About these ads

ப‌ழமொழியில் மருந்துகள்

மருந்துக்கு அடிமையாவதைவிட மனைவிக்கு அடிமையாகலாம்!

மருந்தும் விருந்தும் மூன்று நாட்கள்!

மனப்பொருத்தம் நல்ல Continue reading

About these ads

பழமொழி

இப்பகுதியில் நமது முன்னோர்கள்  அவர்களின் அனுபவங்களை சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதை நாம் பழமொழி என்கிறோம்.  பழமொழிகள் ஒவ்வொன்றும்  பொன்மொழிகளே!

குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்

காஞ்சிபுரம் போனால் காலாட்டி சாப்பிடலாம்

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை

விலை மோரில் வெண்ணெய் எடுப்பவன்

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்

உதைப்பானுக்கு வெளுப்பான் சலவைக்காரன்

ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

முடி சான்ற மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்

அறுக்க மாட்டாதவன் கையில் ஐம்பத்தெட்டு அறிவாள்

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்

அடியாத மாடு படியாது

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?

வரவு எட்டணா செலவு பத்தணா

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்

கிட்டாதாயின் வெட்டென மற

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு

இக்கரைக்கு அக்கரை பச்சை
இன்னும்  பொன்மொழிகள் ரசிக்க‍ காத்திருங்கள்

%d bloggers like this: