About these ads

பொது அறிவுத் துளிகள்

  1. பறக்கும் பறவைகளுள் மிகப்பெரியது கோரி புஸ்டார்ட் (19 கிலோ), இது ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது.
  2. இந்தியாவில் முஸ்லீம், கிறிஸ்துவம் ஆகிய மதங்களுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் உள்ள மதத்தினர் சீக்கியர்கள் ஆவர்.
  3. 24 சின்னங்களை வைத்து எகிப்தியர் எழுதிய எழுத்து முறைக்கு ஹைரோகிளிப்ஸ் (சித்திர எழுத்து முறை) என்று பெயர்
  4. கி.பி. 301 ஆம் ஆண்டிலிருந்து இயங்கும் மூத்த குடியரசு நாடு சான் மரினோ
  5. ஆப்பிரிக்கா கண்டத்தின் உயர்ந்த மலையான கிளிமஞ்சாரோ தான்சானியா நாட்டில் உள்ளது.
  6. மெக்சிகோ நாடு வெள்ளி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
  7. சான்பிரான்ஸிஸ்கோ (அமெரிக்கா) உலகில் பொற்கதவு நகரம் என்று போற்றப்படுகிறது.
  8. சுஷ்மா சுவராஜ் (பா.ஜ•க) 2004 ஆம் ஆண்டு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருதை பெற்ற முதல் பெண் உறுப்பினராவார்.
  9. ப• சிதம்பரம், மணிசங்கர் ஐயார் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருதை பெற்ற முதல் இரு தமிழர்கள் ஆவர்.
  10. சென்னை கிண்டியில், மான்கள் (மாநகருக்குள் இருக்கும் ஒரே சரணாலயம் இதுதான். இது உலக அதிசய சாதனை) தேசிய பூங்கா விலங்கின் சரணாலயமாகத் திகழ்கிறது.

(கண்டதை படைக்கவில்லை கண்டெடுத்ததை படைத்தேன்)

About these ads

சமையல் குறிப்பு – மாம்பழ கேக்

மாம்பழ கேக்

தேவையான பொருட்கள்

மாம்பழம் – 2
மைதா மாவு – 100 கிராம்
சர்க்கரை – 150 கிராம்
வெண்ணெய் – 150 கிராம்
சமையல் சோடா – 1 தேக்கரண்டி
மாம்பழ எஸன்ஸ் – 3 மேஜைக்கரண்டி

செய்முறை-

மாம்பழத்தின் மேல்தோலைச் சீவிவிட்டுச் சதைப்பகுதியை மட்டும் நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள் ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும் சர்க்கரையையும் போட்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு மாம்பழச் சதையையும் போட்டு மீண்டுமொரு முறை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.

மைதா மாவைச் சலித்து அதில் கொட்டுங்கள், சமையல் சோடாவையும் போட்டு மாம்பழ எஸன்ஸையும் ஊற்றி நன்றாக கிளறி அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். ஓவன் இருந்தால் பேக் செய்தும் எடுத்துக்கொள்ளலாம்.

பின்னர் அந்தக் கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பிச் சற்று ஆறியதும் டைமண்ட் வடிவத்துண்டுகளாக நறுக்கி மற்றவர்களுக்குப் பரிமாறி நீங்கள் சுவைத்துப்பாருங்கள்.

(படித்ததை ருசித்து படைத்தேன்)

விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தனது தொகுதியான ரேபரேலிக்கு மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக‌  29ம் தேதியான நேற்று சென்றார். இன்று அவர் தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்திதையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த அண்ணன் தங்கை இருவரும்,  சோனியா காந்தியின் வாகனத்துக்கு வழிவிடுவதற்காக சாலையோரத்தில் ஒதுங்கியபோது தீடிரென எதிர்பாராத விதமாக அண்ணன் தங்கை இருவருக்கும்  விபத்து ஏற்பட்டு காயமுற்றனர். இதனையறிந்த சோனியா காந்தி சற்றும் தாமதிக்காமல் தான் சென்றுகொண்டிருந்த வாகனத்தை நிறுத்த சொல்லி அங்கே விபத்தில் காயமடைந்த அண்ணன் தங்கை இருவருக்கும் உதவி செய்ய தனது பாதுகாவலர்களுக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவரது பாதுகாவலர்களும், காயமடைந்தவர்களுக்கு முதலிதவி சிகிச்சை அளித்து முடிக்கும் வரை சோனியா காந்தி அதே இடத்தில் காந்திருந்து அவர்களுக்கு ஆறுதல் கூறி, பின், தான் வந்த வாகனத்தில் ஏறிச் சென்றார்.

ப‌ணப் பட்டுவாடா மற்றும் வன்முறைகளை தடுக்க தேர்தல் அணையரிடம் தமிழக கட்சியினர் வலியுறுத்தல்

தமிழக சட்டசபை தேர்லில் வன்முறைகள் இல்லாத அளவிற்கு

தலைமைச்செயலகம் (பழைய)

பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், பணப் பட்டுவாடா தடுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்களை தேர்தல் கமிஷனிடம் தமிழக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இத்துடன் ஒரு கட்ட தேர்தல் தமிழகத்திற்கு நல்லது என்றும் வலியுறுத்தப்பட்டன.

வரவிருக்கும் சட்டசபை தேர்தல் தொடர்பாக மத்திய தேர்தல்

புதிய தலைமைச்செயலகம்

துணை கமிஷனர் ஜெயபிரகாஷ், சட்ட ஆலோசகர் மென்டி ரெட்டி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் ஆகியோர் அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினர். அனைத்து அரசியல் கட்சி சார்பில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் தேர்தல் அதிகாரியை தனித்தனியாக சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.

முதன்முதலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மகேந்திர வர்மன், கல்யாணசுந்தரம் ஆகியோர் சந்தித்து கருத்துக்களை தெரிவித்தனர். இதனையடுத்து பா.ஜ., சார்பில் மாநில துணை தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், திருமலைசாமி ஆகியோர் தங்களுடைய ஆலோசனையில் சட்டசபை தேர்தலை ஒரேநாளில் நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினர்.

மார்க்., கம்யூ., கட்சி சார்பில் மகேந்திரன் எம்.எல்.ஏ., ஆறுமுக நயினார்,  ஆகியோர் கலந்து கொண்டனர். “அனைவருக்கும் வாக்காளர் அட்டை கொடுக்க வேண்டும். எந்திரத்தில் போடப்படும் ஓட்டுக்கு அத்தாட்சி வேண்டும். ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தியதாக இக்கட்சி நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறினர்

காங்கிரஸ் – அ.தி.மு.க.,- தி.மு.க.,: காங்கிரஸ் சார்பில் கட்சி தலைவர் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறினர்.தி.மு.க. சார்பில் அமைச்சர் பொன்முடி, கல்யாண சுந்தரம், சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஓட்டுச்சாவடியில் வன்முறை ஏற்படாதவாறு கண்காணிக்க முழு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தி.மு.க. சார்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது நேர்மையான தேர்தல் ஓட்டு எந்திரத்தில் யாருக்கு ஓட்டு போடப்பட்டது என்பதற்கு சான்று, ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது போன்ற பல்வேறு கருத்துக்களை வற்பறுத்தினர்.பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி வேலு, முத்துக்குமார் ஆகியோர் அதிகாரிகளை சந்தித்து பேசினர்.

thanks dinamalar

ஆயுள் கூட ஆயிலை குறை

மனித குலத்தின் மிகப் பெரிய எதிரி எண்ணெய். இன்று பல நோய்களுக்கு மூல காரணம் எண்ணெய் கலந்த உணவுகள் தான். எல்லா எண்ணெயும் கொழுப்பு தான். நெய், வெண்ணெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்ற எண்ணெய்கள் நேரடியாக கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். சூரியகாந்தி போன்ற மற்ற எண்ணெய்கள் ஈரல் வழியாக சென்று, கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும். எனவே எதுவாயினும் அளவாக பயன்படுத்துதல் நல்லது. ஜீரோ கொலஸ்ட்ரால் என்பது தவறு. எல்லா எண்ணெயும் ஒன்று தான். ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 15 மி.லி., – 20 மி.லி., போன்று ஒரு மாதத்திற்கு அரை லிட்டர் தான் பயன்படுத்த வேண்டும்.

எண்ணெய் எப்படி கலோரியை அதிகப்படுத்துகிறது என்றால், 10 மி.லி., எண்ணெய் 90 கலோரி, ஒரு சாதா தோசை 80, ஒரு பூரி 260, வடை, பஜ்ஜி, சிப்ஸ் போன்றவை 200 – 250, பிரியாணியில் 6,550, ஒரு பிளேட் பிரியாணியில் 1,600 கலோரிகள் உள்ளது. அதிக எண்ணெய் இரத்த குழாய்களில் படிவதால் ரத்த குழாய் அடைப்பு ஏற்படுகிறது.


அதிக எடை<, அதிக கொலஸ்ட்ரால், கல்லீரல் பாதிப்பு, இதய நோய், இரத்த குழாய் அடைப்பு, சர்க்கரை நோய் ஆகியன ஏற்படுகின்றன. பாரம்பரிய எண்ணெய்களான நல்லெண்ணெய்<, கடலெண்ணெய் போன்றவற்றை 15–20 மி.லி., வரை பயன்படுத்தலாம். திரும்ப திரும்ப சூடுபடுத்தப்பட்ட எண்ணெயில், சமைக்கப்பட்ட பலகாரங்கள் கேன்சரை ஏற்படுத்தும். உணவில் எண்ணெய் காரணமாகவே கலோரி அதிகமாகிறது. அதிக கலோரி கொழுப்பாக மாறி வயிற்றில்

Oil

படிகிறது. இதுதான் தொந்தி, உடல் எடை கூடுவதற்கு முன் தொந்தி வரும். தொந்தியிலுள்ள கொழுப்பு கரைந்து கெட்ட கொழுப்பாக மாறுகிறது. அது ரத்தக் குழாயை அடைத்து மாரடைப்பு ஏற்படுத்துகிறது.

வளரும் குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் பாரபட்சம் பார்க்காமல் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. கலோரி சாப்பிட்டால் ஒரு கி. மீ., நடக்க வேண்டும். 500 கலோரி சாப்பிட்டால், 10 கி.மீ., நடக்க வேண்டும். எண்ணெய் பலகாரங்கள் மற்றும் இனிப்புகளில் கலோரி அதிகம் (400 – 600). எனவே நடை, உடற்பயிற்சி இல்லாமல் அதிக கலோரி உணவுகளை உண்பது பிரச்னை. அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தக் குழாயும், ரத்தமும் பாதித்து அடைப்பை ஏற்படுத்துகின்றன. சைவ உணவு உண்பவர்கள் தேங்காய் பால், தயிர் அதிகம் பயன்படுத்தக் கூடாது.
எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளில் கலோரிகள், இரண்டு சமோசா 256, இரண்டு போண்டா 283, மிக்ஷர் 100 கிராம் 520, பகோடா 100 கிராம் 474, இரண்டு வறுத்த மீன் 256, இரண்டு வடை 243, முறுக்கு 100 கிராம் 529, உருளை சிப்ஸ் 100 கிராம் 569, சில்லி சிக்கன் 100 கிராம் 589 கலோரிகள்.

நமது ரத்தத்தில் கொழுப்பு 200 மி.கி., கீழ், டி.ஜி.எல்., கொலஸ்ட்ரால் 150, எல்.டி.எல்., 100க்கு கீழ், எச்.டி.எல்.,(நல்ல கொலஸ்ட்ரால்) ஆண்களுக்கு 40, பெண்களுக்கு 50க்கு மேல், வி.எல்.டி.எல்., கொழுப்பு 30க்கு கீழ் மேலும் யாருக்கு கொலஸ்ட்ரால் இருக்குமென, உருவத்தை வைத்து கூற முடியாது. சாதாரணமாக பலர் வாகனங்களுக்கு கொடுக்கும் முக்கியத்தை கூட உடலுக்கு கொடுப்பது இல்லை. இதில் சர்க்கரை உள்ளவர்களுக்கு தொடர் சிகிச்சை அவசியம். கோவை டயபடிஸ் பவுண்டேஷனில் வருடத்திற்கு ஒரு முறை பணம் செலுத்தி, ஒரு வருடம் சிகிச்சை பெற்று செலவை குறைக்கலாம். சி.டி.எப்.,ல் முழு உடல் பரிசோதனை, கண்காணிப்பு சிகிச்சை முகாம் இன்று முதல் 27ம் தேதி வரை நடைபெறும். உணவு முறை உடற்பயிற்சியை முதன்மைப்படுத்திய சிகிச்சை சி.டி.எப்., ரிசர்ட் மருத்துவ மனையில் செய்யப்படுகிறது. சர்க்கரையை நீக்க மூன்று முதல் ஐந்து நாள் அனுபவ பயிற்சி வழங்கப்படுகிறது.
– டாக்டர் சேகர்,

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்கட்சிகள் பொது விவாதம் நடத்த ஒத்துழைக்க வேண்டும். மம்தா பானர்ஜி

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் தொடர்பாக பாராளுமன்ற‌ கூட்டு விசாரணைக் குழுவை தவி வேறு எதையும் ஏற்றுக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என எதிர்கட்சிகள் பிடிவாதமாக இருக்கும் நிலையில் திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி,  காங்கிரஸ் அரசின் வேண்டுகோளுக் கிணங்கி, எதிர்கட்சி்கள் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பொது விவாதம் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க‌ வேண்டும் என கோரியுள்ளார்.

என்னை செதுக்கியவர்கள் – சிவகுமார் உணர்வுபூர்வமான பேச்சு – வீடியோ

என்னை செதுக்கியவர்கள் – சிவகுமார் தனது அனுபவங்களை உணர்வுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நிகழ்த்திய ஜெயா டிவியில் ஒளிபரப்பான‌ மேடை பேச்சு காட்சியுடன் நீங்கள் பார்த்து கேட்டு மகிழ‌

அப்பனாவது, ஆத்தாளாவது… வனிதா விஜயகுமார்

நானும், என் கணவரும் அசிங்கப்பட்டதற்கு பின் விஜயகுமாரை நான் சும்மா விடமாட்டேன். இரண்டு நாள் என் புருஷனை சிறையில் தள்ளிவிட்டனர். இந்த விஷயத்தில் அப்பாவாவது, ஆத்தாளாவது…  உண்மை, நியாயம்தான் எனக்கு வேண்டும், என்று வனிதா விஜயகுமார் ஆவேசமாக கூறினார். தான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடமும் வனிதா விஜயகுமார் புகார் அளித்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டை நேரில் சந்தித்து, விளக்கம் அளித்தேன். என்ன நடந்தது என்பதை நான் கமிஷனரிடம் எடுத்துக் கூறினேன். “நான் செய்ததில் ஏதாவது தவறு இருக்கிறதா, மீடியாவில் பேசக் கூடாதா? என, கமிஷனரிடம் கேட்டேன். அதற்கு அவர், “உங்களுக்கு எல்லாவிதமான உரிமையும் இருக்கிறது. இன்றைக்குத் தான் இந்த வழக்கு என் கையில் வந்திருக்கிறது. கண்டிப்பாக, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கை விசாரிக்க துணை கமிஷனர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என, கமிஷனர் என்னிடம் கூறினார். நான் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காததற்கு பொய் புகார்தான் காரணம் என, என் அப்பா கூறுகிறார். புகாரில் உள்ளது அனைத்தும் உண்மைதான்.

கடந்த 20ம்தேதி என் அப்பா விஜயகுமார் கொடுத்த புகாருக்கு மட்டும் எப்படி உடனடியாக நடவடிக்கை எடுத்தனர் என்றுதான் நான் கேட்கிறேன். என்னுடைய குழந்தையை அழைத்துக்கொண்டு போக எனக்கு யார் அனுமதி தர வேண்டும். என் குழந்தையை காப்பாற்ற என் அப்பா யார்? என் அம்மா யார்? எனக்கு வக்கீல்கூட கிடையாது. எனக்கு ஓரளவிற்கு சட்டம் தெரியும். கமிஷனர் ஜாங்கிட் ரொம்ப நம்பிக்கை கொடுத்திருக்கிறார். என்னுடைய பேச்சில் எந்த தவறும் இல்லை. என்னை பற்றி தவறான வதந்தியை கிளப்பி விட்டிருக்கின்றனர். பைத்தியம்; லூசு என்று கூறுகின்றனர். அவர்கள் கொடுத்த புகாரில் தவறான தகவல் கொடுத்துள்ளனர். குழந்தையிடமிருந்து தாயை ஆண்டவனே வந்தாலும் பிரிக்க முடியாது. அதுதான் உண்மை. அதுதான் சட்டம். இனிமேல் எனக்கு பிரச்னை இருக்காது என, நினைக்கிறேன். இந்த விஷயத்தில் என்னுடைய அப்பாவும் நானும் மோதிக் கொண்டிருக்கிறோம். ஆனால்,  இந்த விஷயத்தில் “மெயின் ஹீரோவான அருண் விஜய்யை நாடு கடத்திவிட்டு, தற்போது நாடகம் ஆடுகின்றனர். அதுதான் உண்மை. அருண்விஜய் திரும்பி வர வேண்டும். சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சிலர் இது உங்கள் குடும்ப பிரச்னைதானே என்கின்றனர். குடும்பத்தில்தான் கொலையே நடக்கிறது. நானும், என் கணவரும் அசிங்கப்பட்டதற்கு பின் விஜயகுமாøμ நான் சும்மா விடமாட்டேன். இரண்டு நாள் என் புருஷனை சிறையில் தள்ளிவிட்டனர். இந்த விஷயத்தில் அப்பாவாவது, ஆத்தாளாவது? உண்மை, நியாயம்தான் எனக்கு வேண்டும். இந்த விஷயம் குறித்து என்னிடம் சமீபத்தில் பேசிய முக்கிய நபர் ஒருவர், “இந்த விவகாரத்தை அன்றைக்கே நான் எடுத்திருக்க வேண்டும். இன்றைக்கு நீ செய்திருக்கிறாய். நீ சேற்றில் பூத்த தாமரைப்பூ, என்றார். எங்கள் குடும்பத்தில் பெண் எடுத்தவர் என்பதால், அவரின் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை.

இவ்வாறு வனிதா கூறினார்.

அமெரிக்க தூதμகத்தில் விசாரணை : நடிகை வனிதா அமெரிக்க தூதரகத்தில் அளித்த புகாரின் பேரிலும் விசாரணை நடந்து வருகிறது. இதுபற்றி அவர் கூறுகையில், “அமெரிக்க குடியுரிமை பெற்ற எனது குழந்தை குறித்து பேசுவதற்காக அமெரிக்க தூதரகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அங்கு நான் சென்றபோது, அனைத்து விஷயங்களையும் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, “இந்த வழக்கை உடனே கவனிக்கிறோம். எங்கள் தரப்பிலிருந்து உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும். இப்போதைக்கு நாங்கள் இந்த வழக்கில் தலையிட வாய்ப்பு இருக்காது என்றனர். பின், புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டை தூதரக அதிகாரிகள் போன் மூலம் தொடர்பு கொண்டனர். அப்போது, “சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை உடனே செய்யுங்கள். தினமும் வனிதா விஜயகுமாரிடம் தொடர்பில் இருக்கிறோம் என்றும் கூறினர் என்று தினமலரில் செய்தி வெளியாகியுள்ளது.

 

இதன் தொடர்புடைய புதிய செய்திகள்

பக்தரை நாடி வந்த பெருமாள்!

பகவானுக்கு  ஜாதி, மத பேதமில்லை. எந்த ஜாதியோ, மதமோ எதுவானாலும் அவனிடம் பக்தி யோடு வழிபட்டால் போதும். அவன் ரட்சிக்க தயாராக இருக்கிறான். பக்தர்களுக்கு ஏற்படும் துன்பத்தை கூட அவன் ஏற்றுக் கொள்கிறான். இதற்கு உதாரணமாக திருப்பாணாழ்வார் சரித்திரம் சொல்லப்படுகிறது.

திருப்பாணாழ்வார் தாழ்ந்த ஜாதியினராயினும், அரங்கன் மீது பக்தி கொண்டவர். தன்னை கோவிலுக்குள் அனுமதிக்க  மாட்டார்கள் என்பதற்காக, அவர், தினமும் காவேரியின் கரையில் நின்று, ஆலயத்தை பார்த்தபடி பெருமாளை துதிப்பது வழக்கம்.

ஒரு நாள் பாடிக் கொண்டிருக்கும் போது, திருமஞ்சனத்துக்கு நீர் எடுக்க அங்கு வந்த லோக சாரங்க மாமுனிவர் இவரைக் கண்டு, “தூரப் போ…’ என்று சொல்ல, பக்தியில் ஆழ்ந்திருந்த பாணருக்கு இவர் சொன்னது காதில் விழவில்லை.

முனிவருக்கு கோபம் வந்தது. ஒரு கல்லை எடுத்து பாணர் மீது வீசி எறிந்தார். கண் விழித்து பார்த்தார் பாணர். “அடடா… மகானிடத்தில் அபசாரப்பட்டு விட்டோமே…’ என வருந்தி, தூரப் போய் நின்று கொண்டார். பாணர் முகத்தில் கல்லடிப்பட்டு ரத்தம் வழிந்து

Tirupathi

கொண்டிருந்தது.

முனிவரும் நீராடி, அனுஷ்டானம் முடித்து, ஆசாரத்துடன் குடத்தில் திருமஞ்சன தீர்த்தம் எடுத்து, கோவிலுக்குள் போய் விட்டார். பாணரின் முகத்தில் பட்ட கல்லடி அரங்கனது முகத்தில் பட்டதால் பெருமாள் வருத்தமுற்றிருந்தார். இது கண்ட நாச்சியார், “நம் பக்தரான பாணரை இவர் அடித்து விட்டார். அந்த பக்தரை வெளியே நிற்க விடாமல் உள்ளே அழைத்துக் கொள்ள  வேணும்…’ என்று வேண்டினாள்.

பார்த்தசாரதி கோவில் பெருமாள்

அன்றிரவு முனிவரது கனவில் தோன்றி, “என் அந்தரங்க பக்தனை தாழ்வாக நினைத்து அபசாரம் செய்து விட்டீர். அவரை தாழ்வாக நினையாமல் உம்முடைய தோளில் ஏற்றிக்கொண்டு எம்மிடம் வாரும்…’ என்று உத்தரவிட்டார்.

அவரும், அரங்கனுடைய உத்தரவை ஏற்று,  காலையில் எழுந்து, திருக்காவேரியில் ஸ்நானம் செய்து, அனுஷ்டானம் முடித்து, அதிதொலைவில் நிற்கும் பாணரிடம் சென்று வணங்கி, “பெருமாள் தேவரீயை அழைத்து வரும்படி என்னிடம் சொல்லி விட்டார். தாங்கள் வர வேண்டும்…’ என்று வேண்டினார்.

பாணர், சிறிது யோசித்து, “திருவரங்கப் பெருநகரை நான் எப்படி மிதிப்பது?’ என்று தயங்கினார். “தாங்கள் என் தோள் மீது அமர்ந்து வாருங்கள். பெருமாள் உத்தரவும் அது தான்…’ என்றார் சாரங்க முனிவர். பாணரும், பெருமாளின் ஆணையை உத்தேசித்து ஒப்புக் கொண்டார். முனிவரும், அவரை தோள் மீது சுமந்து ஆலயத்தை அடைந்து, பெருமாள் முன் இறங்கச் செய்தார்.

பெருமாள் சந்தோஷப்பட்டு, பாணருக்கு தன்னுடைய திவ்ய மங்கள உருவத்தைக் காட்டி, அருள் புரிந்தார். பெருமாளின் அன்பையும், அருளையும் எண்ணி, எண்ணி வியந்து பாசுரங்களாக பாடி மகிழ்ந்தார் பாணர். பகவான் ஆழ்வாரை திருமேனியோடு அங்கீகரித்தான். அதாவது, அவருக்கு முக்தியளித்தான்.

இப்படி பகவான் பல பக்தர்களுக்கு எவ்வித வித்தியாசமுமின்றி அருள் செய்துள்ள சரித்திரம் நிறைய உண்டு. கடவுளை அடைய உண்மையான பக்தி தான் முக்கியமே தவிர, ஜாதி, மதமில்லை.

(கண்டதை படைக்கவில்லை கண்டெடுத்ததை படைக்கிறேன்)

மனித எலும்புகள்

பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் முதுகெலும்பு உயிரினங்கள்.  இந்த உயிரினங்களுக்கு எலும்புகள் தான் உடலமைப்பை கொடுக்கின்றன.  அவற்றின் தகவமைப்புக்கு ஏற்ப எலும்புகள் அமைந்துள்ளன.  ஊர்வன பறப்பன, பாலூட்டிகளில் மனிதனும் அடக்கம்.  மனித எலும்புகள் விசித்திரமான அமைப்பு கொண்டவை.  அவைதான் மனிதனை  நிமிர்ந்து நடக்கச் செய்கின்றன.  மனிதனின் செயல்பாட்டிற்கும் ஆதாரமாக உள்ளன.  இந்த மனித எலும்புகளின் தன்மைகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

மனித எலும்புகள்

எலும்பு என்பது மனிதனின் உடலுக்குள் காணப்படும் விறைப்பான, கடினத்தன்மை கொண்ட உறுப்பாகும்.  உடல் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக அமைந்து உடலைத் தாங்கும் உறுப்புகள்தான் எலும்புகள்.  மனிதனின் உடலமைப்பை நிர்ணயம் செய்வது எலும்புகள் தான்.  ஒரு இடம் விட்டு ஒரு இடத்திற்கு நகர வைப்பதும் எலும்புகள்தான்.  இவைகள் பாதிக்கப் பட்டால் மனிதன் அலங்கோலமான ஜந்துவாக மாறிவிடுவான்.  எலும்புகள் உடல் உறுப்புகளை பாதுகாப்பதுடன் இரத்த சிவப் பணுக்கள், வெள்ளையணுக்கள் இவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவும் உள்ளன. மேலும் கனிமங்களை சேகரித்து வைக்கும் சேமிப்பு கூடமாகவும் எலும்புகள் உள்ளன.

பொதுவாக எலும்புகள் பலவகையான வடிவங்களில் அமைந்துள்ளன.  இவற்றில் சில சிறியனவாகவும், பெரியனவாகவும் காணப்படும்.  அதுபோல் மிகவும் உறுதியான எலும்புகளும்  உறுதி குறைந்த எலும்புகளும் உள்ளன.  இவை மனிதனின் அனைத்து உறுப்புகளையும் பாதுகாப்பதற்கு தகுந்தவாறு உள்ளன.

எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒருவகை கனிமங்கள் நிறைந்துள்ளன.  இவை தேன் கூட்டு அமைப்பை ஒத்துக் காணப்படும்.  முப்பரிமாண உள்ளமைப்புகளைக் கொண்டு எலும்புகளுக்கு விரைப்புத் தன்மையை கொடுப்பது எலும்புத் திசுக்கள்தான்.  மேலும் எலும்புகளில் எலும்பு மஜ்ஜை, எண்புழை, நரம்பு, இரத்த அணுக்கள், குருத்தெலும்பு போன்றவை அடங்கும்.

உடலுக்கு ஆதாரமாக இருப்பதுடன் தசை நரம்புகளுக்கு பற்றுக் கோளாகவும் இருப்பது எலும்புத் கூடுதான்.

மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்றவாறு எலும்புகள் அமைந்துள்ளன.  இந்த எலும்புகளில் 50 சதவீதம் நீரும், 33 சதவீதம் உப்புக்களும் 17 சதவீதம் மற்ற பொருட்களும் அமைந்துள்ளன.

எலும்பில் கால்சியம், பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக் கூடிய தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன.  நமது உடல் நலத்திற்குத் தேவையான கால்சியம் சத்துக்கள் அனைத்தும் எலும்புகளில்  தான் சேமித்து வைக்கப்படுகின்றன.  இந்த கால்சியம் சத்துக் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து எளிதில் உடைந்துவிடும்.

எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருந்தால் தான் சீரான முறையில் அவைகள் செயல்படமுடியும்.  அவ்வாறு பொருந்தும்  இடங்களுக்கு மூட்டுகள் என்று பெயர். அசையும் மூட்டு, அசையா மூட்டு என இரு வகை மூட்டுகள் உள்ளன.  தலையிலும், இடுப்பிலும் காணப்படும் எலும்புகள் அசையா மூட்டுகள் ஆகும்.  அசையும் மூட்டுகள் நான்கு வகைப்படும்.

பந்துக்கிண்ண மூட்டு
கீழ்  மூட்டு
வழுக்கு மூட்டு
செக்கு மூட்டு

இந்த நால்வகை அசையும் முட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ, தேய்மானமோ ஏற்படாமல் இருப்பதற்கு எலும்புகளின் முனையில் குருத்தெலும்புகள் மூடப்பட்டு அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் அமைந்து அதில் ஒரு வழுவழுப்பான திரவம் சுரந்து மூட்டுகளின் செயல்பாடுகளை எளிதாக்குகிறது.  மேலும் மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவாமல் இருக்க தசை நார்களால் பின்னப்பட்டுள்ளன.

எலும்புகளில் சின்ன எலும்பு காதில் உள்ள ஏந்தி(ண்tச்ணீஞுண்) என்ற எலும்பாகும்.  மிகப் பெரிய எலும்பு தொடை எலும்பாகும்.  மனிதனின் மார்புக் கூட்டில் மார்பெலும்புடன் விலா எலும்புகள் 24 உள்ளன.  இவை 12 ஜோடியாக ஒரு கூடுபோல் காட்சியளிக்கும்.   இவைகள் இதயம், நுரையீரல், போன்றவற்றை பாதுகாக்கிறது.

சாதாரணமாக பிறந்த குழந்தைக்கு 306 எலும்புகள் காணப்படும்.  பின் குழந்தை வளரும்போது படிப்படியாக பல எலும்புகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய வலுவான எலும்பாக மாறும்.  நன்கு வளர்ச்சியடைந்த மனிதனுக்கு 206 எலும்புகள் இருக்கும்.

தலைப்பகுதியில் அதாவது மண்டையோட்டில் 8 எலும்புகள் உள்ளன.  அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து கடினமாக உள்ளன.

மண்டையறை எலும்புகள்     – 8
முக எலும்பு             – 14
காது எலும்புகள்         – 6
(மேலஸ், இன்கஸ், ஸ்டேப்பிஸ்)
தொண்டை எலும்பு         – 1
தோள்பட்டை எலும்பு    – 4
(காறை எலும்பு – 2,  தோள் எலும்பு – 2)
மார்புக் கூட்டில்         – 25
(மார்பெலும்பு – 1, விலா எலும்பு – 24)
முதுகெலும்புத் தூண்          – 24
மேற்கைகளில்          – 6
கைகளில்             – 54
இடுப்புக்கூடு             – 4
கால்களில்            – 8
கால்களின் கீழ் பகுதியில்     – 52

மொத்தம் 206 எலும்புகள் உள்ளன.  இந்த எலும்புகளின் அளவுகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும்.  எலும்புகளைச் சுற்றி நரம்புகள், தசை, தமணி, தசை நார்கள் போன்றவை பின்னிப் பிணைந்துள்ளன.

இந்த எலும்புகளின் சேமிப்புகளிலிருந்துதான் உடல் தேவையான கால்சியம், பாஸ்பேட் சத்துக்களை எடுத்துக்கொள்கிறது.

இதனால் முதுமையில் எலும்புகள் போதிய பலமின்றி காணப்படுகின்றன.  இந்த எலும்புகள் நன்கு திடமாக இருக்க வைட்டமின் டி அதிகம் தேவை.  வைட்டமின் டி குறைபாடு உண்டானால் எலும்பு மெலிவு நோய் உண்டாகும்.  இதனால் எலும்புகள் கால்சியம் சத்தை சேமித்து வைக்க இயலாமல் போய்விடும்.  இந்த எலும்பு மெலிவு நோய்க்கான

மனிதனின் இடுப்பு எலும்பு

அறிகுறிகள் எளிதில் கண்டறிய முடியாது.  ஆனால் இவை வராமல் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன.சிறு குழந்தைகளுக்கு சூரிய வெளிச்சம் படுவது நல்லது.  இந்த சூரிய ஒளியில்தான் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி அதிகம் கிடைக்கும்.  இதுதான்  குழந்தைகளின் வளர்ச்சிக்கும், வலுவுக்கும் முக்கியமானது.

மேலும் எலும்புகள் பலப்பட கால்சியம் சத்து அதிகம் தேவை.  இதனால் அதிக அளவு கால்சியம் சத்து நிறைந்த தண்டுக்கீரை,  காரட், ஆரஞ்சு, பாதாம் பருப்பு, முட்டைக்கோஸ், தவிடு நீக்காத கோதுமை போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  இதுபோல் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணெய், முளை கட்டிய கொண்டைக்கடலை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

(கண்டதை படைக்கவில்லை கண்டெடுத்ததை படைக்கிறேன்)

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பாராளுமன்றக் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட ஜனாதிபதியிடம் கோரிக்கை

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதால் அதை பாராளுமன்ற கூட்டு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி எதிர்கட்சி்கள் நடத்தி வரும் அமளியால் பாராளுமன்ற‌ நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இன்று 13வது நாளாக முடங்கிய நிலையில் இடதுசாரிகள், அ.தி.மு.க., தெலுங்குதேசம் கட்சி, ராஷ்டிரிய லோக் தள கட்சி எம்.பி.,க்கள் ஜனாதிபதியை சந்தித்து, பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மனு அளித்தனர். அதன்பின் சீதாராம் யெச்சூரி, நிருபர்களுக்கு பேட்டியில், ஜனாதிபதியிடம் அவரது அரசியல் சாசன சக்திகளை பயன்படுத்தி பாராளுமன்றக் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளதாக‌ தெரிவி்த்தார்.

தொழில்நுட்ப திருவிளையாடல் – வீடியோவில்

த‌கவல் தொழில் நுட்பம் ( IT ) படித்து அதில் வேலைக்கு சேர்ந்தால் அதிக அளவு சம்பளம் என்று நினைப்பவர்களுக்கு புதிய இல்லை இல்லை த‌கவல் தொழில்நுட்ப திருவிளையாடல் காட்சியை கண்டு களியுங்கள்,  சிரியுங்கள் சிந்தியுங்கள்

அனுபவமே உயர்ந்தது – புத்தர்

பார்வையற்ற இளைஞன் ஒருவனை சிலர், புத்தரிடம் அழைத்து வந்தனர். அவர்கள் “இந்த இளைஞன் வெளிச்சத்தை பற்றி எவ்வளவு சொன்னாலும் நம்ப மறுக்கிறான்” என்று கூறினர். அப்போது பார்வையற்ற இளைஞன் “வெளிச்சத்தை நான் தொட்டு பார்க்க வேண்டும். சுவைத்து பார்க்க வேண்டும். அதன் வாசனையையோ அல்லது ஓசையையோ நான் உணர வேண்டும். இவை எதுவும் இல்லாத வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதை நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?” என்றான்.

அவனுடன் வந்தவர்கள் புத்தரிடம், “நீங்கள் தான் வெளிச்சம் உண்டு என்பதை அவன் நம்பும்படி செய்ய வேண்டும்” என்று கூறினர். அதற்கு புத்தர், “அவன் உணர முடியாத ஒன்றை அவனை நம்ப வைக்கும் செயலை நான் செய்ய மாட்டேன்.  இப்போது அவனுக்கு தேவை பார்வை.  வெளிச்சம்

ஜப்பானிய புத்தர் கோவில்

பற்றிய விளக்கமல்ல. அவனுக்கு பார்வை வந்து விட்டால், விளக்கம் தேவைபடாது. அவனைத் தகுந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று பார்வை கிடைக்கச் செய்யுங்கள்” என்று கூறி அனுப்பினார்.

புத்தர் கூறியதை ஏற்று பார்வையற்ற இளைஞனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். சிகிச்சை முலம் அவனுக்கு பார்வையும் கிடைத்தது. உடனே அந்த இளைஞன் புத்தரிடம் ஓடி வந்து, “வெளிச்சம் இருக்கிறது” என்று கூறினான். உடனே, புத்தர், “வெளிச்சம் இருக்கிறது என்று அவர்கள் கூறிய போது  ஏன் நம்ப மறுத்து விட்டாய்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த இளைஞன், “கண் தெரியாத என்னால், எவ்வாறு வெளிச்சத்தை உணர முடியும்? அவர்கள் சொன்னதை அப்படியே நான் ஏற்றுக் கொண்டிருந்தால், இன்னும் நான் கண் தெரியாத வனாகவே இருந்திருப்பேன்” என்றான்.

அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது என்பதை புத்தர் இந்த நிகழ்ச்சியின் முலம் சீடர்களுக்கு புரிய வைத்தார்.

(கண்டதை படைக்கவில்லை கண்டெடுத்ததை படைக்கிறேன்)

தலையங்கம்: மடியில் கனம், வழியில் பயம்!

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

பன்னிரண்டு நாள்களாக நாடாளுமன்றம் செயலற்று முடங்கிக் கிடக்கிறது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ஏற்பட்ட 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு குறித்து விசாரிக்க  நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆளும் காங்கிரஸ் கட்சி அதற்கு மட்டும் மறுப்புத் தெரிவித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுக்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்க மட்டும் முடியாது என்று சொல்வது ஏன் என்று யாருக்குமே புரியவில்லை.இத்தனை நாளும் நாடாளுமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்கிற சிறு எண்ணம் கூட இல்லாமல், ஆளும் காங்கிரஸ் கட்சி இப்படியாகத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருவதன் காரணம் என்ன? அல்லது யாருடைய நட்பை இழக்க விருப்பமின்றி இவ்வாறு பிடிவாதமாக இருந்துவருகிறது என்பதும் பல ஊகங்களுக்கு வழி வகுக்கிறது.பொதுக் கணக்குக் குழு இந்த விவகாரத்தை உள்நோக்கிப் பார்ப்பதற்கும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிப்பதற்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக பா.ஜ.க.வின் தலைவர்களில் ஒருவரான ஜோஷி இருந்தாலும்கூட, இந்தக் குழுவின் அதிகார வரம்புகள் ஒரு கட்டுக்குள் இருப்பவை.தலைமைக் கணக்குத்  தணிக்கைக் குழு முன்வைத்துள்ள குற்றச் சாட்டுகளை இந்தக் குழு முழுமையாகப் படித்துப் பார்த்து ஆமாம் என்று சொல்ல முடியுமே தவிர, அதற்குமேலாக அந்தக் குழுவுக்கு அதிகாரம் இல்லை. ஆனால் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு பிரதமர் உள்பட இதில் தொடர்புடைய அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விசாரணைக்கு அழைக்கவும், இந்தத் தவறு எந்த இடத்தில் தொடங்கியது என்று வேரிலிருந்து விசாரணையை நடத்தவும் கூட முடியும். மேலும், அரசின் கொள்கை முடிவுகளில் உள்ள கோளாறுகளைச் சுட்டிக் காட்டி, அவற்றை மாற்றும்படி பரிந்துரைக்கும் அதிகாரமும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிலவிய தொலைத்தொடர்புக் கொள்கை என்ன? அப்போதைய அமைச்சர் மகாஜன் காலத்திலிருந்து, தொலைபேசி தனியார்மயமாவதில் ஏற்பட்ட குளறுபடிகள் என்ன என்று ஆழமாகவும், விரிவாகவும் விசாரணை நடத்த இடமுண்டு.இருப்பினும்கூட, இந்த விசாரணையை விரிவாக நடத்தினால் அதில் காங்கிரஸ் ஆட்சியின் இரு காலகட்டத்திலும் நடந்த அனைத்தையும் பேச வேண்டியிருக்கும், வேறுசில பூதங்களும் கிளம்பக்கூடும் என்று காங்கிரஸ் அஞ்சுவதாலேயே இத்தகைய விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறது என்று சந்தேகிக்க இடம் ஏற்படுகிறது. தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கை மிகத் தெளிவாக இந்த முறைகேடுகள் நடந்திருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது. உச்ச நீதிமன்றமோ, இதுவரை விசாரணை நடத்தாமல் காலம்கடத்திவரும் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவைக் கண்டித்திருக்கிறது. இவ்வளவையும் நாட்டு மக்கள் அனைவரும், ஏன் உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் பார்க்க மறுக்கிறது. பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டா போகும்?தெஹல்கா ஊழல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்க பாஜக மறுத்ததை காங்கிரஸ் கட்சி சுட்டிக் காட்டுகிறது. முந்திரா ஊழலில்  நாடாளுமன்றம் முடக்கப்படாமல்  வெறுமனே டி.டி. கிருஷ்ணமாச்சாரி ராஜிநாமாவோடு முடிந்து போனதற்கு அவர் பிராமணர் என்று ஜாதிச் சாயத்தை கையில் எடுத்திருக்கிறார் திமுக தலைவர் மு. கருணாநிதி. காங்கிரஸ், திமுக இருவருடைய வாதங்களும், தவறை நியாயப்படுத்தவே பார்க்கின்றன. தவறை உணர்ந்துகொண்டதாகவே தெரியவில்லை. மக்கள் இதை எத்தகைய கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைக்கூட கருதியதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், இத்தகைய வாதங்களை காங்கிரஸ், திமுக ஆகிய இரு கட்சிகளும் முன்வைக்காது.நடைபெற்றிருக்கும் முறைகேடு உலக வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட ஊழல். ரூ.1.76 லட்சம் கோடி இந்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், சாதகமான பேரங்களை நடத்திய பெண்மணி நீரா ராடியா ரூ. 60 கோடியைச் சேவைக் கட்டணமாகப் பெற்றுள்ளார் என்பதைப் பார்க்கும்போது, இந்தச் சேவைக் கட்டணம் ஒரு மாட்டுத் தரகர் அல்லது வீட்டுத் தரகர் போல இருதரப்பிலும் 2.5 சதவீத கமிஷன் என்றே வைத்துக் கொண்டாலும்கூட, ரூ.1,200 கோடிக்கான ஊழல் நிச்சயம் என்பதை, இந்தக் கமிஷன் தொகை அம்பலப்படுத்திவிட்டது.இந்த ரூ. 1,200 கோடியும் ஒரேயடியாகக் கொடுக்க, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூடர்கள் அல்லர். அவர்கள் இதனைப் படிப்படியாக, ஒவ்வொரு கட்டத்தில் எந்த விதமாக, எந்தெந்த நாட்டில் டெபாசிட் செய்வது என்று காலக் கிரமத்தில் பட்டியலிட்டுத்தான் இந்த ஊழலில் ஈடுபட்டு இருப்பார்கள். இப்போது இந்திய அரசின் நியாயமான கடமை, இந்த முறைகேடு நடந்துள்ள முறையை விரிவாக ஆராய்வதன் மூலம்தான், ஊழலின் அளவும் பட்டுவாடா புள்ளிவிவரமும் தெரியவரும். மேலும், இதில் தொடர்புடைய நிறுவனங்களின் உரிமங்களை ரத்துசெய்ய இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது. (அதாவது அமைச்சர் பதவியிலிருந்து ராசா பதவி விலகிய அடுத்த நாளே இந்தப் பரிந்துரையை வீரத்துடன், தைரியத்துடன் செய்திருக்கிறார்கள்) அந்தப் பரிந்துரையும் இன்னும் நடைமுறைப்படுத்தப் படவில்லை. இவை எல்லாவற்றையும் முழுமையாக விசாரித்து, அனைத்துப் புள்ளிவிவரங்களையும் அம்பலப்படுத்துவது மட்டுமே, காங்கிரஸ் கட்சி தனது ஆட்சிக்குச் சேர்க்கும் பெருமையாக இருக்கும். இல்லையெனில், உலக வரலாற்றின் மிகப்பெரும் ஊழலை, கூட்டணி எண்ணிக்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், ஏதோ ஓர் அதிகார மையத்தைக்  காப்பாற்றவும் போய், தன் சொந்தப் பெருமைகளை இழந்த கட்சியாக காங்கிரஸ் தாழ்ந்து போகும்!

கௌரவம் – அழகு

உடல்நிலை சரியில்லை என்பதால் மருத்துவரிடம் செல்ல மகளிடம் அவள் வேலை செய்யும் இடத்தில் முன்தொகையாக பணம் வாங்கிக்கொடு எனக் கேட்கும் தந்தையிடம், தனது காதுகளில் அணிந்திருக்கும் காதணிகளை கழட்டிக் கொடுத்துக் கொண்டே மகள் சொல்லும் பதில் . . .

நகை எனக்கு மட்டும்தான் அழகு – ஆனால்
கௌரவம் நம்ம குடும்பத்துக்கே அழகு

ப‌ணம், நகை ஆடம்பர வாழ்க்கைதான் முக்கியம் என்று குடும்ப கௌரவத்தை காற்றில் பறக்கவிடும் பெண்களின் கன்னத்தில் ஓங்கி அறைந்த வசனம் இது.

(பாரிஜாதம் திரைப்படத்தில் இடம்பெற்றது)

ஜெகன்மோகன் ரெட்டி தனிக்கட்சி தொடக்கம் – ஆந்திர அரசியலில் பரபரப்பு

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், காங்., மேலிடத்துக்கும் இடையே நடந்து வந்த மோதல், நேற்று உச்ச கட்டத்தை எட்டியது. ஜெகன் மோகன், தனது எம்.பி., பதவியை உதறியதோடு, காங்கிரசுக்கும் முழுக்கு போட்டார். “ஒய்.எஸ். ஆர்., காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியை துவங்கப் போவதாக அவரது ஆதரவாளர்கள் அறிவித்து உள்ளதால், பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி, கடந்தாண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து, ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா தொகுதி காங்கிரஸ் எம்.பி.,யுமான ஜெகன்மோகன் ரெட்டி, தன்னை முதல்வராக்கும் படி, காங்கிரஸ் மேலிடத்திடம் வற்புறுத்தினார். ஆனால், நிதி அமைச்சராக இருந்த ரோசய்யா, முதல்வராக நியமிக்கப்பட்டார். அதிருப்தி அடைந்த ஜெகன், தனது தந்தை மரணமடைந்தபோது, தீக்குளித்து இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக ஆறுதல் யாத்திரை துவக்கினார். இதற்கு காங்கிரஸ் மேலிடம் எதிர்ப்பு தெரிவித்தது. அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து யாத்திரை நடத்தினார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், ஜெகனுக்கு சொந்தமான சாக்ஷி “டிவி’யில் காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் ஆகியோரைப் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதை காங்., தலைவர்கள் கண்டித்தனர்.

இதற்கிடையே, ஜெகனை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வந்த ரோசய்யாவை முதல்வர் பதவியில் இருந்து, காங்., மேலிடம் தூக்கியது. சோனியாவுக்கு விசுவாசமானவரான கிரண்குமார் ரெட்டி, முதல்வராக நியமிக்கப்பட்டார். அது மட்டும் அல்ல, ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர் முதல்வரானதால், அது ஜெகனை ஓரங்கட்டும் முயற்சி என்ற பேச்சு எழுந்தது. தன்னை அவமானப் படுத்துவதற்காகவே, கிரண் குமாரை கட்சி மேலிடம் முதல்வராக்கியுள்ளது என, ஜெகன் கருதினார். ராஜசேகர ரெட்டியின் சகோதரர் விவேகானந்தா ரெட்டியை அவசரமாக டில்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, விவேகானந்தா ரெட்டிக்கு, ஆந்திர மாநில அமைச்சர் பதவி தருவதாக கட்சித் தலைமை உறுதி அளித்ததாகவும் தகவல் வெளியானது.

அவமதிப்பு: கட்சி மேலிடத்தின் இந்த நடவடிக்கையால் ஆவேசமடைந்த ஜெகன், காங்., கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அதிரடியாக அறிவித்தார். இதுகுறித்து காங்., தலைவர் சோனியாவுக்கு எழுதிய ஐந்து பக்க கடிதத்தையும் செய்தியாளர்களுக்கு வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 14 மாதங்களாக, கட்சியின் மேலிட தலைவர்களால் எனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டது. சோனியாவை சந்திக்க என் தாயார் ஒரு மாதத்துக்கும் மேலாக அனுமதி கேட்டும் அனுமதி கிடைக்கவில்லை. பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவர் சிரஞ்சீவிக்கு ஒரே நாளில் அனுமதி கிடைத்தது. கடைசியாக, என் குடும்பத்திலும் பிளவு ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்தன. என் உறவினர்களுக்கு பதவி கொடுப்பதாகக் கூறி, அவர்களை என்னிடம் இருந்து பிரிக்கும் முயற்சி நடந்தன. இதனால் கட்சியில் இருந்து விலகுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார். கடப்பா தொகுதி எம்.பி., பதவியையும் ராஜினாமா செய்து, சபாநாயகர் மீரா குமாருக்கு ஜெகன்மோகன் ரெட்டி “பேக்ஸ்’ அனுப்பியுள்ளார். இதையடுத்து, ஜெகனின் வீடு முன் திரண்ட அவரது ஆதரவாளர்கள், பட்டாசு வெடித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தாயாரும் ராஜினாமா: இதற்கிடையே, ஜெகன்மோகனின் தாயார் விஜயலட்சுமி, தனது புலிவெந்துலா சட்டபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஆந்திர சட்டசபை சபாநாயகரிடம் இன்று அவர் கொடுக்கிறார். ஜெகனின் இந்த தடாலடி அரசியலால், ஆந்திராவில் காங்., கட்சி கலகலத்துப் போயுள்ளது. இதனால், அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை என்று, காங்., கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இருந்தாலும், ஜெகனுக்கு 36 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுவதால், காங்., மேலிடம் கவலை அடைந்துள்ளது. இந்த இழப்பை ஈடுசெய்வதற்காக, நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியின் ஆதரவை நாடவும், சிரஞ்சீவிக்கு முக்கிய பதவியை தரவும், காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சிரஞ்சீவி கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், ஜெகனால் ஏற்படும் இழப்பை இதன்மூலம் ஈடுசெய்ய முடியும் என, காங்கிரஸ் கருதுகிறது.

துரதிர்ஷ்டவசமானது: வீரப்ப மொய்லி கருத்து: ஜெகன் ராஜினாமா குறித்து, காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி கூறுகையில்,”காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஜெகன் அறிவித்துள்ளது, துரதிர்ஷ்டவசமானது. இருந்தாலும், ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது’ என்றார்.

thanks dinamalar

பவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட்

கருத்தரங்கங்கள் மட்டுமின்றி, சாதாரணமாக வகுப்பறை களிலும் மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. நம் கருத்துக்களைத் தெரிவிக்க, இது மிகவும் உதவியாக இருப்பதால், இதன் அனைத்து தொழில் நுட்ப உத்திகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஒன்றில், கிராபிக்ஸ் பயன்படுத்துவதையும், அதில் ஆப்ஜெக்ட்களை எப்படிக் கையாளுவது என்றும் இங்கு பார்க்கலாம்.  எப்போதும் ஆப்ஜெக்ட் ஒன்றைச் சரியான இடத்தில் அமைப்பது முக்கியமாகும். இல்லை எனில், அதனை வைத்திருக்கும் இடம் சரியாகக் காட்சி அளிக்காமல், நம் திறனைக் கேலிக் கூத்தாக்கும்.

1.ஆப்ஜெக்ட் அமைக்க கிரிட் பயன்பாடு:   இங்கு கிரிட் என்பது நம் கண்களுக்குக் காட்டப்படாமல் கிடைக்கும் கோடுகளாகும்.  இந்த கோடுகளுக்கு அருகே எந்த ஆப்ஜெக்டை அல்லது படத்தை  வைத்தாலும், கோடுகள் அருகே அவை  இழுக்கப்படும். ஏதோ அந்தக் கோடுகளுக்கு என்று தனி ஈர்ப்பு விசை இருப்பது போல செயல்படும்.  இதனால் தான் பிரசன்டேஷன் சாப்ட்வேர் தொகுப்பில் ஒரு ஆப்ஜெக்டை இழுக்கும் போது அது நம் வசத்திற்கு வராமல்  திரையின் குறுக்கே கண்ட இடத்திற்குச் செல்லும்.  இந்நிலையில் சீர் செய்திட என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

முதலில் கிரிட் கோடுகளை நாம் காணும் வகையில் கொண்டு வரலாம்.  Show/Hide Grid  தட்டி கோடுகளைக் கொண்டு வரவும். இது ஸ்டாண்டர்ட்  (Standard)  டூல் பாரில் உள்ளது.  அல்லது ஷிப்ட் அழுத்தி எப் 9 (Shift + F9)    பட்டனைத் தட்டவும். தற்காலிகமாக கிரிட்-ஐப் பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என எண்ணினால் Alt பட்டனை அழுத்திக் கொள்ளலாம். இதனால் ஆப்ஜெக்ட்களை நீங்கள் எளிதாக இழுக்கலாமேயொழிய அவை சரியான கோடுகளில் அமரும் என்று எதிர்பார்க்க முடியாது.

2.கைட் லைன்களின் (Guidelines)  பயன்:  படம் அல்லது ஆப்ஜெக்ட் ஒன்றினை, படுக்கை வாக்கில் அல்லது நெட்டு வாக்கில் அமைக்க விரும்பினால், திரையில் கோடுகளை உருவாக்க வேண்டும்.  இதற்கு Alt + F9  கீகளை அழுத்தவும். இப்போது நெட்டாகவும் படுக்கையாகவும் கோடுகள் தென்படும். உங்களுடைய ஆப்ஜெக்டுகள் இதனுடன் இணைந்து கொள்ளும். இந்த கோடுகளின் உதவியுடன் சரியான இடத்திற்கு ஆப்ஜெக்டுகளை இழுத்து வைத்திடுங்கள். பின் நீங்கள் எப்போது Alt + F9  அழுத்தினாலும் கோடுகள் மறைந்துவிடும்.  இந்த கைட் லைன்கள் இரு பக்கமும் ஒன்று தான் கிடைக்கும். தரப்படும் ஒரு கோடு நீங்கள் செயல்படப்  போதவில்லை எனில், கண்ட்ரோல் (Ctrl)  அழுத்தி எந்த கோட்டை இழுத்தாலும் அது இரண்டாக மாறும். ஏதேனும் கைட் லைன் தேவை இல்லை என்றால் அதனை எப்படி நீக்குவது? மவுஸின் கர்சரை அதன் மீது வைத்து அழுத்தி அப்படியே இழுத்து பிரேமிற்கு வெளியே   விட்டுவிடவும்.

நீங்கள் கைட் லைனை இழுக்கையில் ஒன்றை கவனிக்கலாம்.  மவுஸ் பாய்ண்டரில் சிறிய எண்கள் இணைக்கப்பட்டு தெரியும். இது எதைக் குறிக்கிறது தெரியுமா? நீங்கள் இடம் அமைக்கப் போராடும் ஆப்ஜெக்ட் ஸ்லைடின் மையப் பகுதியிலிருந்து எத்தனை அங்குலம் தள்ளி இருக்கிறது என்பதை இந்த எண் குறிக்கிறது.  இந்த எண்கள் பூஜ்யத்திலிருந்து தொடங்குகின்றன.  நீங்கள் எவ்வளவு அங்குலம் இழுக்கிறீர்கள் என்பதைத் துல்லிதமாக அறிய வேண்டும்  என்றால்  இழுக்கும்போது ஷிப்ட்  (Shift)  கீயை அழுத்தவும். எடுத்துக்காட்டாக  ஆப்ஜெக்ட் ஒன்றின் அடிப்பாகத்தில் அரை அங்குலத்திற்குக் கீழாக கைட் லைன் ஒன்றை அமைக்க நீங்கள் விரும்பினால் படுக்கை வசக் கோடு ஒன்றை ஷிப்ட் கீயை அழுத்தியவாறே கீழாக இழுக்கவும். மவுஸ் பாயிண்ட்டரில் உள்ள எண் 0.50 ஆக இருக்கையில் விட்டுவிட்டால் அரை அங்குலம் கீழாகக் கோடு அமைக்கப்படும்.

3.கிரிட் கட்டம் மற்றும் வழிகாட்டும் கோடுகள் அமைக்கும் வழி: Ctrl + G  கீகளை அழுத்தினால் கிடைக்கும் Grid and Guides  திரையில் இவற்றை எப்போதும் கிடைக்கும் படியும் கிடைக்காத படியும் அமைக்கலாம். அதாவது நீங்கள் Alt R  அழுத்திக் கிடைக்கும் விளைவினை இந்த கீகளை அழுத்தி மேற்கொள்ளலாம். இந்த டயலாக் பாக்ஸில் இந்த கோடுகள் எந்த அளவில் அமைக்கப்பட வேண்டும் என்பதனையும் நீங்கள் வரையறை செய்திடலாம்.

4.விருப்பப்படி மிகவும் சரியாக:  ஆப்ஜெக்ட் ஒன்றை மிகத் துல்லிதமான அளவில், அதாவது அங்குலம் ஒன்றின் பத்தில் ஒரு பங்கு  அல்லது நூறில் ஒரு பங்கு அளவில் கூட, நீங்கள் அமைத்திடலாம். எந்த பக்கம் செல்ல வேண்டுமோ  அதற்கான  அம்புக்குறி கீயினை கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தினால் ஆப்ஜெக்ட் அங்குலத்தில் பத்தில் ஒரு பங்காக அமைக்கும் வகையில் மெல்ல மெல்ல நகரும். ஆப்ஜெக்டை ஓர் அங்குலத்தில் 100ல் ஒரு பங்கு நகர்த்திட கண்ட்ரோல் கீ  (Ctrl)   அழுத்தி சம்பந்தப்பட்ட அம்புக்குறி கீயினை அழுத்தவும்.

5.இருபக்கமும் வேகமாக ஆப்ஜெக்ட் நகர்த்த:   ஆப்ஜெக்டை படுக்கை வசமாகவும் அல்லது நெட்டு வாக்கிலும் வேகமாக இழுக்க ஷிப்ட்(Shift)  கீயை அழுத்தியவாறே ஆப்ஜெக்டை இழுக்கவும். ஆனால் ஷிப்ட் கீயை அழுத்தியவாறே நெட்டு வாக்கில் ஆப்ஜெக்டை இழுக்கும் போது அதனை நெட்டுவாக்கில் மட்டுமே இழுக்க முடியும். படுக்கை வாக்கில் இழுக்க முடியாது. இதே போல மறுபக்கத்திலும் செய்ய முடியாது.

6.நகல் பெற: ஆப்ஜெக்ட் ஒன்றை நகர்த்துகிறீர்கள். அதனை இருந்த இடத்தில் வைத்துக் கொண்டே, இன்னொரு ஆப்ஜெக்ட் வேண்டும் எனில், அதன் நகல் ஒன்று உங்களுக்கு உதவலாம் அல்லவா! அப்படியானால் Ctrl  கீயை அழுத்தியவாறே இழுக்கவும். இப்போது ஆப்ஜெக்டின் இன்னொரு நகல் கிடைக்கும். இந்த நகல் படுக்கை வாக்கிலும் நெட்டு வாக்கிலும் சரியாக அமைக்கப்பட வேண்டு மென்றால் Shift  மற்றும்  Ctrl   கீகளைச் சேர்த்து அழுத்தி இழுக்கவும்.

(கண்டதை படைக்கவில்லை கண்டெடுத்ததை படைக்கிறேன்)

%d bloggers like this: