Advertisements

மாஸ்கோவின் காவிரி

பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த ரவிவர்மன் முதன் முறையாக இயக்கியிருக்கும் படம் மாஸ்கோவின் காவிரி. நாயகனாக ராகுல், நாயகியாக சமந்தா, ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் ஹர்ஷவர்தன், இசையமைப்பாளர் தமன் என பெரும் பட்டாளமே அறிமுகமாகும் இப்படத்தின் ஸ்பெஷல் ஹைலைட்ஸ்:

* மாஸ்கோவின் காவிரி படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, காஸ்ட்யூம் டிசைன் என அனைத்து பணிகளையும் இழுத்துப் போட்டு செய்திருக்கிறார் டைரக்டர் ரவிவர்மன்.

* வித்தியாசமான இந்த தலைப்பு படத்தின் கதைக்கு தொடர்புடைய ‌தலைப்பாம். அனைவரையும் விரும்பி பார்க்கவும், திரும்பி பார்க்கவும் வைப்பதற்காக இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தார்களாம்.

* படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்க காமெடிக்கு சந்தானமும், கலைக்கு தோட்டா தரணியும் மெனக்கெட்டிருக்கிறார்கள்

* 47 நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்திருந்தாலும் சில காரணங்களால் ரீலிஸ் ஆகாமல் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இப்போது ரீலிஸ் ஆகிறது.

* படத்தின் நாயகி சமந்தா முதலில் கமிட் ஆன படம் இந்த படம். ஆனால் அவர் பாணா காத்தாடி படத்தின் மூலம் முதலில் ரசிகர்களுக்கு அறிமுகமாகி விட்டார். தெலுங்கு விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் சமந்தா அறிமுகமாகி முன்னணி நட்சத்திர பட்டியலில் இடம்பிடித்து விட்டார்.

* காரைக்குடி, திருவாரூர், பாண்டி, சென்னை போன்ற இடங்களில் பாடல்கள் மற்றும் படத்தை எடுத்து முடித்திருக்கின்றனர்.

* கனல் கண்ணன் சண்டைக்காட்சிகளை ஒரிஜினலாக இருக்கும்படி அமைத்திருப்பதோடு, சில காட்சியிலும் நடித்திருக்கிறார்.

* மலையாள படம் ஜலமர்மம் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆன ரவிவர்மனுக்கு, மாஸ்கோவின் காவிரி படம் 23வது படமாகும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: