About these ads

“உலகம் முழுவதும் பரவும் தவறான கலாசாரமும்! சட்ட‍ விரோத கருக்கலைப்பும்!” – “Dr. ஜெயராணி” அதிர்ச்சித்தகவல்

கர்ப்பம் தரிப்பது தாய்மைப்பேறு அடைவது ஒரு பெண்ணி ற்கு கிடைத்திடும் சுகங்களில் ஒன்று. அந்த சுகத்துடன் பல் வேறு கனவுகளுடனும் கற்பனைகளுடனும் கருவை சுமக்கு ம்போது அது சிலருக்கு கலைந்து சிதறும் நிலை உருவாவ தும் உண்டு.

கர்ப்பபையில் கருதரித்த கரு 28 வாரங்களுக்குள் கலைந் து கர்ப்பப் பையை விட்டு வெ ளியேறுவதைத் தான் கருச்சி தைவு என்பர். பொதுவாக கருச்சிதைவு இயற்கையாக வோ அல்லது செயற்கையா கவோ ஏற்படலாம். செயற்கையாக மேற்கொள்பவை ஆபத் தான விளைவுகளை சில வேளைகளில் ஏற்படுத்து வதும் உண்டு.
 
சட்டரீதியற்ற முறையிலும் நிகழ்கிறது. கருச்சிதைவின் அறிகுறி வெ வ்வேறு வகைகளில் ஏற்படுகிறது. முதலாவ தாக கர்ப்பிணிப் பெண்ணி ற்கு அடிவயிற்றில் வலி ஏற்படு வதுடன் ரத்தப்போக்கும் அவ்வப்போது சிறு துளிகளாக வெளிப்படும். இத மூன்று மாதங்களுக்குள் ஏற்படும். இது போன்ற நிலையால் பயப்படத் தேவையிராது.
 
ஆனால் இந்நிலையில் மருத்துவ ரை உடனடியாக அணுகுதல் நல்ல து என்கிறார் டாக்டர் ஜெயராணி. சிலருக்கு வயி ற்று வலி இல்லாமல் ரத்தப்போக்கு மட்டும் ஏற்படுவது உண்டு. குடும்பத்தில் ஒரு சில பெண்களுக்கு கர்ப்ப நிலை யிலேயே முதல் சில மாதங்களுக்கு ரத்தப்போக்கு இருப்பது ண்டு. அந்த நிலையிலும் மருத்துவரை உடனே அணுகுதல் நல்லது.
 
கர்ப்பிணிப் பெண்களில் அதிகமானோர் உணர்ச்சிவசப்படு வதும், கவலை மற்றும் அதிக சந்தோஷம் ஆகிய நிலைகளி ல் உணர்வுகளுக்கு ஆளாகும்  போதும் உடல் நெகிழ்வதாலும் கருக்கலைய வாய்ப்புண்டு. இதை தவிர்க்க மனம் அமைதி ப்படல் வேண்டும். குறிப்பாக மன அழுத் தத்தை (டென்ஷ ன்) குறைத்து ஓய்வாக இருக்க வே ண்டும்.
 
அதுவும் முடியாத பட்சத்தில் மருத்துவ ஆலோசனையோடு ஓய்விற்கு மருந்து எடுக்கலாம். இன்னும் சில கர்ப்பிணிப் பெண்களுக்கு அடி வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படு வதுண்டு. ரத்தப்போக்கும் ஏற் படும் பரிசோதித்து பார்த்தால் கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி திறந்திருக்கும்.
 
எப்பொழுது கர்ப்பப்பை வாய் திறந்துவிட்டதோ அதற்குமேல் கரு கலைந்து வெளியேறுவ தை கட்டுப்படுத்த இயலாத நி லை உருவாகிவிடும். இவ்வே ளையில் தாமதியாமல் மருத்து வரை அணுக வேண்டும். பெரு ம்பாலான இடங்களில் குறி ப்பாக மலை பிரதேசங்களில் அதிலும் பின்தங்கிய இடங்க ளில் உள்ள வயது மூத்த பெண்மணிகளின் துணையுடன் இவ்வாறான கருக்கலைப்பு கலைந்த கருவினை வெளியே ற்றல் போன்றவற்றை செ ய்கின்றனர்.
 
இது முற்றிலும் தவறான செயல். இவ்வாறு செய்வ தால் சில வேளையில் தா யின் உயிருக்கும் ஆபத்தை தோற்றுவிக்கும். அதோடு போதிய சுகாதார இன்மை காரணத்தினால் வேறு தொ ற்றுக்கள் ஏற்படவும் வாய் ப்புண்டு. பெரும்பாலும் இவர்கள் ஆயுதமாக கைகளையே பயன்படுத்துவர். இது அனைத்தும் தவறான வழிகள்.
 
அதோடு 28 வாரத்திற்குள் வயிற் றில் சிதைந்த கருவினை முற்று மாக வெளியேற்றி விட வேண்டு ம். இல்லாவிடில் அந்த சிறு பகு திகூட வேறு தொற்றுக்களை ஏ ற்படுத்தக்கூடும். அதனால்தான் மருத்துவரின் உதவியுடன் கருச் சிதைவினை அகற்ற வேண்டும். தொடர்ந்து ஏற்படும் ரத்தப்போக்கினால் ரத்தச்சோகை ஏற் படவும் வாய்ப்புண்டு.
 
எனவே உடனே கலைந்த கருவை முழுவதுமாக வெளியேற் றுவது தான் ஒரே சிறந்த வழி. இது பொதுவாக சிகிச்சைக்கே ற்றவாறு மருந்து கொடுத்தோ லேசான மயக்கத்திலோ சிகிச் சை அளிக்கப்படும். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு ரத் தச்சோ கைக்கான மருந்துக்களை உட் கொள்ள வேண்டும்.
 
கருச்சிதைவுக்குப் பின் ஒரு மாதத்திற்கு ஆரோக்கியமான நிலை உருவாகும் வரை அ ப்பெண் ஓய்வெடுக்க வேண் டும். குறைந்தது மூன்று மா தங்களுக்காவது மீண்டும் கர்ப்பம் அடையாமல் பார்த் துக்கொள்ள வேண்டும். இத னை முழுமையாக பின்பற் றினால் அடுத்த கர்ப்பம் தரி க் கும்போது எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாது நாம் நம் மை பாதுகாத்துக் கொள்ளலாம்.  
 
ஆண்டுக்கு 68 ஆயிரம் பெண்கள் பலி:
 
இன்று உலக நாடுகளில் கா ணப்படும் பிரச்சினைகளில் ஒன்று பாதுகாப்பற்ற உறவு கள். அதனால் ஏற்படும் பாது காப்பற்ற கருக்கலைப்பு. பாதுகாப்பற்ற கருக்கலைப் பால் ஆண்டுதோறும் 68ஆயி ரம் பெண்கள் இறந்து கொ ண்டிருப்பதாக  உலக சுகாதா ர நிறுவனம் தெரிவிக்கின்றது.
 
பாதுகாப்பற்ற கருக்கலைப்பு அதிகமாக வளர்ந்து வரும் நாடுகளான  ஆப்பிரிக் கா உள்ளிட்ட 33 நாடு களிலேயே அதிகம் காணப்படுவதால், பா துகாப்பற்ற கருக்கலை ப்புக்கு பெண்களின் கல்வியறிவின்மையும் , விழிப்புணர்ச்சி இல்லா மையும் காரணமாக  இருக்கலாம் என்று தோன்றுகிறது.
 
உலகமெங்கும் சுமார் ஐந்து கோடி பெண்கள் சரியான கரு த்தடை சாதனங்கள் உபயோகிக்காததால் கருத்தரிக்கின்றன ர் எனவும், கூடவே இரண்டரை கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களின் தோல்வியால் கருத்த ரிக்கின்றனர்.
 
எனவும் திகைப்பூட்டும் தகவல்களை அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. கருக் கலைப்பு என்பது ஒருவரின் தப்பை மறைக்கும் ஒரு கருவி மட்டுமல்ல, ஒருசிசு கொலை செய்யப்ப டுகிறது. தாயின் உடல்நலம் பா திக்க ப்படுகிறது.  
 
கருக்கலைப்பு ஆபத்தானது:
 
பெண்களின் உடல்நலம் குறி த்து அவர்களும் அக்கறைப் படு வதில்லை. மற்றவர்களு ம் கண்டு கொள்வதில்லை. ஆண் குழந்தையை வளர்க்க எடுத்துக் கொள்ளும் சிரத் தையை பெரும்பாலான பெற் றோர் பெண் குழந்தைகளுக் கு கொடுப்பதில்லை.
 
இப்படி பெண்ணுக்கு பிறந்ததிலிருந்து உண்டாகும் புறக்க ணிப்பு பல்வேறு நிலைகளி லும் தொடர்கிறது. பெண்க ளுக்குரிய பிரச்சினைகளில் முக்கியமானதும் தவிர்க்க முடியாத துமாக இருப்பது கருக்கலைப்பு உயிருக்கே ஆபத்து விளை விக்கக்கூடிய து. எனினும் கருக்கலைப்பு எண்ணிக்கை  குறைவதாக தெ ரி யவில்லை.
 
ஒவ்வொரு ஆண்டும் உலக ம் முழுவதும் சுமார் ஐந்த ரை கோடி கருக்கலைப்புக ள் செய்யப்படுகின்றன. இ தில் பெரும்பாலும்  பாதுகா ப்பில்லாமல் செய்யப்படும் கருக்கலைப்புகளே. தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி கருக்கலைப்பு செய்வதால் பெண்களின் உடல்நிலை பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளா கிறது.
 
கிருமிகள் தொற்று, மலட்டுத் தன்மை ஆகியவை இதனால் உண்டாகும் முக்கிய பாதிப்பு கள். பாதுகாப்பற்ற உறவும், அதைத்தொடர்ந்து கருக்க லைப்பும் படித்தவர்கள் மத்தி யில் கூட அதிகம் குடும்பத் தின் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் காக்க கணவ ன், மனைவி இருவரும் கலந்தாலோ சித்து உறவு வைத்துக் கொண்டால் கருக்கலைப்பு செய்யும் வாய்ப்பு நேராது.
 
ஒவ்வொரு முறை கருக்கலைப்பு செய்யும்போதும் கருப்பை பத்து சதவீதம் பாதிப்படைகிறது. முழு மை பெறாத கருக்கலைப்பு செய் யப்படும் போது கருப்பையில் சில கரு துகள்கள் தங்கிவிடுகின்றன.
 
கடுமையான ரத்தப் போக்கு, தாள முடியாத வலி, மாதவி டாய் வெளி யேறம் பகுதியில் கட்டி அல்லது கோழை வெளி யேற்றம், காய்ச்சல், மயக்கம், நாற்றம் ஆகிய அறிகுறிகள் முழுமையற்ற கருக்கலைப்பை உ ணர்த்தும். அப்படி நேர்ந்தால் தாம திக்காமல் கருப்பையை சுத்தம் செ ய்ய வேண்டும்.
 
கருக்கலைப்புக்கு எப்போதும் தேர் ந்த மருத்துவரின் உதவியையே நா டுங்கள். ஆரோக்கியமான உடல் தான் இனிமை யான வாழ்க்கைக்கு அடித்தளம் பெண்கள் நலமாக இருந் தால்தான் குடும்பம் நலமாக அருக்கும்.  
 
குழந்தை பாக்கியம்:
 
முன்பெல்லாம் 2, 3 தடவை கருக்கலைப்பு ஏற்படும்பெண்க ள் குழந்தைபெற  முடியாதநிலை இருந்தது.  தற்போது அதிநவீன மருத்துவ சிகிச்சைமூலம் `கருப் ‘பையில் குறைபாடுடைய பெண் கள் எளிதாக  குழந்தை பெற்று  கொள்ளலாம்.
 
குழந்தையில்லாத பெண்களுக் கு சோதனை குழாய் குழந்தை, இக்சி என்ற பல்வேறு நவீன சிகிச்சைகள் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது என்கிறார்  சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய  இயக்குனர் டாக்டர் ஜெயராணி.
About these ads

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: