Advertisements

குழந்தைப் பேறின்மை எதனால் ஏற்படுகிறது?

(டாக்டர் பி. பாரதி பரமசிவன் அவர்கள் 
ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை)

தாயின் வயிற்றில் இருக்கும் போ தே கருக்குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட் டினால் குழந்தைப் பேறின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை என் கிறது சித்த மருத்துவம்.

நூற்றுக் கணக்கில் செலவழித்து டா னிக், ஹெல்த் டிரிங்க்ஸ் எல்லாம் குடிக்கத் தேவையில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களை (தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள்) உரிய காலத்தில், உரிய வழி முறைகளில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆனால் வாழ்க்கை முறை மாற்றத்தால் எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டதன் விளைவுதான், இன்று குழந்தைப் பேறின்மை அதிகரிக்கக் காரணம். இனி குழந்தைப் பேறின்மையை நீக்க சித்த மருத்துவம் உதவுவது எப்படி என்பது குறித்து விரிவான அலசல்:-

குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் காரண ங்கள் என்ன?

“பாரப்பா பெண்மலடாங் கற்பக் கோளின்
பக்குவத்தைச் சொல்கிறேன் பக்குவமாய்க் கேளு
ஆரப்பா ஆண் மலடே யாகுல்லாமல்
அப்பனே பெண் மலடு யாருமில்லை”

– அகத்தியர் கர்ப்பக் கோள்

என்ற பாடலின்படி கருப்பை சினைப்பை, கருக்குழல், கருவாய் இருந்தால் பெண் மலடு என்ற பேச்சுக்கே சித்த மருத் துவத் தில் இடமில்லை. சித்த வைத்தியம் முடிந்த முடி வான மருந்து. சித்தர்கள் சொன்ன மூலப் பொரு ளைக் கொண்டு சொல்லிய முறை யில் தயாரித்தால் நோய் நீக்குவது மட்டும் அன்றி நோய் வராமலும் தடுக்கலாம்.

பெண்ணை பூமாதேவி என்று அழைக்கிறார்கள். பூமியில் எந்த மண்ணிலும் விதை போட்டு தாவர ங்களை வளர்க்கலாம். அதனால் பெண் மலடு என்ற பேச்சுக்கே இட மில்லை. ஏனென்றால் கடலும் கடல் சார்ந்த இடத்திலும் மலையும் மலைசார்ந்த இடத்திலும் வயலும் வயல் சார்ந்த இடத்திலும் காடும் காடு சார்ந்த இடத்திலும் பாலையும் பாலை சார்ந்த இடத்திலும் செடி, கொடிகளை வளர்க்கலாம். இந்த வகையில் பெண்களுக்கு மலடு என்ற சொல்லே இல்லை.

“இசைந்ததொரு பெண்மலடு எங்குமில்லை
எதனாலே மலடான சேதி கேளு
அசைந்திருக்கும் பேயாலும் பித்தத் தாலும் அடிவயிறு நொந்துவரும் வாயு வாலும் பிசைந்த கர்ப்பப் புழுவாலும் கிரகத்தாலும் பிணியாலும் மேகி வைசூரியாலும் துசங்கெட்ட கலவியினால் துலங்காமல் பிள் ளையில்லை சொல்லிக்கேளே”

பேயாலும் என்பது மனநிலை குன்றிக் காணப்படுவதைக் குறி ப் பிடுகின்றனர். சாதாரணமாக (Psychosomatic Disorder, Hysteria) மனநலம் பாதிக்கப்ப டுவதால் குழந்தை பேறடைய முடிவதில்லை.

பித்தத்தாலும் என்பது நம் உடலில் காணப்படும் நாளமில்லாச் சுரப் பிகளில் ஏற்படும் மாறுபாடுகளினால் தாய்மை அடைவது தடுக்கப் படுகிறது.

வாயுவாலும் அடிவயிறு நொந்து வரும் வாயு வாலு ம் என்பது மாதவிடாய், வயிற்று வலி, குதக வாயு, சூதகக்கட்டு மற்றும் அடி வயிற்றில் காணப் படும் உள் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பையும் குறி ப்பிடு வதாகும்.

கர்ப்பப் புழுவாலும்- கர்ப்பப் புழு என்பது கருப் பையில் காணப்படுகின்ற கர்ப்பப் புழுவைக் குறிக்கு ம். இவை கருப்பையை வந்தடையும் விந்துவை அழி த்துவிடுவதால் கருத்தரிப்பதில்லை (Vaginal acidity).

கிரகத்தாலும் பிணியாலும் என்பது சிலருக்கு அடிவயிறு உறுப் புகளில் தொற்றுக் கிருமிகளால் (Infection) ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து ஏற்படும் விளை வைக் குறிக்கும். அதாவது (Peritonitis Sal- phingitis) போன்றவையும் ஒரு காரண மாகிறது. இதனால் கருப்பைக் குழாயில் அடைப்பு ஏற்படுகி றது. மேலும் கருப்பையில் காசநோய்க் கிருமிகள் (Tuberculosis) பாதித்தாலும், கருத்தரி ப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது.

கருத்தரிப்பதற்குத் தடையாக இருக்கும் நோய்கள் எவை?

Venereal Disease

வைசூரி: அம்மை நோய்கள் போன் று வைரஸ் கிருமிகள் உடலில் ஏற் படுத்துகின்ற பாதிப்பு பெண்ணுக்கு குழந்தைப்பேறின்மையை உண்டா க்குகிறது.

Venereal Disease

Fallopian tube block

மேலும் சித்த மருத்துவத்தில் கருக்குழாய் அடைப்பு, (Fallopian tube block), சினை ப்பை கட்டிகள் (PCOS) கருப்பை சவ்வு அழற்சி (Endometriosis), ஒழுங் கற்ற மாத விலக்கு (Irregular Menst- ruation), கருப் பைக் கழலை (Fibroid Uterus), பெரும்பாடு (அதிகமாக கட்டி கட் டியான உதிரப்போக்கு), தை ராய்டு சுரப்பி கோளாறு (Thyroid Dysfunction), சினை முட்டை சரி வர வளராமை போன்ற காரணங் களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

கர்ப்பப்பை கோளாறுகளின் அறி குறிகள் என்ன?

கருப்பை கோளாறுகள் பெண் கள் பூப்பு எய்திய நாள் முதல் தோன்ற ஆரம்பித்தாலும் பொதுவாக இந்நோய்கள் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது கணைச் சூடு என்ற வித மாய்த் தொடங்குகின் றன. பழங்கால பாட்டிகள் கணைச் சூட்டுக்கு கற்றாழைச் சாறு கலந்த எண்ணெய்யை வாரம் இருமுறை சாப்பிடக் கொடுப்பார்கள். இந்த முறையில் தற்போது சித்த மருத்துவத்தில் குமரி எண்ணெய் என்ற மருந்தை தயார் செய்து கொடு க்கப்படு கிறது.

இந்த கணைச் சூடு பூப்பு எய்திய காலத் தில் கர்ப்பச் சூடாக மாறும். இதனால் ரத்த சோகை ஏற்படும். இதன் காரணமாக மாத விலக்கு மாறு பாடு ஏற்படும். இதனால் கருப்பை சூடு ஏற்பட்டு வெள்ளை ஏற்படு கிறது. நம் சமூகத்தில் இருந்த நல்ல பழக்கங்களை நாம் கடை பிடிக்க மறந்து ஒவ்வொரு மருத்துவ மனையாக ஒவ்வொரு நோயி ற்காக தேடி அலைந்து கொண்டு இருக்கி றோம்.

கர்ப்பப் பை வளர்ச்சியில் எப்போது அக்கறை செலுத்த வேண்டும்?

நம் சமுதாயத்தில் பெண் பூப்பு எய்த வுடன் நாள்தோறும் ஒரு முட்டையை உடைத்து வாயில் ஊற்றி பின்னர் முட்டை ஓட்டில் உள்ள அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றி குடிக்க வைப்பார்கள். இன் னும் சில பேர் உளுத்த மாவில் செய்த உணவுப் பண்டங்களை நாள் தோறும் சாப்பி டச்செய்வா ர்கள். உளுத்தம் கஞ்சி, புழுங்கல் அரிசி கஞ்சி, கேழ்வரகு அடை, முருங்கைக் கீரை பிசைந்த சாதம் போன்ற வற்றைச் சாப்பிட்ட நமது முன்னோ ர்களின் பேரக் குழந்தைகள், இப்போதைய நாகரீக வாழ்க்கையில் “பாஸ்ட் புட்” கலாசார உணவுகளைச் சாப்பிட்டு உடலாகிய கோயிலை அழித்துக் கொண்டு வருகிறோம். நம் முன் னோர்கள் பயன்படுத்திய உணவுகள் கருப்பையைச் சுத்தமாகவும், இடுப்பு எலும்புகள் வலுப் பெறவும், சினை முட்டை உருவாகவும், சினைப்பை, கருப்பைக் கழ லைகள் உண்டாகாமல் தடுக் கவும் செய்தன; இதுபோன்ற உணவு முறைகளை பூப்பெய்த காலத்தில் பயன்படுத்தி வந்தால் குழந்தை பேற்றை ஒரு இயல் பான காரியமாகச் செய்ய முடி யும்.

முளை கட்டிய பயறு வகை, கொ ண்டைக் கடலை சாப்பிட்டு வந்தால் ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும். கால் கிலோ உளுந்தை நெய்யில் வறுத்து மாவாக்கி பனங் கற்கண்டு, ஏலக்காய், நெய் சேர்த்து உருண்டை பிடித்து நாள்தோறும் ஒரு உருண்டை வீதம் மாதத்தில் 10 நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை பூரண வளர்ச்சி பெறும். தேனும் தினை மாவும் சேர்த்து உருண்டை செய்து சாப்பிட கருப்பை பலம் உண்டாகும்.

நாள்தோறும் ஒரு முட்டை சேர்த்துக் கொண்டால் இடுப்பு எலும்பு, சினைப்பைகள் வலுப்பெறும். நல்ல நாள், விருந்து விழாக்கள் போன்றவற்றுக்கு மாத விடா யைத் தள்ளிப் போடுவதற்குச் சாப் பிடும் மருந்துகள் சினைப் பைக் கட்டி, கருப்பைக் கட்டி போன்றவை கள் உருவாகி மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்படும். இதனா ல் கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுகிறது.

சித்த மருத்துவத்தில் நோய் தீர் க்கும் வழிமுறையும் நோய் வராமல் தடுக்கும் முறையும்…: எஸ்.கே.எம். சித்த மருத்துவமனையில் தேரையர் சித்தர் அருளிய நோய் அணுகா விதிகளை பின்பற்றி வருகிறோம். முதலில் உட லைச் சுத்தம் செய்ய வேண்டும். வார த்துக்கு இருமுறை (செவ்வாய் -வெ ள்ளி இரு தினங்கள் மருந்து சாப் பிடும் முன்பு) எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால் நம் உடல் சூடு, கண் எரிச்சல், உடலில் ஏற்படும் அசதி நீங்கி உற்சாகம் ஏற்படும்.

பிறகு ஆண்டுக்கு 2 முறை பேதி மருந்து எடுக்க வேண்டும்.பருவ கால மாற்றத்தால் வரும் நோய்களை வராமல் தடுப்பதற்கு நாங்கள் 3 நாள் பேதி மருந்து கொடுக்கிறோம். நோய்க்குத் தக்கவாறு கலிங் காதி தைலம், மலை வேம்பாதி தைலம், லவணகுணாதி எண் ணெய், சித்தாதி எண்ணெய், அகத்தியர் குழம்பு போன்றவற்றை உடல் நிலைக்கு, நோய்களுக்கு, கால த்துக்குத் தக்கவாறு மருந்து களை வழங்குகிறோம்.

45 நாள்களுக்கு ஒரு முறை நசியம் (மூக்கில் மருத்துவம் மேற் கொள்ளும் முறை) செய்கி றோம். மூக்கிற்கும், மூலாதா ரத்திற்கும் தொடர்பு இருக்கி றது. அதனால் கருவாய், எரு வாய், மலவாய் சம்ப ந்தமான தொந்தரவுகள் நீங்குகின்றன. கட்டி, கழலை ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு, செக்ஸ் உறவு பற்றிய போதிய விவ ரம் தெரியாமை போன்ற கார ணங்களினால் அதிக உதிரப்போக்கு, 6 மாத த்துக்கு ஒரு முறை உதிரப்போக்கு, ஒரு நாள் மட்டும் தீட்டு படுதல், சிறுநீர் கழிக்கும் போது தீட்டு படுதல் போன்ற காரணங்களுக்கு ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரி சோதனை, ஹார்மோன் பரிசோதனை செய்து எல்லாம் இயல்பாக இருந்த பெண்களுக்கு நசியம் செய்து கொடுத்து மகப்பேறு அடை ந்துள்ளனர்.

மாதவிலக்கு உண்டான 3 நாள்கள் மூலிகை கற்கங்களை காலை யில் 6 மணிக்கு நீராகாரம் (அல்லது) மோரில் அரைத்துக் கொடுத்து அநேகம் பேர் மகப்பேறு அடை ந்துள்ளனர்.

கலிக்கம் (கண்ணில் மரு த்துவம் மேற்கொள்ளும் மு றை): ஒவ் வொரு மாதமும் பௌர்ணமி அன்று கலிக்கம் செய்கிறோம்.

உடலை நோய் வராமல் இரு க்கச் செய்யும் மேற்கூறிய வழி முறை களை பின்பற்றி உடலே Ovulation-I உணரும் வகையில் செய்ய லாம்.

இனப்பெருக்க உறுப்புகள் பலமடைய ஆசனங்கள் உதவுமா?

இதைப் பின்பற்றிப் பலருக்கு குழந்தைச் செல்வம் உண்டாக்கி இருக்கிறோம். காலையில் எழுந்தவுடன் வாசல் தெளி த்தால் கிருமிகள் வீட்டில் வராமல் இருக் கும். அதே சமயம் நல்ல பிராண வாயு வை உள்வாங்கி ரத்த ஓட்டத்தைச் சீர் செய்து நோய் நிலையைக் குணப்படுத் திவிடும்.

காலையில் எழுந்து குளித்து கோலம் போ ட்டால் மூளைக்கு ரத்த ஓட்டம் நன்றாகச் செல்லும். அதனால் தலையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி உள்பட அனைத்துச் சுரப்பிகளும் நன்றாகச் செயல்படும். மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காக இவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் இந்தியன் முறை கழிப்பறையில் மலம் கழிப்பது குக்குடாசனம் என்ற ஆசனம்; வீடு மொழுகுதல்கூட ஆசனம்; பிறந்தது முதல் வாழ்நாள் முழுவதும் நம்மை அறியாமல் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு ஆசனம். அது 80 லட்சத்து 20 ஆயிரம் ஆசனம்.

உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் பருமன் உள்ள பெண்களுக்கு குழந்தைப் பேறின்மை ஏற்படுகிறது. இதற்குப் பல வைத்திய முறைகள் மேற்கொண்டு பணம் அதிகமாக செலவு செய்து மன உளைச்சல் ஏற்பட்டு வருந்துகிறார்கள்.

குழந்தைப் பேற்றுக்கு சித்த மருத்துவத்தில் உள்ள மருந்து என்னென்ன?

குழந்தைப் பேற்றுக்கு சித்த மருத்து வத்தில் ஏராளமான மருந்துகள் உள் ளன. என்ன காரணத்தில் மகப்பேறி ன்மை உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப மருந்துகள் கொடுக்கப் படும். வெண் பூசணி லேகியம், கரி சாலைக் கற்ப மாத்திரை, வான்குமரி லேகியம், நரசிங்க லேகியம், குன்ம குடோரி மெழுகு, கர்ப்ப சஞ்சீவி எண் ணய், லவண குணாதி எண்ணெய், அஸ் வகந்தி லேகியம், நிலக்கடம்பு சூரணம், சதாவரி லேகியம், நந்தி மெழுகு, குன்ம உப்பு சூரணம், கர்ப்பப் பை சஞ்சீவி சூர ணம், அகத்தியர் குழம்பு, அசோகப்பட்டை சூரணம், அமுக்கரா சூரணம், சித்தாதி எண்ணெய், கலிங்காதி தைலம், மேக ரா- எண் ணெய், பஞ்ச மூலிகை சூரணம், குமரி எண்ணெய், அதிமதுர சூரணம், திரிபலாக்கற்ப சூரணம், கடுக்காய் சூரணம், மலைவேம்பாதி தைலம், சண்டமாருத செந்தூரம், புங்கம்பட்டை தைலம், திரிகடுகு ஆறுமுக செந்தூரம் ஆகிய மருந்துகள் உள்ளன.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Advertisements

3 Responses

  1. கருமுட்டை வளர்சி அடைய சித்த மருந்து

    Like

  2. என் வயது 32. 4 வருடம் முன்பு ரீகலைசேஷன் செய்து காெண்டேன். 2 வருடம் முன் கருக்குழாய் ஏற்பட்டு ஒரு பக்க குழாய் வெடித்து விட்டது . இனிமேல் இயற்கை கர்ப்பம் தரிக்க வழி இல்லையா

    Like

  3. need to speak

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: