Advertisements

குரு தட்சனை என்பது . . .

குரு, குருகுலவாசம் என்கிற போது, குரு தட்சணை முக்கியம். ஒரு குருவிடம் பாடம் பயின்ற மாணவன், பயிற்சி முடிந்து வெளி யேறும் போது, குருவுக்கு தட்சணையாக ஏதாவது கொ டுப்பது வழ க்கம்.

குருவானவர், தட்சணையை எதிர் பார் ப்பதில்லை. “ஸ்ரீஷேம மாக இருந்தால் போதும்…’ என்று ஆசீர்வதிப்பார். மாண வர்கள் நிர்பந்தப்படுத்தி, முடிந்த அளவு ஏதாவது தட்சணை கொடுத்தால், ஏற்றுக்கொள்வார். மாணவர்க ளுக்கு கல்வி, ஞானம், வேத சாஸ்திரங்களை போதிப்பதில் தான் அவரது கவனம் இருக்கும்; தட்சணையைப் பற்றி கவலைப் பட மாட்டார். ஒரு முனிவரிடம், பாடம் பயி ன்றார் பகவான் கிருஷ்ணன். பாடம் கற்று முடிந்ததும், “என்ன குரு தட்சணை கொடுக்க வேண்டும்?’ என்று கேட்டார். “எனக்கு தட்ச ணை எதுவும் வேண்டாம்…’ என்றார் முனி வர். நிர்பந்தப்படுத்தி, “ஏதாவது கேட்க வேண் டும்…’ என்றார் பகவான். “அப்படியானால், பல ஆண்டுகளுக்கு முன், சமுத்திரத்தில் அடித்துச் செல்லப்பட்ட என் குழந்தைகளை கொண்டு வந்து கொடு; அதுவே, குருதட்ச ணை…’ என்றார்.

பகவானும், எமலோகம் சென்று, குழந்தைகளை கொண்டு வந்து குருவி டம் சேர்த்தார்; இது, ஒரு வித குருதட்சணை. குருதட்ச ணை என்றதும், ஏகலைவன் பெ யர் நினைவில் வராமல் இருக் காது!

துரோணரிடம், நேரடியாக வில் வித்தை பயிலவில்லை ஏக லைவன். அவரைப் போல ஒரு பிம்பம் செய்து, அதை குருவாக பாவித்து, தானாகவே வில் வித் தை பயின்றான். ஒரு சமயம், தன்னை குருவாக பாவித்து, வில் வித்தையில்  தேர்ச்சி பெற்றிருப்பதை அறிந்த துரோணர், ஏக லை வனிடம் குருதட்சணை கேட் டார். “எதை வேண்டுமானா லும் கேளு ங்கள்; தருகிறேன்…’ என் றான். “உன் வலது கட்டை விர லை குரு தட்சணையாக கொ டு…’ என்றார் துரோணர். சிறி தும் தயக்கமின்றி, தன் வலது கை கட்டை விரலை வெட்டி, குரு தட்சணையாக கொடுத் தான் ஏகலைவன். இப்படியாக குரு தட்சணை கொடுத்தவர்கள் உண்டு.

இந்தக் காலத்தில் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் பயிலும் மாண வர்கள், குருதட்சணை கொடுப்பதற்கு பதி லாக காலேஜ் பீஸ், ஸ்கூல் பீஸ் என்று கொடுத்து விடுகின்றனர். அதுவும், இவர் கள் படிப்பு முடிந்த பிறகு கொடுப்பரோ, மாட்டார்களோ என்று முதலிலேயே, “அட்மிஷன் பீஸ்’ என்று வாங்கி விடுவர். அதன்பிறகு இவர்கள் படித்தால் படிக்க ட்டும், இல்லாவிட்டால், கொடி பிடித்து கோஷம் போட்டு ஊர்வலம் போனாலும் போகட்டும் என்று விட்டு விடுகின்றனர்.

குரு – மாணவன் உறவு சுமூகமாக இரு க்க வேண்டும். அது தான் முக்கியம்; குருதட்சணை முக்கியமில்லை. “இவ ன் என் மாணவன்…’ என்று, குரு பெரு மைப்பட வேண்டும்… “இவர் என் குரு …’ என்று மாணவன் பெருமைப்படுத்த வேண்டும். “குருவுமில்லை, ஒண்ணு மில்லை… எல்லாம் நானே கற்றுக் கொ ண்டேன்…’ என்று சொல்லும் தற்குறிக ளும் உண்டு. இவர்கள் எதைக் கற்றுக் கொண்டனரோ… அது, பக வானுக்கே வெளிச்சம்!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: