About these ads

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா ?

முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடி பணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள் “

முன்னொரு காலத்தில் சீனா வில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர் மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதி க அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன்தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று Continue reading

About these ads

சிகண்டிக்கு ஆண்மையை வழங்கி, பெண்மை ஏற்றுக்கொண்ட ‘யட்சன்’! – அறியாத வரலாறு

புத்திரப்பேறு வேண்டி சிவனைக் குறித்துக்கானகத்தில் கடும் தவம் செய்து கொண்டிருந்தான் மன்னன் துருபதன். தன் கணவனுக்கு சிவன் அருளப்போகும் வரம், தனக்கும் பேறுவ கை அளிப்பதாக அமைய வேண்டும் என்று அதே காலத்தில் அரண்மனையி ல் பூஜையறையிலேயே பழியாய்க் கிட ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந் தாள் துருபதனின் பட்ட மகிஷி. இருவர து வேண்டுதல்களாலும் திருப்தியடை ந்த சிவன் தனித்தனியே அவர்கள் முன் தோன்றினார். அவர்களுக்கு பீஷ்மரை க் கொல்லக் கூடிய வலிமை படைத்த குழந்தை பிறக்குமென்றும் தொடக்கத் தில் பெண்ணாக இருக்கும் குழந்தை பின்னர் ஆணாக Continue reading

திரௌபதியின் காலணி (செருப்பு)களை தனது கைகளில் ஏந்திய ஸ்ரீ கிருஷ்ணர் – அபூர்வ கதை!

குருஷேத்திரத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே பாரதப்போர் அதி பயங்கரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும், பாண்டவர்களிடம் கௌரவர்கள் தோல்வியடை ந்துவரவே, பெரிதும் கலக்க முற்ற துரியோதனன், மறு நாள் பீஷ்மர் எப்படியாவது அர்ச்சுன னைக் கொன்று விடவேண்டுமென்ற வாக்கு றுதியைப் பெற்றுக் கொண் டான். பீஷ்மரும் அவ்வாறே சபதம் எடுத்துக் கொண்டார். பீஷ்மரின் சபதத்தையறிந்த கிருஷ்ணர், அவர் அதை நிறை வேற்ற முடியாமல் தடுக்க ஒரு Continue reading

கிருஷ்ணருக்கு தருமன் போட்ட‍ தடை! – அரிய தகவல்

குருஷேத்திரப் போருக்குப் பிறகு தருமனுக்கு முடிசூட்டிய கண்ணபிரான் துவாரகை திரும்பி னான். தமக்கு இளமை முதலே தேரோட்டியாக இருந்த உத்தவ னை அழைத்து, ‘உத்தவா! உனக்கு வேண்டியதை க்கேள் ’’ என்றான்.

உத்தவனோ, நீண்ட நா ட்களாக வேதனக்கிருந் த சந்தேகங்கள் சிலவற் றை கண்ணனிடம் கே ட்டான்: ‘‘பரந்தாமா! ரா ஜசூய யாகத்துக்கு தருமனை வரவழைத்த துரியோதனன் விருந்துககுப்பிறகு தருமனை சூதாட்டத்துக்கு அழைத்தான். சூதாட்டத்தின்போ து Continue reading

“அர்ச்சுனன்”-ஐ சிவபெருமான், வேடன் வேடம் பூண்டு அரக்க‍னிடம் இருந்து காப்பாற்றிய அதிசய நிகழ்வு!

துரியோதனனின் வஞ்சகமான நாடகத்தால் சூதில் அனைத் தையும் இழந்த பாண்வர்கள் வன வாசம் வந்தனர் வந்த இடத் தில் இந்த 12+1 மொத்த‍ம் 13 வருட வனவா சத்தை எப்ப‍டி கழி க்க‍ப்போகிறோம் என்ற தீவிர ஆலோசனையில் ஈடுபட் ட‍னர். அப்போது அங்குவந்த வியாசர் , பாண்வர்களிடம், ‘இந்தப் பதிமூன்று ஆண்டுக்காலத்தில் துரியோதனன் தன் பலத்தைப் பெருக்கிக் கொள்வா ன். ஏற்கனவே

..பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலி யோர் அவன் பக்கம் இருக்கிறார்கள். இந்நிலையில் வெறும் தவக்கோலம் பூண்டு காட்டில் இருப்ப தால் பயன் இல்லை.இல்

Continue reading

பலம்பொருந்திய “பீமன்” ஏன் கதறி அழுதான்?

அரக்குமாளிகையால் கட்ட‍ப்பட்ட‍ அரண்மனையில் பாண்டவ ர்களை, துரியோதனன் வஞ்சக நாடகமாடி அங்கே தங்க வைத்து, நள்ளிரவு நேரத்தில் அந்த அரக்கு மாளிகைக்கு தீ வைத்து எரித்தான். ஸ்ரீ கண்ண‍ பிரானின் அருளாலும் எச்சரிக்கை யாலும் அங்கிருந்த தப்பித்து, கானகம் வந்தனர். வந்த இடத்தில் நா வறட்சியால் ஏற்பட்ட‍ தாகத்தை தணிக்க‍ தண்ணீர் கொண்டு வர, பாண்வர்களின் மூத்த‍வரான தருமர், பீமனிடம் பறவைகளின் இன்னிசை கேட்கும் திசையில்தான் தண்ணீர் இருக்கிறது. ஆகையால் அங்கே நீ “போய என்று சொன்னான் பீமனும் தனது அண்ண‍னின் ஆணையை ஏற்று அந்த நீர்வாழ் பறவைகளின் ஒலி வந்த திசைநோக்கி புறப்பட்டான். புறப்பட்ட‍ சிறிது நேரத்திலேயே ஒரு ஏரியை அடைந்தான். அங்கே குளித்து முடித்து, தனது தாகத்தைத் தணித்துக் கொண்டான். தனது சகோதரர்கள் மீது கொண்ட பாசத்தால்

 

Continue reading

மகாபாரதத்தில் பீமன் மற்றும் அர்ஜுனன் செய்த சபதங்கள் என்ன‍?

பாண்டவர்களை சூதில் வஞ்சகமாக கௌரவர்களால் வஞ்ச கமாக தோற்கடிக்க‍ப்பட்ட‍போது, பாஞ்சாலியை துரியோதனன் தன் தொடை மீது வந்து உட்கார் என்று சொல்லியும். துச்சாதனன் பாஞ்சாலி அணிந்திருந்த ஒற்றை சேலை அவிழ்த்த போது கண்ணன் திருவரு ளால் பாஞ்சாலியின் மானம் காக்கப் பட்டவுடன், பஞ்ச பாண்டவ கண்ண‍ னுக்கு நன்றியினை தன் மனதுக்குள்ளேயே சொல்லியவாறு ம், அதே நேரத்தில் தங்களை வஞ்சகமாக சூதில் தோற்கடித்த கௌரவர்கள் மீது கடுமையான‌ Continue reading

தேவதாசியிடம், “என் கண்களை திறந்துவிட்டாய்? என்றுகூறி கண்ணீர் விட்ட‌ விவேகானந்தர்!

கேத்ரி சமஸ்தான மகராஜா ஒரு முறை சுவாமி விவேகானந்தரை தன் அரண்மனைக்கு வந்து சில நாட்கள் தங்கி இருக்கும்படி கேட்டுக் கொண் டார். (கேத்ரி தற்போதைய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளதாம்) விவே கானந்தரும் அவரது அழைப்பை ஏற்று கேத்ரி சென்றார். அரண்மனை யில் தங்கி இருந்து கொண்டே ஆன்மீகப் பணிகளை செய்து வந்தார். மகா ராஜா அவரை உரிய மரியாதையுடன் நடத் தி தேவையான வசதிகளை செய்து தந்தார்.

மன்னர் ஆடல் பாடல் கலைகளில் ஆர்வம் உடையவர். கச்சேரிகளும் நாட்டிய நிகழ்ச் சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் அவ் வப்போது அரண்மனையில் நடப்பது வழக்கம். அப்படித்தான் அன்று ஒரு நாட்டிய Continue reading

பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின்போது ஏன் இறக்கக் கூடாது? — வீடியோ

விஜய நகரத்தில் ஒரு பணக்காரன் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாய வட்டி வாங்கி வந்தான். அதாவ து ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இத னால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.

இதையறிந்த தெனாலிராமன், அந்த பண க்காரனை நயவஞ்சகமாக திருத்த திட்ட ம் தீட்டினான். அந்த பணக்காரன் பாத்தி ரங்களையும் வாடகைக்குவிடுவதுண்டு. ஒருநாள் தெனாலிராமன் சேட் டைச் சந்தித்து தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அத ற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு Continue reading

கீதா உபதேசம் – பாவம் செய்யத் தூண்டுதலாக இருப்பது எது?

க்ருஷ்ணா! ஒருவனுக்கு பாவம் செய்யவேண்டும் என்ற விருப்பம் இல்லாவிட்டாலும் அவனை வலுக்கட்டாயமாக பாவம் செய்யத் தூண்டுவது எது? – அர்ஜுனன்

அர்ஜுனா! அவ்வாறு பாவம் செய்யத் தூண்டு வது ரஜோ குணத்திலி ருந்து தோன்றிய காமம் தான். இதுவே குரோதமாக மாறுகிறது. இதை எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி அடைவ தில்லை. பெரிய பாபங்களுக்கு இதுவே கார ணமாகிறது. இந்த உலகத்தில் அதுவே உன் எதிரி என்பதை உணர்ந் Continue reading

‘இந்த உலகுக்கே தாயாகிய சீதை’, ஒரு அரக்கியை, “அன்னையே!” என்று அழைத்த விசித்திரம்!

கவிச்சக்கரவர்த்தி கம்பர், இறைவியின் மனத்தில் தோன்றும் நுட்பமான உணர் வுகளைக் கூட, எல்லா மனிதர்களும் ஆழ்ந்து அனுபவிக்க முடியும் என்பதை க் காட்சி ப்படுத்துகிறார். கம்ப ராமாய ணம் யுத்த காண்டத்தில்வரும் காட்சி இது. இந்திர ஜித்தின் அம்பில் லட்சு மணன் மயங்கு கிறான், தம்பியின் நிலையைக் கண்டு கதறிய ராமரும் பக்கத்திலேயே Continue reading

சிவபெருமானையே! “யார் அந்தச் சோம்பேறி?” என்று கூறி, அடித்த‍ மன்ன‍ன்!

மதுரை நகரில் பெரும் மழை. வையை (வைகை) ஆற்றில் நீர் வெள் ளம் பெருக்கெடுத்து ஓடியது. கரை களை உடைத்துக் கொண்டு நகரத் தினுள்நு ழைந்துவிடுவேன் என்று பயமுறுத்தியது. அப்போது மதுரை யை ஆண்ட அரசன் பதறிப் போனா ன். தன்னுடைய மந்திரிகளை அழைத்தான், ‘‘ கரைகளை உடனடி யாக அடைக்க வேண்டும்,  அதற்கு என்ன வழி?’’ என்றான். ‘‘அரசே, வை யைக் கரை மிகவும் பரந்து விரிந்த து’’ என்றார், ஓர் அமைச்சர். ‘‘ஆகவே, அதை அடைப்பதற்காக நாம் ஒரு பெரிய சேனையையே அனுப்பி னாலும் போதாது, இங்கே Continue reading

அவர்களுக்கே நான் தரவில்லை, உங்களுக்கு தருவேனா..?

ஒரு நாட்டில் போர் நடந்து கொண்டி ருந்தது.

அரசாங்கம் “குடிமக்கள் அனைவ ரும் தம் சக்திக்கு ஏற்ப யுத்த நிதி வழங்க வேண்டும்” என்று ஒரு உத்தரவு போட் டது.

ஒரு பெரும் பணக்காரர் மட்டும் ஒரு பைசா கூட தராதது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது.

உடன் ஒரு அதிகாரி அந்தப் Continue reading

விவேகானந்தரும், விலைமாதுவும்!

கல்கத்தாவில் பணக்கார நண்பர்கள் பலர் விவேகானந்தரை உல் லாசமாக இருக்கலாம். என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள். ‘உல் லாசம்’ என்பதற்கு இன்னொரு உள் அர்த்த மும் உண்டு என்பதை அறியாத விவேகா னந்தரும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு அவர் களுடன் சென்றார். இவர்கள் சென்ற வண் டி ஒரு மாளிகையின் முன்பாக நின்றது. எல்லாரும் இறங்கினார்கள். மாளிகைத் தோட்டத்தில் விருந்து பாட்டு, கூத்து. என் று கலகலப்பாக Continue reading

‘என்னய்யா மனுஷன் இவன்!’ – (இது விதுரன், திருதராஷ்டிரனுக்குச் சொன்ன‍து)

எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள முடியாது. ‘எல் லாம் எனக்குத் தெரியும்’ என்று நமக்கு நா மே பெருமை பாராட்டிக் கொண்டாலும், நம க்குத் தெரியாதவை கோடிக்கணக்கில் உ ண்டு. அதே நேரம், நாம் தெரிந்து கொண் டவற்றால் நம் வாழ்க்கைக்கு ஏதாவது பல ன் உண்டா என்பதையும் பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு, வெறும்தகவல் களஞ்சி யங்களாக இருப்பதில் என்ன பலன்?

உலகத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் கணினியில் (கம்ப்யூட்ட ரில்) இருக்கின்றன. அதனால் அந்தக் கணினிக்கு ஏதாவது பலன் உண்டா? இல்லையே!

ஆனால், ஒரு விஷயத்தில் கணினி ஒழுங்காக இருக்கிறது. ஒரு தட்டு தட்டினால், எதைக் கேட்டாலும் கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கிறது. ‘எனக்குத்தான் எல்லாம் தெரியும்’ என்று குதிப்பதில் லை. ஆனால்… ‘நான் நடமாடும் Continue reading

ந‌மது சமுதாயத்தின் அறிவின் நிலை எப்ப‍டி உள்ள‍து?

ஒரு எஜமான் குதிரைமேல் போனான். ஆள் ஒருவன் பாதுகாப்புக்கு ப் பின்னே போனான். குதிரைமீது உள்ள மூட்டை ஒன்று விழுந்து விட்டது; அது எஜ மானனுக்குத் தெரியாது. ஆனால் வேலை யாள் பார்த்தும் எடுக்காமல் வந்து விட்டா ன்.

எஜமான் கேட்டான் எங்கே மூட்டை என்று, எஜமான் மூட்டை அங்கேயே விழுந்து விட் டதே என்றான். அட மடையா Continue reading

“உன் வாயை மூடிக் கொண்டிரு!” – ஓஷோ

குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு சிட்டுக் குருவி வாழ்ந்து வந்தது. இலை யுதிர் கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசை யை நோக்கிப்பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக்கூடாதெனத் தீர் Continue reading

%d bloggers like this: