Advertisements

ரொம்ப ரசிச்சி பார்க்குற படமா இருக்குய்ய

கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம்  கிருஷ்ணலீலை. தயாரிப்பாளர்கள் மத்தியில் மினிமம் கியாரண்டி நாயகன் என்று ‌பெயரெடுத்த ஜீவன்தான் படத்தின் ஹீரோ. அவரு‌க்கு ஜோடியாக நடிப்பவர் நடிகை மேக்னா. விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த வைதேகி காத்திருந்தாள் படத்தில் அவருடைய காதலியாக நடித்த பிரமிளா ஜோஷியின் மகள்தான் இந்த மேக்னா. கிருஷ்ண லீலையை இயக்குபவர் டைரக்டர் ஸெல்வன்.

சூட்டிங், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் எல்லாம் முடிந்து ரீலிசுக்கு தயாராக இருக்கும் கிருஷ்ண லீலையை படத்தின் தயாரிப்பாளர் கே.பாலசந்தருக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார் ஸெல்வன். படம் முழுவதையும் பார்த்து முடித்த பாலசந்தர், ரொம்ப ரசிச்சி பார்க்குற படமா இருக்குய்யா… இந்த கிருஷ்ண லீலை உனக்கு மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுக்கும். நீ பெரிய ஆளா வருவாய்… என்று பாராட்டியிருக்கிறார்.

தீபாவளிக்கு கிருஷ்ணலீலையை திரைக்கு கொண்டு வரும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் படத்தின் டைரக்டர் ஸெல்வன் இதுபற்றி கூறுகையில், கிருஷ்ணலீலை நல்லதொரு சமூக அக்கறையுடனான கதையம்சம் கொண்ட படம். நல்ல படத்தை… நல்ல கதையை எப்போதுமே ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அந்த வரிசையில் கிருஷ்ண லீலையும் இடம்பெறும். ரசிகர்களின் பல்ஸ் பார்த்து படத்தை இயக்கியிருக்கேன். கவிதாலயா சார்பில் இயக்குனர் கே.பாலசந்தருடன் பணியாற்றியது ரொம்ப சந்தோஷமான அனுபவம், என்றார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: