About these ads

எந்த தேர்தலிலும் இல்லாத ஒன்று . . . அது ஏதோ, அது ஏதோ ஒன்று நிகழ்ந்துள்ள‍து. …

இது வரை பழைய பல்ல‍வியையே பாடிவந்த நமது இந்திய அரசியலில் சமீபத்தில் நடந்து முடிந்த இந்த சட்டமன்றத் தேர் தல்களில் ஒரு புதுமை நடந்தே றி இருக்கிறது.இது எல்லோரது கவலத்தை ஈர்த்த‍ ஒன்றாகவும் இருந்துள்ள‍து. அது என்ன வென்றால், நோட்டா.

இதுவரை ‘49 ஓ’ என்ற பிரிவினால் அடையாளப்படுத்தப்ப ட்ட வாக்காளர்களே வேட்பாளர்களை நிராகரிக்க‍ப்பட்டு வந் தனர். ஆனால் இந்த

உரிமையைப் பயன்படுத்த வாக்குச் சீட்டில் வழி இருக்க வில்லை. வாக்குச் சாவடியில் பகிரங்கமாக எல்லா கட்சி ஏஜன் ட்டுகள் முன்னாலும் இதைச் சொல்லிக் கையெழுத்திட வே ண்டியிருந்தது. பீ.யூ.சி.எல். என ப்படும் ‘மக்கள் சிவில் உரிமைக் கழகம்’ உச்ச நீதிமன்றத்தில் போ ட்ட வழக்கின் முடிவிலேயே இது ரகசிய நோட்டாவாக மலர்ந்தது. வேட்பாள ரின் சொத்துக் கணக்கைத் தெரிவிக்கவும் அரசியல் கட்சிகள் முதலில் ஒப் புக் கொள்ளவில்லை. நீதிமன்றத் தீர் ப்புக்குப் பின்னரே ஏற்றுக் கொண்ட ன. அதே நிலைதான் இதிலும் இருந் தது.

எல்லா வேட்பாளரையும் நிராகரிக் கும் உரிமையை ரகசியமாக வாக்கு ப்பதிவு இயந்திரத்தின் வழியாகவே பதிவு செய்யும் நோட்டா உரிமை இந்தத் தேர்தல்களில்தான் முதன் முறையாகச் செயல்படுத் தப்பட்டது. ‘நன் ஆஃப் தி அபவ்’ என்ற ஆங்கிலச் சொற்களின் சுருக்கமே நோட்டா. சுமார் பத்து வருடப் போராட்டத்து க்குப் பின்னர்தான் இது சாத்திய மாயிற்று. இந்தியா வில் அண்மை வருடங்களி ல் நடக்கும் ஒவ்வொரு தேர் தல் சீர்திருத்தமும் உச்ச நீதி மன்ற உத்தரவின் விளைவாகவே நடப்பது போலவே நோட் டாவும் நீதிமன் றத் தீர்ப்பினால்தான் செயலுக்கு வந்தது.

இந்த முறை நோட்டாவை எத்தனை வாக்காளர்கள் பயன்ப டுத்தியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். தமிழ்நாட்டில் நடந்த ஏற்காடு இடைத்தேர்த லில் மொத்தம் சுமார் 90 சத விகித வாக்குப்பதிவு நடந்தது. இது வழக்கத்துக்கு மாறானது. நேரடிப் போட்டியில் இருந்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் என்ன செய்தேனும் வாக்காள ரை வோட்டுப்போட அழைத்து வருவ தில் காட்டிய தீவிரமே இதற்குக் காரணம். இதற்கு ‘நோட்டு விநியோகம்’ செய்த திருமங்கலம் பார்முலா இங்கேயும் பின்பற்றப்ப ட்டது தான் காரணம் என்று ம.தி .மு.க. போன்ற கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இங்கே மொத்தமாகப் பதிவான நோட்டா எண்ணிக்கை 4,431. அங்கே பல சுயேச்சைகள் வாங்கிய வாக் குகளை விட இது அதிகம்.

எனினும் ஏற்காடு தொகுதியில் யார் நோட்டாவைப் பயன்ப டுத்தியிருக்கக்கூடும் என்பது மர்மம் தான். இந்தத் தேர்தலி ல் பங்கேற்காத தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளின் தலைவர்கள் யாரும் ‘நோட்டாவைப் பயன்படுத்துங்கள்’ என்று தங்கள் ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் வைக்க வில்லை. பா.ம.க. தலைவர் ராம தாஸ் மட்டும் ‘தி.மு.க., அ. தி.மு.க. இரு கட்சிகளையும் ஆதரிக்க வே ண்டாம்’ என்று சொல்லியிருந்தார். இந்த இருகட்சிகளும் கடந்த முறை இந்தத் தொகுதியில் பெற்ற வாக்கு கள் சுமாராக 35 ஆயிரம். அத்தனை பேரும் நோட்டாவுக்குப் போடவில் லை என்பது வெளிப்படை. அவரவ ர் விரும்பியபடி ஏதோ ஒரு வேட் பாள ருக்கே வாக்களித்திருக்கின்ற னர் என்பதும் தெரிகிறது.

ராஜஸ்தானிலும் மத்தியப்பிரதேசத்திலும் நோட்டாவைப் பயன்படுத்தியவர்கள் குறைவுதான். ராஜஸ்தானில் மொத்த ம் பதிவான வாக்குகளில் 1.5 சதவிகிதமும், மத்தியப் பிர தேசத்தில் 1.4 சதவிகிதமும் ம ட்டுமே நோட்டா வாக்குகள். நோட்டா குறைவாக விழுவ தற்கான பல காரணங்களில் முதல் காரணம், ‘அதற்கென் று தனிப் பிரசார அமைப்போ, பலமோ இல்லை’ என்பதாகு ம். கட்சிகளின் வேட்பாளருக்குப் பிரசாரம் செய்ய அமைப்பு ம் பணமும் இருப்பது போல, நோட்டாவுக்குக் கிடையாது. அ ப்படி ஒன்று இருப்பதைத் தெரி ந்து வைத்திருக்கக்கூடிய மக்க ள் எண்ணிக்கையே குறைவு தான். எல்லா தொகுதிகளிலும் நோட்டா என்ற ஒரு வேட்பாள ர் இருப்பதை யாரேனும் இயக்கரீதியாகப் பிரசாரம் செய் தால் மட்டுமே நோட்டாவுக்கு அதிக ஆதரவு கிடைக்க முடி யும்.

சத்தீஸ்கர் மாநிலம் இதற்குச் சரியான எடுத்துக்காட்டு. அங் கே பழங்குடியினர் பகுதிகளில் இருக்கும் மாவோயிஸ்ட்டுக ள் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தங்கள் வழக்கமான பிரசா ரமாக வைத்திருப்பர். ஆனால் இந்த முறை தேர்தல் புறக்க ணிப்பு அறிவிப்புகள் எதுவும் பெரிதாகச் செய்யப்படவில்லை . ‘வாக்குச் சாவடிக ள் தாக்கப்படும்’ என்ற போலிஸ் தரப்பு எதிர்பார்ப்புகளும் பொய்யாகிவிட்டன. ஆனால் மிக அதிகளவில் நோட்டா வா க்குகள் பதிவாகியிருக்கின்றன. சத்தீ ஸ்கர் மாநிலத்தில் மொத்தம் பதி வான வாக்குகளில் 4.6 சத விகிதம் நோட்டா வாக்குகள்.

பழங்குடி மக்கள் இருக்கும் தொகுதி கள் அனைத்திலும் சராசரியாக ஒவ் வொரு தொகுதியிலும் 4,000 நோட் டா வாக்குகள் விழுந்துள்ளன. சித்தி ரகூட் தொகுதியில் பத்தாயிரம் நோட்டா வாக்குகள். கொ ண்டே காவ்ன் தொகுதியில் மாநில பி.ஜே.பி. அமைச்சர் லதா உசேண்டி காங்கிரஸ் வேட்பாளர் மோகனைவிட 5,135 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்திருக்கிறா ர். இந்தத் தொகுதியில் நோட்டா பெற்ற வாக்குகள் 6,773.

நோட்டா வாக்குகள் மிகக் குறைவாக விழுந்திருக்கும் மாநிலம் தில்லி. மொத்தப் ப திவான வாக்குகளில் 0.63 சதவிகிதம் மட்டுமே நோட்டா. இதற்கு முக்கியக் காரணம், இங்கே புதிதாக வந்திருக்கும் ‘ஆம் ஆத்மி கட்சி’ என்றே சொ ல்லலாம். ‘காங்கிரசும் வேண் டாம், பி.ஜே.பியும் வேண்டாம்’ என்று கருதக்கூடியவர் களின் வோட்டுகள் ஆம் ஆத்மி க ட்சிப் போட்டியில் இருந்தி ராவிட்டால், நோட்டாவுக்கே போ யிருக்கக் கூடியவை. ஆனால் ஒரு மாற்றாக ஆம் ஆத்மி கட் சி களத்தில் வந்துவிட்டதால், இங்கே நோட்டா அதிகம் பயன்படுத்தப்படவில் லை. தில்லி மாநிலத்தில் நோட்டாவை விட குறைவான வோட்டுகளைப் பெற் றது தே.மு.தி.க வேட் பாளர்கள்தான்.

நோட்டா மேலும் அதிகம் பேரால் பய ன்படுத்தப்படும் ஒரு சக்தியாக மாற வேண்டுமானால் இரு விஷயங்கள் முக்கிய மானவை. நோட்டாவை மக்க ளிடையே பிரசாரம் செய்து தெரியப்படுத்த இயக்கங்களும் அமைப்புகளும் பிரசார பலமும் இருக்க வேண்டும். இரண் டாவதாக நோட்டாவுக்குப் போ டும் வோட்டை, தேர்தல் ஆணை யம் செல்லாத வோட்டாகக் கண க்கிடுவதை நிறுத்த வேண்டும். வேட்பாளர்களை நிராகரிப்பது உரிமை என்று நீதிமன்றம் தீர் ப்பளித்து நோட் டா வந்த பின்னர், அந்த உரிமையைச் செல்லாத வோட்டா கக் கருதுவது தவறானது. வேட்பாளர்களில் அதிக வோட்டு பெறுபவர் வெற்றி பெறும் வேட்பாளராகச் சொல்ல ப்படும் போது, அவரைவிட அதிகம் வோட்டு நோட்டாவுக்கு விழுந் தால், அந்த வேட்பாளரும் நிராகரிக்கப்பட்டவராகவே கருதப் பட வேண்டுமே தவிர வெற்றி பெ ற்றவராகமாட்டார். இப்படிச் சில திருத்தங்கள் இருந்தால் மட் டுமே நோட்டா வின் அசல் பலம் பயன்படு ம். முதல் இரு இடம்பெறும் வேட் பாளர்களுக்கிடையே உள்ள வோட்டு வித்தியாசத்தை விட அதிகமாக நோட்டாவுக்கு விழும்போது, இன்னும் சரியான வேட்பாளர் களை நிறுத்தியாக வேண்டிய அவசியத்தை கட்சிகள் உணர்வார்கள்.

இது விதை2விருட்சம்ல இணையத்தின் பதிவு அல்ல‍!

About these ads

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: