்கு உரிய பொருளாக ஆக் கப்பட்டு, மற்றவர்கள் அவர்களுக்கு பல்வகையான மன உளைச் சலை ஏற்படு த்துவது மிகப் பெரிய சமுதாயக் கொடுமையாகும். இது போன்று  திக்கு வாயிற்கு ஆளான ஆடவர்களும் அன்றாட வாழ்க்கையில் கேலிக்குரிய பொரு ளாக ஆக்கப்படுகின்றார்கள்.

இன்றைய திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சித் தொட ர்கள், மற்றும் இதழ்களில் வரும் நகைச்சுவை துணுக்குகளில்  திக்குவாயர்கள் ஜோக்குக்குரிய பாத்திரங்களாக படைக்கப்பட்டு வருகின்றார்கள். நகைச் சுவைக்கு நல்ல கருக்கள் இருக்கும் பொழுது, திக்குவாயிற்கு ஆளாகுபவ ர்கள் கேலிக்குரிய பொருளாக ஆக் கப்படுவது, கண்டனத்திற்குரிய செயலாகும். எனவே,  திக்கு வாய் பற்றிய நமது சமுதாயப் பார்வையில் நிறைய மாற்றங்கள் தேவை. அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான்  என்ற சீரிய நோக்கு நம்மிடையே ஏற்பட வேண்டும்.

 

கீழ்க்காணும் புகைப்படத்தை கிளிக் செய்யவும்

Advertisements

6 Responses

  1. I never seen such a information on stammering. Great work. Thanks.

    Like

  2. god thanks ……………………….
    by sens….

    Like

  3. அணைவரும் படிக்க

    Like

  4. தல்லா பதிவு

    Like

  5. நல்ல பதிவுசேர் இன்று திக்குவாய் விழிப்புணர்வுதினமாம் இப்பதிவை மீண்டும் போஸ்ட் செய்யுங்களேன் நன்றி

    Like

  6. good to see your thoughts…i am also stammering person.. now i understood how to speech clearly and learn good new things…thank u sir

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: