Advertisements

அயோத்தி பிரச்சினை: வ‌ரலாறு

ராமாயண கதையில் ராமன் அயோத்தியில் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. அயோத்தியில் 12-ம் நூற்றாண்டில் ராமர் கோவில் இருந்ததாக பழங்கால இந்து இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. சீன துறவி ஹீயன் தசாங் 7-ம் நூற்றாண்டில் அயோத்தியில் ஏராளமான கோவில்கள் இருந்ததாக கூறியுள்ளார். 500 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது.

அன்று தொடங்கிய பிரச்சினை இப்போது 21-ம் நூற்றாண்டிலும் நீடித்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டிலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-

1527- பாபர் இந்தியா மீது படையெடுத்தார். பல இந்து மன்னர்களை தோற்கடித்து தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார்.

1528- பாபரின் தளபதி மிர்பாகி அயோத்தியில் பாபர் மசூதி கட்டினார். ராமர் கோவில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டதாக இந்துக்கள் புகார் கூறினார்கள். அதில் இருந்து பிரச்சினை தொடங்கியது.

1853- பாபர் மசூதியை கைப்பற்ற இந்துக்கள் முயன்றனர். இதனால் முதல் கலவரம் ஏற்பட்டது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

1859- ஆங்கிலேயர் ஆட்சியில் இங்கு முஸ்லிம்களும், இந்துக்களும் தனித் தனியாக வழிபாடு நடத்த இடங்களை ஏற்படுத்தி கொடுத்தனர்.

1885- மகந்த் ரகுவர் தாஸ் என்பவர் இந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கும்படி வழக்கு தொடர்ந்தார்.

1886- இந்துக்கள் சொந்தமான இடத்தில் மசூதி கட்டப்பட்டு இருப்பதாக பைசா பாத் மாவட்ட கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.

1949- மர்ம நபர்கள் பாபர் மசூதிக்குள், ராமர் சிலையை கொண்டுவந்து வைத்தனர். இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. இதனால் பிரச்சினைக்குரிய இடம் பூட்டப்பட்டது.

1950- பிரச்சினைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பைசாபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

1959- அந்த இடத்தில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்துக்கள் வழக்கு தொடர்ந்தனர்.

1961- பிரச்சினைக்குரிய இடம் தங்களுக்கே சொந்தம் என்று சன்னி முஸ்லிம் வக்பு வாரியம் வழக்கு தொடர்ந்தது.

1984- சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோவில் கட்டுவதற்காக விசுவ இந்து பரிஷத் இயக்கத்தை தொடங்கப்பட்டது. பாரதீய ஜனதா தலைவர் அத்வானி இதன் பிரசார இயக்கத்துக்கு தலைமை தாங்கினார்.

1986- பாபர் மசூதியில் பூட்டப்பட்டுள்ள கதவை திறந்து இந்துக்களும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பைசாபாத் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

1989- ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது சர்ச்சைக்குரிய இடம் அல்லாத இடத்தில் கோவில் கட்ட பூமிபூஜை நடத்த அனுமதித்தார். அயோத்தி வழக்கு ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

1990 செப்- பாரதீய ஜனதா தலைவர் அத்வானி சோமநாதபுரத்தில் இருந்து அயோத்திக்கு ரதயாத்திரை தொடங்கினார்.

1990-நவ பீகாரில் அத்வானி ரதயாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். அப்போது இருந்த வி.பி.சிங் அரசுக்கு பாரதீய ஜனதா அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது.

1992 டிச.6- பாபர் மசூதி இடிக்கப்பட்டு தற்காலிக ராமர் கோவில் கூடாரமாக கட்டப்பட்டு இருந்தது. இது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

2003 மே- இந்த இடத்தில் இந்து கோவில் இருந்ததா? என்பது பற்றி அகழ்வாராய்ச்சி செய்ய அலகாபாத் ஐகோர்ட்டு உத்தர விட்டது.

2003 ஆக.22- அகழ் வாராய்ச்சி அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 10-ம் நூற்றண்டு கட்டிடம் அந்த இடத்தில் இருந்ததாக கூறப் பட்டிருந்தது.

2003 ஆக. 31- அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அகழ்வாராய்ச்சி அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

2010 ஜூலை- சர்ச்சைக் குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது பற்றி 60 ஆண்டாக அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணை முடிந்தது.

2010 செப்-8 தீர்ப்பு செப்டம்பர் 24-ந் தேதி வெளியிடப்படும் என்று கோர்ட்டு தள்ளி வைத்தது.

2010 செப்.14- தீர்ப்பை தள்ளி வைக்கும்படி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

thanks m.malar

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: