Advertisements

மருந்துட்டியா என்ற ஒரே டயலாக்கில்

மதராசபட்டனம் படத்தில் மருந்துட்டியா என்ற ஒரே டயலாக்கில் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஏமி ஜாக்சன். கொஞ்சும் தமிழ் பேசிய இந்த வெள்ளைக்கார குயில், மதராசபட்டனம் முடிந்த கையோடு சொந்த நாட்டுக்கு புறப்பட்டபோது, எனக்கு சென்னையை ரொம்ப பிடிச்சிருக்கு. நல்ல வாய்ப்பு கிடைத்தால் இங்கேயே செட்டிலாக தயாரகக இருக்கிறேன், என்று கூறி விட்டுச் சென்றார். அவரது ஆசை கூடிய சீக்கிரமே நிறைவேறிவிடும் போலிருக்கிறது.

டைரக்டர் கிரீடம் விஜய் தேடிக் கண்டுபிடித்த முத்து, விரைவில் டைரக்டர் கவுதம் மேனன் மூலம் ஒய்யாரமாக தமிழ் ரசிகர்களின் மனதில் மூட்டை முடிச்சுகளுடன் குடியேறப்போகிறது. ஆம்! கவுதம் மேனன் அடுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தின் நாயகி ஏமி ஜாக்சன்தானாம். தமிழ் சினிமா வாய்ப்பு என்றதும் டபுள் ஓ.‌கே. சொன்ன ஏமி, எப்ப சென்னை வரணும் என்று கேட்டிருக்கிறார். விரைவில் புதிய படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும். ஏமியை மீண்டும் திரையில் பார்க்க தமிழ் ரசிகர்களுக்கு வாய்ப்பு கைகூடி வரும்.

Advertisements

nature

சினிமாவில் நடிக்க தடை விதிக்க நடிகர் சங்கம் முடிவு

விபசாரத்தில் சிக்கிய நடிகைகள் சினிமாவில் நடிப்பதற்கு தடை விதிக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. விபசாரம் செய்யும் நடிகைகளால் திரையுலகின் பெயர் கெட்டுப்போய் விடும் என்றும் நடிகர் சங்கம் கூறியுள்ளது. தெலுங்கு சினிமா நடிகைகளான சாய்ரா பானு, ஜோதி ஆகியோர் சமீபத்தில் விபசார வழக்கில் கைதானார்கள். தங்களை திட்டமிட்டு யாரோ சிக்க வைத்திருக்கிறார்கள் என்று கண்ணீர் வடித்த நடிகைகள், தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும் வாதிட்டு வருகிறார்கள்.

விபசார வழக்கில் சிக்கிற 2 நடிகைகளுக்கும் சினிமாவில் நடிக்க தடை விதிக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. தெலுங்குப் பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் விபசார வழக்கில் கைதான நடிகைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.இல்லாவிட்டால் இவர்களால் தெலுங்குத் திரையுகின் பெயர் கெட்டுப் போய் விடும் என சில தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.  இதையடுத்து அவர்களுக்குத் தடை விதிக்க தெலுங்கு நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை போலீசில் புகார்

தனது பிளாக்கில் தொடர்ந்து அவதூறான தகவல்களை அனுப்பி வந்த பிளாக்கர் மீது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை போலீசில் புகார் செய்துள்ளார்.  இதுபற்றி அமிதாப் தனது பிளாக்கில் எழுதியிருப்பதாவது:-

எனது பிளாக்கைப் பயன்படுத்தி ஒரு நபர் தொடர்ந்து அவதூறாக எழுதி வருகிறார். மிகவும் ஆபாசமான, அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். மிகவும் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது அவரது செயல். எனது செல்போனுக்கும் கூட அவர் இதுபோன்ற எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வருகிறார். எனக்கு குடும்பத்தாரை புண்படுத்தும் வகையில் அவரது எஸ்.எம்.எஸ்கள் இருக்கின்றன. இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீசாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன். இதுபோன்ற எந்த ஒரு ஆபாசமும் எனது பிளாக்கை அடையாமல் தடுக்க வேண்டும் என கோரியுள்ளேன். எனவே அந்த நபர் மீண்டும் இதுபோல நடந்து கொண்டால் நிச்சயம் சைபர் கிரைம் போலீஸ் வசம் சிக்குவது உறுதி, என்று கூறியுள்ளார்.

புறக்கணித்த விவகாரத்தை புறக்கணித்த கமல்ஹாசன்

கேரளவாவில் தனக்கு நடந்த பாராட்டு விழாவில் மலையாள நடிகர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த விவகாரத்தை புறந்தள்ளியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.  கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள். மலையாள நடிகர்கள் என் சகோதரர்கள் என்று அவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் 50 ஆண்டு கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு கேரள அரசு திருவனந்தபுரத்தில் பாராட்டுவிழா நடத்தியது. அந்த விழாவில், மலையாள நடிகர் – நடிகைகள் யாரும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். மலையாள நடிகர்களை கவுரவிக்காமல், தமிழ் நடிகரை கவுரவித்த கேரள அரசுக்கும் மலையாள நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. ‌மலையாள நடிகர்களின் இந்த புறக்கணிப்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் குமுறலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில்,  கேரள அரசு எனக்கு பாராட்டுவிழா நடத்தியது சந்தோஷமான விஷயம். என் ஆரம்ப காலம் மலையாள படஉலகில்தான் தொடங்கியது. நான் தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்னை ஒரு கலைஞனாக ஏற்றுக்கொண்டார்கள். அதற்கு கலைதான் காரணம். அந்த பலம், கலைக்குத்தான் உண்டு. மற்ற மாநிலத்தவர்களை விட கல்வியறிவு அதிகம் உள்ளவர்கள் கேரள மக்கள். எனக்கு அவர்கள் ஓர் அங்கீகாரம் கொடுத்ததுடன் மண்ணின் மைந்தன் போல் நடத்தினார்கள். கணியன் பூங்குன்றனார், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னார். அதில் எனக்கு உடன்பாடு உண்டு. அரசியல், பூகோளம் காரணமாகத்தான் தமிழ்நாடும், கேரளாவும் பிரிந்து இருக்கின்றன. கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள். கல்யாண வீட்டில் வரும் கருத்து வேறுபாடு போன்றுதான் கேரளாவில் நடந்த சம்பவமும். மலையாள நடிகர்கள் அனைவரும் என் சகோதரர்கள்தான். எனக்கு தமிழ்நாடு ஓர் அம்மா என்றால் கேரளா இன்னோர் அம்மா, என்று கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த

கடந்த சில மாதங்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த பிரபுதேவா, நயன்தாரா திருமணம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தனது திருமணம் குறித்த ஏற்கனவே முடிவு செய்து விட்டதால் தான் நயன்தாரா, சமீப காலமாக புது பட வாய்ப்புக்களுக்கு மறுப்பு தெரிவித்து வருவதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. தற்போது ஆர்யாவுடன் இணைந்து பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, புதிதாக தமிழ் படம் ‌எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை. மேலும் கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் புது பட வாய்ப்புக்களை தவிர்த்துள்ளார், நயன். அதே சமயம் பிரபுதேவா, சந்தோஷ் சிவனின் உருமி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிய உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ளது.

உதவி இயக்குனர்கள் படம் பண்ண வரும் ‌போது, ஆடியன்சை மிரட்டணும் என்று

தம்பிக்கோட்டை படத்தின் பாடல் வெளியீடு இன்று காலை நடந்தது. நரேன், பூனம் பஜ்வா நடிப்பில் இயக்குனர் ராஜாவின் உதவியாளர் அம்மு ரமேஷ் இயக்கத்தில் தம்பிக்கோட்டையில் நடைபெறும் கதையே, இந்த படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார். சமூக மெசேஜ் உடன், கமர்ஷியல் கலந்த அத்தனை விசயங்களும் படத்தில் இருக்காம். ஆர்யா ஆடியோ சிடியை வெளியிட, ஜெயம் ரவி பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் மிஷ்கின், உதவி இயக்குனர்களுக்கு ஒரு எச்சரிக்கையையும் அதே சமயம், சிறு வேண்டுகோளையும் வைத்தார். உதவி இயக்குனர்கள் படம் பண்ண வரும் ‌போது, ஆடியன்சை மிரட்டணும் என்று படம் பண்ண வராதீர்கள். சேது, சுப்பிரமணியபுரம் இந்த மாதிரி படங்களை விட, பேசப்படும். ஜெயிக்கக்கூடிய படங்களாக எடுக்க வேண்டும். இளையராஜா, மணிரத்னம், பாலுமகேந்திரா இவர்களை தாண்டி படம் பண்ணனும் என்ற எண்ணத்தோடு வாருங்கள்.நல்ல இயக்குனர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவை அப்போதுதான், இங்கே சில குப்பைகளை பெருக்க முடியும் என்று மிஷ்கின் கூறினார்.

விரும்புவதாக நடிகை கரீனா கபூர்

3 இடியட்ஸ் படம் சூப்பர்ஹிட்டானதை அடுத்து, அமிர்கானுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புவதாக நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் அமிருடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க ஆடைப்படுகிறேன்; ஆனால் அவர் இந்த ஆண்டு வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். ஆனால் 3 இடியட்ஸ் படத்தில் 3 நாயகர்களில் ஒருவராக நடித்த தனது காதலன் சைஃப் அலிகான் குறித்து அவர் ஏதும் கருத்து சொல்ல மறுத்துவிட்டார். மீண்டும் மீண்டும் பத்ரிக்கையாளர்கள் கேட்டதால், சைப் பற்றி கூற நான் கூற வேண்டியதில்லை; அவர் ஏற்கனவே ராஜூ ஹிரானியுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார். கரீனா நடித்த வி ஆர் பேம்லி என்ற படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.30 கோடி செலவில்

காளஹஸ்தி சிவன் கோவிலில் ரூ.30 கோடியில் ராஜகோபுரம் அமைப்பதற்கு, ஆந்திர முதல்வர் ரோசய்யா அடிக்கல் நாட்டினார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தியில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சிவன் கோவிலின் ராஜகோபுரம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. அதற்கு பதிலாக புதிய ராஜகோபுரம் கட்டப்பட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதைத்தொடர்ந்து ரூ.30 கோடி செலவில் புதிய ராஜகோபுரம் கட்டுவதற்கு தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. ஆந்திர முதல்வர் ரோசய்யா, புதிய ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், இன்னும் 2 ஆண்டுகளில் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்படும் என்றார்.
அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர அமைச்சர்கள், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா

4 நாள் பயணமாக வரும் 30ஆம் தேதி இலங்கை வரும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவை, தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கும் வாய்ப்பு உள்ளது என, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,
இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், அவர்களுக்கான வீடு கட்டும் திட்டங்கள், விமான மற்றும் துறைமுக விரிவாக்கம் ஆகியவற்றில் இந்தியாவின் பங்கீட்டினை ஆராய்வதற்காக நிருபமா ராவ் இலங்கை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் அவரது நிகழ்ச்சிகள் பற்றி எனக்கு தெரியாது. இருப்பினம் மீள் குடியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிருபமா ராவ் பார்வையிடுவது என்பது, தமிழ் மக்களுடன் தொடர்புடையது. இதனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்களின் பிரச்சனைகளை எடுத்துரைப்பதற்காக அவரை சந்திக்க வேண்டியுள்ளது.

தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் உள்ளிட்ட எம்.பி.க்கள் சிலர் நாட்டில் இல்லை. 30ஆம் தேதி வரும் நிருபமா ராவ், மீண்டும் இந்தியா திரும்ப மூன்று நாட்கள் ஆகும் என்பதாலும், தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கும் வாய்ப்பு உள்ளது என்றார்.

Thanks to Nakkeeran

%d bloggers like this: