கர்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்…
1. மாதவிலக்கு நிற்பது
கர்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப் பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரை கூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்தரிக் காமலேயே மாத விலக்கு நின்றிருக்கும்.
இதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணி யாற்றுதல், டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மன நிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் கரு முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.
நோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல்பருமன், அனோ ரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்ற வற்றால் மாதவிலக்குதள்ளிப்போகலாம். ஆகவே, மாத விலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.
2. களைப்பு
பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடல்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12-வது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.
3. மசக்கை
இதை ஆங்கிலத்தில் `மார்னிங் சிக்னெஸ்’ என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை நிச்சயம் வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம். மாதவிலக்கு நிற்பதோடு, மேற் கண்ட அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப் பதை பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம்.
சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப் பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத் திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்த நாள் காலையில் மீண்டும் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.
அதுசரி… இந்த மசக்கை ஏன் வருகிறது தெரியுமா?
கருமுட்டையும், உயிரணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார் மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட் டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படி இருந்தும் சக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும் தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது.
இதற்கு காரணம் என்ன?
இந்த காலத்தில் தனக்கு மட்டுமின்றி, தனது கருக் குழந்தைக்கு தேவையான சத்தையும் தாய் பெற வேண்டி யுள்ளது. இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.
4. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
சிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறி குறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.
5. மார்பகப் பகுதி மாற்றங்கள்
முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்தில் உள்ள ரத்த நாளங்களும், மொத்த சுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக் காணப் படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவம் சுரக்கும்.
கர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் இந்த மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப் புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.
6. மனநிலை மற்றும் எடையில் மாற்றம்
சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்க முடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.
7. வயிறு பெரிதாகுதல்
கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக 18 முதல்20-வது வாரங்க ளில் இந்த அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும் வரை நீடிக்கும்.
கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.
இந்த கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறி களாகவும் இருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.
( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் )
13.062852
80.274186
Like this:
Like Loading...
Related
Filed under: பாலியல் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள், மருத்துவம் | Tagged: அடிக்கடி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அறிகுறிகள், கர்பத்திற்கான அறிகுறிகள், கர்ப்பத்திற்கான அறிகுறிகள், கர்ப்பம், களைப்பு, கழித்தல், சிறுநீர், பகுதி, மசக்கை, மனநிலை, மனநிலை மற்றும் எடையில் மாற்றம், மாதவிலக்கு, மார்பக, மார்பகப் பகுதி மாற்றங்கள், மாற்றங்கள், மாற்றம், ம் எடை, வயிறு, india, Pragnanency, Symtoms, Tamil Nadu, Tamil script |
Nice tips
LikeLike
Dr. Yanaku marriage aye 1 year mudidu vidadu ana inum karbam akaka vilai ana 35 days 40 days date akams iruku yaina painanum Dr. Uga pathilukakha wait painuran
LikeLike
எனக்கு மாதவிடாய் திருமணத்திற்கு முன்பு 2,3 நாட்கள் தாமதமாகும் திருமணத்திற்கு பின்னர் 5,6 நாட்கள் தாமதமாகவும் வருகிறது. திருமணம் ஆகிய 4 மாதத்தில் கற்பமாகி அதுவும் 3 மாதத்தில் கருகலைந்தது பின்னர் இன்னும் கற்பம் ஆகவில்லை எனது மாமியார் இனி நான் தாயாக வாய்ப்பு இல்லை என்று சொல்கிறார்
தயவுசெய்து பதில் கூறுங்கள்
LikeLike
Rompa thanks
LikeLike
I am magesh pregnant 4 daysla marpu mulai valikuma solunga plz
LikeLike
I am nanthani na mergz pani 3 month aguthh ipa date agi 35 natgal agikirana but enaku marpu valikuthu and mulai valikuthu .ithu na date agum pothulam valikum so na ipa pregnant irupena solunga plz
LikeLike
nice tips very thanks
LikeLike
mihavum avasiyamana thahavalkal. nandri.
LikeLike
very good information
LikeLike
Thanks for Information
LikeLike
it is a good information for womens
LikeLike
thanks
LikeLike
nalla vilakkam nanry
LikeLike
NALLA INFORMATION
LikeLike