கையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற சைஸில்கூட தற்போது ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டது.
இந்த சைஸை மேலும் குறைப்ப துதொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், பைல்களை சேமிக்கும் வகையி லும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியா க நடக்கின்றன. இது தொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய் ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரி யர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் கிடைத்த ஆச்சரிய தகவல்கள் பற்றி ஜோயல் கூறியதாவது: கம்ப்யூட்டரின் மிக முக்கியமான பகுதி ஹார்ட் டிஸ்க். பதிவுகள் அனைத்தையும் பாதுகாப்பது இதுதான். சமையலுக்கு பயன்படும் ஒரு சிட்டிகை உப்புத் தூள் இதன் கொள்ளளவை அதிகரிப்பது முத
லில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட அ திக வெற்றி கிட்டியது நம்பிக்கை யை அதிகரித்துள்ளது. இந்த மு றையில் தொடர்ந்து மேற்கொள் ளப்பட்ட பரிசோதனைகளிலும் பெருத்த வெற்றி கிட்டியுள்ளது.
டேபிள்சால்ட் எனப்படும் தூள் உப்பைக் கொண்டு கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கின் டேட்டா ரெகா டிங் திறனை 6 மடங்கு அதிகரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹார்ட் டிஸ்க் தயாரிப் பின்போது அதில் சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப் பையும் சேர்த்து பயன்படுத்தும்போது, ஹார்ட் டிஸ்க்கின் பதிவு திறன் ஒரு சதுர இன்சுக்கு 3.3 டெராபைட் அதிகரிக்கிறது. அதாவது, டிஸ்க் கொள்ளளவு 6 மடங்கு அதிகரிக்கிறது. உப்பு சேர்ப்பதால் கம்ப்யூட்டருக்கோ, இதர பாகங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இது மட்டுமின்றி, ஹார்ட் டிஸ்க்கின் செயல்பாடும் சிறப்பாக இருக் கிறது. இவ்வாறு ஜோயல் கூறினார்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
13.062852
80.274186
Like this:
Like Loading...
Filed under: கணிணி தளம் Tagged: | அறிவியல், ஆராய்ச்சியாளர்கள், உப்பு, உப்புத் தூள், கம்ப்யூட்டர், கழகம், சிங்கப்பூர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள், சிட்டிகை, சிட்டிகை உப்புத் தூள், ஜோயல், ஜோயல் யாங்க், டிஸ்க், டேட்டா, டேட்டா ஸ்டோரேஜ் கழகம், டேபிள்சால்ட், தூள், தேசிய, தொழில்நுட்ப, பரிசோதனை, பல்கலைக் கழக, பேராசிரியர், பேராசிரியர் ஜோயல் யாங்க், ஸ்டோரேஜ், ஹார்ட், ஹார்ட் டிஸ்க், Data, Data Storage, Disk, Hard, Hard Disk, National University, Research, Salt, Singapore, Storage, Tablesalt, Tamil language, Tamil script